(1885ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
இலங்கையின் முதல் தமிழ் நாவல்.
இந்நாவல் தமிழில் எழுதப்பட்ட முதல் வரலாற்று கற்பனை நாவல். தமிழில் எழுதப்பட்ட இரண்டாவது நாவல் என்றும் இதை கருதலாம் என ஆய்வாளர் சிலர் சொல்வதுண்டு. இந்நாவல் அரேபியக்கதை ஒன்றை அடிப்படையாகக் கொண்டது. இது நாவல் என்னும் தலைப்புடன் வெளிவராமல் மதநூலாக வெளிவந்தமையால் நாவலாக ஆய்வாளர்களால் கருத்தில் கொள்ளப்படவில்லை.
அத்தியாயம்-1 | அத்தியாயம்-2 | அத்தியாயம்-3
மறுநாட் காலமே அவ்வூர் நியாயாதிபதி முன்பாக காசீம் கொண்டுவரப்பட்டான்: பின்பு அந்த நியாயாதிபதி காசீமையும் அலீயையும் மற்றவர்களையும் நடந்த காரியங் களைப்பற்றி மூர்க்கமின்றித் தீர்க்கமாய் விசாரித்து காசீம் ஸெஷஷன் கோர்ட்டு நியாயாதிபதியும் அவர்களால் விசாரணை செய்யப்படும்படி நேமித்தார்; அப் படியே அந்த நியாயாதிபதியும் காசீமைப் பார்த்து நீ அஸனையும் அவனுக்கருகில் நித்திரை செய்த வேலைக்காரன் ஒருவனையும் கொலைசெய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு நமது முன்பாகக் கொண்டுவரப்பட்டிருக்கிறாய்; நீ இந்தக் குற்றத்தைச் செய்ததுண்டா என்று வினவ, அதற்கு அவன் ஐயா கனம் பொருந்திய நியாயாதிபதிகளே நியாயாபதிபதி களுக்கேல்லாம் வல்லோனாகிய அல்லாகுத்தஆலா அறிய, நான்யாதொரு பாவத்தையும் அறியேன். இக்கொலை யான் புரிந்திலன் என்று இரண்டு கண்களிலும் தாரை தாரையாகக் கண்ணீர் சொரிய அழுதுகொண்டு சொன்னான் இதை அந்த நியாயாபதிபதி தன்னுடைய புத்தகத்தில் எழுதிக்கொண்டு கைவிலங்கு இட்டபடியே அவனைக் கடினகாவலில் வையுங் கள்; இந்த வழக்கை நாளது 1867 u ஆகஸ்டு மீ 23௨ விசாரணை செய்வோம் என்று சொல்லி ஆக்ஞாபித்தார்.
இது இப்படி நிற்க, உயிர் தப்பி ஓடின அஸன், அலீயின் வீட்டைவீட்டு அந்த இரவெல்லாம் ஓடி, பொம்பாய்க்குப் போகிற மார்க்கததிலிருக்கிற ஓர் ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்துசேர்ந்தான். பின்பு சூரத்துக்குக் சமீபமான ஊர்களியிருந்தால் அந்தக் கொலைகளால் தீங்குநேரின் மென்று பாதகர்களான சண்டாளர் நினைத்துக் கல்கத்தாவுக்கு டிக்கெட்டு வாங்கிக்கொண்டு அங்கிருந்து மூன்று நாளைக்குள் கல்கத்தா நகரம் வந்து சேர்ந்தான். இந்த நகரம் இந்தியா முழுதுவதுக்கும் பிரதானமானது.
இது இந்தியாவின் இராசப்பிரதிநிதிக்கு உறையிடம்; இதில் அனேக சிங்காரமான மாடமாளிகைகள் இருப்ப தினாலே இதிற்கு அரண்மனைகள் நிறைந்த நகரம் என்றும் பெயர் வழங்கும்; இந்தச் சிறப்பான பட்டணத்திலே யிலட்சக்கணக்கான ஜனங்களிருந்தும் அஸனுக்கு அறிமுக மானவர்கள் ஒருவருமில்லை. இந்த நகரத்தில் அவன் ஐயோ நான் எங்கே போயிருப்பேன், நான்யாரிடம் தஞ்சம்புகுவேன் என்று நெஞ்சம்புண்பட மிகவஞ்சித் திக்கற்றவனாய்த் துக்கித் துக்கொண்டு பட்டணததில் அங்கு மிங்கும் திரிந்தும். பசியெழுந்தகாலையிற் போஜனச் சாலையிற்போய்ப் பசியாற்றிக்கொண்டும். இராக்காலங்களிலே மஸ்ஜீதுகளிற்போய் நித்திரை செய்தும் இவ்வாறு மூன்று நாட்கழித்தான்.
அந்த கல்கத்தா பட்டணத்தின் நடுவில் விஸ்தாரமான ஓர் வெளியிருக்கின்றது; அதின் கோடியில் சிரேஷ்ட தேசாதி பதியாகிய இராஜப் பிரதிநிதியின் அரண்மனை மிகச்சிறப்பா யும், காண்போர் கண்ணைக் கவரத் தக்கதாயும் கட்டப்பட் டிருக்கின்றது; அதைச் சுற்றிலும் சரீர சவுக்கியத்துக்கு ஏற்ப பற்பலவகையான பூஞ்செடிகளால் நிறைந்த தோட்டங்களும் அனேக நந்தவனங்களும் இருக்கின்றன அவைகளில் பூங் கொடிகள் மலர்ந்த புஷ்பங்களால் நிறைந்து காற்றில் அசை வது நாட்டியமாதர்கள் ஆபரணங்களைப் பூண்டு நடனமாடு வது போலும்; வண்டுகள் பாடுவது குழல் ஊதுவது போ லவும், குயில்கள் கூவுவது சங்கீதக்காரர்கள் போலவும் விளங்கி அம்மாளிகையிலுள்ள ராஜப்பிரதிநிதிக்கு ஆனந்தஞ் சனிக்கு மாறு இயற்கையாக அமைக்கப்பட்ட நாடகசாலையையொத் திருக்கின்றது. அந்த இடத்துக்குச் சமீபத்தில் மனிதர்கள் தங்கியிளைப் பாருகிறதற்குரிய ஓர் பீடம் இருக்கக் கண்டு அதி னருகே அஸன் நின்றுகொண்டு தனது தற்கால நிலை மயைக் குறித்து எண்ணமிட்டுக் கொண்டிருக்கையில், ஓர் உயர்ந்த ஆங்கிலேயத் துரைமகன், அமர்ந்த நடையாக நடந்துவந்து அந்தப் பீடத்தின்மேல் உட்கார்ந்தார். அவர் அங்கே சற்று நேரம் இருந்து இளைப்பாறின பின்பு எழுந்து போகும்போது தன் கையிலிருந்த ஒரு சிறு குறிப்புப் புஸ்தகத்தை அப்பீடத் தின் மேல் வைத்துவிட்டு எடுக்க மறந்து போய்விட்டார், கொஞ்சநேரத்துக்குப் பின் அஸன் அப்பீடத்தின் மேலீருந்த புஸ்தகத்தைக் கண்ணுற்று ஓடிப்போய் அதைக் கையிலெடுத் துக்கொண்டு அந்தத் துரைமகன் போன திசையை நோக்கி ஓடினான்; அதற்குள் அவர் வெகுதூரம் போய்விட்டார்; ஆயி னும், அவர் போகிறது இவன் கண்ணுக்குப் புலப்பட்டது; உடனே இவன் வெகுவிரைவாக ஓடியும் அவரைக் கிட்டக் கூடவில்லை, ஏனெனில் அவர் ஓர் சந்திற்றிரும்பி மறைந்து விட்டார்; அஸனும் அந்தச் சந்திற் போய்ப் பார்க்க அந்தத் துரையையுங் காணவில்லை, அவர் போன வழியுந் தெரிய வில்லை; ஆனாலும் இவன் இன்னும் சற்றுதூரம் ஓடிப்போய்ப் பார்க்கும்பொழுது அந்தத் துரையைப் போல் வேறொருவன் போவதைக்கண்டு, சமீபத்திற் சென்று,ஐயா தாங்கள்ஏதேனும் புத்தகத்தைக் கைதவற விட்டதுண்டோவென்று வினவ, அவன் அச்சிறுவனையுற்றுப் பார்த்து அவன் அயலூரானெனத் திட்டமாய் முற்றுமுணர்ந்து, ஆமப்பா நான் ஓர் சிறு புத்தகத் தைக்கைதவற விட்ட துண்டு;அதோ உன் கையிலிருக்கிற புத் தகமென்றே யுத்தேசிக்கிறேன்; அதைத் தாவென வெகு ஆவ லாய்த் தன் கையை நீட்டினான். அஸன் அவனுடைய முகக் குறியை நோக்கி, அந்தப் பீடத்திலிருந்த துரை இவர்தானோ அல்லது யாரோவென்று சந்தேகங்கொண்டு அவரைப் பரி சோதிக்கும் பொருட்டு, நல்லது இந்தப்புத்தகத்தை நீரெங்கே கைதவற விட்டீர் சொல்லும்; நீர் சொல்வது சரியாயிருந்தால் இந்தப் புத்தகததை யும்மிடம் தருகிறேனென்று சொன்னான். இதைக் கேட்ட அந்தத் துரைமனுக்கு மிகவும் கோபம் மூண்டு இந்தப் பையனைச் சீறிச் சினந்து, அடா அற்பப் பையலே அதைப் பற்றிக் கேட்க நீ யார்? உன் கேள்விக்கு விடைபகர எனக்கு யாதொரு நிமித்தமுமில்லை. ஆகையால் அந்தப் புத்தகத்தைத் தாவென அவன் கையினின்றும் பறிக்க யத்தனித்தான். அஸன், ஐயா இது உம்முடைய புத்தக மன்று; நீர் என்னை ஏமாற்றுகிறீர் என்று மறுக் க அத்துரை மகனுக்கு முன்னிலும் கோபமிஞ்சி அஸனைக் கீழே வீழ்த்தி அவன் கையிலிருந்த புத்தகத்தைப் பிடித்துப் பலமாயிழுத் தான். அப்போது சமீபத்தில் வேறோர் துரை எதிரில் வந்து கொண்டிருந்தார். அஸனைக் கீழே வீழ்த்திய துரைமகன் அவரைக் கண்டவுடன் விரைவாய் அஸனுடைய கையை விட்டுவிட்டு ஓட்டம் பிடிக்க யத்தனித்தான் அப்போது எதிரில் வந்த கனவான் அவனை ஓடவிடாது தடுத்துக்கொண் டார்; அஸன் மெதுவாய் எழுந்து அங்கு வந்த துரைமகனை நோக்கி, ஐயா நீங்கள் அந்த மைதான வெளியிலிருந்த பீடத் தின் மேல் இந்தப்புத்தகத்தை வைத்துவிட்டு எடுக்க மறந்து, எழுந்து நடந்து விட்டீர்கள். நீங்கள் நெடுந்தூரம் போன பின்பு நான் அந்தப்புத்தகத்தைக் கையிலெடுத்துக்கொண்டு அதைத் தங்களிடத்திற் கொடுக்க வேண்டுமென்று கருதி, ஆயினும் அந்தச் தங்களைப் பின்தொடர்ந்து ஒடிவந்தேன்’ சந்தில் தாங்கள் திரும்பின பின் கண்ணுக்குப் புலப்படாமல் மறைந்துவிட்டீர்கள்; நான் உங்களைக் காணாமல் ஏங்கித் தேங்கி நிற்கையில் இவர் வரக்கண்டு ஒருவேளை யிவரா உம்முடையதாவென் யிருக்கலாமென்று யோசித்து இது றேன். அதன்பின் அம்மனிதனுக்கும் தனக்கும் நடந்த காரி யங்களையும் சவிஸ்ததாரமாக அவருக்குச் சொன்னான்.
இதைக் கேட்ட அந்தத் துரையானவர் அம்மோசக்கார னைப் போலீஸ் சேவகர்கள் வசம் ஒப்பிவித்துவிட்டு, அஸனைத் தன்னோடு வரும்படியாகக் கேட்டுக்கொள்ள, அதற்கவன் சம்மதித்தான். ஆகையால் தாமதிக்காமல் அவனை அழைத் கொண்டுபோனார். போகும்போது வழியிலிவர்களிருவரும் ஒன்றும் பேசாமற் சென்றார்கள். அந்தத் துரையானவர் அஸனை அந்த மைதான வழியாகக் கூட்டிக்கொண்டுபோய் ஓர் உன்னதமான மாளிகைக்குட்பிரவேசித்தார். மாளிகையானது சந்திரகாந்திக் கல்லாற் றளம் போடப்பட் அதினுள் அணி டிருந்ததால் மிகுந்த குளிர்ச்சியாயிருந்தது யணியாக நிறுததப்பட்ட தூண்களில் பலவகைச் சித்திரங்க ளெழுதப்பட்டிருந்தன. அவை மாணிக்கம், முத்து, வைடூரி யம் முதலிய நவரத்தினங்களும் பதிப்பிக்கப்பட்டிருந்ததுபோல விளங்கின; நிலைக்கண்ணாடிகளால் அலங்கரிக்கப்பட்ட சுவர் கள் கண்ணாடியினாலமைக்கப்பட்ட சுவர்களென்றே நம்பும் படியாயிருந்தன இவ்வலங்காரங்களையெல்லாம் கண்ணுற்ற அஸன் மிகவும் பிரமித்து, அம்மம்மா, இதுவென்ன விநோத மான மாளிகையாயிருக்கின்றது. இவ்வளவு சிறந்த மஹாலை நாம் இதுவரையிலும் கண்டதில்லையே; இதற்குச் சுதந்தர வான், ஓர் தங்க கனவானாகத் தானிருக்கவேண்டுமென்று தனக்குள் ஆலோசித்துக்கொண்டிருந்தான். பின்பு அந்தத் இவனை யோரலங்காரமான அறைக்கு துரையானவர், ளழைத்துக் கொண்டு போய், அங்கு தாமோர் ஆசனத்திலி ருந்துகொண்டு, அஸனையும் ஓர் ஆசனத்திலிருக்கச் செய்து அஸனை நோக்கி, ஆங்கிலேய பாஷையிலேயே பேசத் தொடங்கினார்; ஓ ! வாலிபனே, உன் பெயர் யாது ; நீ யெவ் வூர் உன்னைப் பெற்றோர்கள் யாவர், சொல்லென்று கேட்டார். அதற்கு அவன், என் பெயர் அஸன் நான் இருக்குமிடம் சூரத்து; என்னைப் பெற்றோர்கள் இந்த அநித்தியவுலகை விட்டு முத்தியான சொற்கத்திற்போய்ச் சேர்ந்தார்கள். ஆகையால், நான் எங்கேயாகினும் போய்ப் பிழைக்கலா மென்று இவ்வூரை நாடி நான்கு நாளைக்கு முன் வந்து சேர்ந் தேன் என்றான் அந்தத் துரையானவர் இவனைப் பார்த்து சிறுவனே நீ பயப்பட வேண்டாம்; நான் இந்தியா தேச முழுவதிற்கும் சிரேஷ்ட தேசாதிபதி (Governor General).
நீயெனக்கின்று செய்த உபகாரத்தின் பெருமையை யென்னென்று சொல்லுவேன், அந்தச் சிறு புத்தகத்திலனேக இராச்சிய சம்பந்தமான பத்திரங்களின் குறிப்புகளடங்யிருக் கின்றன; காபூல் தேசத்தை யரசாளும் அமீருக்கும், நம் முடைய இராஜாங்கத்திற்கும் நடந்த அனேக இரகசியமான இராச்சிய தந்திரங்கள் அந்தப் பத்திரங்களிலுண்டு. இவை களை வேறொருவரறிந்தால், வர்த்தமானப் பத்திரிகைகளின் மூலமாய் வெளிப்படுத்தி விடுவார்கள். அப்படி வெளிப் பட்டால், தமது இராஜாங்க விஷயத்தைப் பற்றிப் பிற தேசத்து அரசர்கள் அறிந்து நமது இராஜாங்கத்தை யிகழ்ந்து கூறுவார்கள். ஆகையால் உன் பேருதவியை ஒரு காலத்திலும் மறவாதிருப்பேன். இனியுனக்கு யாதொரு குறைவுமில்லையென்று அவனுக்குத் திடஞ்சொல்லி, இன்று முதல், இவ்வூரிலிருக்கிற கல்விச்சாலைக்கு உன்னையனுப்பு கிறதாக உத்தேசித்திருக்கின்றேன்; நீ அதில் மூன்று வருஷ காலம் வாசித்துக் கல்வியிற்றேர்ந்த பின்பு உனக்கு, நம் முடைய இராஜாங்கத்தில் தகுந்த உத்தியோகமும் திட்டஞ் செய்கிறேன்; இந்த மூன்று வருஷ காலத்திற்கும் உன் செல வுக்காக, மாதம் ஒன்றுக்கு ரூபாய் முந்நூறு வீதம் தரு கிறேன், இன்னும் மகம்மதிய பணிவிடைக்காரர்களை வைத்துக்கொண்டு, நீ அந்தக் கல்விச் சாலையிற்றானே குடியிருந்து கொள்ளலாம்; இவையன்றி நீ நல்லொழுக்கமும் நாகரீக நடக்கையு மடைவதற்காக, வாரந்தோறும், நமது மாளிகைக்கு வந்து, நமது மனைவி, மக்களுடனே விளையாடி சம்பாஷித்தும், இங்கு வருகிற கனவான்களோடு சிநேகமாய் நடந்தும் கொள்ளல் வேண்டுமென்று சொன்னார். இவ்வார்த் தைகளைச் செவியுற்ற அஸன், கடலில் விழுந்து தத்தளிக்கிற ஒருவனுக்கு, மரக்கலம் கண்ணுக்குத் தோன்றிச் சமீபித்தது போலும், பாலைவனத்தில் தாகத்தால் நா வறண்டு தத் தளிக்கிற ஒருவன், நன்னீர்த் தடாகத்தைக் கண்ணுற்றது போலவும், மிகவும் ஆனந்தப் பரவசனாகி தன்னாசனத்தின் றெழுந்து, அந்தக் கனவானுடய இரண்டு கரங்களையும் தன் கைகளாற்பற்றித் தன்னிரு கண்களிலும் வைத்து, முத்த மிட்டு. ஆஹா ! இந்தக் கைகளின் பெருமையை நானென் னென் றெடுத்துரைப்பேன் இந்தக் கைகளானவை. இவ் விந்து தேசத்தில், துலாக்கோலைப் போனின்று நடுநிலை மையாகச் செங்கோல் செலுத்துகின்றன; என் போன்ற அகதிகளுக்கு அபயங்கொடுக்கின்றன; ஓ பெருங் கருணை வள்ளலே. உம்முடைய கிருபா சமுத்திரத்தின் எல்லையைக் காண்பதரிதாயிருக்கின்றதே; ஆதரவற்ற இவ்வேழைக்குத வியாகும்படித் தங்களருமையான ஹிருதயத்தில் பெருங்கிரு பையை நிலைப்பித்த அந்தக் கிருபாகரனைப் புகழ்ந்து அவனிடம் தங்கள் மங்களகரத்தைப்பற்றி யெக்காலமும் பிரார்த்திப்பேன் எனப் பலவாறாகப் பிரலாபித்து எல்லையிலா வானந்தம் பொங்க, கண்ணீருகுத்து. ஐயா! தங்கள் நிய மனப்படியே நடந்து கொள்ளுகிறேனென்று பணிவாகச் சொன்னான். பின்பு அந்தத் துரையின் உத்தரவின்படியே அஸன் மறுநாள் கல்விச் சாலையில் சேர்ந்தான். அந்தக் கனவான் அஸனைத் தன் குமாரனைப்போல் பாவித்து அவனுக்கு வேண்டிய காரியங்களில் யாதொரு குறைவுமில்லாமல் ஏற்படுத்தி வைத்ததினால் அவன் வாசிப்பதற்கு நல்ல ஏதுவா யிருந்தது,
இன்னும் அவர் உத்தரவின்படியே அவன் வாரந் தோறும் தேசாதிபதியின் அரண்மனைக்கு வந்து, அவருடைய மனைவி மக்களோடு மிகப் பிரியமாய் விளையாடிக் காலங் கழித்து வருவான், அவர்களும் அவனை நேசித்து, மிகவும் சந்தோஷமாய் அவனோடு விளையாடுவதுமன்றி, தாங்கள் கீத வாத்தியம் வாசிக்கும் பொழுதும், ஆனந்தித்துப் பாடும் பொழுதும் அஸனையும் கூட இருக்கச் செய்து, அன்பு; பாராட்டி அவனைத் தங்கள் குடும்பத்திற் பிறந்த ஓர் பிள்ளை யைப் போலவே பாவித்து ஆதரித்து வந்தார்கள். இவ் வளவு அன்பு, சுயாதீனம், வேண்டிய பொருள் ஆகியவை களை யனுபவித்துக்கொண்டிருந்தும் மிதமிஞ்சி எந்தக் காரிய மும் கிஞ்சித்தும் செய்கிறதில்லை. அந்த மாளிகையிலவர் களோடு விளையாடிக்கொண்டிருக்கும் பொழுது கனிகளின்றி வேறொன்று மருந்துகிறமில்லை. “ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தின்மேற் கண் ” என்பது போல இவ்வளவு சம்பத்து. வாய்த்ததேயன்று தன்னை மறந்து தட்டழிந்து போகாமல், தனக்கு அந்த சம்பத்துகளைக் கொடுத்துக் காப்பாற்றிய, சர்வ வல்லமையுள்ள அல்லாகுத்தாலாவைச் சதா காலமும் வாக்கு மனமுமொத்துப் புகழ்ந்து, ஐந்து வேளையும் தவறாது தொழுகைகளை நிறைவேற்றுவதுமன்றி ஈமான் இசுலாத்திற் குரிய, எல்லாக் கிரியைகளையும் ஒழுங்கு தவறாது நடத்திக் கொள்வான் தனக்கு மாதாந்தரங் கிடைத்து வருகிற பணத் தில் தன் ஊண், உடை முதலியவைகளுக்குச் செலவானது போகப் பாக்கியுள்ளதை, கண்கெட்டார், கால், கை யற்றார், புண்பட்டார். போற்றுவாரில்லாதவர்கள் முதலிய ஏழைகள், அகதிகள் முதலிய அனாதிகளுக்குக் கொடுத்துதவுவான். இன்னுமிவன் மிகக் கூர்மையுள்ள புத்திசாலி யாதலினால், பாடசாலைக்குக் குறித்த நேரத்திற் சென்று, ஆசிரியருக்கு வழிபாடு செய்தலில் வெறுப்பில்லாதவனாகி அவர் குணத் திற்குத் தக்கபடி அவரோடு பயின்று அவர் குறிப்பின் வழியே சார்ந்து, இருவென்று சொன்ன பின்னிருந்து, படி யென்று சொன்னபின் படித்து, பசித்துண்பவனைப்போல மிக்க விருப்பத்தையுடையவனாகி சித்திரப் பாவையைப் போல அசைவற்ற குணத்தினோடடங்கி. காதானது வாயா கவும், மனமானது கொள்ளுமிடமாகவும், முன் கேட்கப்பட்ட வைகளைத் திரும்பிக் கேட்டு, அன்னப்பட்சி, நீரைப் பிரித்துப் பாலைப் பருகுவன போல் குற்றத்தை நீக்கிக் குணத்தைக் கொண்டு பசுவானது புற்கண்ட ஒரே யிடத்தினின்று, மேய்ந்து, வயிற்றை நிரப்புவதுபோல், உபாத்தியாயர் சொல் லுகிற பொருள்களைத் தன்னுள்ளத்தின்கண் நிறைத்துக் கொண்டு, அவர் போவென்று விடை கொடுத்தபின் இருப் பிடஞ் சேர்ந்து, பார்த்தவர்கள் இவன் கல்விக் களஞ்சிய மெனச் சொல்லவும் ஆ! ஹா !! இவன் மிகவும், புத்திசாலி யாயும், நற்குண நற்செய்கைகளினின்றும் வழுவாதவனாயு மிருக்கிறானேயென்று வியக்கும்படியாகவும் மிகவும் விரை வாய்க் கல்வியிற்றேர்ந்து வந்தான். இவன் நிலைமையிங்கு இவ்வாறிருக்க, இங்கு சூரத்தில், காசீம் என்பவனுடைய சகோதரியாகிய, மைமூன் என்பவளுடைய நிலையைச் சற்று விவரிப்போமாக,
காசீம் என்பவன், குற்றம் சாட்டப்பட்டு சிறைச் சாலைக் குக் கொண்டு போகப்பட்டபின், அவன் சகோதரியாகிய மைமூன், தன் வீட்டில், தனியேயிருந்து ; தன் சகோதர னுக்கு நேரிட்டிருக்கிற அபாயத்தைக் குறித்து புலம்பி யுருகி, ரகுமானே (சர்வ தயாபரனே ) என் ரகீமே என் சொந்த தயா பரனே) யாதொரு தீங்கும் செய்தறியாத என் சகோதர னுக்கு விதிவசம் இப்படியிருந்ததுபோலும் என்று துக்கித்து இரவும், பகலும், நித்திரையின்று அழுதுகொண்டேயிருந் தாள்.
அவன் தகப்பனுடைய சகோதரியின் மகனும், மகம்மது என்னும் பெயரினனுமாகிய ஒரு வாலிபன், அவளைக் கல்யா ணஞ் செய்துகொள்ள கருத்தினனாய் அவன் சகோதரனோடு கல்யாணம் பேசியிருந்தான். அவன் தச்சுத் தொழில் செய் கிறவன், இவன் மைத்துனனாகிய, காசீம் சிறையிலடைக்கப் பட்ட நாள் முதல் தினந்தோறும் அந்தி நேரத்தில், ஆதர வற்ற மைமூன் உடைய கிரகத்திற்கு வந்து, அவளுக்கு வேண்டிய போசன பதார்த்தங்களை, தெருக்கூடத்தில் வைத்துவிட்டுப் போவது வழக்கம். பின்பு அதை மைமூன் எடுத்துத தான் போசனம் செய்வாள்; மிகுந்ததை அவள் மிகவும் கிருபையுள்ளவ ளாதலால், எளிய பிள்ளைகளுக்குக் கொடுத்துப் பசியாற்றுவாள்.
இப்படித் துன்பமுற்ற மனத்தினளாய், காலங் கழித்து வரும், நாளில் ஒரு நாளிரவு, வஞ்சனையெல்லாம் திரட்டி யுரு வாக்கிய தேகத்தில் பொய், கொலையென்னும் ஆபரணங் களைப் பூண்டு, தீவினையென்னும் களபம்பூசி, காமம், வெகுளி, பொருளாசை, முதலியவற்றால் உருவாக்கிய முடியைத் தரித் தாற்போலொத்த பாதகர்களாகிய இபுறாகிமும், பார்சீயும், மைமூன் அயர்ந்து நித்திரை செய்கிற தருணம் பார்த்து, கோடரிகொண்டு கதவைப் பிளந்து உட்பிரவேசித்து, எலி யைக் கௌவிய பூனையைப் போலும், முயலைக் கௌவிய சுவானத்தைப் போலவும், பசுவைத் தாவிய வேங்கையைப் போலவும், கரியைத் தாவிய வரியைப் போலவும், அவள் மேற் பாய்ந்து பிடித்து, அவள் கூக்குரலிடா வண்ணம், வாயை யிறுகப் பிடித்தமர்த்தி, அவளைத் தூக்கிக்கொண்டு தெருவில் வந்து அங்கே நிறுத்தியிருந்த இரண்டு குதிரைகள் பூட்டிய ஓர் இரதத்தினுள் இருக்கச்செய்து, அவர்களிரு வரும் உள்ளேயேறிக்கொண்டு இரதத்தை நடத்தச் சொன்னார்கள். அவ்விர தம் மனத்தினுங் கடிய வேகத்துடன் செல்லத் தொடங்கிற்று அப்பொழுது மைமூன் கூக்குரலிட ஏலாதவளாய். ஆதரவு என்னும் கப்பல் கவிழ்ந்து துக்க சாகரத்தி லாழ்ந்தினவளாம். உவர்ச்சாகர மென்னக் கண்ணீர் பெருகியோடக் கான்படுவலையில் மான்படு மாறு கலங்கித் தவித்தனள், இவளை நோக்கி இபுறாகீம், ஓ! பெண்ணரசே, பெண்கள் நாயகமே, நீயேன் துக்கிக்கின்றாய்; நீ சஞ்சலப்படவேண்டாம், நீ சந்தோஷமாயிருந்தால் உனக்கு யாதொரு தீங்குஞ் செய்யமாட்டோம்; நீ மிகவும் சௌக்கியமாய்த் தக்க வைபோகங்களை யனுபவிக்கும்படி யான ஓர் மாளிகையிற் கொண்டுபோய் விடுவோம், உனக்கு யாதொரு குறைவுமில்லை யென்று பலவாறாய்த் தேற்றினான், மைமூனுக்கு இவன் சொல்லுகிறதொன்றும் விளங்கவில்லை ; பயத்லனால் அவள் புத்தி கலங்கி மெய் விதிர்ப்புற்று நடுநடுங் கிக் கொண்டிருந்தாள். இவளை யேற்றியிருந்த இரதமானது இவள் வீட்டைவிட்டு மூன்று மணி நேரத்தில் ஓர் சிங்கார மான தோட்டத்திற்குள் கட்டப்பட்ட ஓர் அழகான மாளி கைக்கு முன் கொண்டுவந்து நிறுத்தப்பட்டது. அம் மாளி கைக் குள்ளிருந்து வயது சென்ற ஓர் பெண்பிள்ளை வெளியே வந்து, மைமூனைப் பார்த்து, என்னருமை மகளே நீ யுன் சகோரனைவிட்டுப் பிரிந்த துயராற்றாமல் தனியாய் வருந்திக் கொண்டிருப்பதைப் பார்த்து, உன்பேரில் மனமிரங்கி, உன் துயரை நீக்கி யுனக்கு ஆறுதலுண்டாகும்படிசெய்து தேற்று வதற்கும், உன்னைத் துன்மார்க்கர்கள் வருத்தப்படாமற் காப்பாற்றும் பொருட்டும் அதிசன்மார்க்கரான ஓர் கன தனவான் உன்னையிங்கே கொண்டுவரச் செய்திருக்கிறார் என்று சொல்லி, அவள் கையைப்பிடித்து அம்மாளிகைக்குள் அழைத்துக்கொண்டு சென்றான். அங்கே, அழகான ஓர் வரிசையாய்ப் சோபாக்களும், கட்டிலும், நேர்த்தியான போடப்பட்ட நாற்காலிகளும், சலவைக்கல் மேஜைகளும் அநேக சித்திரப் பாத்திரங்களும் வைக்கப்பட்டிருந்தன. அங்கே யிருந்த மேஜைகளின் மேல் மதுரமான திண்பண்டங் களும் நிறைக்கப்பட்டிருந்தன.
அந்த அறையானது மணமகனும், மணமகளும் உறங்கும் படி அலங்கரிக்கப்பட்ட அறையைப் போலிருந்தது. வாசனை யுடைய மல்லிகை, முல்லை, இருவாட்சி, செண்பகம், முதலிய பற்பல புஷ்பங்களும், கண்ணுக்கு மிக அலங்காரமாய்த் தோன்றுகின்ற பற்பல வருணமுள்ள பளிங்கு சீசாக்களில் அத்தர், புனுகு, ஜவ்வாது முதலிய பரிமளங்களுமிருந்தன. இவைகளையெல்லாம் பார்க்கும்பொழுது யாரோ ஒரு பாக்கிய வான் தன்பேரில் மோகங்கொண்டு காதல் மூண்டு காமத் துணைக் கருவிகளாகிய இவ்வலங்காரங்களைக்கொண்டு தன் மனதை அவன் வசப்படுத்தி அவன் இஷ்டப்படி நடத்திக் கொள்ளக் கருதி இப்படிச் செய்திருக்க வேண்டுமென்று மைமூன் தனக்குள்ளே யாலோசித்துப் பயந்து, பாம்பின் வாய்த் தேரைபோற் பரிதவித்து, அன்றிரவெல்லாம் நித்திரை யின்றி விழித்திருந்தாள். அந்த வீட்டில் மேற்சொல்லிய அவ் விருத்தியைத் தவிர வாலிப வயதினளான ஒரு வேலைக்காரியு விருந்தாள். அவளுடைய பேர் பாத்திமா; அவள் மைமூன் படுத்திருந்த அறையின் கதவைப் பூட்டிப் பந்தனம் செய்து திறவுகோலைத் தன் வசம் வைத்துக்கொண்டு அவ்வறைக் குள்ளே தானும் நித்திரை செய்தனள். மறுநாள் காலையில் அவ்விரு வேலைக்காரிகளும் மைமூனைத் தங்கள் எஜமாட்டி யென்று சொல்லி வணங்கி, மிகவும் தாழ்மையாய் அவளுக்குப் பணிவிடை செய்துவந்தார்கள்.
இப்படி ஐந்து நாள் சென்றன. மைமூனான வள் அவர்க ளிருவரையும் நோக்கி எனக்கு இவ்விதமாய்ச் சோடசோபசா ரங்கள் செய்வித்து, என்னையிவ்வளவு சுகத்தோடு வைத் திருப்பவராரென்று கேட்கும் போதெல்லாம் அவர்கள் மறு மொழியாக அம்மா தங்கள் மீது மிகவும் காதல்கொண்டு மாறாத அன்புடையராகிய ஓர் சீமான், தாங்கள் படுந் துன்பங் களைக் கண்டு சகியாதவராய், துக்கசாகரத்திலாழ்ந்த, தங் களை யிம்மாளிகைக்குக் கொண்டுவரச் செய்து இங்கே வைத் திருக்கிறார்; வடிவிற்சிறந்த தையலாகிய தங்கள் மீது அவர் கொண்ட மையலின் எல்லையை, எங்களால் அளவிட்டுச் சொல்லக் கூடாததாயிருக்கிறது. அவர் தமது அளவிறந்த செல்வமுழுமையும் பஞ்சின் மெல்லடிப்பாவையரே. தங்களது பாதார விந்தத்திற் காணிக்கையாக வைப்பதற்குச் சித்தமா யிருக்கிறார்; அவரும் தங்களிட்ட த்தை நிறைவேற்றுகிற அடி மையாகினும் ஆகுவர்; தாங்கள் அவரைச் சற்றுக் கடைக் கணித்து, தங்கள் சமூகத்தில் வரும்படி உத்திரவளித்தால் அப்படியே வந்துநிற்பார். அப்படித் தாங்கள் தயவுசெய் யாத வரையில், அவர் தங்கள் மீது கொண்ட காதல் என்னும் தீ சுவாலித்தெழும்பி, அவர் மனதைக் கவற்றி சுடுமாகையால் அவர் வேகாமல் வெந்து தணிவாரே தவிர அவருக்கு வேறு கதியில்லை; ஐயோ இதையறிந்தே.
அம்பும் அழலும் அவிர்கதிர் ஞாயிறும்
வெம்பிச்சுடினும் புறஞ்சுடும் – வெம்பிக்
கவற்றி மனதைச் சுடுதலாற் காமம்
அவற்றினுமஞ்சப்படும்.
என்றார் பெரியோர்கள், எனச் சொல்லுவார்கள். மைமூன் நல்லது நீங்கள் இவ்வளவு தூரம் அவரைப் பற்றிச் சொல்லு கிறீர்களே, அவர் யார்? அவர் நாமம் யாது? என்று கேட்கும் போதெல்லாம். அவ்விருத்தையும் வாலிபியுமாகிய இருவரும் இக்கேள்விகளுக்கு மறுமொழி சொல்ல நாங்கள் கட்டளை பெற் றிலோம், ஆகிலும் தங்களை நேரில் வந்து கண்டுகொள்ள அவ ருக்குத் தாங்கள் விடைகொடுத்தால் அவர் தங்கள் சமூகத் தில் வருவார்; அப்பொழுது தாங்கள் கேட்கிற வினாக்களுக் கெல்லாம் தவறின் றியவர் விடை கொடுப்பார். பின்பெல்லாம் தங்களுக்குத் தெளிவாய் விளங்குமென்று சொல்லிவந்தார்கள். மைமூனோ ‘காவறானே பாவையர்க்கழகு” என்னும் பழமொழிப்படித் தன்னைத்தானே காத்துக்கொள்ளக் கூடியவளாதலாலும், கற்பிற்சிறந்த காரிகையாதலாலும், நாணம், மடம், அச்சம் பயிர்ப்பென்னும் ஆபரணங்களைப் பூண்டொழுகுபவ ளாதலாலும், இவ்வுலக சம்பத்துக்களை யெலலாம் ஒன்றாய்த் திரட்டி அவள் கற்பிற்குப் பரிசாகக் கொடுப்பினும், தீயவழியி லொழுகாத சற்குண சிகாமணி யாதலாலும், இந்தத் துன் மாக்கிகளாகிய நீலிகளின் வஞ்சக வார்த்தைகள் அம்மாது சிரோமணியைக் கற்பினின்றும் வழுவச் செய்யக் கூட வில்லை.பின்பொருநாள் பாத்திமாவானவள் மைமூனிடம் வந்து, பெண்களிரத்தினமே, எங்கள் நாயகியே. தாங்கள் சில நாளாக மாளிகைக்குள்ளேயே தங்கியிருப்பதால், தங்கள் சரீர சுகத்துக்குக் குறைவுண்டாகுமென்று தங்கள் எஜமானான வர், குதிரை பூட்டிய ஓர் சிறந்த வண்டியில் தங்களையழைத் துக்கொண்டு சூரத்துப் பட்டணத்திற்குட் சென்று, அங்கே தங்களுக்கு இஷ்ட மானதெருக்கடோறும், சந்தோஷமாயுலா வித் திரிந்து திரும்பிவரும்படி உத்தரவளித்திருக்கிறார்; ஆனால் வண்டியிலேறினபின் ஒரு மணிநேரம் வரையில் வண்டியின் பலகணி வாயில்களைத் திறக்காதிருக்கவும், பின்பு தங்களுக்கு விருப்பமானால் அவைகளைத் திறந்துகொள்ளவும் உத்தரவு செய்திருக்கிறார். தங்களுக்கு இஷ்டமானால் இன்று சாயங் காலம் சுமார் நாலரை மணிக்குச் சவாரி போகலாமென்று சொன்னாள்.
இதைச் செவியுற்ற மைமூன் மிகவும் ஆச்சரியமடைந்து என்னை யிப்படிச் சிறைப்படுத்தி வைத்திருந்தும், எனக்கு இதுவரையிலும் யாதொரு தீங்கையும் விளைவிக்காமலிருப்ப தையும் இப்போது நான் பிறந்த பட்டணத்திற்குப் போய் உலாவி வரும்படி யெனக்கு விடைகொடுத்திருப்பதையும் ஆலோசிக்குமிடத்து, என்னை இங்கு கொண்டு வந்து வைத் திருப்பவர் நன்னெறி தவறாத குணசீலரென்றும், அவருக்கு என்மீதுள்ள அன்பேயன்றி,நாம் நினைத்திருந்தபடி அசுத்தக் கருத்தல்லவென்றும் தோன்றுகிறது; ஆதலால், நாம் சவாரி போய்வந்தபின், இன்றிரவு நம்மை வந்து சந்தித்துக்கொள் ளும்படி அவருக்குத்தரவு கொடுப்பதால் யாதொரு குற்றமும் நேரிடாது, மேலும் நாம் அவரைப் பணிந்து கெஞ்சி, மன்றாடி கேட்டுக்கொண்டால், மனமிரங்கி, நம்முடைய ஊருக்கு நம்மை அனுப்பிவிடுவார். இதுவே நல்ல யோசனையென்று தனக்குள்ளே ஆலோசித்துக்கொண்டு அந்தப்பாத்திமாவைப் பார்த்து, நல்லது, நாமின்றுமாலை சவாரி போய் வந்தபின் உன் எஜமானை இன்றிரவு ஏழு மணிக்கு, என்னை வந்து கண்டு கொள்ளும்படி, சொல்லென்று கட்டளையிட்டருளினாள்.
அன்று சாயந்திரம் நாலரை மணிக்கு. மைமூனிருந்த மாளிகையின் வாயிலில் ஓர் குதிரை வண்டி வந்து நின்றது. சற்று நேரத்துக்குள் ஓர் வாலிபன் மைமூனிருக்கிற அறைக் குள் வந்து புகுந்தான். அவ்விதம் வாலிப வேடம் பூண்டு வந்தது பாத்திமாவென்று மைமூனறியாமல், தான் ஏழு மணிக்கு வரும்படி சொல்லியிருந்தவன் என்று சந்தேகித்து அவனைக் கண்டவுடனே திடுக்கிட்டு மெய்சோர்ந்து மிகுந்த பயமுடையவளாய், நீரேன் ஸ்திரீகள் வாசஸ்தலத்தில், உத் தரவின்றி, சரேலென்று வந்தீரென்று கடிந்துகொள்ள, அதற்கு அம்மாறு வேடம் பூண்ட பாத்திமாவானவள். கெக்கலித்து, நகைத்துக் கைகொட்டி என்னாயகியே தங்களுக்கு என்னை இன்னாளென்று அறிந்துகொள்ளக் கூடாமற் போயிற்றே, பார்த்தீர்களோ? நான் தங்களுடைய பணிவிடைக்காரி பாத்திமாவாகிய தங்களுடைய அடியாள், நான் தங்களுக்கு தற்றுணையாய் வரும்படி இவ்விதம் வாலிபன் வேடம் பூண்டு உருமாறினேனென்று சொன்னபோது, மைமூன் மிகவும் சந் தோஷமடைந்து நீ மிகவும் சமர்த்தி, உனக்கு ஆடவர்வேடம் பிடிததிருக்கிறது என்று அவளைச் சற்று மெய்ச்சி, பின்பு இவ் விருவரும் வண்டியிலேறினார்கள், சாரதி வண்டியை மிகவும் விரைவாக நடத்தினான். ஒரு மணி நேரம் சென்றபின், வண்டியின் பலகணி வாயில்களைத் திறந்து பார்க்க, வண்டி சூரத்துப் பட்டணத்துத் தெருவிலே போகிறதென்று, அறிந் தாள். அப்போது பாத்திமாவானவள், மைமூனைக் கல்யாணம் பேசியிருக்கிற முகம்மது வசிக்கின்ற தெருவின் குறிப்பைச் சொல்லி அங்கு வண்டியைக் கொண்டு போகும்படி சாரதிக் குச் சொன்னாள்.
அப்படியே அவ்வீதியிற் போகும்போது வண்டிக்காரன் இவள் சொன்ன அடையாளங்களின்படியே அம்மைமூனின் மைத்துனன் வீட்டு வாசலிற் கொண்டுபோய் வண்டியை நிறுத்தினான்; அப்பொழுது பாத்திமா ஜன்னல் திரையை நீக்கி மைமூனுடைய கழுத்தில் கையைபோட்டுத் தழுவியணைத் துக்கொண்டு என் எசமாட்டியே இதோ பாருங்கள் தங்களை மணம் புரிய உத்தேசித்திருக்கிற முகம்மதென்பவர் நிற்கிறா ரென்று சொல்ல, மைமூன் நாணமிகுத்தவளாய்த் தலையைத் வணங்கிக் கடைக்கண்ணால் நோக்கினாள்; முகம்மது தன் வீட்டுவாசலில் வந்துநின்று மைமூன் ஓர் வாலிபனுடனே வண்டியிலிருப்பதையும் அவ்வாலிபன் அம்மங்கையின் கழுத் திற் கையைப்போட்டு இங்கிதமாயிருப்பதையுங்கண்டு திடுக் கிட்டு! ஆஹா!! இது என்ன வெட்கக் கேடும் சக்கிலியக் கூத் துமாயிருக்கிறதென்று பிரமித்தவனாய்ப் பெருமூச்செறிந்து கொண்டு தனக்குத் தோன்றுகின்ற காட்சி சொர்ப்பனமோ அல்லது கற்பனையோ வென்று தன் மனதிற்குள்ளேயே தெளி வின்றி, அவன் நின்ற நிலையிலேயே நின்று ெெரண்டு மூடின வாய் திறவாமலும், திறந்த கண்ணிமைக்காமலும் அவ்வண் டியை யேறிட்டுப் பார்த்துக்கொண்டே ஓர் பதுமையைப் போல் அசைவற்று நின்றான். அவ்வண்டி சுமார் அஞ்சு நிமிஷ நேரம் அங்கே நின்று, பின்பு மிக விரைவாய் நடத்திக் கொண்டு போகப்பட்டது; முகம்மது மயக்கந் தெளிந்து சற்று நிதானித்து, தான் பார்த்தது சொர்ப்பனமல்லவென்று தெளிந்து ஆ! என் நாயகனே நான் இதுவரையிலும் அம் மைமூனைப் போல குணவதியும் கற்புடைய மங்கையும் வேறு கிடைப்ப தரிதென்று நம்பி அவளை நானெப்போது கல்யாணம் செய்து பாக்கியவானாவேனென்று காத்திருந்தேனே! அவளிப் போது இருக்கிய நிலைமையை யோசித்துப் பார்ப்போம்; தன் சகோதரன் குற்றஞ்சாட்டப்பட்டு அவன் உயிர் அபாய நிலை யிலிருப்பதைச் சற்றும் கவனியாமல் தன்னுடைய துர் நடக் கையை நான றியும்படி அவ்வாலிப புருஷனோடு என் வீட் டுக்கு முன் வந்து நின்று அவளைச் சரசஞ் செய்வதை யென் கண்ணெதிரில் காண்பித்து என்னை அவமானப்படுத்தினாளே. ஆகையால் இவளைப் போல் துன்மார்க்கியும் கொலைபா தகியும் இவ்வுலகிலுண்டோ? என் ஆண்டவனே இவள் காணாமற் போன நாள்முதல் இந்நாள் வரையிலும், ஊண் உறக்கமின்றி யேக்கங்கொண்டு பித்தம் பிடித்தவனைப்போல் தேடித் திரிந் தேனே. இவள் இவ்விதமான நீலியென்றும் துரோகி யென் றும் பரபுருஷ விசுவாசியென்றும் நான் அறியாமற் போனே னென்று தனக்குள்ளே வெகுவாய்ப் பிரலாபித்துப் புலம்பிக் கொண்டிருந்தான். வண்டி மிகவும் விரைவாயோடத் தொடங்கிற்று.
மைமூனோ சிறு பிராயமுள்ள பெண்ணாயிருந்தாலும் மிக வும் புத்திசாலியாகையால் சற்று நிதானித்துப் பார்க்க அப் பொழுது நடந்ததெல்லாம் வஞ்சனையென்றறிந்தாள். பின்பு ஐயோ, தன்னைச் சிறுவயதிலேயே விவாகஞ் செய்து கொள் ளத் திட்டப்படுத்தித் தன்மீது நீங்காத அன்பு வைத்திருந்த தன்னருமை மைத்துனனாகிய முகம்மது என்னும் வாலிபனுக்கு என்மீது தப்பெண்ணத்தை யுண்டாக்கவும், அவன் என்மீது வைத்த பாசத்தை நீக்கவும், இனிமேல் அவன் என்னைத் தேடாமலிருக்கவுமல்லவோ இந்தத் தந்திரம் செய்திருக்கிறார் கள்; ஆ! என் ஆண்டவனே இவ்வுலகத்தில் இவ்விதமான தந்திரங்களும், வஞ்சனைகளும், குடிகொண்டிருக்கிறதென்று நானறியாமற்போனேனே என்னைக்கொண்டுவந்து ஆதரித்து வைத்திருப்பவன் நல்ல மனிதனென்று நான் நினைத்தல்லவோ இன்று சாயங்காலம், அவன் என்னைச் சந்திக்க வரும்படி அவ னுக்குச் சொல்லியனுப்பினேன்; ஐயோ என் விதிவசமே என்று மனம் நொந்து மலைவீழருவிபோற் கண்ணீர் ஆறாய்ப் பெருகியோட அழுது, பாத்திமாவைப் பார்த்து அடி பாவி, நீயும் ஒரு பெண்ணாகப் பிறந்திருந்தும், எனக்கிந்தத் துரோ கஞ் செய்யத் துணிந்தனையே, நான் கடல் புடை சூழிவ்வுலகில் ஆழிவாய்ச் சிறுதுரும்பாய் ஆதரவற்ற அனாதியானவள், ஓர் கொடிய துஷ்டனுடைய மோகாக்கினிக்கு எள்னையிரையாக்க நீயும் துணிந்து சற்றேனும் இரக்கமின்றி, அவனுக்கு உதவி செய்து வருவது அல்லாகுத்தாலாவுக்குஞ் சம்மதமாகுமோ வென்று துக்கித்துச் சொன்னபோது, பாத்திமா ஒன்றும் பேசா மல் கேட்டுக்கொண்டிருந்துவிட்டு நான் என்ன செய்வேன், என் எசமான் ஆக்கினைப்படி நடந்து அவன் எண்ணத்தை யொழிய நிறைவேற்ற அவனுக்கு உதவியாயிருந்தேனே வேறொன்றுஞ் செய்யவில்லையென்றாள். இதற்குள்ளாக மைமூனைக் கொண்டுவந்து வைத்திருக்கிற வீட்டுக்குமுன்னே வண்டி கொண்டு வந்து நிறுத்தப்பட்டது. மைமூனும், அவ ளுடன் ஆண்வேடம் பூண்டு சென்ற பாத்திமாவும் வண்டியி லிருந்து இறங்கி, வீட்டுக்குள்ளே புகுந்தார்கள். இவர்கள் உட்பிரவேசித்த சற்று நேரத்துக்குப்பின் ஓர் மனிதன் மைமூ னிருக்கிற அறைக்குள்ளே வந்து நுழைந்தான். மைமூன் அவனைக் கண்டவுடனே அஸனி கண்ட அரவைப் போல திடுக்கிட்டு நடுங்கி மயிர்க்கூச்சலிட்டு வெயர்வையொழுக ஓர் மூலையில் ஒதுங்கிநின்று அவனைக் கடைக் கண்ணால் உற்றுப் பார்த்தபொழுது, அவன் தைைன வெகுகாலமாய்க் கைவசப்படுத்தித் தன்னாசையை நிறைவேற்றிக் கொள்ள எத்தனித்த காமாந்தகாரமென்னும் கள்ளுண்டு கண்மூடித் திரிபவனும், தன் சகோதரனாகிய காசீம் என்பவனைப் பொய் யாக் கொலைபாதகஞ் செய்தானென்று குற்றஞ்சாட்டிய கொடும் பாதகனுமாகிய அலீ யென்றறிந்தாள். அப்போது அலீ அவளைப் பார்த்து என் கண்ணே, கண்மணியே, காரி கையே ஓ பெண்கள் நாயகமே, தேடாத் திரவியமே, தெவிட்டாத நல்லமுதே நீ யொன்றுக்கும் பயப்படவேண்டாம். நான் உனக்குத் தாங்கொணாத் தீங்குகள் செய்த துண்மையே ; நான் உன் தமயனைச் சிறையில் அடைப்பித்ததுவும் வாஸ் தவமே ஆயினும் பாதகமில்லையே! நான் சொல்வதைச் சற்று பொறுமையாயிருந்து செவிகொடுத்துக்கேள்; நான் உன் தமை யனை மரண தண்டனைக் கேதுவாக்கியிருப்பதுவும் உன்னை யிங்கு பலவந்தமாய்க் கொண்டுவந்து வைத்திருப்பதுவும், உன் மீது அடங்காக் காதல் கொண்டு, உன்னையனுபவிக்க வேண்டுமென்ற விருப்பமேயன்றி வேறொன்றுமல்ல. கருமுகில் போன்ற உன் கூந்தலழகையும், பூரணச் சந்திரன் போன்ற உன் முகத்தினழகையும், கெண்டை மீன்களையொத்த விரு கண்களினழகையும், வரிசையாகக் கட்டப்பட்ட முத்துகளோ அல்லது தொடுக்கப்பட்ட மல்லிகையரும்போ, என்று, கண் டோர் மயங்கும்படியான உன் தந்தபந்திகளின் அழகையும், பவளம் போன்றவுன் உதட்டினழகையும், மாந்தளிர் போன்ற மேனியழகினையும், சங்கம் போன்ற சுந்தரத்தின் அழகையும் பசுமையான குரும்பையோ, செந்தாமரை மொக்கோ, நீர்க் குமிழியோ, அல்லது சூதாடுகின்ற வட்டோவென்று பார்த் தோர் சந்தேகிக்கத்தக்க வட்டமிட்டடி பரந்து இருமாந்து அண்ணாந்து தங்கக் கிண்ணத்தைப் போல் பிரகாசித்துப் பருத்திருக்கின்ற உன்னிரு கொங்கைகளினழகையும், எறும் பின் வரிசை போன்ற வயிற்றின் மயிரொழுங்கின் அழகையும் வாலிபர் மனதைச் சுழித்து உள்வாங்கும்படியான உன் உந்திச் சுழியினழகையும் மின்னற்கொடியை ஒத்த இடையினழகை யும், பாம்பின் படத்தையொத்த உன் அல்குலினழகையும், வாழை மரத்தையொத்த உன்னிரு தொடைகளினழகையும், தாமரை போன்ற அங்கையினழகையும், செம்பஞ்சிட்ட உனது பாதமலர்களின் அழகையுங்கண்டு, நான் இராப்பகலாய் அன்னமாகாரமின்றி வாடுகின்றேன். என் மனமாகிய மெழுகு உன்தனமாகிய அக்கினியிலுருகுகின்றதடி மானே? என்னிடத் திலிருக்கிற அளவற்ற ஆஸ்திகளையும் உனது பாதாரவிந்தத் தில் காணிக்கையாக வைத்து, நானும் உனக்கு அடிமையாகிப் போகிறேனடி என் கண்ணே, நீ என்பேரில் சற்று கிருபை செய்து ஒரு அன்பான வார்த்தை சொல்லாயா ? என் துயரத்தை தீராயா ? ஐயோ இன்னும் சற்று நேரம் நீ யுன் பவள வாயைத் திறந்து இனிமையான சொல்லாகிய அமிர் தத்தை என் காதாகிய வாயில் புகட்டி காமாக்கினி யாலுண் டாகிய என் சுரத்தைத் தணித்து என்னை சந்தோஷப்படுத் தாவிடில் என்னுயிரை யிழந்து மண்ணாய்ப் போவது திண்ண மே! நீ பெண்ணாய்ப் பிறந்தும் உன் மனது கல்லாயிருக் கின்றதே; ஐயோ என்னருமை யஞ்சுகமே ஒரு வார்த் தைக்கும் பஞ்சமாவெனப் பலவாறாக வருந்திக் கெஞ்சிக் கூத்தாடி, அக்கினியின் மேனின்று, வதங்குகின்ற இளந் தளிர்போற் சுருண்டு, காமமென்னும் பெருங்காற்றால் அவன் மனமென்னும் சருகு அலைக்கப்பட்டுத் தட்டழிந்து கொண்டு நின்றான். இப்படி வருந்துகின்ற அலீயை மைமூன் பார்த்து, ஐயா! கனவானே, தாங்கள் மிகவும் தனவான் ; தக்க அந்தஸ்தும் மரியாதையும் உள்ளவர். நானும் என் சகோதரனும் மிகவும் எளியவர்களான அனாதிகள்; மீன் பிடித்துச் சீவனம் செய்யும் இழிதொழிலை யுடையவர்கள் நான் தங்களுக்குத் தக்க இனத்திலுள்ள வளல்ல; ஆகையால் யான் தங்களுக்கு இல்லறத் துணைவியாதல் உலகத்திற்கடாது; ஏனெனில், எருதோடெருதும். குதிரையோடு குதிரையும் வண்டியிற் பூட்ட வேண்டுமே தவிர எருதும் குதிரையும் ஓரிரதத்தில் பூட்டுவார்களா ? அப்படிப் பூட்டினாலது அழகாமா ? ஆகை யால் தாங்கள் இவ்வார்த்தைகளைச் சொல்வது தங்கள் யோக் கியதைக்குத் தக்கதன்று; தாங்கள் ஏழையாகிய என்மீது கிருபை செய்து, என் சகோதரனை விடுதலை செய்து, என்னை யும் விட்டுவிடுங்கள் என்று வானின்றிழிந்து சொரிகின்ற தாரை மழைபோல விழிநீர்விழ மிகுந்த வணக்கத்துடன் கேட்டாள்; அதற்கு அலீ வெகுவாய்த் துக்கித்து பெண்ணே ” எண்ணற்றக் கற்று எழுத்தற வாசித்தாலும் பெண் புத்தி பின் புத்தி யென்று பெரியோர் சொல்லுகிறபடி நீ மிகவும் புத்தியில்லாதவளா யிருக்கின்றாயே. நீ என் விருப்பத்திற்கிணங்கி, என்னாசையை நிறைவேற்ற இடங் கொடாவிடில் இன்னும் சொற்ப காலத்திற்குள்ளாக குற்றஞ் சாட்டப்பட்டிருக்கிற உன் தமையன், மரண தண்டனைய டைந்து கொலையாளிகள் கையிலொப்புவிக்கப்படுவான். நீ யிங்கிருந்து தப்பித்து ஓடிப்போனாலும் இன்று சாயந்திரம் நடந்த மோசத்தை மெய்யென்று நம்பி, உன்னை மணம் புரிய ஆசை யுற்றிருக்கிற முகம்மதும், மற்றும் உன்னை யறிந்த உன் பந்து மித்திராதிகளும், நீ துகவும் துன்மார்க்கியென்று நிந்தித்து உன்னைக் கைவிடுவார்கள். நீ எவ்வித வார்த்தை சொன்ன போதிலும் அவர்கள் நம்பார்கள். ஆகையால் நீ மறுபேச்சின்றி, என் கருத்திற்கிணங்கிவிடு, அப்படி இணங்கு வாயானால் இன்று முதல் மூன்று நாளைக்குள் உன் தமையனை விடுதலையாக்கு விப்பேன். அவன் விடுதலையானபின் அவ னுக்கு ஏராளமான திரவியங் கொடுத்து அவன் ஓர் சிறந்த வியாபாரியாகும்படி திட்டம் செய்வேன் ; உனக்கு மிகவும் அலங்காரமான ஏழடுக்கு உப்பரிகையுடைய மாளிகை யொன்று கட்டுவித்து அதில் உன்னை ஒரு மகுடவர்த்தினி போல வைத்திருப்பே னென்று சொன்னான். மைமுன் கற்பிற் சிறந்த மாதா கையால் அவனைப் பார்த்து, ஐயா ! தாங்கள் சொல்லுவது சரியே! ஆயினும் அதற்கு நான் தகுதியற் றவள், என் தமையன் உயிருக்காக என்னுயிரைப் பலியாக்க ஒப்புவேன். ஆனால் என் கற்பை யிழக்கக் கிஞ்சித்தும் பொருந்தேன். ”மான மழிந்த பின் வ ழாமை முன்னினதே” என்றபடி நானும் என் தமயனும் உயிர் விடுவோமேயன்றி, எங்கள் இருவருடைய உயிருக்காக ஒருக்காலும் என் கற்பை யழித்துயிர் வாழேன், ஆகையால் தாங்கள் எளியோராகிய எங்கள் மீது மனமிரங்கி யென்னைவிட்டுவிடுவதுமன்றி யா தொரு குற்றமுஞ் செய்தறியாத என் தமயனையும் விடுவி யுங்கள், நான் தங்களுக்காக இராப்பகலாய் அல்லாகுத்தாலா விடத்தில் துவா கேட்பதில் (பிரார்த்திப்பதில்) நின்றும் மாறாத வளா யிருப்பேனென்று சொன்னாள். இவ்விதம் கலங்கிக் கேட்ட இம்மங்கையரை நோக்கி, ஆலகால விஷத்திலும் அதிகக் கடூரமான சிந்தையை யுடையவனாகிய அலீ ஓ என் கண்ணே ! நீ யென் பேச்சுக்கு இடங்கொடாத வரையிலும் உனக்குத் தீங்கு நேரிடுவதிற் சந்தேகமில்லையென்று கடிந்து கூறி, நாம் இவளை வாய்ப் பேச்சினால் மயக்குவதரிது, இதற்கோர் தக்க தந்திரஞ் செய்வதே சரி; தத்திரத்தாலன்றி மற்றெவ்விதத்திலும் இவள் நம் வசப்படாள் என்று தமக்குள் ஆலோதித்துக்கொண்டு நல்லது நான் சொன்னவைகள் எல்லாவற்றையும் நன்றாக யோசித்துப்பார்; ஏனெனில் யோசி யாது செய்யாத காரியம் முடிவில் தீங்காகும் ; நாளையிரவு இங்கு வருவேன் அப்போதாவது நீ யுன் மனதைத் திடப் படுத்தி யென் மனது சந்தோஷப்படும்படியான உத்தரஞ் சொல்ல வேண்டுமெனச் சொல்லிவிட்டு அம்மாளிகையை விட்டிறங்கினான். பின்பு தனது பணிவிடைக் காரியாகிய பாத்திமாவை யழைத்து நாளை நான் மைமூமினிடம் சம்பா ஷித்துக்கொண்டிருக்கும்போது எங்களுக் கிடையில் போடப் பட்டிருக்கிற மேசையின் மீது மதுரமான உணவுகளை நீ கொண்டுவந்து வை ; அவற்றை நாங்கள் புசித்துக் கொண் டிருக்கும்போது நல்ல இன்பமான ஷர்பத்து இரண்டு பளிங்குக் கிண்ணங்களிற் காண்டுவந்து என் முன் ஒரு கிண்ணமும் மைமூன் முன் ஓர் கிண்ணமும் வை; அவள் முன் வைக்கிற கிண்ணத்தில் இந்த தூளைப் போட்டுக் கலக்கிக் கொண்டு வரவேண்டுமென்று சொல்லி கஞ்சா முதலிய, லாகிரி பதார்த்தங்களைத் தூளாக்கி ஒரு கடிதத்தில் மடித்து அந்தப் பொட்டணத்தை பாத்திமாவிடங் கொடுத்துவிட்டு தன்னிருப்பிடஞ் சென்றான்.
மறுநாள் காலை நேரத்தில் பாத்திமா வானவள் மைமூனி ருக்கிற அறைக்குள் வந்து மைமூனைப் பார்த்து என்னாயகியே நேற்று நான் ஆண் வேஷம் பூண்டு தங்களுடன் வண்டியில் உலாவித் திரிந்து வரும்போது நான் தங்களுக்குச் செய்த தீமையைக் குறித்து தாங்கள் சொன்ன வார்த்தைகள் என் மனதில் கல்லிலெழுத்துப்போல் பதிந்திருக்கின்றன நான் தங்களுக்குச் செய்த துரோகத்தைக் குறித்து நினைக்கும் போதெல்லாம் என் மனம் படும் வேதனையை யிவ்வாறென்று எடுத்துரைக்க என்னாற்கூடவில்லை. ஆகையால் இக் கொடும் பாதகனாகிய அலீயின் கையினின்று தங்களைத் தப்புவிப் பதற்கு இனி தங்களுக்கு நான் உதவியாயிருக்கும்படி தீர்மா னித்திருக்கிறேன்; இன்றிரவு அப்பாதகன் தங்களறைக்கு வருவான்; அப்போது அவனோடு முகமலர்ச்சியோடு வார்த் தையாடிக் கொண்டிருங்கள் சற்று நேரத்திற்கெல்லாம் பற்பல பக்ஷணங்களைக்கொண்டு வந்து உங்களிருவருக்கும் இடையேயிருக்கிற மேஜையில் வைப்பேன். அதைத் தாங் களும் அவனோடு கபடமின்றிச் சாப்பிடுங்கள். நீங்கள் போசனஞ் கெய்தபின் நானிரண்டு பளிங்குக் கிண்ணங்களில் நீங்களிருவரும் பானம் பண்ணும்படி மதுரமான ஷர்பத்து கொண்டுவந்து வைப்பேன். அக் கிண்ணங்களொன்றில் லாகிரி பதார்த்தங்கள் கலக்கப்பட்டிருக்கின்றன. அந்தக் கிண்ணத்தை தங்கள் முன் வைக்கும்படி அவன் கட்டளை யிட்டிருக்கிறான். நான் தங்களுக்காகத் திட்டஞ் செய்த அந்தக் கிண்ணத்தை அவர் முன்பாக வைத்துவிட்டு மற்றொரு கிண்ணத்தைத் தங்கள் முன் வைக்கின்றேன். அவன் லாகிரி கலந்த அப்பானத்தைப் பருகினவுடன் வெறி கொண்டு மயங்கி விழுந்து ஸ்மரனையற்றவனாவான். அப்பொழுது தாங்கள் இலகுவாய்த் தப்பித்து ஓடிவிடலாம் என்று சொன்னாள். இவ்வினிமையான வார்த்தைகளை மைமூன் காதாரக்கேட்டு, ஆனந்த சாகரத்தி லாழ்ந்த வளாய்த் தன்னை யிவ்வுலகத்திற் படைத்துக் காத்தருளும் சர்வரக்ஷ சனாகிய ல்லாகுத்தாலாவைப் புகழ்ந்து துதி செலுத்தினாள்.
மறுநாளிரவு அலீ யென்பவன் மைமூ னிருக்கிற மாளி கைக்கு வந்து அவனை நோக்கிப் பெண்ணே! நான் நேற்று உன்னோடு வேடிக்கையாய்ப் பேசிக்கொண்டிருந்தபோது நீ மிகவும் வருந்தினவளாய்ச் சொன்ன வார்த்தைகளை யெல்லாம் நான் தனியேயிருந்து யோசித்துப் பார்த்தேன். உன்னுடைய பரிதாப நிலையை நான் நினைத்துப்பார்க்கையில் என் மனது அக்கினியிலிட்ட மெழுகுபோலுருகி விட்டது. நேற்றுன்னோடு பேசின தெல்லாம் விளையாட்டே யன்றி வேறொன்றல்ல ; இன்று முதல் நீ யென் சகோதரியே. நானுன் சகோதரனே. உன்னுடைய கஷ்டங்களை நீக்குவ தற்கு என்னாலியன்ற வரைக்கும் தக்க காரியங்களைச் செய்து உன்னை க்ஷேமப்படுத்தத் தீர்மானித் திருக்கிறேன். நாளைக் காலமே நீ யுனக்குப் பிரியமான விடத்திற்குப் போகும்படி திட்டம் செய்தனுப்புகிறேன். இனி நீ யொன்றுக்கும் அஞ்ச வேண்டாம். நானுனக்கு தமையனாகி விட்டபடியால் நீ யென்னிடத்தில் நாணப்படாமலும் கூசாமலும் என்னையுன் கூடப்பிறந்த சகோதரனைவிட பதின் மடங்கதிகமாகப் பாவித்து நடந்து கொள்ளென்று மைமூனுக்குத் திடஞ் சொல்லி அவள் மனதிற் குடி கொண்டிருந்த பயங்கரமெல் லாந் தெளியும்படி ” குரங்கிற்கு முதளை புத்தி சொன்னது போல் ” தந்திர வார்த்தைகளைப் பேசி, பின்பு தன் ஏவல் செய்பவளாகிய பாத்திமாவை யழைத்து நானும் என் சகோ தரியும் ஒன்றாயிருந்து போசனஞ் செய்யப்போகிறோம். என் வீட்டிலிருக்கிற மதுரமான தின்பண்டங்களைக் கொண்டு வந் திருந்த மேஜையில் வையென்று கட்டளையிட்டான். பாத்திமா அவனிட்ட கட்டளையைத் தலைமேற்கொண்டு அப் படியே நல்ல உணவுகளைக் கொண்டுவந்து அவ்விருவருக்கு மிடையேயிருந்த மேஜையில் வைத்தாள் ; மைமூன் அலீயின் தந்திரத்தை பாத்திமா சொல்ல அறிந்திருந்தா ளாகையால் தனது மனச்சந்தேகத்தை வெளியிடாமல் அவனோடு கபட பமாய்ச் சந்தோஷ வார்த்தைகள் பேசி மேஜையிலிருந்த உணவுகளை யவனுடன் சாப்பிட்டாள். இவ்விதம் இருவரும் போஜனஞ்செய்து முடிந்தவுடன், பாத்திமா இரண்டு பளிங் குக் கிண்ணங்களில் ஷர்பத்து கொண்டுவந்து, தான் மைமூ னுக்குச் சொல்லியிருந்தபடி, கிண்ணங்களை மாற்றி அவர் களின் முன் வைத்தாள்; அலீ, தன்முன் வைத்திருக்கிற கிண்ணத்தை யெடுத்துத் தன் வேலைக்காரியின் சூதையறி யாதவனாதலால் யாதொரு கபடமின்றி பானஞ்செய்தான். ” பிறர்க்கின்னா முற்பகற் செய்யிற் றமக்கின்னா பிற்பகற் றானேவரும் ” என்ற பெரியோர் வாக்கின்படி மைமூனை மோ சஞ்செய்யக் கருதிய அலீயானவன் தானே தன் வேலைக்காரி யால் மோசஞ் செய்யப்பட்டு லாகிரிபானத்தைப் பருகி சற்று நேரத்திற்குள் வெறிகொண்டு, பின் தலை முதுகிற்பட வாயை ஆவென்று திறந்துகொண்டு தான் வீற்றிருந்த நாற்காலியிற் சாய்ந்து மூச்சோடு கூடிய பிணத்தைப்போல் மயங்கி ஸ்மரனை தப்பிக்கிடந்தான்.
அப்பொழுது மைமூன் இது நல்ல சமையமென்றறிந்து விரைவில் தன் முன்னுடை களை யெடுத்துக்கொண்டு புறப் படுகிற தருணத்தில், மலைச்சாரலிலுள்ள கூகையைப்போல் தன் பெரும் வாயைப் பிளந்து ஆவென்று திறந்துகொண்டு நாற்காலியில் சாய்ந்துகிடக்கிற அலீயைப் பார்த்து, ஆ; கெடுவாய், இப்பேதை வாயினாலன்றோ என் கற்புக் கடாத வார்த்தைகளைப் பேசினாய் பேசிய வாயானது எரிமலை யுச்சி யிற்றோன்றுகிற பிளப்பைப் போலிருக்கின்றதே. இவ்வாயால் இனி யென்போன்ற கற்புடைய மங்கையரை யேதும் சொல் லாதிருக்கும்படி என்னாண்டவனாகிய நாயகன் கிருபை செய்ய வேண்டுமென்று புடவையை யெடுத்துச் சுருட்டி அவன் வாயில் அமுக்கிவிட்டு வெளியே வந்து, அடைத்து வைத்த பட்சியைத் திறந்துவிட்டதுபோல் விரைவாய் ஓட ஆரம் பித்தாள். இவ்விதம் அன்றிரவெல்லாம் நடந்து வழி தெரி யாது தன் கண்ணுக்குத் தோன்றிய பாதை வழியே தான் இன்னவிடத்திற்குப் போகிறோமெனவறியாது, தான் சிறை யாக்கப்பட்டிருந்த கொடும் பாதகனாகிய அலீயின் மாளிகைக்கு வெகு தூரமாயுள்ள விடத்திற்குப் போய்ச் வேண்டுமென்னும் எண்ணத்துடன் வழியிலோரிடத்திலும் தங்காமலும் தன் கால்களின் வேதனையைப் பாராட்டாமலும் வெகு விரைவாய் நடந்தாள். காலமே விடிந்தபோது அவ ளுக்கு ஈரகத்து அக்கினியைப்போல் பசியெழுந்தது. ஆகிலும் “ஏற்பதிகழ்ச்சி ” என்னும் பழமொழி அவள் ஞாபகத்தி லிருந்தமையால் வேறொருவரி _ த்திற் இரந்து தன் பசி தாகத்தைத் தீர்க்க மனமில்லாதவளாய் ஒரே நடையாய் நடந்தாள். சூரியனும் இவள் வருத்தத்தைக் கண்டு இரங்கிச் சமீபத்தில் நெருங்கித் தேறுதல் சொல்வது போல, கீழ்த்திசையிலிருந்தெழும்பிச் சமீபத்துத் தலைக்கு மேலே சென்றுகொண்டிருந்தான், ஆனால் அவன் சுபாவம் உஷ்ணமாகையால் அப்படிச் சமீபித்து நெருங்கவே வெப்ப மும் அதிகரித்தது. ஆகையால், மைமூனுக்குப் பசி தாகம் அதிகரித்து நடக்கக் கூடாதவளாய்த் தள்ளாடித் தள்ளாடி மெதுவாகப் போய்க்கொண்டிருந்தாள். அப்பொழுது சூரியன் இவளோடு கோபித்து இவளுக்குமுன் வழிமீறிப் பாய்ந்து செல்கிறதுபோல மேற்றிசையை நோக்கிச் சென்றான். இவளிப்படி நெடுந்தூரம் நடந்து ம லைப்பொழுது நெருங்குந்தறுவாயில் மைமூனுக்குப் பசியின் கொடுமை யதி கரித்து களைக்கிக்கக் கூடாதவளாய் ஓர் வீட்டு வாசலிற் போய் ஓர் இசுலாமாகிய கிழவி நிற்கிறதைப் பார்த்து நெருங்கி, தாயே! நான் வெகுதுலையிலிருந்து வருகிறேன், எனக்குப் பசி தாங்கக்கூடவில்லை, அல்லாகுத்தாலாவுக்காக மனமிரங்கி இவ்வேழையின் நிலையைப் பார்த்து, அடியாள் பசியை யாற்றுங்கள் என்று வாடிய முகத்தோடும் கண்ணீர் ததும்ப நின்று கேட்டாள். அப்பொழுது அந்தக் கிழவி’ வேட்டை நாய் போற் சீறிப்பாய்ந்து, போடி போடி வேலை யில்லாதவளே, உலகத்தில் கூன், குருடு, முடம், முதலிய அங்கவீனர்கள், தீரா நோயில் வருந்துவோர்கள், வேலை செய்யச் சக்தியற்ற விர்த்தாப்பியர்கள், ஆதரவற்ற குழந்தை கள் முதலானவர்கட்கே, பிச்சையிடுவது நியாயம்; அவர் களுக்கே யெங்களால் கொடுத்து முடியவில்லை. ஷேக்குமார் (குருமார்கள்) சையதுமார் (மேலோர்கள்) ஆலீம்கள் பண்டி தர்கள்) அல்லும் பகலும் வந்து அலட்டுகிறார்கள். நீயோ, இரும்பைக் காந்தம் இழுக்கிற தன்மைபோல, வாலிபர்களு டைய மனத்தையும் தனத்தையுமிழுக்கத்தக்க வசீகரமான தனத்தையுடைய பெண்ணாயிருக்கிறாய்; உன்னைக் கண்ட வாலிபர்கள் நீ கேட்டதெல்லாம் கொடுத்து உனக்குத் தெண் டனிடச் சித்தமாயிருப்பார்கள். அப்படியிருக்க வெண்ணெ யை வைத்துக்கொண்டு நெய்யிற்கு அலைகிற பயித்தியக் காரர்களைப்போல நீயும் பிச்சை வாங்க புறப்பட்டு விட்டாயே; போ, போவென்று கோபமாய் அதட்டிப் பேசினாள்.
அவ்வார்த்தைகளைக் கேட்ட மைமூன் மனமானது வேதனை யென்னும் தீப்பற்றி சுவாலித்து எரிய அதை யாற்றும் பொருட்டு கண்களினின்றும் நீர் தாரைதாரையாய் வடிந்தது; அப்பொழுது மைமூன் எப்பொருட்கு மிறைவ னாகிய இறைவனே நீ யென்னை யிலட்சணமாய்ப் படைத்ததே யெனக்கு கேட்டை விளைவிக்கின்றது. அந்தக் கொடும் பாதகனான அலீ என் சகோதரன் கொலைசெய்தா னென்று குற்றஞ்சாட்டிச் சிறையிலடைப்பித்திருக்கிறதும் என்னைப் பலவந்தமாய்க் கொண்டுபோய்த் தன் மாளிகையில் மறியற் படுத்தி வைத்திருந்ததும், ஏழையனாதிகளுக்குக் கொடுக்கப் படுகிற தானந் தருமம் எனக்கில்லையென்று மறுக்கப்படு கிறதும் எல்லாம் என்முகம் வஜீகரமா யிருப்பதினாலன்றோ. நானினி யென்ன செய்வேன், ஆரிடததிற்போய்த் தஞ்சம் புகுவேன். எனக்கு யாதொரு ஆதரவுமின்றி அனாதியா னேனே அல்லாவே யென்று தன்னைத் தானே நொந்து அழுத கண்ணீரும் சிந்திய மூக்குமாய் மெல்ல அப்புறம் அசைய, சூரியனுமிவள் துயரைக் கண்டு சகியாதவன் போல மேற் கடலிற் பதுங்கினான். இவளுக்கு அன்று பகலெல்லாம் ஆகாரமில்லாததினாலும், மனக் கவலை மேலிட்டதினாலும் அடிபேர்த்து வைக்கச் சக்தியற்றவளாய் சற்று தூரம் தள்ளாடித் தள்ளாடி நடந்து பின்பு களையினால் சோர்ந்து அங்கிருந்தவோர் வீட்டுக்கு முன் நின்ற ஒரு மரத்தைப் பிடித்துக்கொண்டு; அதில் சாய்ந்து நின்றாள். அப்படி நிற்கும்போது அந்த வீட்டுக்குள்ளிருந்து ஓர் கன்னிகை வெளியே வந்தாள். அவளுடைய அதி சவுந்திரியமான முகத்தை மைமூன் கண்டவுடனே பிரமித்துப்போனாள். அப்போது, முன்னொரு புலவன் சொன்ன கவி மைமூன் ஞாப கத்துக்கு வந்தது. அஃது யாதெனில், அல்லாகுத் தாலாவு டைய வல்லபத்தை யாவரு மறியும்படி அழகையெல்லாம் ஒன்றாய்த் திரட்டி ஓர் பெண் ரூபமாக வைத்தா னென்பது தான், இந்தக் கவி அவள் முகத்தைப் பார்த்தவுடனே மைமூன் ஞாபகத்தில் வரவே அதைப்பற்றி சிந்தித்துக் கொண்டு நிற்கும்போது அந்தப் பெண் மைமூனை மிகவும் அன்பான பார்வையாய் சற்று நேரம் பார்த்துக்கொண்டி ருத்தாள். பின்பு அவளைத் தன்னருகில் வரும்படி கைச் சைகை காட்டினாள். மைமுன் அச்சைகையைக் கண்டு தன் மனதைச் சற்று தேற்றி அவளருகிற் சென்ற பொழுது அவள் குயிலொலி போன்ற மென்மையான குரலோடும் தேன் சுவை போன்ற மதுரமான வார்த்தைகளோடும் இவளோடு பேசத்துடங்கினாள்; அஃதென்னெனில், இவளைப் பார்த்து பெண்ணே நீ மிகவும் களைத்துச் சோர்ந்து அந்த மரத்தைப் பிடித்து அதில் சாய்ந்துகொண்டு நிற்பதை நான் கண்ணுற் றேன். மலர்ந்த செந்தாமரைப் புட்பம் போன்ற உனது திரு முகம் வாடி வதங்கியிருப்பதை யோசித்துப் பார்க்கில் நீ மிகவும் சஞ்சலப்பட்ட மனத்தினளா யிருக்கிறாயென்று எனக்கு நன்றாக விளங்குகின்றது. நீ யார்? உன் பெய ரென்ன? உனக்குற்ற தீங்கு யாது? நீயேன் இப்படி சஞ்சலப் படுகின்றாய்? எனக்குத் தெரியச் சொல்லென்று வினவினாள் ; அப்பொழுது பதில் சொல்ல மைமூனுக்கு நாவெழாததினால் தேம்பித் தேம்பியழுதாள். அக்கன்னிகை, மைமூன் கண் ணீருகுப்பதைக் கண்டு மனதுருகி அவள் கையைப் பிடித்து மெதுவாய் தன் வீட்டுக்குள்ளே அழைத்துச் சென்று அங்கு போடப்பட்டிருந்த ஒரு சோபாவின் மீது அவளை யிருக்கச் செய்து, அவள் பசியை யாற்றும் பொருட்டு நல்லுணவுகளை அவளுக்குக் கொண்டுவந்து கொடுத்தாள். அவைகளை மைமூன் உண்டு பசியாறிக் களை மிகுதியாலச் சோபாவிற் றானே சாய்ந்து உறங்கிவிட்டாள் ; அன்றிரவு சுமார் எட்டு மணி வரையில் நித்திரை செய்து பின்பு விழித்தெழுந்து தனக்கு தக்ககாலத்திலுதவி செய்த, அக்கன்னி கையின் ை யைத் தன்னிருகரங்களாற் பற்றி தனது கண் களில் வைத்து முத்தமிட்டு, அம்மா, ஏழைகளுக்கிரங்கும் எம் பெருமாட்டியே, நான் பசி தாகததால் வருந்தி இறந்து போகக்கூடிய தறுவாயிலிருந்தபொழுது, தாங்கள் என்மீது கிருபை செய்து எனக்கு ஊனளித்து என்னைக் காப்பாற்றி ஆதரித்தீர்களே, தாங்கள் எனக்குச் செய்த பேருதவிக்குத் தகுந்த கைம்மாறு வையகத்திலும் வானுலகத்திலும் இல்லை யென்று உத்தேசிக்கிறேன் என்று அவளைப் புகழ்ந்து பேசிய பின், அம்மா, என்னை முதலிற் கண்டபொழுது, தாங்கள் என் வரலாற்றைத் தங்களுக் கறிவிக்கும்படி கேட்டீர்களே, அப்பொழுது நான் பேசச் சக்தியற்றவளா யிருந்ததினால் தங்களுக்கு மறுமொழி சொல்லக்கூடாமற் போயிற்று, இப் பொழுது ஆதியோடந்தமாய் என் சரித்திர முழுவதையுஞ் சொல்லுகிறேன் கேளுங்கள் என்றாள்,
பின்பு தன் பிறப்பு, வளர்ப்பு, இடையில் நேரிட்ட துன் பங்கள், முதலிய யாவற்றையும் சொல்ல அந்தக் கன்னிகை இவைகளை யெல்லாம் கேட்டு ஆச்சரியமடைந்தாள். இது நிற்க, அந்தக் கிரகத்தில், ஜூலைகா வென்னும் பெயரினளாகிய இக் கன்னிகையும், ஓர் குழந்தையும், விருத்தாப்பியமான ஓரு வேலைக்காரியும் ஆகிய மூவரன்றி வேறொருவருமில்லை. அந்தக் குழந்தையை ஜுலைகா, தன் மடியில் வைத்துக்கொண்டு கொஞ்சுகிறதையும்; அந்தப் பிள்ளையை அவள் மிகவும் அன் பாய் வளர்ப்பதையும் மைமூன் கண்டு, அது அக்கன்னியின் யின் மதலையென்றே தனக்குள் ஆலோசித்துக்கொண்டு, இந்தப் பிள்ளையின் தந்தையெங்கே என்று அவளைக் கேட்க ஜுலைகா, மிகவும் நாணமிகுத்தவளாய் மறுமொழி சொல்ல விருப்பமில்லாதவள் போல மௌனமாயிருந்தாள். அப்படி யவளிருப்பதைக் கண்டு, மைமூன் அந்தக் குறிப்பையுணராது இது யாருடைய பிள்ளை யென்று மீண்டும் அவளைக் கேட்டாள். அதற்கும் ஜுலைகா உத்தரம் பகராது, சற்றுநேரம் தேம்பித் தேம்பி யழுது, இக்குழந்தையைப் பற்றி யென்னிடம் ஒன்றுங் கேளாதே, இதினுடைய இரகசியம் அல்லா ஒருவனேயறிவா னென்று சொன்னாள். அவ்வார்த்தைகளைக் கேட்ட மைமூன் வியப்புற்று இதறகுக் காரணமென்னவென்று ஆலோசித்துக் கொண்டிருக்கும்பொழுது ஜூலைகா அவளைப் பார்த்து, என் சகோதரியே! நீ உற்றார் பெற்றோர் உறவினரின்றித் தனித் தவளாயிருக்கிறாய், நானுமதுபோலவே, நாதியற்றவள பயிருக் கிறேன். நீ என்னோடு, இவ்விடத்திற்றங்கியிருப்பாயானால் நாமிருவரும் ஒரு வயிற்றிற் பிறந்த சகோதரிகளைப் போல ஒருவருக்கொருவர் அன்பாயிருந்து ஓருமித்து வாழ்ந்து காலங் கழிக்கலாமென்று சொல்ல, மைமூன் இவ்வன்பான வார்த்தை களைக் கேட்டு ஆனந்தித்து, அவளை நோக்கி அம்மா, கருப் பைக்குண்முட்டைக்குங் கல்லினுட்டேரைக்கும் விரும்பி யமுத ளிக்கும் ரக்ஷகனாகிய நமது அல்லாகுத்தாலா ஏழையாகிய அடியாள் மீது இரக்கம் வைத்துக் காப்பாற்றும்படியாகவே, இப்புவியில் படைத்திருக்கிறானென்று தோன்றுகிறது; ஆரடித் துக்கொண்டு போகிற ஒருவனுக்கு, தற்செயலாய்த் தெப்பம் அவன்: கைக் ககப்பட்டாலவன் எவ்வாறு சந்தோஷப்படு வானோ; அப்படிப் போலவே ஆதரவற்ற எனக்குத் தாங்கள் நற்றுணையானதைப் பற்றி அவ்வளவு சந்தோஷப்படுகிறேன்று அவளைத் துதித்து வந்தனஞ் செலுத்தி, அவளுடன் கூடி வாழ்ந்திருக்கச் சம்மதித்துக் கொண்டாள். அன்றுமுதல் அவர்களிருவரும் ஒருமித்து, “நகமும் சதையும் போல “அன்னியோன்யமாய் மிகவும் சிநேகமாயிருந்தார்கள், மைமூன் அவ்வீட்டுக்கு வந்த இரண்டு மூன்று நாட்சென்று ஒருநாள் ஜுலைகா வளர்த்த பிள்ளையைத் தூக்கிக்கொண்டு, காற்றிலுலாவும்படி வெளியே போனாள். அங்கே சற்றுநேரம் உலாவித் திரிந்த பின் அயல் வீட்டுலிருந்த ஓர் பெண் பிள்ளை யானவள்மைமூன் அந்தப் பிள்ளையை வைத்து விளையாடிக் கொண்டிருப்பதைக் கண்டு அவளருகே வந்து பெருமூச் செறிந்து அம்மா நீ வந்து தங்கியிருக்கிற வீட்டில் வசிக்கிற ஜுலைகாவென்னும் பெண், யாவரும் வியக்கத்தக்க சற்குண மும் நன்னெறியும் உடையவளாயும் கற்பில் ஒப்பில்வாதவ ளாயும் இருந்தாள். அவள் இப்படி மோசம் போவாளென்று ஒருவரும் நினைக்கவேயில்லை; அவள் சிறுபிராயமுதல் இந்த வூரில் அவளை அறிந்த யாவரும் ஓர் செல்லப்பிள்ளையாகப் பாவித்து அன்பு பாராட்டும்படி நடந்துகொண்டாள். கொஞ்ச காலத்திற்கு முன் பிசாசின் கலைப்பினால் அவள் மனக் கலக்க முற்று பாவத்துக்கு இடங்கொடுத்து அவனுக்குக் கீழ்ப்படிந்து போனாள். இவ்வூரிலிருக்கிற யாவருக்கும் இதை நினைத்தால் துக்கமும் அழுதால் வெட்கமுமான காரியமாயிருக்கிறதென்று சொன்னாள். இவ்வார்த்தைகளை மைமூன் கேட்டுத் திடுக் கிட்டு ஜூலைகா அந்தப் பிள்ளையின் வரலாற்றை எனக்கு அறி விக்காமல் மறைத்த காரணம் இப்போதல்லவா விளங்கிற்று என்று சொல்லி மிகவும் வருத்தமுற்றுத் துக்கசாகரத்திலாழ்ந் தினவளாய் வீட்டுக்குத் திரும்பிப் போனாள். ‘ அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சங்கடுத்தது காட்டுமுகம் என்று பெரியோரும் கூறியிருக்கிறபடியால் ஜுலைகாவின் முகத் தைப் பார்த்தால் அவள் குணம் வெளிப்படுமென்று மைமூன் தனக்குள் ஆலோசித்துக்கொண்டு அவள் முகத்தை உற்றுப் பார்த்தபொழுது அவளுடைய திருவதனம் களங்கமற்று பூரணச் சந்திரனைப்போல் விளங்கித் தூய்மையென்னும் பிரகாசம் பரந்து வீசியிலங்கிக் கொண்டிருப்பதையும், கற்பென்னும் இரத்தினத்தைக் களவுகொடாதவளென்னும் தன்மையைத் தோற்றுவிப்பதையும் மைமூன் அறிந்தாள். ஆயினும் மைமூன் அங்கே இருந்த நாளெல்லாம் ஜுலைகாவானவள், காலம் தவ றாமல் அந்தந்த நேரங்களில் ஆண்டவனைத் தொழுதுவரு வாள். சுபுகு தொழுதபின் எட்டுமணி வரையிலும் புறுகான் வேதமாகிய குறானை ஓதி வருவாள். துன்மார்க்கர்களைப் போல வீண்பேச்சுக்களுக்காவது கெட்ட வார்த்தைகளுக் காவது இடங்கொடாள். அல்லாகூ என்கிற திருநாமத்தை மிகவும் பக்தி விசுவாசத்துடனே மொழிவாள். நபினாயகத் தின் பெயர் வரும்போது மிகவும் மரியாதையுடனே சலாத்தும் சலாமும் ஓதுவாள். இவ்வளவு சற்குண நடத்தையுள்ள பெண்பிள்ளை விவாகமின்றி இக்குழந்தையைப்பெற்றாள் என் னும் வதந்தி மைமூனுக்கு ஆச்சரியமாயிருந்தது. அந்த பிள்ளையைக் குறித்து மைமூன் பேசும்போதெல்லாம் மறுமொழி சொல்லாமல் பேச்சைமறைத்ததும் மைமூனுக்கு மிகவும் வியப் பாய் இருந்தது; ஒவ்வோரிரவும் ஜூலைகா நித்திரை செய்யப் போகும்போது தேம்பித் தேம்பி அழுவாள். அப்படித் துக் கப்படுவதற்குக் காரணம் யாது என்று மைமூன் கேட்கும் போதெல்லாம் அதிகமாய் அழுகிறதேயல்லாமல் மறுமொழி யொன்றுஞ் சொல்லுகிறதில்லை.
இவ்வாறு ஒரு மாதம் சென்றுவிட்டது. பின்பு ஜுலைகா மைமூனை அழைத்து தங்கையே அடுத்த தெருவில் ஓர் பெரிய மாளிகை இருக்கின்றது; அம்மாளிகைக்குச் சுதந்தர வான் பெயர் கறீம்ஷா; அவர் வீட்டை விசாரித்துப்போய் அங்கு வசிப்பவர்களுடன் பிரயாசைப்பட்டுச் சினேகஞ்செய்து கொள்; அந்த வீட்டில் கறீம்ஷாவினுடைய குமாரர் ஓர் வாலி பர் இருக்கிறார். அவருடைய சரீர சவுக்கியத்தையும் நட வடிக்கைளையும் நானறிய ஆவலாய் இருக்கிறேன். உன்னை அங்கே நான் அனுப்பினேனென்று தெரிவிக்காமல் அவ்விடத் துச் சமாசாரங்களை அறிந்துகொண்டு வந்து எனக்குச் சொல்வாயானால் என் ஆயிசுள்ளவரையிலும் உனக்கு நன்றியுள்ள வளாய் இருப்பேனென்று சொன்னாள்; இதைச் செவியுற்ற மைமூன் உடனே உடுத்து முகப்போர்வையும் இட்டுக் கொண்டு ஜுலைகா சொன்ன அடையாளப்படி கறீம்ஷா மாளி கை இருக்கும் இடத்தை விசாரித்துக்கொண்டு அந்த வீட் டுக்கு முன்பாக வந்து, வாசற்படிக்குச் சமீபத்திற் சென்று அங்கே நின்றபோது,ஓர் மடந்தைப் பருவமுள்ள பெண்பிள்ளை அவ்வீட்டுக்குள் நிற்கக் கண்டு, மைமூன் அவளை நோக்கி அம்மா எனக்குத் தாகத்தினாலே நாவறள்கிறது அதைத் தணிக்கும்பொருட்டுத் தாங்கள் தயவுசெய்து கொஞ்சம் தண் ணீர் கொடுக்கக் கூடுமாவென்று கேட்டாள். இதைக்கேட்ட அந்தப் பெண் பிள்ளை மைமூனுடைய முகத்தையுற்றுப் பார்த்து தன் வீட்டுக்குள் அழைத்துக்கொண்டுபோய் அங்கே ஓர் ஆசனத்தில் அவளை யிருக்கும்படி செய்து தண்ணீர் கொடுத் துக் குடித்தபின் அங்கிருந்தவர்களும் அப்பெண்பிள்ளையும் இவளுடன் பேசத்தொடங்கினார்கள். அப்படிப் பேசிக்கொண் டிருக்கையில் மைமூன் தான் ஜுலைகா வீட்டில் வந்திருக்கிற செய்தியைச் சொன்னாள்; அதைக்கேட்டு, இவளை உள்ளே அழைத்துச்சென்ற பெண் பிள்ளை ஒன்றும் பேசாமல் பெருமூச்சு விட்டாள். அவளுடைய குமாரன் அப்துல் ஹமீதென்னும் பெயரினன் இவர்கள் சம்பாஷணையைச் செவியுற்று ஓர் அறையில் இருந்து வெளியேவந்து மைமூனைப் பார்த்துவிட்டு மீண்டும் அவ்வறைக்குள் பிரவேசித்தான். இவன் பத்தொன் பது வயதுடைய ஓர் அழகான வாலிபன். இவனும் ஜுலைகா வும் சிறுபிராய முதல் மிகவும் நேசமாய் இருந்தார்கள். அவர் கள் இருவரையும் பார்த்தோர்கள் சகோதரனும் சகோதரியும் என்று சொல்லத்தக்கபடி அவகள், இருவரும் சிறுவர்களா லிருக்கும்போது ஒருவர் மற்றொருவரை விசுவாசித்து நடப் பதைக் கண்ணுற்றவர்கள் ஆ! ஆ!! இவர்கள் மிகவும் நல்ல நண்பர்கள் இவர்களிருவரும் ஸ்திரீயும் புருஷனுமாக விவாகம் செய்யப்பெற்று வாழ்ந்திருப்பதைப் பார்ப்பது ஓர் சிறப்பான காட்சியாயிருக்குமென்று சொல்லிக்கொள்வார்கள்
அப்படியிருக்கும் நாளில் அப்துல் ஹமீது அந்த ஊரி லிருக்கிற பாடசாலைகளிற் படித்து முடிந்தபின் கல்கத்தாவிலிருக்கிற பெரிய பாட சாலைக்கு அனுப்பப்பட்டான். அவன் கல்கத்தாவில் வாசிக்கும்பொழுது அங்கிருந்துவருஷத்தில்ஒரு முறை ஓய்வுகாலமாயிருக்கும்பொழுது தன்னுடைய ஊருக்கு வருவான். ஜுலைகா பருவமடைந்தபின் இவ்விருவரும் சந் தித்துப் பேசிக்கெள்ளக் கூடாமற் போனாலும் ஒருவருக்கொரு வர் தாங்கள் தங்கள் அன்பை வெளிப்படுத்தத்தக்க வெகுமதி ளை யனுப்பிக்கொண்டு இருந்தார்கள். மைமூன் ஜுலைகா வினுடைய வீட்டுக்குவர சுமார் எட்டு மாதத்துக்கு முன் ஒரு முறை ஓய்வுநாளில் அப்துல் ஹமீது வழக்கம்போலத்தன்வீட் டுக்கு வந்து இரண்டு வாரம் வரையில் தங்கிப்போனான். அவனும் ஜுலைகாவும் ஒருவர் மற்றொருவருடைய செய்திகளை யடிக்கடி விசாரித்துக்கொண்டு இணைபிரியாத ஒரு ஜோடி பட்சிகளைப் பிரித்து இரண்டு கூட்டிலடைத்து வைத்தால் இரண்டும் ஒன்றாய்க் கூடுவதற்கு எவ்வளவு ஆவலாயிருக் குமே அவ்வளவு ஆவலாயிருந்தார்கள். பின்பு அப்துல் ஹமீதுக்கு ஓய்வுநாள் முடிந்து, கல்கத்தாவுக்குப் போக நேரிட்டபடியால், அப்பொழுது யாதொரு மனக் கலக்கமு மின்றி, சீக்கிரத்தில் திரும்பிவந்து ஜுலைகாவை மணம் புரிய லாமென்ற உற்சாகத்துடன் கல்கத்தாவுக்குப் போனான். மறுவருஷம் இவ்விருவர்களுக்கும் காலந்தாமதிக்காமல் மணம் புரிவிக்கவேண்டுமென்று அவர்கள் தந்தை தாய் முதலிய பந்துக்களும் தீர்மானம் செய்துகொண்டார்கள். அப்துல் ஹமீது கல்கத்தாவுக்குப் போயிருந்து மீண்டும் 1867ஆம் ஆண்டு மே மீ 18ஆம்தேதி வந்தான். வரும்போது, எப் பொழுது வீடுபோய்ச் சேருவோம். எப்பொழுது தன் மனதை விட்டகலாது குடிகொண்டிருக்கிற பெண்கள் நாயகமாகிய ஜூலைகாவின் க்ஷேம செய்திகளை யறிவோம். ஐயோ! இந்த ரயில் வண்டி விரைவாகச் செல்லவில்லையேயென்று பலவாறா கச் சிந்தித்து, அவன் தேகம் வழியிலும், அவன் மனது ஆசைக் கண்ணாட்டியாகிய ஜுலைகாவிடத்திலும் இருக்க, மிகுந்த ஆவலாய் வீடுவந்து சேர்ந்தான்.
அப்படி வந்து சேர்ந்தவுடனே, வேறொன்றையுங் கவனி யாமல் தன் தாயினிடம் சென்று என்னன்புள்ள தாயே, என் உயிரினுஞ் சிறந்த ஜூலைகா மிகவும் சவுக்கியமாயிருக்கிறாளா? என்று விசாரித்தான். அதற்குத் தாய் மறுமொழி சொல்ல நாவெழாதவளாய், கண்களினின்றும் நீர் சொரிய அழத் தொடங்கினாள். தன் தாய் இவ்வாறு நின்றேங்குவதைக் கண் ணுற்ற அப்துல் ஹமீது வெறி கொண்டவனைப்போல, மனங் கலங்கி ஜுலைகாவிற்கு என்ன தீங்கு நேரிட்டதோவென, மயங்கி, தாயே, என்னருமை ஜுலைகாவிற்கு இன்ன சிறுமை நேரிட்டதென, தாமதப்படாமல் சொல்லுங்கள் சொல்லுங் கள் என்று கதறிப் பதறிக் கேட்டான். தாய், தன் மனதைச் சற்று தேற்றி, என் கண்மணியே, உன் மனது வருந்தி, நீ விசாரமடையத்தக்க ஓர் செய்தியை உன் செவியிற் புகட்டப் போகிறேன்; நீ யுன் மனதைத் திடப்படுத்திக்கொள்’ எல் லாம் அல்லாகுத்தாலாவுடைய நியமனப்படியன்றோ நடக்க வேண்டும்; நாம் நினைக்கிற காரியம் எல்லாம் நம்மெண்ணப் படி கைகூடுமென்று நீ நினையாதே. இதை யறிந்தே பெரியோர்
“ஒன்றைநினைக் கினதுவொழிந்து மற்றொன்றாம்
அன்றி யதுவரினும் வந்தெய்தும் – ஒன்றை
நினையாது முன்வந்து நிற்பினும் நிற்கும்
எனையாளும் ஏகன் செயல் ”
என்று கூறியிருக்கின்றனர்களல்லவா? இதில் எள்ளளவும் அபத்தமில்லை! எல்லாம் வாஸ்தவமே; ஆகையால் நீ உனக்கு இல்லறத் துணைவியாக்க வேண்டுமென்று கருதியிருந்த ஜுலைகா உனக்கு மனைவியாக விதியில் நியமிக்கப்படவில்லை என்று சொல்லித் தன் கண்களினின்றும் முத்துமுத்தாய்ச் சொரியும் கண்ணீரருவியைத் தன் முந்தானையை யெடுத்துத் துடைத்துக் கொண்டு மகளே, நீ கல்கத்தாவுக்குப் போன இரண்டொரு மாதத்திற்குப் பின், கற்பிற் சிறந்த கண்ணாட்டி யென்று இச்சையுற்றிருந்த ஜுலைகா, ஒரு மகவைப் பெற்றாள் என்று சொன்னவுடனே அப்துல் ஹமீது, திடுக்கிட்டு ஒரு பேச்சும் பேசச் சக்தியற்றவனாய்க் கண்ணிமையாமல் தன் தாயை யுற்றுப் பார்த்தவண்ணமாய் அசையாமல் சற்றுநேரம் மரம் போல் நின்றுகொண்டிருந்தான், அவனுடைய முகம் சூரியனுக்கு முன்னிறை சந்திரனைப் போல் ஒளி மழுங்கி உளுத்துவிட்டது; கண்களின் பிரகாச மழுங்கிவிட்டது. சரேலென்று தன்னறைக்குட் புகுந்து, கதவைப் பூட்டிக் கொண்டான். தாய் சற்றுநேரம் சென்று, மகன் ஆறாத் துயர முற்று வருந்துகிறானோவென்று போய்ப் பார்க்க, அவன் சில நாள் நோயால் வருந்தியிருப்பவனைப் போல் இளைத்துக் களைத்து இருந்தான். இப்படி இவன் கல்கத்தாவிலிருந்து வந்து, ஜூலைகாவின் செய்தியை யறிந்து வருந்தி, வியாதி யடைந்தவனைப் போல மனமிடிந்து இருக்கிறானென்ற செய்தி, அவன் கல்கத்தாவிலிருந்து வந்த எட்டு நாளைக்குப் பின் ஜூலைகாவிற்குத் தெரிய வந்தது. தன் உண்மையை ஜூலைகா வானவள் மைமூனை இவன் வீட்டுக்கு அனுப்பி வைத்தாள்.
அவள் கட்டளையிட்டபடி மைமூன், எட்டுநாள் வரையில் அப்துல் ஹமீது வீட்டுக்குப் போகிறதும் அங்கே நடக்கிற வர்த்தமானங்களைச் சவிஸ்தாரமாய் விசாரித்து ஜுலைகா விடத்திற் சொல்லுகிறதுமா யிருந்தாள். இவ்வாறு எட்டு நாள் சென்றபின் ஒருநாள் அப்துல் ஹமீது, மைமூனைத் தன் சமீபத்திலழைத்து, பெண்ணே! நீ ஜுலைகாவிடம் போய் அவளை நான் ஓர் பிரகாசமான நட்சத்திரமென்றும், கற்பிற் சிறந்த கன்னிகை என்றும், செல்வமென்னும் பீதிக்கு எனக்கு வழிகாட்டுகிற ஓர் சிறந்த வழித்துணைவியென்றும் நான் நினைத்திருந்திருந்தேன் ஆனாலவள் என்னை மரணமென்னும் கெபியில் தள்ளிவிடுகிற ஓர் பிசாசானாளென்று நான் சொன்ன தாக அவளிடம் சொல்லென்று சொன்னான். பின்புடனே, மைமூனைப் பார்த்து, அம்மா! நானிப்போது சொன்ன வார்த் தைகளை யவளிடம் சொல்லாதே. ஏனெனில், அவள் மனதை வீணில் வேதனைப்படுத்துவதினா லெனக்கென்ன இலாபம்; அவளெனக்குத் துரோகம் செய்திருந்தபோதிலும் அவளை நினைக்கும் போதெல்லாம் என் மனம் அனலிலிட்ட மெழுகு போலுருகுகின்றது. அவளை நிந்தித்துப் பேசவும் என் நா வெழவில்லையென்று சொன்னான். மைமூனில் வார்த்தையைக் கேட்டுக்கொண்டு ஜுலைகாவிடம் வந்து, அப்துல் ஹமீ துக்கும் தனக்கும் நடந்த சம்பாஷணையைத் திட்டமா யெடுத் துச் சொல்ல, அவ்வார்த்தைகளைச் செவியுற்ற ஜூலைகா அல்லாகூ! அல்லாகூ!! என்றிரண்டு தரம் உரத்த சத்தமிட்டு மைமூனை வந்து கட்டித் தழுவி, சற்றுநேரம் துக்கித்துக் கண் ணீர் விட்டு மைமூனைப் பார்த்து என் பிரியமுள்ள சகோ தரியே இனிமேலிந்தப் பிள்ளையின் வரலாற்றை இரகசியமா யடக்கி வைக்க என்னால் முடியாது. ஏனெனில் அப்படி மறைத்து வைப்பேனானால் என் மனம் துக்க மிகுதியா லுடைந்து போகும்; ஐயோ நானொரு பாவமும் செய்தறி யேனே நான் துரோ கஞ் செய்தேனென்று தப்பான யெண்ணங் கொண்டு துயருற்று வருந்துகின்ற வெனதன்பான காதலனை மரணமடையும்படி நான் பார்த்திருக்கலாகாது, இனியென் இரகசியத்தை வெளியிடப் போகிறேன் கேளென்று சொன்ன பொழுது, ஒரு அழகான வாலிபப் பெண் ஓடிவந்து இவர்கள் பேசிக்கொண்டிருந்த அறைக்குள்ளே நுழைந்து, மைமூனு டைய கையைப் பிடித்திழுத்து அவளை வெளியில் தள்ளி விட்டு ஜுலைகாவை யவ்வறைக்குள் ளிருத்திக் கதவை யடைத்துப் பூட்டிக் கொண்டாள்.
– தொடரும்…
– அசன்பே சரித்திரம் (நாவல்), முதற் பதிப்பு: 1885, 1974 பதிப்பு – புனைவகம், கொழும்பு.
அசன்பே சரித்திரம் இலங்கையைச் சேர்ந்த சித்தி லெப்பை (லெவ்வை) மரைக்காயர் என்னும் முகம்மது காசிம் மரைக்காயர் எழுதிய நாவல். 1885-ல் இந்நாவலை எழுதி வெளியிட்டார். 1890-ல் மறுபதிப்பு வெளிவந்தது. 1974-ல் அடுத்த பதிப்பு வெளியாகியது.