அக்கா ஆடிய பல்லாங்குழி!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 7, 2012
பார்வையிட்டோர்: 15,246 
 

‘‘அடடே! வாப்பா சந்தோஷ். எப்படி இருக்கே?’’ என்று உற்சாகமாக வரவேற்றார் அக்காவின் மாமனார்.

‘‘நல்லா இருக்கேங்க’’ என்றான்.

‘‘அப்பா, அம்மா, பாட்டி எல்லாம்..?’’

‘‘நல்லா இருக்காங்க. நீங்க எல்லாம் எப்படி இருக்கீங்க?’’

‘‘எங்களுக்கு என்னப்பா… உன் அக்கா வந்ததுல இருந்து எந்தக் குறையும் இல்ல. ஏன் நின்னுட்டே இருக்கே… சொன்னாதான் உட்காரு வியா?’’

‘‘சேச்சே! அக்காவைப் பார்க்க-லாம்னு…’’ என்றபடி அவரருகே அமர்ந் தேன்.

‘‘காட்டாமலா போயிடு-வோம். சந்தியா… சந்தியா…’’ என்று குரல் கொடுத்தார்.

‘‘வந்துட்டேன் மாமா’’ என்று குரல் வந்தது.

‘‘ஆபீஸ§க்கு கிளம்பற நேரமில்-லியா, கிச்சன்ல பிஸியா இருப்பா. முன்னாடி நான் சமையல் செய்யறப்ப ரெண்டு பசங்களும் ஹெல்ப் பண்ணுவாங்க. இப்ப எட்டு மணி வரைக்கும் போர்வை-யைப் போர்த்திட்டுத் தூங்கறா-னுங்க. உன் அக்கா எங்களை எல்லாம் சோம்பேறிகளா மாத்திட்டா’’ என்று கூறி, கணீர்ச் சிரிப்புச் சிரித்தார்.

‘‘ஏய்… சந்தோஷ்! எப்போ வந்தே?’’

குரலைக் கேட்டு நிமிர்ந்தேன். முகத்தில் ஆச்சர்யமான சந்தோ-ஷத்துடன் அக்கா.

‘‘நைட் டிரெயின் ஏறினேன்க்கா! நடுவுல ஏதோ பிராப்ளம்னு ஒரு மணி நேரம் லேட்!’’

‘‘என்ன திடீர்னு..?’’

‘‘ஒரு இன்டர்வியூ!’’

‘‘சந்தியா, முதல்ல காபி கொண்டு வா’’ என்றார் அவர்.

‘‘இதோ’’ என்றபடி மீண்டும் சமையலறைக்-குள் சென்று-விட்டாள் அக்கா.

அக்காவுக்கும் எனக்கும் ஐந்து வயது வித்தியாசம். எனது இனிமை-யான தோழி அவள்தான். அப்பா முன் கோபக்காரர். அவர் எதிரே நின்று பேசுவதற்குக்கூட எனக்குப் பயம். அதனால் எது தேவையென்-றாலும் அக்காவிடம்தான் சொல்வேன். குறிப்பாக, விளையாட்டு சம்பந்த-மான பந்து, மட்டை, ஸ்போர்ட்ஸ் ஷ¨ வாங்க வேண்டும் என்றால் அவளைத்தான் தூது விடுவேன்.

அக்கா, அப்பாவிடம் பேசும் விதமே அழகாக இருக்கும். சாமர்த்திய-மாக வார்த்தை-களைப் போட்டுத் தனது பேச்சை நியாயப்-படுத்திவிடுவாள். அப்பாவும் மறுக்க முடி-யா மல் பணத்தைக் கொடுத்து விடுவார். அதுவே, நானே நேரிடை-யாகக் கேட்டால், நிச்சயம் கிடைக்காது.

காரியங்களைச் சாதிக்க மட்டுமல்ல… எத்தனையோ விஷயங்-களில் அக்கா எனது நேசத்துக்குரிய பெண்-ணாக இருந்தாள். பெண்-களின் பிரதான விளை-யாட்டுகளான கண்ணாமூச்சி, பல்-லாங்குழி, ஸ்கிப்பிங் எல்லாம் அவளுடன் விளையாடி இருக்-கிறேன். சிறு வயதில் நான் என் தோழர்களுடன் விளையாடியதைவிட, அக்காவுடனும், அவளது தோழிகளுடனும் விளை-யாடியதே அதிகம்.

‘‘ஏண்டா எப்பப் பார்த்தாலும் இங்கேயே விளையாட வர்றே? பசங்களோடு போய் விளையாடேன்’’ என்று அக்காவின் தோழிகள் விரட்டுவார்கள்.

‘‘ஏய், இவன் நம்மகூடவே விளையாடட்-டும்டி! அந்தப் பசங்க ஓடிப் -பிடிச்சு விளை-யாடறது, கில்லி, பம்பரம்னு விளையாடறாங்க. ஓடறப்ப கீழே விழுந்து அடிபட்டா, என்ன பண்றது?’’ என்று கூறி பாசத்துடன் என் தலையை வருடுவாள் அக்கா.

பின்னாட்களில் வளர்ந்த பிறகு கிரிக்-கெட், ஃபுட்பால் என்று என் கவனம் திரும்பிய-போதும், ‘‘பார்த்து ஜாக்கிரதையா விளை-யாடுடா’’ என்று எச்சரிப்பாள்.

‘‘பார்த்தியாடி அவன் ஓடறதை. எப்ப பாரு குரங்குக் குட்டி மாதிரி கூடவே வெச்-சுட்-டிருந்தியே! அக்கா &தம்பி, அண்ணன்&-தங்கச்சி உறவெல்லாம் ஒரு காலம் வரைக்கும் தான்! மீசை முளைக்க ஆரம்பிச்-சதும் பசங்க, கூடப் பொறந்த-வளை மறந்துடுவாங்க. அதே மாதிரி பொண்ணுங்களும் கல்யாணம் ஆனதும், கூடப் பொறந்தவனோட பேரையே மறந்துடுவாங்க’’ என்பார் பாட்டி.

‘‘கிழவி! நீ வேணும்னா அப்படி இருந்திருக்கலாம். நான் இவனை மறக்க மாட்டேன்’’ என்று காரமாகச் சொல்வாள் அக்கா.

அக்கா இப்போது ஐந்து மாத கர்ப்பிணி. மேடிட்ட வயிறும், பூரிப்பான முகமும் அக்காவை இன்னும் அழகாகக் காட்டியது.

‘‘என்ன சந்தியா, ஒரு காபிதானா? எனக்கு..?’’ என்று கேட்டார் மாமனார்.

‘‘கொஞ்சம் முன்னாடிதானே குடிச் சீங்க. மறுபடியும் குடிச்சா என்ன ஆகும்? போய் உங்க பிள்ளைங்-களை எழுப்-புங்க’’ என்று உரிமையுடன் விரட்டினாள்.

பெண்களிடம் நான் வியக்கும் விஷயங்-களில் இதுவும் ஒன்று. சாதாரணமாக ஒரு புதிய நபருடன் நட்புகொண்டு நெருங்கிப் பழகவே நீண்ட நாட்க-ளாகிறது. ஆனால், இவர்-களால் மட்டும் ஒரு குடும்பத்தையே சட்டென இயல்பாக நெருங்கிக் கலந்துவிட முடிகிறதே… எப்படி? அது மட்டுமல்ல, அவர்களுடைய சில மேனரிசம், பேசுகிற விதம்கூட மாறிப் போய்விடுகிறது.

பெண்கள் தண்ணீரைப் போன்றவர்கள். பாத்திரங்களுக்கு ஏற்ற வடிவத்தைப் பெற்றுவிடு-கிறார்கள். சிலருக்குக் கோணல் பாத்திரங்கள் அமைந்துவிடுவது வேதனை யான விஷயம்.

காலைச் சிற்றுண்டி சாப்பிடும்போது பரத் கேட்டான்… ‘‘அண்ணிக்கு உங்க மேல ரொம்பப் பிரியமோ?’’

பரத், மாமாவின் தம்பி. என்னைவிட மூன்று வயது சிறியவன். கல்லூரியில் படிக்கிறான்.

‘‘ஏன் கேக்குற?’’

‘‘என்னைக் கூப்பிட-றப்ப எல்லாம், உங்க பேரைத்தான் சொல்வாங்க. ‘சந்தோஷ், சாப்பிட வா!’ன்னு கூப்பிட்டுட்டு, ‘ஸாரி பரத், சாப்பிட வா’ன்னு சொல்வாங்க’’ என்று சிரித்தான்.

எனக்குப் பெருமிதமாக இருந்தது. அக்கா என்னை மறந்து விடவில்லை.

நேர்முகத் தேர்வில் கலந்துகொண்டு விட்டு, வீடு திரும்பியவனுக்கு விருந்தே தயாராகி இருந்தது. எல்லாமே நான் விரும்பிச் சாப்பிடும் அயிட்டங்கள்.

‘‘எதுக்குக்கா இத்தனை செய்தே?’’

‘‘சாப்பிடுடா! அம்மா சொன்னா, ‘முன்ன மாதிரி உடம்பு முடியலைடி. அதனால, சுலபமா முடியறது எதுவோ, அதைச் சமைக்கிறேன். நீ விதம்-விதமா செய்து போட்-டப்பவே ஆயிரம் குறை சொல்-லிட்டு இருந்த அப்பாவும் பிள்ளை-யும் பாவம், இப்ப வாயே திறக்கறதில்லைடி. உன் அருமை இப்ப-தான் அவங்களுக்குத் தெரியுது’ன்னு சிரிச்சா’’ என்றாள்.

‘‘அதெல்லாம் ஒண்ணு-மில்லை’’ என்றேன்.

‘‘அப்போ, நான் இல்லா-தது வருத்தம்-இல்லையா?’’

‘‘போக்கா! அப்படிச் சொல்லலை.’’

சிரிப்புடன் தலை யைக் கோதினாள். ‘‘சும்மா தமாஷ§க்குச் சொன்னேன் சந்தோஷ். அது சரி, நீதான் ஏற்-கெனவே வேலைக்குப் போயிட்டிருக்கியே. எதுக்கு இந்த இன்டர்-வியூக்கு வந்தே?’’

‘‘இது பெரிய கம்பெனிக்கா! சம்பளம் அதிகம் வரும்!’’

‘‘சம்பளத்தை மட்டும் பார்க்-காதே சந்தோஷ். நீ இங்கே வந்-துட்டா அப்பா, அம்மாகூட யார் இருக்கிறது? அப்பா-வுக்கு சர்வீஸ் முடியற வரைக்குமாவது அங்கேயே இரு. அப்புறம் வேணும்னா, இந்த மாதிரி டிரை பண்ணு!’’

‘‘நாம நினைக்கிறப்ப சான்ஸ் கிடைக்குமாக்கா?’’ என்று சிரிப்-புடன் கேட்டேன்.

‘‘மடையா! இந்த சான்ஸை எப்ப வேணும்-னாலும் உன் திறமையைப் பயன்படுத்தித் தேடிக்கலாம். பெத்தவங்களோடு கூட இருக்கிற சான்ஸ் அறிவால கிடைக்காது. உங்களை-விட எங்களுக்கு-தான் அதோட அருமை புரியும்’’ என்றாள்.

‘‘எனக்கும் புரியு-துக்கா! கவலைப்-படாதே. சும்மா டிரை பண்ணிப் பார்ப்போம்-னு-தான் வந் தேன்’’ என்றேன்.

ஊருக்குத் திரும்ப ரயிலில் பயணிக்கும்-போது நினைத்துக்கொண்-டேன்… கிரிக்-கெட், ஃபுட்-பால் என்று சீக்கிரமே வேறு விளையாட்டு-களுக்குப் போய்விட்டோமோ? அக்கா-வுடன் இன்னும் கொஞ்ச நாட்கள் பல்லாங்-குழியே விளையாடி இருக்க-லாமோ!

‘‘எப்படிடா இருக்கா உன் அக்கா?’’ என்று கேட்டார் பாட்டி.

‘‘நல்லா இருக்கா. ஆமா, பல்லாங்குழி கட்டை எங்கே பாட்டி?’’

‘‘பரண் மேல கிடக்கும் பாரு! ஒரு நாள் கண்ணு மண்ணு தெரியாம நடந்து கட்டையில கால் விரலை இடிச்சுக்-கிட்டு, உன் அக்கா கிட்டே தாம் தூம்னு சத்தம் போட்டு அதைப் பரண் மேல தூக்கிப் போட்டியே, மறந்து போச்சா?’’

‘சுருக்’கென அந்த நினைவு வந்தது. நாற் காலியை இழுத்துப்போட்டு, பரண் மீது ஏற ஆரம்பித்-தேன்.

‘‘இப்ப எதுக்குடா அது?’’

‘‘பிரசவத்துக்கு அக்கா இங்கே வருமில்லே… அப்போ விளையாடத்தான்!’’ என்றேன்.

வெளியான தேதி: 09 ஜூலை 2006

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *