வாய்ப்புக்கு நன்றி!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: கிரைம்
கதைப்பதிவு: September 26, 2012
பார்வையிட்டோர்: 13,724 
 
 

மாறன் அறிவது,

இத்துடன் மத்தியஅமைச்சரின் சுற்றுப்பயண விவ ரங்களை இணைத்துள்ளேன். நம் திட்டப்படி பொதுக்கூட்டத் தில்வைத்து முடித்துவிடவும். எத்தனையோ தோழர்களுக்குக் கிட்டாத தியாக வாய்ப்பு உனக்குத் தரப்பட்டுள்ளது.

-ஜீவன்

பின் குறிப்பு: உன் குடும்பத்தைப் பார்த்துக்கொள்வோம்!

இயக்கத் தலைவர் ஜீவன் அவர்களுக்கு…

வாய்ப்புக்கு நன்றி. என் பொறுப்பை கச்சிதமாய் முடிப்பேன். வெடிகுண்டு பெல்ட்டைத் தங்களின் கைகளால் அணியக் காத்திருக்கிறேன். தங்களை எப்போது சந்திக்க வேண்டும் எனத் தெரிவிக்கவும்.

மாறன்

பின் குறிப்பு: என் குடும்பத்தைப் பற்றி கவலையில்லை!

மாறன் அறிவது,

என்னைச் சந்திக்கிற நேரத்தை இந்த வாரம் நம் ஆட்கள் உனக்குத் தெரிவிப்பார்கள். தினமும் தியானமும் யோகாவும் பண்ணவும்.

ஜீவன்

பின் குறிப்பு : உனது பின்குறிப்புப் பார்த்து பெருமைகொண்டேன்!

‘மதிப்பிற்குரிய ஐ.ஜி. அவர்களுக்கு…

நம் திட்டப்படி தீவிரவாதத் தலைமையின் நம்பிக்கையைப் பெற்று விட்டேன். மனித வெடிகுண்டாக என்னைத் தேர்வு செய்துள்ளார்கள். தங்களின் உத்தரவுப்படி அவர்க ளின் இருப்பிடம் அறிந்து அவர் களை வளைத்துப் பிடித்து சட்டத் துக்கு முன் நிறுத்த… மன்னிக்கவும், நான் விரும்பவில்லை. சட்டம் சில நேரங்களில் வெளியே விட்டுவிடும். பெல்ட்டை மாட்டும் போது அவர்கள் அத்தனை பேரையும் பஸ்மமாக்கிவிடுவேன்!

-மாறன்

பின் குறிப்பு: என் குடும்பத்தைப் பார்த்துக்கொள்ளவும்.

– 11th ஜூன் 2008

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *