ஊசிக்கொண்டை மாயாண்டித்தேவன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: கிரைம்
கதைப்பதிவு: December 16, 2022
பார்வையிட்டோர்: 6,323 
 

முல்லையூற்று ஒரு அழகிய சிற்றுார். மேற்குத் தொடர் மலையை ஒட்டி அமைந்திருந்த மலையடிவாரத்துக் கிராமம். திருநெல்வேலி ஜில்லாவுக்கே உரிய இயற்கைப் பொலிவு பூரணமாக விளங்கும் இடம். மர்ந்தோப்பும் தென்னந் தோப்புமாக ஊரைக் சுற்றி ஒரே பசுமை மயம். அங்கங்கே பிரிந்து ஒடும் சிறு சிறு வாய்க்கால்கள். அவைகளுக்கு வேலி பிடித்தாற்போல அமைந்திருக்கும் தாழம் புதர்கள், வான மண்டலத்திற்குக் துரண் நாட்டியது போன்ற பெரிய மருத மரங்கள். வயல்வெளிகளில் இடையிடையே தாமரைப் பொய்கைகள். இன்னும் எவ்வளவோ!

இப்படி அழகிய கிராமமாக இருந்த முல்லையூற்றில் மக்கள் எதற்காவது துன்பமுற்றார்களேயானால், அது எப். போது நினையாமலிருக்கிறார்களோ அப்போது திடீரென்று சற்றும் எதிர்பாராமல் தோன்றும் மாயாண்டித் தேவனுக்காகப் படும் துன்பமே. அந்த வட்டாரத்தில் அழுத பிள்ளையை வாய்மூடி நடுங்கவைக்கும் ஆற்றல் அவன் பெயருக்குக்கூட இருந்தது என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். கொலை கொள்ளைகள் அவனுக்குக் குழந்தை விளையாட்டுப் போல. எப்போது, எங்கே, எப்படி வருவான் என்று யாரும் அறியமுடியாது. அவன் மறைந்து வசிக்கும் இடம் அவனுக்கும் அந்தப் பொதிகை மலைக்குமே தெரியும். மலைப்பகுதிகளில் பழகிய அவனிடம் வேறோர் திறமையும் இருந்தது. சில அபூர்வமான மூலிகைகளையும் சித்துக்களையும் அவன் தெரிந்துகொண்டிருந்தான். அதைக் கொண்டு சாதாரணமாகச் சாதிக்க முடியாத காரியங்களையும் அவன் சாதித்து வந்தான். வெகுநாட்களுக்குமுன் அவனுடைய ஒரேசகோதரி அவளுடைய பதினெட்டு வயதில் எங்கோ சொல்லாமல் கொள்ளாமல் போய்விட்டாளாம். அதிலிருந்து விரக்தி புற்ற மாயாண்டி இப்படிப்பட்ட செயல்களில் இறங்கிவிட் டானாம். இப்படி நம்பவும் நம்பமுடியாமலும் அவனைப் பற்றிச் சிலர் கூறிக்கொள்வார்கள். அவன் பூர்வோத்திரம் எப்படியிருந்தாலென்ன? அந்தச் சுற்றுவட்டத்தில் வாழ்வோ ருடைய அமைதியைப் பொறுத்ததாக இருந்தது அது. அந்த சர்க்கிளுக்குப் போலீஸ் இன்ஸ்பெக்டராக வந்துசேரும் ஒவ்: வொருவரும் இரண்டு, மூன்று மாதங்கட்குமேல் நம்பிக்கை இழந்து வேறு இடங்கட்கு மாற்றிக்கொள்வதும் சகஜமாகி விட்டது. மாயாண்டியைப் பிடித்துவிட்டால் பதவி உயர்வு அடையலாம் என்றெண்ணி வருகின்ற ஒவ்வொரு இன்ஸ் பெக்டரும் ஏமாற்றமும் வேதனையும் கொண்டு தம்மை தொந்தவாறே மூட்டை கட்டிவிட நேரும். அவனைப் பற்றி அந்தப் பகுதிப் போலீஸுக்கு இதுவரை உருப்படியாக அறிய முடிந்த செய்தி ஒன்றுமே இல்லை. ஆனால் அவனுடைய திருவிளையாடல்கள் மட்டும் அடிக்கடி அவர்களைப் பாதிப் பதற்குத் தவறுவதில்லை. அவன் செயல்களின் பயங்கரமும் வியப்பும் அவர்களுடைய நம்பிக்கையைக் கொஞ்ச நஞ்சங் கூட இல்லாமற் செய்து கொண்டிருந்தது.

அதுவும் அந்தச் சப்பை மூக்கு சுதர்சனராவ் காலத்தில் போதும் போதும் என்று செய்துவிட்டான் மாயாண்டி. ஒருநாள் எப்படியோ எக்கச்சக்கமான நிலையில் மாயாண் டியை அவன் பின்புறத் தோற்றம் முழுவதும் தெரியுமாறு ஒரு புகைப்படம் எடுத்துவிட்டார் சுதர்சனராவ். அந்தப் பின்புறத் தோற்றமே கதிகலங்க வைப்பது போலிருந்தது. ஆறடி உயரம், அயனான சரீரம், இரும்பு வார்ப்புப்போல வாளிப்பான கை கால்கள், பரந்த முதுகு, கணத்தில் ஒட்டமெடுத்து மறைவதற்குரியபடி உதவும்-சிறு குதிகால்கள். ஒரு பெரிய யாழ்ப்பாணம் தேங்காய் பருமனுள்ள கொண் டையை முடிச்சிட்டுக் கட்டிக்கொண்டிருந்தான். கன்னங் கரேலென்று சுருண்டு சுருண்டு வளர்ந்திருந்த மயிர்க் கற்றை

களைக் கோணற்கொண்டையாக அள்ளி முடிந்திருக்கும் தோற்றத்தில் கொஞ்சம் அழகும் இருந்தது. வல்லவட்டுச் சல்லடமும் பிச்சுவாச் சொருகிய இடையும் அதைச் சுற்றிச் கிடந்த தடிமனான பெல்ட்டும் அந்தச் சிறு புகைப்படத்தைக் காண்பவர் நடுங்கும்படி இருந்தன. காதில் வட்டவடிவமான ஒலைத் தோடு ஒன்று அணிந்திருந்தான். தோற்றம் முற்றிலும் கூடி ஒரு பயங்கரமான வீரனின் முன்புறத் தோற்றத்திற்கு அடையாளமிட்டன.

இந்தப்படத்தைக் கழுவி நெகடிவ் செய்வதற்குப் பக்கத்து ஊருக்கு அனுப்பிவைத்திருந்த சுதர்சனராவ் மறுநாள் தபாலில் அதைத் திரும்பப் பெற்றார். மாலை வீடு திரும்பும் போது விரைவில் அதை மேலதிகாரிகட்கு அனுப்பவேண்டு மென்று எண்ணிக்கொண்டு டிராயரில் வைத்து நன்றாகப் பூட்டிவிட்டுப் புறப்பட்டார். நன்றாக இன்னும் நினைவிருக் கிறது; டிராயரை மறக்காமல் பூட்டியதும், படத்தை உள்ளே வைத்ததும் நிச்சயந்தான்.

ஆனால், மறுநாள் காலை ஆபீசுக்கு வந்தவர் திடுக்கிடும் படியாக ஒன்று நடந்தது. டிராயர் பூட்டியது பூட்டியபடியே இருந்தது. சுதர்சனராவ் மேலே படத்தை அனுப்புவதற்காக அதைத் திறந்தார். திறந்ததுதான் தாமதம் புஸ்ஸ் என்று. சீறிக்கொண்டு வெளியே வந்தது ஒருபாக நீளமுள்ள நல்ல பாம்பு ஒன்று!!! ஐயோ! என்று அலறிக்கொண்டே ஒடி விட்டார் சுதர்சனம். கடைசியி ல் ஸ்டேஷனிலிருந்த போலீஸார் ஒருவழியாக அதை அடித்துக்கொன்றுவிட்டனர். பாம்பை அடித்த பிறகும் டிராயரை நெருங்க அஞ்சினார் சுதர்சனம். கிட்ட நெருங்கும்போது அவருடைய உடல் வெல வெலத்து நடுங்கியது. உள்ளே டிராயரில் முதல் நாள் கழுவி வைத்த படம் இல்லை. ஒரு சிறு ஒலை நறுக்கு, படம் இருந்த அதே இடத்தில் இருந்தது.

‘நச்சுப் பாம்பை அது உன்னைப்பார்க்காத நிலையில் நீ பார்த்துப் படம் பிடித்துவிட்டாய். இப்போது அந்த நல்ல பாம்பு தன் படத்தை உனக்கு விரித்துக் காட்டும்! பயப்படாமற் பார்த்துக்கொள்.’
-மாயாண்டி

என்று கிறுக்கியிருந்தது ஒலை நறுக்கில். சுதர்சன்ராவுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. புரியாத புதிரோடு போராடும் வேலை நமக்கு ஏன் என்று அவர் அப்போதே தீர் மானம் செய்துவிட்டார். இரண்டு மாதங்களில் சுதர்சனராவ் வேறு ஊருக்கு மாற்றிக்கொண்டார். ஆனால் மாற்றிக் கொண்டு போவதற்குள் மாயாண்டி அவரைப் படாதபாடு படுத்திவிட்டான். வீட்டில் படுக்கையறையில் காலையில் கண் விழிப்பார் எதிரே குடல் நடுங்கும் காட்சி தென்படும். ஒரு மனித மண்டையோடு கிர்ரெண்று சுற்றிக்கொண்டிருக்கும்! துரங்கிக்கொண்டே இருப்பார், படுக்கை திடீரென்று மேலும் இழுமாகப் போய்வருவதுபோலப் பிரமை ஏற்படும்! விழித்துப் பார்த்தால் தரையில் உருட்டப்பட்டிருப்பார். இன்னும் என்னென்ன்வோ கணக்கற்ற துன்பங்கள். சுதர்சனராவ் ஒரு வழியாகப் போய்ச் சேர்ந்தார்.

*⁠*⁠*

கடைசியில் ‘மாயாண்டித் தேவன் கைதாகவேண்டும், அல்லது என் உயிர் போகவேண்டும்’ என்ற வைராக்கிய மொழியுடன் வலுக்கட்டாயமாக முல்லையூற்றுக்கு மாற்றிக் கொண்டு வந்து சேர்ந்தார் இன்ஸ்பெக்டர் நல்லமுத்துத் தேவர். தம்முடைய வைராக்கியத்தை மெய்ப்பிப்பது போலவே விருவிருப்பாகச் செயலாற்றவும் தலைப்பட்ட்ார். ஊராருக்கும் நம்பிக்கை தட்டியது. தேவர் இராப்பகலாகப் பொதிகை மலைப் பகுதிகளில் குண்டுகள் நிறைந்த பிஸ்ட்லு’ – டன் சுற்றினார். எத்தனையோ சப்இன்ஸ்பெக்டர்களுடைய அனுபவங்களைச் சொல்லிப் பலர் அவரை எச்சரித்தனர். ஆனால் அந்த உருட்டல் மிரட்டல்களுக்கு அசைந்துகொடுக்க வில்லை நல்லமுத்துத் தேவர். இம்மாதிரி, பேசுபவர்களைக் கண்டே வெறுத்தார். எந்த இடங்கள் அவருக்குச் சந்தேகம் உண்டாக்கினவோ அவைகளின் பயங்கரச் சூழ்நிலையை மதித்து ஒரு பொருட்டாகக் கருதி அஞ்சாது சென்று சோதனை செய்தார். துணிவு துணிவுதான் என்றாலும் ஊர் எச்சரிக்கையும் பேச்சுக்களும் சேர்ந்து அவருக்கு ஒருண்மை யைப் புலப்படுத்தியிருந்தன. எந்த நேரமும் தமது உயிர் அபாயும் சூழ இருக்கிறது என்ற எண்ணம்தான் அந்த உண்மை.

அன்று பெளர்ணமி நல்ல நிலா. இரவைப் பகலாக்கிக் கொண்டிருந்தது. இரவு மணி ஒன்பது இருக்கும். தேவருக்குத் துரக்கம் பிடிக்கவில்லை. வீட்டுத் தாழ்வாரத்தில் குறுக்கும் நெடுக்குமாக உலாவிக் கொண்டிருந்தார். மாயாண்டித் தேவனைக் கண்டுபிடிக்கின்றவரையில் குடும்பத்தோடு அந்த ஆவரில் குடியேறுவதால் தனக்கு நேர்கின்ற துன்பங்களை மனைவி, குழந்தைகளும் படவேண்டி வரும் என்ற கருத்துடன் முல்லையூற்றில் தேவர் வாடகை வீட்டில் தனியாகவே வசித்து வந்தார். குடும்பத்தோடு வரவில்லை. ஹோட்டலில் சாப்பாடு வைத்துக் கொண்டிருந்தார். உறக்கம் வராமற். போகவே பிஸ்டலை எடுத்துக் கொண்டு.கிளம்பினார் தேவர். எதிரே ரோந்து சுற்றியவாறே வந்து கொண்டிருந்த இரண்டு கான்ஸ்டபிள்களையும் துணைக்கு அழைத்துக் கொண்டு மலையடிவாரத்திற்குப் பேர்கும் சிறு சாலை வழியே சென்றுகொண்டிருந்தார். ஆவடை நாயகர் தோப்பை ஒட்டிச் செல்லும் அந்தச் சாலையில் குறுக்கே அமைந்திருந்த வாராவதியின் பக்கம் வந்திருப்பார். வாராவதியின் கீழ்ப்பக்கத்திலிருந்து வாட்ட சாட்டமான மனிதன் ஒருவன் மேலே ஏறிக்கொண்டிருந்தான். ஒருகணம் அவனுடைய பெருமித நடை, உயரத்தை தாமாகவே அளவிட்டன. அவர் கண்கள். அந்த மனிதனுடைய போக்கில் அவருடைய கவனம் கவரப்பட்டதே ஒழிய சந்தேகம் அதிகம் எழவில்லை, நல்லமுத்துத் தேவருக்கு. எனவே அவர் மேலே நடந்தார். பின்னாலே வந்த் கான்ஸ்டேபிள்களில் ஒருவன் சும்மா இராமல் மேலே ஏறி வந்த அந்த மனிதனை, ‘ஏய் யாரங்கே? இந் நேரத்தில் உனக்கு இங்கே என்ன வேலை? இப்படிக் கிட்டவா பார்ப்போம்’ என்று அதட்டிவைத்தான்.

வாராவதியில் ஏறினவன் பதில் கூறினான்:-

‘யார்? கான்ஸ்டேபிள் தங்கராஜா? உனக்கு எப்பொழுது இவ்வளவு தைரியம் வந்த்து அண்ணே நீ இரவிலே வெளியிலேகூட நடமாடுவது உண்டா? அப்போ, உன் தைரியம் வளர்ச்சியடைந்துவிட்டதென்று சொல்லு’ … ஒரு கணம் தங்கராஜுக்கு மண்டையில் ஆணி அடித்தாற் போல இருந்தது… அவனுக்கு அந்தக் குரலிற்குரியவனின் நினைவு வந்தது. இன்ஸ்பெக்டருக்கு ஜாடை காட்ட முன் புறம் திரும்பினான். கான்ஸ்டேபிள்கள் இரண்டுபேரும். வெறுங்கையர்களாய் வந்திருந்தனர். தற்செயலாய்ப் பேச்சு வளருவதைக் கண்ட நல்லமுத்துத் தேவர், கான்ஸ்டேபிள் யாரிடமோ வம்படிக்கிறான் என்று அவனை அதட்டப் பின் புறம் திரும்பினார். இதற்குள் வாராவதியில் ஏறிய மனிதன் இன்ஸ்பெக்டரின் பக்கமாக வந்தான். புதிதாக வந்து சேர்ந் தவனாகையால் மற்றொரு கான்ஸ்டேபிள் தங்கராஜின் திகைப்பைக் கண்டு காரணம் புரியாமல் நின்றான்.

‘என்ன இன்ஸ்பெக்டர் சார்! ஏது, இந்த நேரத்தில் எங்கோ கிளம்பிவிட்டாற்போல் இருக்கிறது: ரொம்பத் தொலைவா…இல்லை, பக்கத்தில்தானா? என்று கேட்டுக் கொண்டே அவரை நெருங்கின்ான். வந்தவன் இன்னாரென்று புரிந்துகொள்ளாமல் திகைத்தவாறே வந்துகொண்டிருந்தார் இன்ஸ்பெக்டர்.

இந்த நிலையில் வந்தவன் தங்கராஜு நின்ற இடத்தையும் கடந்து வந்துவிட்டான். பின்னாலிருந்து இன்ஸ்பெக்ட ருக்கு ஏதோ ஜாடை காட்டிவிட்டு, ஒரே தாவாகத் தாவி வந்தவனுடைய தலைக்கொண்டையை இறுக்கிப்பிடித்தான் கான்ஸ்டேபிள் தங்கராஜ்! ஆனால் அடுத்த நொடியில் ‘ஐயோ’ என்ற அலறலுடன் கையை அவன் கொண்டையிலிருந்து எடுக்க முயன்று கொண்டிருந்தான். கையை எடுத்து விட்டான். ஆனால் கைமட்டுமா வந்தது? விரல் நீளமுள்ள கூர்மையான ஊசிகள் சிலவும் கையின் மறுபுறம் வரை பாய்ந்திருந்தன. ரத்தம் வடியத் தொடங்கியது-தங்கராஜு வலி பொறுக்க முடியாமல் துடிதுடித்தவாறே நின்றுவிட் டான்-இதற்குள், நிலைமையைப் புரிந்துகொண்ட இன்ஸ் பெக்டர் பிஸ்டலை எடுத்தார். மற்றொரு கான்ஸ்டேபிள் தங்கராஜுவைத் தூரப் படுக்கவைத்துவிட்டு, வந்தவனை வளைத்தான்.

“ஏண்டா அப்பாவிப் பயலே! வீணாக ஏன் உயிரைக் கெடுத்துக்கொள்கிறாய், உன் கையில் ஏறியிருக்கும் ஊசிகள் விஷந் தோய்ந்தவை. ஒடிப் போடா. வைத்தியரைத் தேடி…இன்ஸ்பெக்டர் சார் வருகிறேன். மாயாண்டிக் காகத்தான் புறப்பட்டீர்களோ?” என்று கூறிக்கொண்டே நாலே எட்டில் வாராவதியைத் தாண்டி ஆவடையார் தோப்பில் நுழைந்துவிட்டான் மாயாண்டித்தேவன்.

இன்ஸ்பெக்டர் அனுப்பிய பிஸ்டல் குண்டுகள் வாராவதிச் சுவரில் மோதிச் சென்றன. மாயாண்டி தப்பிவிட்டான். அவனுடைய குதியங்கால்களின் அமைப்பு, ஓட்டத்திற்காகவே படைக்கப்பட்டவைபோல அமைந்திருந்தது. இன்ஸ்பெக்டருக்கு வியப்பளித்தது. கீழே கிடந்த தங்க ராஜுவை வலி கொன்று கொண்டிருந்தது. கூரிய ஊசிகள். நான்கைந்து உள்ளங்கையில் நுழைந்திருந்தன. வலி பொறுக்க முடியாமல் அலறிக்கொண்டிருந்த தங்க்ராஜ வின் பக்கம் வந்த இன்ஸ்பெக்டரும் மற்றொரு கான்ஸ் டேபிளும் கீழே விழுந்து கிடந்த ஒரு பிச்சுவாயைக் கண் டனர். அதன் பிடியில் எழுதியிருந்த ‘மாயாண்டித் தேவன்’ என்ற எழுத்துக்கள் நிலா ஒளியில் பளிச்சென்று தெரிந்தன. தங்கராஜூ கதறினான்… “சார், ஊசியில் விஷம் ஏறிக் கொண்டே போகிறதே, காப்பாற்றுங்கள் சார்”…என்று கதறினான். அந்தப் பிராந்தியம் முழுவதுமே எதிரொலித் தது அவன் கதறல். ரத்தம் வடிந்துகொண்டிருந்த அவன் கையிலிருந்த ஊசிகளின் அமைப்பு நல்லமுத்துத்தேவரைத் திடுக்கிடச் செய்தது, வேட்டுச் சத்தம் கேட்டுப் பக்கத்துத் தோப்புக்களில் காவலாக இருந்தவர்கள் இரண்டொருவர் வந்தனர். அவர்களின் துணைகொண்டு தங்கராஜுவை ஊருக்குள் தூக்கி வந்தனர். லோகல்பண்டு ஆஸ்பத்திரி டாக்டர் பாதி ராத்திரிக்கு அரைகுறை மனத்துடன் போலிஸ் ஸ்டேஷனுக்கு ஓடிவந்தார். முடிவில் தங்கராஜின் வலது முழங்கை வரை எடுக்க வேண்டி நேர்ந்தது. அழுத்த மாக விஷம் பாய்ச்சப்பட்டிருந்த ஊசிகள் முழங்கை வரை நஞ்சேற்றியிருந்தன… ஊசிகளைப் பரிசோதித்த டாக்டருக்கே அடிவயிறு கலங்கியது.

தங்கராஜூவின் வாக்குமூலத்திலிருந்து சில உண்மைகள் நல்லமுத்துத் தேவருக்குத் தெரிந்தன. சுதர்சனராவ் காலத்தில் ஒரு நாள் இரவு, இன்று வாராவதிக்கு அருகில் கேட்ட இதே குரலுக்குரிய மனிதனாகிய மாயாண்டித்தேவனை முல்லையூற்று போலீஸ் ஸ்டேஷனில் சந்திக்க நேர்ந்தது. ஸ்டேஷனுக்குள் நுழைய முயன்று கொண்டிருந்த அவனை, அவனுடைய வளர்ந்து முடிந்திருந்த கோணற் கொண்டையைப்பற்றி இழுத்துத் தடுத்து விட்டான் தங்கராஜ். ஆனால் வந்தவன் கண்மூடித் திறப்பதற்குள் தங்கராஜின் மூக்கருகில் ஏதோ பச்சிலையை நீட்டினான். அவன் கையில் ஒரு பூக்குடலைபோன்ற பெட்டி இருந்தது. பிறகு நடந்தது ஒன்றும் தங்கராஜுக்குத் தெரியாதாம். விடிந்ததும் மயக்கந் தெளிந்த பிறகு கேஸ், சாட்சி, இந்த வம்புகளுக்குப் பயந்துகொண்டு, நடந்தது ஒன்றும் வெளியிலே தெரியாதவாறு மறைத்துவிட்டான் தங்கராஜ். பின்பு சுதர்சனராவ் அலறியதும் டிராயரில் பாம்பு இருந்ததைக் கண்டபோது மாயாண்டித்தேவன் வேலை என்பதும் இரவில் வந்தவன் அவனே என்பதும் குடலையில் அவன் கொண்டு வந்தது பாம்பு என்பதும் தங்கராஜுக்கு மட்டும் தெரிந்துவிட்டது. ஆனால் வெளியிடாமலே இருந்து விட்டான். போட்டோவை அன்று எடுத்துச் சென்றதும் மாயாண்டியின் வேலையே… அன்று தன் நீண்டு வளர்ந்திருந்த தலைக்கொண்டை தன்னைப் பிடிக்கக் காரணமானது கண்டே மாயாண்டித்தேவன் இந்த விஷ ஊசிகளை வரிசையாகக் குத்திக்கொண்டு வெளியில் ெதரியாதவாடு முடிந்துகொள்ளும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்க வேண்டும்.

வாக்குமூலம் பெற்றுக்கொண்ட பின், கையிழந்தது காரணமாக லேலையிலிருந்து தங்கரா நீக்கப்பட்டு விட்டான். அப்போதுதான் புதிதாக மணவாழ்வில் நுழைந் திருந்த் தங்கராஜூவுக்கு இது ஒரு இடியாகியது. சர்க்கார் அளித்த நஷ்டஈட்டுத் தொகையுடன் தன் சொந்த கிராமத் திற்குச் சென்று காலங் கடத்தி வந்தான் தங்கராஜு. அவ்வளவு துன்பத்திலும் அன்பு மாறாத அவன் மனைவி வள்ளியின் உள்ளம் அவனுக்கு ஆறுதல் அளித்தது. வள்ளியை அவன் மணந்துகொண்டதே ஒரு வேடிக்கையான கதை. முல்லையூற்றில் புவனநாயகர் கோவிலில் விளக்குத் துடைக்கும் பணி பார்த்து வந்த அந்த இளம் பெண் அனாதை என்றறிந்தபோது அவ்ன் அளவு கடந்த பச்சாதாபமடைந் தான். பச்சாதாபத்தின் படிப்படியான வளர்ச்சி, காதலாக, முடிந்தது. இளமையில் அவள் ஒர்ே சகோதரன் படுதுஷ்டனாக ஊரார் கரித்துக் கொட்டும்படி வாழ்ந்து வந்தானாம். அண்ணன் பரிபூரண ஆதரவு தந்தாலும் அவன் நடத்தையில் ஊர் உலகம் பழிக்கும்படியாக இருந்த அக்கிரமங்களைக் கண்டு வள்ளி பொறுக்க முடியாமல் ஓடி வந்துவிட்டாள். அதற்குப் பிறகுதான் முல்லையூற்றில் புவனநாயகர் கோவிலில் வேலை பார்த்து வந்தாள். பல நாள் பழக்கம். ஒரு நாள் தங்கராஜ-வள்ளி இருவரையும் ஊரறியத் திருமணம் என்ற பெயரில் தம்பதிகளாக்கியது. அது நடந்த சில மாதங்களில் தான் தங்கராஜு கையிழந்துவிட்டான். இதற்குப் பிறகு, முல்லையூற்றில் ‘மாயாண்டித்தேவன்’ என்ற பெயர் மறைந்து ‘ஊசிக் கொண்டை மாயாண்டித்தேவன்’ என்று உருவெடுத்து வழங்கலாயிற்று. நல்லமுத்துத்தேவர் குடும்ப வாழ்வையும் துறந்து, வேண்டிவந்த உத்தியோக உயர்வுக்கும் வழியின்றித் திண்டாடிக்கொண்டிருந்தார். வருடம் ஒன்றாகியும் மாயாண்டித்தேவனைப் பிடிக்கமுடியவில்லை. என்ன வழி செய்யலாம் என்று மூளையைக் குழப்பிக்கொண்டு இருந்தார் தேவர்.

அவருடைய குழப்பம் எதிர்பாராதவிதமாக இவ்வளவு எளிதில் தீர்ந்து வெற்றி கிட்டும் என்று அவர் கனவிலுங் கூடக் கருதியிருக்கமாட்டார். அந்த வருடம் புவனநாயகர் கோவில் திருவிழாவுக்கு வள்ளியும் தங்கராஜூம் வந்திருந் தனர். வள்ளியின் வற்புறுத்தலினால்தான் தங்கராஜு வந்திருந்தான். தன் வலது கையைப் பலிவாங்கிய முல்லை யூற்று, நினைக்கத் துன்பமான எண்ணங்களையே மீண்டும் மீண்டும் அவன் கண்முன் நிறுத்தியது. கோவிலில் சுவாமி தரிசனத்தை முடித்துக்கொண்டு வெளியேறிய வள்ளியும் தங்கராஜூம் திருவிழாக் கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் வந்திருந்த போலீஸாருக்கிடையே இன்ஸ் பெக்டர் நல்லமுத்துத் தேவரைக் காண நேர்ந்தது. பார்த்து விட்டோமே என்ற தோஷத்திற்சாக வலதுகையை சலாம் செய்வதுபோலப் பாவனை காட்டினான் தங்கராஜு. இன்ஸ் பெக்டர் புன்னகை பூத்தார். பக்கத்தில் நின்றுகொண்டிருத்த வள்ளியை யாரோ ஒரு முரடன் பேந்தப் பேந்த விழித்துக் கொண்டே பார்த்தவண்ணமிருந்தான். இன்ஸ்பெக்டருக்கு, வணக்கம்:செலுத்திவிட்டுத் திரும்பிய தங்கராஜ வள்ளியை வைத்த கண் வாங்காமல் பார்க்கும் அந்த முரடனை நோக்கி னான். அந்த முரடனின் கண்களிலும் ஏதோ கலக்கம், பாசத்துடன் கலந்து நிழலிடுவதுபோலத் தங்கராஜூவுக்குத் தெரிந்தது. இதெல்லாம் கூட்டங்களில் ஏமாற்றும் பேர்வழிகள் வேலை என்று மனத்தில் தீர்மானங்கொண்டவனாய் அவனை மீண்டும் ஒருமுறை கூர்ந்து பார்த்தான். பார்த்தவன்…வாயி லிருந்து வார்த்தை வரவில்லை..முண்டாசும் பனியனுமாக இருந்த தோற்றமே தங்கராஜுக்கு முதல் நோக்கில் அந்த மனிதனுடைய அறிமுகத்தை இவ்வளவு காலங்கடத்தியவை. ‘மாயாண்டித் தேவன்! மாயாண்டித் தேவன்! பிடியுங்கள்! அதோ… அதோ நிற்கிறான்’ – தங்கராஜு வாய்விட்டுக் கத்திவிட்டான்.

எதிரிலிருந்த இன்ஸ்பெக்டர் துள்ளிக்குதித்தார். போலீஸார் வளைத்தனர். பிஸ்டல் தன் குதிகாலுக்கு நேரே குறிபார்த்து நிற்பதை மாயாண்டி கண்டான். எதிரே இன்ஸ்பெக்டர் நல்லமுத்துத்தேவர் பிஸ்டலுடன் நின்று: கொண்டிருந்தார். வெருண்டு ஓடிய கூட்டத்தின் மக்களில் ஒருத்தியாக ஒடிக்கொண்டிருந்த வள்ளியை அவன் கண்கள் துழாவின. நான்கு புறமும் ஆவலோடு பார்க்கும் அவன் நோக்கை, தப்பிக்க எண்ணுவதாகத் தவறாகப் புரிந்து கொண்ட இன்ஸ்பெக்டர் ‘இந்தச் சந்தர்ப்பமும் தவறி விடுமோ?’ என்ற ஆத்திரத்தில் பிஸ்டலின் குதிரையை அழுத்திவிட்டார். மாயாண்டி சுருண்டு கீழே விழுந்தான். ஒரு கையால் முழங்காலைப் பிடித்துக்கொண்டே ‘வள்ளி! வள்ளி! எங்கே போனாய்?’ என்ற வினாவுடன் மீண்டும். அவன் கண்கள் விலகி நின்ற ஜனக்கூட்டத்தை ஊடுருவின. ‘இளமையில் மனமுருக அறிவுரை கூறிய இளந்தங்கையின் கணவன்தான் தன்னால் கையிழந்த தங்கராஜ வள்ளியைத் தான் தங்கை என்ற பாசத்துடன் ஆதரிக்கத் தவறிவிட்டோம். அவள் கணவன் கையை இழக்கவும் நாமல்லவா காரணமாயிருந்தோம்’ என்று அவன் நினைவு பேசியது. பலப்லவென்று. கண்ணிர்த் துளிகள் முழங்காலில் வடிந்துகொண்டிருந்த செந்நீர்க் குருதியில் ஐக்கியமாயின. அழஅழப் பிறரைத் துன்புறுத்திய மாயாண்டித்தேவன் முதன் முறையாகச் சிறு துளி கண்ணிர் சிந்தினான். கொண்டையில் அரிப்பு எடுப்பு துணர்ந்து தலை முண்டாசை அவிழ்த்துவிட்டுக் கையை வைத்த மாயாண்டி ‘ஆ’ என்ற அலறலுடன் கையை எடுத்துக் கொண்டான்! அதற்குள் இரண்டோர் ஊசிகள் கையில் ஏறி விட்டன. ஆனால் விஷ மூலிகைகளால் வயிரம் பாய்ந்த அவன் உடலில் அவைகள் ஒன்றும் செய்துவிட முடியவில்லை.

‘தான் வைத்துக்கொண்ட ஊசி தன்னையே ஏன்? வைத்த தன் கைகளையே குத்திவிட்டது. வள்ளிக்குத் தான் செய்த துரோகமும் அப்படிப்பட்டதுதானே? கூடப்பிறந்த தங்கையின் கணவன் கையிழ்க்கச் சகோதரன் சத்துருவா?

சுதர்சனராவ் காலத்திலிருந்தே இந்தப் பயல் தங்கராஜாவை எனக்கு நன்றாகத் தெரியும். அவன் உயிரை நொடிக்குநொடி குறி வைத்திருக்கிறேன் நான். காரணம்?…இவன் சுதர்சன ராவின் வேட்டை நாய்போல என்னைப் பிடிக்க முயன்று சுற்றிக்கொண்டிருந்ததுதான். கடைசியில் கையாலாகாத வெறும் பயல் என்றறிருந்து கொல்லும் கருத்தை விட்டு விட்டேன். அப்பாவிப் பயல்’ என்ற இரகக்கத்தினால் தான் அன்று விஷ ஊசி ஏறியதைக்கூட எச்சரிக்கை செய்து விட்டுச் சென்றேன். ஆனால் இன்றல்லவா தெரிகிறது இவன் என் தங்கை வள்ளியின் கணவனென்பது? சொந்தத் தங்கையின் கணவன் கையிழக்கக் காரணமாக இருக்கும் அளவிற்குக் கொடிய பாதகனா நான்? மாயாண்டியின் மனத் தினுள் ஏதோ ஒன்று கேட்ட இந்தக் கேள்வி அவனைக் கொல்லுவதுபோலிருந்தது. உணர்ச்சிகளுக்கு இளகாத அவன் உருக்கு மனம் இப்போது இனம்புரியாது கரையைத் தொடங்கியது.

“டேய்! ஒன் தர்ட்டி ஃபோர்! டு நாட் த்ரீ! உம்ம்! ஏன் நிற்கிறீர்கள்? லாரியில் ஏற்றி ஸ்டேஷனுக்குக் கொண்டு போங்கள்… நான் மேலே ஆபீஸுக்குத் தந்தி கொடுத்துவிட்டு ஸ்டேஷனுக்கு வருகிறேன்”… இன்ஸ்பெக்டர் நல்லமுத்துத் தேவரின் குரல் மாயாண்டித்தேவனுக்குத் தன் சூழ்நிலையை உணர்த்தியது. கான்ஸ்டேபிள்கள் இருவர் தாங்கிக்கொடுத்த முழங்காலைப் பிடித்துக்கொண்டு லாரியில் ஏறினான் அவன். எந்த வள்ளியின் பேச்சுக்களை அலட்சியம் செய்தானோ, அதே வள்ளியினால் இன்று கண்ணிர் சிந்தினான், கைதானான். அவளுக்குத் தான் செய்த துரோகத்திற்குப் பரிகாரம் என்ற பேரிலாவது போலீஸார் அளிக்கும் ஆயுள் தண்டனையைத் தான் அடையவேண்டுமென்ற துக்கமயமான ஆவலொன்று அவன் உள்ளத்தில் தோன்றியது. திருவிழாக் கூட்டத்தில் தங்கராஜு கூச்சலிட்டுத் தன்னைக் காட்டிக் கொடுத்தபோது மாயாண்டி விரும்பியிருந்தால் நொடிப் பொழுதில் தப்பியிருக்க முடியும். தன்னைப் பிடித்துக் கொடுப்பவர்களுக்கென்று போலீஸார் விளம்பரம் செய்திருந்த தொகையை தங்கராஜு-தன் தங்கையின் கணவன்-பெற வேண்டுமென்று கருதியோ என்னவோ மாயாண்டி அகப்பட்டுக்கொண்டான்.

***

சிறையில் அடைப்பதற்கு முன் ஒரு பாக நீளம் வளர்ந் திருந்த மாயாண்டியின் கொண்டை மயிர் சிறை வழக்கப்படி நீக்கப்பட்டுவிட்டது. அதைக் கத்தரித்தபோது ஊசிகள் விஷமேறியவைகளாதலால் பத்திரமாக அப்புறப்படுத்தப் பட்டன. ஆனால், மொட்டைத் தலையோடு திகழ்ந்த அந்தப் பழம்பெரும் கைதியின் பெயராகப் போலீஸ் ரிகார்டில் இருக்கும் பெயர் என்னவோ இன்னும் ஊசிக்கொண்டை மாயாண்டித்தேவனென்பதுதான். தங்கராஜூ விளம்பரத் தொகை ஆயிரம் ரூபாயை அடைந்தான். தன் மனைவியின் கூடப்பிறந்தவன்தான் மாயாண்டி என்பதை அவனோ, தன் அண்ணன்தான் மாயாண்டி என்பதை வள்ளியோ, கடைசி வரை அறியவில்லை. “ஊசிக்கொண்டை மாயாண்டித்தேவன்” என்ற உலகறிந்த பெயர் அளவில்தான் அவர்களும் அவனை அறிந்திருந்தார்கள்.

– மூவரை வென்றான், மூன்றாம் பதிப்பு : ஏப்ரல், 1994, தமிழ்ப் புத்தகாலயம், சென்னை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *