கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: கிரைம் த்ரில்லர்  
கதைப்பதிவு: July 2, 2024
பார்வையிட்டோர்: 17,430 
 
 

“பார்வையாளர்களின் கவனத்திற்கு அனைவரும் அரங்கத்திற்குள் விரைந்து நுழையுங்கள் இன்னும் சற்று நேரத்தில் நீங்கள் ஆவலுடன் காத்திருந்த மனிலா குத்துச் சண்டை வீரரின் ஆட்டம் ஆரம்பிக்கவிருக்கிறது.” அரங்கத்தில் முன்னம் இருந்த சத்ததைக் காட்டிலும் அதிகரித்தே இருந்தது.

அறிவிப்பாளரின் அறிவிப்புக்கு ஏற்ப கண்ணில் கவசம் அணிந்து அரங்கத்துள் நுழைந்தார். பார்க்க மிகவும் கோபமான முகத்துடன் தோற்றம் வைத்திருந்தார். வீரரின் வருகைக்கு பார்வையாளர்கள் ஆர்பாட்டம் செய்தனர்.

“அடுத்ததாக வில்ஸ்பட் எனும் புதிய முகத்தை இந்த குத்துச் சண்டையில் நாம் காண இருக்கின்றோம்.” என அறிவிப்பாளர் கூறிய சிறிது நேரத்தில் பார்வையாளர்களின் கவனம் முழுக்க வில்ஸ்பட்டை நோக்கியது. வில்ஸ்பட்டின் உடல் முழுக்க பச்சை குத்தியிருந்தது. அவனின் நெஞ்சில் தலை ஓட்டின் படம் வரையபட்டிருந்தது. அவனைப் பார்க்க இளம் வயதுடைய வாலிபம் போல் தெரிந்தது. அவன் தன் முகத்தில் முக கவசம் அணிந்திருந்தான்.

அரங்கத்தில் குத்து சண்டை ஆரம்பமானது. மனிலா குத்துச் சண்டைக்காரன் மிகவும் வலிமையானவன் போலிற்று வில்ஸ்பட்டை பயங்கரமாகத் தாக்கினான். அவன் வயிறு நெஞ்சு போன்ற இடங்களில் முதலில் தாக்கினான். பின்பு முக்கின் மேல் பகுதியில் குத்தியதில் இரத்தம் மெலிந்து வெளி வந்தது. கண்கள் சொருகின கண்களில் நீர் மல்க சட்டென்று கைகளை முறுக்கி வேகமாக மனிலாவின் நெஞ்சில் குத்தினான். மீண்டும் குத்தினான். மற்றொரு முறை அவனின் மூக்கில் குத்தினான்.

குத்தியதில் மனிலா வீரன் கீழே விழுந்தான். சற்று நேரம் எழவில்லை. டிங் என்ற ஒலி. அரங்கத்தில் அனைவரின் மனதில் வியப்பும் குதூகலமும். சிறுபையன் மிகவும் திறமைவாய்ந்த மனிலாவை வீழ்த்தி விட்டானா? பார்வையாளர்களின் கூச்சல். “வில்ஸ்பட்! வில்ஸ்பட்! வில்ஸ்பட்!” அரங்கத்தையே அதிர வைத்தது. நடுவர் வில்ஸ்பட்டின் கையை மேலோங்கி வெற்றியை முடிவு செய்தார். வெற்றி பரிசாக ரிங்கிட் மலேசியா 50,000 கிடைத்தது.


தன் பழைய நினைவுகள் மனதில் இரனமாய் தழுவ புதிய இருப்பிடத்தைச் சுற்றி சற்று நேரம் நடந்து செல்கிறாள் தானியா. மனதில் பல எண்ணங்கள் எழுந்தன. இரவு மணி 10-ஐ நெருங்கிக் கொண்டிருந்தது. தாமதம் ஆனவையால் பேருந்தும் போயிற்று தட்டு தடுமாறி நிற்பதற்கும் வழி இல்லாமல் இறுதி முடிவாக நடப்பதற்கு ஆய்தமானால். இரவு நேரமானதால் பாதையிலும் ஆட்களின் நடமாட்டம் குறைந்து காணப்பட்டது.

திடிரென்று, தொலைப்பேசியின் ஒலி சப்தம் இல்லாத இடத்தில் நிசப்தம் ஆகியது. தொலைப்பேசியை அட்டன் செய்தால், “தானியா, எங்க மா இருக்க நேரமாச்சு சீக்கிரம் வீட்டுக்கு வா” தானியாவின் அம்மா “சரி அம்மா, வந்துடுறேன்” என சொல்லி கோலை கட் செய்தால். மறுபடியும் நிசப்தத்தை சமாளிக்கும் எண்ணம் மனதில் ஊடுறுவியது. இதோ வந்துவிடும்! இதோ வந்துவிடும்! என மனதை தேற்றிக் கொண்டால். ஆள் நடமாட்டம் இல்லாத அவ்விடத்தில் ஆட்கள் ஓடும் சத்தம்.

சுற்றும் முற்றும் திரும்பி பார்க்க கன நேரத்தில் முகவரி அறியாத ஆடவன் ஒருவன் தானியாவின் வாயில் கையை வைத்து இருளான சந்துக்குள் தள்ளினான். மிகவும் பலமானவன் போலிற்று ஒரே முறை தள்ளியதில் தானியா சந்துக்குள் தஞ்சமானாள். அவனின் கை தானியாவின் தோள்பட்டையை இறுகப்பற்றியிருந்தது. தானியா அவளின் பின்னால் இருந்த குளிரான சுவரில் மோதியதை உணர்ந்தால். அந்த ஆடவனின் கட்டிடம் போன்ற உடலால் தானியாவால் நகர இயலவில்லை. வார்த்தைகள் தொண்டை குழியில் அடைத்தன. தானியாவின் மனதில் பல எண்ணம்.

நான் இறக்கப்போகின்றேனா ?, அல்லது இன்னும் மோசமாக அவன் என்னை…சில நொடிகளுக்குப் பின் தானியா அந்த ஆடவனை உற்று நோக்கினாள். என்னதான் அந்த ஆடவன் தானியாவை சந்துக்குள் தள்ளினாலும் கூட அவளிடமிருந்து தள்ளியே நின்றான். அத்துடன் பதட்டத்துடன் சாலையையே சிறிது நேரம் பார்த்து கொண்டிருப்பதை தானியா கவனித்தாள். அந்த ஆடவனுக்கு வேகமாக மூச்சு இரைத்தும் கூட அவன் சுவாசிக்கத் தயங்கினான். முடிந்தவரை அமைதியாக இருக்க முயன்றான்.

ஏதோ ஆபத்திலிருந்து இருவரையும் காப்பதுப் போல் தெரிந்தது. திடிரென்று, சாலையின் முனையிலிருந்து “வெளிய வா ! எங்க இருக்க? நீ மட்டும் என் கையில மாட்டுனே உன்ன கொன்றுவேன்” எனறு ஆடவர்களின் குரல் கேட்டது. பின்பு எங்களிடமிருந்து அவர்கள் ஓடியதை தானியா பதற்றத்துடன் பார்த்தாள். அவர்கள் மறைந்தவுடன் இந்த ஆடவன் சாலையின் முனை பக்கம் திரும்பினான். யாரும் இல்லை என்பதை உணர்ந்தவுடன் ஆடவனின் உடல் நிதானமாக மாறியது.

ஆடவனின் வருகையானது தானியாவிற்கு பயமுறுத்தியதுடன் அவன் ஏதோ தீய செயலில் ஈடுபட்டிருப்பதை தானியாவால் உணர முடிந்தது. மறுபடியும் அந்த ஆடவன் தானியாவை எதிர்நோக்குவதுப்போல் திரும்பினான். அந்த ஆடவன் முகக்கவசம் அணிந்தவையால் அடையாளம் காண இயலவில்லை. அவன் வாலிப வயதுடையவன் போல் தெரிந்தது. அவனை இன்னும் உற்று நோக்கையில், அவனின் மேல் மூக்கில் காயம் பட்டிருந்தது.

அந்த காயம் சில நிமிடங்களுக்கு முன்பு யாரோ அவனைக் குத்தியதைப் போல இருந்தது. அது தானியாவிற்கு மேலும் ஆர்வத்தைத் தூண்டியது. அவனின் முக கவசத்தை இழுத்து யார் அவன் என முகம் பார்க்க மனம் ஒரு புறம் துடிக்க, துணிந்து எடுக்க மனமில்லாமல் கை விழங்கு போட்டார் போல் நின்றது. அந்த ஆடவனும் பெருமூச்சு விட்டு பின் அவ்விடத்தை விட்டு சென்றான். “சரி நேரமாயிற்று, வீட்டில் தேடுவார்கள்” என்று வேகமாக தானியாவும் நடக்க ஓர் அடி முன் வைத்தாள்.

தரையில் ஏதோ தங்கம் போன்று மின்னிய சங்கிலி ஒன்று கிடந்தது. அந்த சங்கிலி இதற்கு முன்னம் அங்கு இருக்கவில்லை. அந்தச் சந்துக்குள் இருக்கும் அனைத்துப் பொருட்களில் இருக்கும் தூசு, சேறு சகதிகள் அந்த சங்கிலியில் இருக்கவில்லை. அந்த இருளிலும் கூட சங்கிலியின் ஒளி அதிகமாகவே இருந்தது. தானியா அதனை எடுத்தாள். “ஒரு வேளை அது சாதாரணமான சங்கிலியாக இருக்ககூடும்,” என்று மனத்துள் நினைத்து அவ்விடத்தை விட்டு சென்றாள்.


மறுநாள் புது கல்லூரிக்கு நேற்று நடந்த சம்பவம் ஏதும் மனதில் நினைக்காமல் மிகவும் புத்துணர்ச்சியுடன் கிளம்பினாள். “சரி முதன் முதலாக யாரோட க்லாஸ்னு பார்ப்போம்.”

மறுமுனையில் மாணவர்களின் கும்பல், “நம்ப கல்லூரிக்குப் புதுசா ஸ்டூடண்ட் வந்துருக்காங்க போல,”

“ஆமா, எப்படி கண்டுபுடிச்ச?”

“அதா, அந்த ஸ்டூடண்ட் போட்டிருக்கிற சட்டைய பார்த்தாலே தெரிது.”

விரிவுரையாளர் ஒருவர் அங்கு வர, தானியா அவரிடம் வகுப்பிற்கு செல்ல வேண்டும் என்று கேட்டு அவரைப் பின் தொடர்ந்தாள்.

“என்னமா, கல்லூரிக்கு புதுசா? எங்க இருந்து வர்ர?”,

“சார், நா பினாங்குல இருந்து வர்ரேன், ஏற்கனவே இருந்த இடத்தில சரியான வருமானம் இல்ல, அதனால அம்மா அப்பா புதுசா இங்க பேக்கரி ஷோப் ஆரம்பிச்சுருக்காங்க,”

“சரி மா, உனக்கு எதாவது உதவி வேணும்னா என்னை கண்டிப்பா கேட்கலாம்,”

“ஓகே, தெங்யூ சார்,”


“வாழ்வில் எவ்வளவு கஷ்டம் வந்தாலும் யாரையும் துன்புறுத்தும் எண்ணம் மட்டும் கொண்டிருக்கக் கூடாது, மற்றவருக்குத் துன்பம் நேரும்போது அவர்களுக்கு உதவி செய்ய முற்படவில்லைனாலும் அவங்களுக்கு கஷ்டமா மட்டும் இருக்கக்கூடாது.” கண்ணின் விழியோரத்தில் கண்ணீர் வடிய பட்டென்று விழித்தெழுந்தான் லோகன்.

அம்மா கூறிய வார்த்தைகள் மனதில் நீங்காமல் ஒரு புறம் இருக்க மறுபுறம் அவர் இல்லையென்பதை நினைத்து மனதை தேற்றிக்கொண்டான். செல்போனில் டிங் என்ற ஒளி. “தங்களுடைய ரிம 50,000 சேமிப்பில் சேர்ந்துவிட்டது.” இந்த செய்தியைக் கண்டு லோகனுக்கு மகிழ்ச்சியுறுவதா இல்லை வறுத்தப்படுவதா என்று தெரியவில்லை.

“இன்னிக்கும் கோலேஜ்க்கு லேட்டா ? சீக்கிரம் போகணும்,” என்று கூறியவாறு விரைந்து வீட்டிலிருந்து கிளம்பினான் லோகன்.


முதல் நாள் என்பதால் விரிவுரையாளர் எல்லார் முன்னிலையிலும் தங்களை அறிமுகப்படுத்திக்கொள்ளுமாறு கூறினார். அவர் அவ்வாறு கூற மாட்டார் என்ற தன்னம்பிக்கையில் இருந்தவளுக்கு அதிர்ச்சியாக இருந்தது. படபடத்த குரலுடன் பெயர் முதலிருந்து வசிக்கும் இடம் வரை சொல்லிக் கொண்டிருந்தாள் தானியா. வகுப்பில் இருந்த ஒரு சிலர் கேட்டும் சற்றும் பொருட்படுத்தாததுப் போல் இருந்தனர். வகுப்பில் மீண்டும் ஆரவாரம் ஏற்பட்டதால் விரிவுரையாளர் கூறியும் யாரும் பொருட்படுத்தவில்லை.

வகுப்பின் கதவு திறந்தது. திடிரென்று அனைவரும் அமைதியாகினர். அனைவரின் கண்களும் வகுப்பின் வாசலை நோக்கியது. தானியாவும் வாசலைப் பார்த்தாள். லோகன் உள்ளே நுழைந்தான். அவனை பார்த்தவுடன் தானியாவின் இதயம் துடிப்பது அதிகரித்தது. அவனின் முகம் அவளுக்கு அடையாளம் தெரியவில்லை, ஆனால், அவன் முகத்தில் முன்பே அவள் பார்த்த தழுவுண்ட காயத்தை கண்டாள். அது அவனை சந்துக்குள் தள்ளிய ஆடவன் என்பதில் தானியாவிற்கு சந்தேகம் எழுந்தது. லோகன் தானியாவைப் பார்த்து அதிர்ச்சியுற்றதுடன் முகத்தில் வெளிப்படுத்தாமல் இருக்க மௌனமாக தன் இருக்கையில் அமர்ந்தான்.

“தானியா! இன்னும் ஏதாவது பேச விரும்புரிங்களா இல்ல அங்கேயே நிற்க போரிங்களா?” மீண்டும் சுய நினைவிற்கு வந்து லோகன் பக்கத்திலிருந்த காலி இடத்தில் பதற்றத்துடன் அமர்ந்தாள்.

“நாம் நேற்று பார்த்த அதே நபரா? அவனைப் போலவே உள்ளதே,”

“சரி நான் இன்று குழு இடுபணிக்கான தலைப்பைக் கொடுதுடுறேன், ஒரு குழுவில் இருவர் இருக்க வேண்டும், பக்கத்தில் இருக்கின்ற நண்பர்களையே நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம், சரி தலைப்பைப் பார்ப்போம் ஒரு படத்தை வைத்து அவற்றுள் வரும் காட்சியை மீண்டும் உருவாக்க வேண்டும் என்பதாகும்”

“ஏற்கனவே இந்த நபரால் குழப்பமடைந்து இருக்குறேன், இதுல இவருகூட சேந்து இடுபணி செய்யனுமா? முதல் நாளுலையே இவளோ ட்விஸ்டா?” மனதிற்குள்ளயே யோசித்துக் கொண்டிருந்தாள்.

வகுப்பில் விரிவுரையாளர் கூறிய வார்த்தைகள் யாவும் காற்றாய் பறந்தன. தானியா லோகனிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டாள். லோகன் தானியாவைப் பொருட்படுத்தாமல் விரிவுரையாளரையே பார்த்துக்கொண்டிருந்தான். இருப்பினும், தானியா இடுபணி காரணத்தால் பேச முயன்றாள். வகுப்பு முடிந்து எல்லோரும் வெளியே சென்றனர். தானியா லோகனிடம் மீண்டும் பேசத் தொடங்கினாள்.

“உனக்கு இப்போ என்னதான் பிரச்சன ஏன் இப்படி இருக்குற?”

“உனக்கு என்ன எசைமண்ட் செய்யனும் அவ்ளோதானே, செஞ்சிட்டு அனுப்புறேன், மத்தப்படி ப்ரெண்ட் ஆகனும்னு பின்னாடிலா வராதே”

“நான் ஒன்னும் அவளோ மோசமா படிக்கிற பிள்ள இல்ல, நீ எனக்கு செஞ்சி தர்றதுக்கு, ஆமா உங்க வீட்டில சொல்லிருந்தா தெரிஞ்சிருக்கும்,”

சட்டென்று லோகனின் முகம் வாடி அவ்விடத்தை விட்டு நீங்கினான். தவற்றை உணர்ந்து மௌனம் காத்தாள் தானியா. மன்னிப்பு கேட்க சுற்றும் முற்றும் தேடியும் கிடைக்கவில்லை. மறுநாள் பள்ளிக்கும் லோகன் வரவில்லை. காரணம் அறியாத தானியா பல கோணங்களிலிருந்து யோசித்தாள், பின்பு நேரமானதால் வீட்டிற்குப் புறப்பட்டாள்.


“சாப்பாடு எடுத்து வெச்சிருக்கேன் வந்து சாப்பிடு மா,”

உணவை உண்டப் பிறகு தானியா தன் வீட்டு முன்புறத்தில் அமர்ந்திருந்தாள். வெளிப்புறக்காட்சிகளை சிறிது நேரம் இரசித்துக் கொண்டிருந்தாள். மணி இரவு 8ஐ நெருங்கிக் கொண்டிருந்தது. பின்பு அண்டை வீட்டார் ஒருவர் வெளியே வருவது போல் தெரிந்தது. திரும்பிப் பார்த்தாள் தானியா. தானியாவிற்கு திகைப்புடன் சேர்ந்த அதிர்ச்சி. லோகன் அந்த வீட்டிலிருந்து வெளியில் வந்தான்.

“லோகன்! நீ இங்க தான் இருக்கியா?”

“ஆமா”

“சரி எங்க போற அதுவும் இந்த நேரத்துல”

“வீட்டுக்கு பொருள் வாங்கனும் அதா போறேன்”

“நானும் உன் கூட வரலாமா? நான் இங்க புதுசு உன் கூட வந்தா கடைலா எங்க இருக்குனு தெரிஞ்சிப்பேன்ல,”

“ம்ம் சரி வா,”

“இரு அம்மாகிட்ட சொல்லிட்டு வர்றேன்,”

பின்பு இருவரும் சேர்ந்து நடந்து சென்றனர். “நேத்து உன்கிட்ட அப்டி பேசிருக்கக்கூடாது மன்னிச்சிரு” லோகனும் அவளிடம் சிறிது பேசத் தொடங்கினான். கால்கள் ஒன்றன் பின் ஒன்றாக அடியெடுக்க அதுப்போல் அவர்களின் உரையாடலும் தொடங்கியது.

லோகன் நிறைய பேசவில்லையெனினும் தானியா பேசுவதை தாளம் போல் கேட்டுக் கொண்டிருந்தான். மறுநாள் காலையில் இருவரும் ஒன்றாகவே வகுப்பிற்குச் சென்றனர். லோகன் கல்லூரியில் மிகவும் அமைதியானவன் என்பதால் தானியாவிடம் பேசுவதைக் கண்டு அனைவரும் திகைத்தனர்.

“தானியா! இந்த வாரம் சனிக்கிழமை கல்லூரியில் விருந்து இருக்கு, நீங்க இருவரும் கலந்துகொள்ளனும்,”

“கண்டிப்பா,”

லோகன் ஏதும் பேசாமல் அமைதியாக இருந்தான். வகுப்பு முடிந்து வீட்டிற்குச் சென்றான் லோகன். அந்நேரத்தில் வீட்டின் வாசலில் ஒரு கடிதம் இருந்தது. லோகன் அந்தக் கடிதத்தை எடுத்துப் பார்த்தான்.

“சனிக்கிழமை, இரவு 8 மணி, தயாராகுங்கள்,” என்றக் குறிப்புக் கொண்ட காகிதம் மட்டும் இருந்தது. லோகனுக்கு அதைப் படித்தவுடனே புரிந்து விட்டது. கைகள் பதற்றத்துடன் இதயம் துடிப்பது வெளியே கேட்கும் அளவிற்கு இருந்தது.


கல்லூரியில் அனைவரும் விருந்திற்கான ஏற்பாடுகளைச் செய்துக் கொண்டிருந்தனர். தானியாவும் சிறிய வேலைகளைச் செய்துக் கொண்டிருந்தால். லோகன் எப்பொழுதும் இருக்கும் மனநிலையுடன் சற்று அமைதியாகவும் பதற்றமாகவும் இருந்தான். தானியாவிடம் கூறுவதற்கும் லோகனுக்கு பயமாக இருந்தது. சிறிது காலம் மகிழ்ச்சியாக இருக்கக் கிடைத்த உறவும் போய்விடும் என்ற பயம். தானியாவின் நிழலைத் தொடர்ந்து நடந்த நாட்கள் எல்லாம் கனவாய் மாறிவிடும் என்ற பயமும் லோகனின் மனதிலிருந்தது.

வெள்ளிகிழமையன்று காலை லோகன் கல்லூரிக்கு வரவில்லை. தானியா பலமுறை அழைத்தும் கோலை கட் செய்தான். தானியாவும் வீட்டின் முட்புறம் நின்று ஏக்கத்துடன் பார்த்துவிட்டு வகுப்பிற்குச் சென்றாள்.

சனிக்கிழமை இரவும் வரப்போவதில்லை என்பதை அறிந்த தானியா இரவு விருந்துக்கு ஆய்தமானாள். உடைகளை அணிந்து கொண்டு கல்லூரிக்கு வந்தப் பிறகு அவள் கலந்துகொள்ளும் முதல் விருந்தாக இருப்பதை மனதுள் நினைத்துக் கொண்டு வாசலுக்கு வந்தாள். லோகன் வீட்டு வாசலில் இருந்த நபரைப் பார்த்து தானியா அக்கனமே மனமுடைந்து போனாள்.

தானியாவை இருளான சந்துக்குள் தள்ளிய நபர் அணிந்திருந்த முகமூடியுடன் லோகன் வாகனத்தின் அருகில் நின்றுக் கொண்டிருந்த்தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *