மாலை ரிசப்ஷன்.
முற்பகல் 11 மணி முதலே வெளியூர் உறவினர்கள் வரத் தொடங்கி விட்டார்கள்.
நான்கு மணிக்கெல்லாம் கல்யாண மண்டபம் களை கட்டி விட்டது.
ஆறு மணிக்கு நிச்சயதார்த்தம் மண்டபம் நிறைந்து இருந்தது.
மணமகனும் மணமகளும் முழுக்க முழுக்க திருமணத்திற்கு வந்திருந்த உறவினர்களிடமும் நண்பர்களிடமும் முழுமையாகப் பேசிப் பழகினார்கள்.
ஒவ்வொருவரையும் விருந்து உபசரித்தார்கள்.
அவ்வப்போது நாதஸ்வர இசையை ரசித்தார்கள்.
கேட்டரிங் சமையலை சுவைத்தார்கள்.
சான்சே இல்லை . அப்படி ஒரு மைண்ட்ஃபுல்னெஸ் கப்பிள்ஸ். ஆல்வேஸ் லிவ் இன் த பிரசெண்ட்.
திருமணத்திற்கு வந்திருந்த அனைவரும் மனதார தம்பதியரை வாழ்த்தினார்கள்.
திருமண மண்டபத்தில் இருந்து வீட்டிற்குச் சென்றதும் வீட்டிற்கு வந்து கல்யாணம் விசாரிக்க வந்தவர்களிடமும் இன்முகம் காட்டி வரவேற்றார்கள் புது மன தம்பதியர்.
திருமணம் முடிந்து நான்கு நாட்கள் கழித்து (செல் ஸ்விட்ச் ஆஃப் செய்து ஐந்து நாட்கள் கழித்து) வீட்டில் ஏகாந்தமாக இருந்த மணமகனும் மணமகளும் பேசிக்கொண்டார்கள்.
“என்னங்க..செல்போன் ஸ்விட்ச் ஆன் பண்ணிடலாமா?”
என்று கேட்டாள் மணமகள்.
“ஓகே டியர். நாம ஸ்விட்ச் ஆஃப் மட்டும் பண்ணலேன்னா நிறைய செலவு பண்ணி ஆசையா நேரில வந்தவர்களை மதிக்காமல் செல்போன்ல ஃபார்மலா விசாரிக்கிறவங்களோடதானே மணிக்கணக்கில் பேசி இருப்போம்.”
“உண்மைதாங்க.. இந்த செல் தொல்லை இல்லாம எல்லா உறவுகளையும் புதுப்பிக்க முடிஞ்சிதுங்க” என்று சொன்ன மணமகள் மணமகனைத் தழுவியபடி “நாளைக்கு ஆன் பண்ணிக்கலாம் செல்லை..” என்றாள்.
தொடர்புடைய சிறுகதைகள்
“ஹலோ...”
“சொல்லுங்க.., நான் எழுத்தாளர் நவீனன் பேசுறேன்...”
“கதிர்’ஸ் நிருபர் தேன்மொழி பேசுறேன். காதலர் தின ஸ்பெஷலுக்கு ஒரு பேட்டி எடுக்கணும்...”
“ஓ... தாராளமா...!”
“எப்ப கூப்பிடலாம்...?”
“இப்பவே நான் ஃப்ரீ தான்... காரை ஓரம் கட்டி நிறுத்திக்கறேன். நீங்க கேள்விகளைக் கேளுங்க...”
“காதலர் தினத்தைப் பற்றி உங்கள் கருத்து?”
“காதல் ...
மேலும் கதையை படிக்க...
பட்டங்கள் பல பெற்ற அறிவு ஜீவி சுந்தரலிங்கத்தின் கையைத் துண்டாக வெட்டும் நோக்கத்தோடு கபாலி அரிவாளை வீசவில்லை.
‘சும்மா மிரட்டி வைப்போம்,’ என்ற எண்ணத்தில் கபாலி அரிவாளைச் சுழற்ற; தற்காத்துக் கொள்ள கையை நீட்டிய சுந்தரலிங்கத்தின் கை துண்டாகி விட்டது.
ஓரிரு வருடங்கள் எங்கெங்கோ ...
மேலும் கதையை படிக்க...
சிவன் கோவில் ஸ்பீக்கரில் 'திருநீற்றுப்பதிக' சொற்பொழிவு ஒலித்துக் கொண்டிருந்தது.
"திருநீற்றுப் பதிகம் என்பது கூன்பாண்டியனின் வெப்ப நோயைப் போக்க சிவபெருமானை நினைத்து திருஞானசம்பந்தர் பாடிய பாடல்கள் ஆகும். இதனால் மன்னர் நோய் நீங்கி நலம் பெற்றார்" என்றார் ஆன்மீகப் பேச்சாளர்.
"அப்ப... ஐந்து வருஷம் ...
மேலும் கதையை படிக்க...
"இதென்ன வீடா சினிமா தியேட்டரா..??"
நந்தினியின் எதிர்பாராத தாக்குதலில் மூவரும் நடுங்கினார்கள். குற்ற உணர்வோடு தலை குனிந்து கொண்டார்கள்.
"என்னதான் மனசுல நெனச்சிக்கிட்டிருக்கீங்க.. நீங்க செய்யிறது உங்களுக்கே நல்லாருக்கா.."
வால்யூமைக் குறைத்தார்கள்.
"எதிர்த்த வீட்டு கோபு சார் மாதிரி டிவியே கூடாதுன்னு கண்டிப்பா இருந்திருக்கணும். அவர் அப்பிடி ...
மேலும் கதையை படிக்க...
“சாயாவனம்...சாயாவனம்..., உன்னை அய்யா கையோட இட்டாரச் சொன்னாரு...”
ஓட்டமும் நடையுமாக வந்த செங்கரும்பின் அழைப்பில் அவசரம் தெரிந்தது. இன்றைக்கு மூன்றாம் நாள் சாயாவனத்தின் திருமணம். நாளை மறுநாள் அந்தியில் மணப்பெண்ணுக்கு பரிசம் போட்டுவிடுவார்கள். சாயாவனத்தின் கையில் காப்பு கட்டிவிடுவார்கள்.
வாடகைப் பந்தல் முனுசாமி, “நாளை ...
மேலும் கதையை படிக்க...
டீச்சர் வகுப்பில் நுழைந்ததுமே முத்துவை அழைத்தார்.
“இன்ணைக்கும் நீ பேரண்ட்ஸை அழைச்சிக்கிட்டு வரலியா?” டீச்சரின் கேள்வியால் தலை குனிந்தான் முத்து.
சுண்டினால் சிவக்கும் செம்மேனி உடைய தன் வகுப்புத் தோழர்களின் அப்பாக்களோடு, கருத்த மேனியும் தும்பையாய் வெளுத்த தலையுமாய் இருக்கும் தன் அப்பாவை ஒப்பிட்டு… ...
மேலும் கதையை படிக்க...
பதினாலு வருடங்கள் என்பது ஒரு ஜெனரேஷன் என்று கணக்கு வைத்தால் சிவ முதலியார் ஐந்து ஜெனரேஷன்களைக் கடந்தவர். நல்லது கெட்டது எதுவாயிருந்தாலும் பத்திரிகையோ அழைப்போ வந்துவிட்டால் மட்டுமில்லை... தகவல் காதில் விழுந்துவிட்டால் கூடப் போதும், “பல வேலைகள்’ல நம்மை மறந்திருப்பாங்க …!” ...
மேலும் கதையை படிக்க...
ரெங்கநாயகி சமையல்கட்டில் பரபரத்துக்கொண்டிருந்தாள்.
சமையல்கட்டு வாசல்படியில் வந்து நின்ற ஷோபனாவிற்கு ரங்கநாயகி தன்னை கவனிக்காமல் சமையல் வேலையிலேயே மூழ்கியிருப்பது பாசாங்கு செய்வதாகப் பட்டது.
‘ஒரு வேளை உண்மையிலேயே தன்னை கவனிக்கவில்லையோ?’ என்ற சந்தேகமும் வர, ‘சித்தி குட்மார்னிங்,’என்று ஆரம்பிக்கலாமா..? அது ஏன், ‘குட்மார்னிங் அம்மா’ ...
மேலும் கதையை படிக்க...
உரத்து ஒலிக்கும் பெண்ணியம் என்ற தலைப்பில் டாக்டர் பட்டம் வாங்கியவர் சாரதா.
சாரதா திருமணமாகி தன் கணவரோட
கிராமத்துக்கு வருகிறாள்.
கிராமத்தில் வீட்டு வாசலின் முன் கார் நிற்க இவர் முதலில் இறங்க கார் ஓட்டிய கணவர் அடுத்து இறங்கினார்.
அம்மா ஆரத்தித் தட்டு எடுக்க உள்ளே ...
மேலும் கதையை படிக்க...
ஆறு வயது மதிக்கத் தக்க ஒரு சிறுமியை ஒருவன் கையில் ஏந்தியிருக்க சுற்றிலும் ஆணும் பெண்ணுமாய்ப் பரபரப்போடு கூட்டம் தொடர அந்தச் சிறுமியின் வலது கண்ணில் குத்திநிற்கும் மரச்சிராய். ரத்தக் குழியில் முளை அடிதத்தைப் போல பார்க்கவே படு பயங்கரமாக.
டாக்டர் தாமஸ் ...
மேலும் கதையை படிக்க...
காதல் கத்தரிக்காய் – ஒரு பக்க கதை
விபூதிக்காப்பு – ஒரு பக்க கதை
கருப்பு அப்பா – ஒரு பக்க கதை
நுனிப்புல் – ஒரு பக்க கதை