அதிகாலை மூன்று மணிக்கு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: கிரைம்
கதைப்பதிவு: October 29, 2020
பார்வையிட்டோர்: 14,293 
 
 

என் பேரு மணி .நம்ம கூட இன்னைக்கு பேச போறது இன்ஸ்பெக்டர் ஜெகன்.ஒரு மருத்துவர் கொலை வழக்கில் நீங்க செம்மையா குற்றவாளிய கண்டுபிடிச்சிங்க சார்.அதை பத்தி மக்கள் கிட்ட கொஞ்சம் தெளிவா சொல்லுங்க சார் என்றார் பத்திரிகையாளர் மணி.

உடனே ஜெகனும், எங்களுக்கு ஒரு போன் கால் வந்திச்சு ஒரு பிணம் பழைய குடோனுல இருக்குனு.நாங்க எங்க டீம்வோட போனோம். விசாராணை பண்ணதுல தான் தெரிய வந்தது அவர் ஒரு மருத்துவர்னு அவர கிட்டத்தட்ட ஒரு வாரமா பயங்கரமா டார்ச்சல் பண்ணி அப்புறம் கொன்னு இருக்காங்கன்னு.ஸ்.ஐ. ஜீவாவ வச்சு விசாரிச்சோம் அவருக்கு யாராவது எதிரி இருக்காங்கலானு, அவர் விசாரணை படி அப்பிடி யாரும் இல்லன்னு தெரிய வந்தது.அவரோட போஸ்ட்மாட்டம் ரிப்போர்ட் படி மூணு மணிக்கு இறந்தாருன்னு தெரிய வந்தது.அப்புறம் அந்த ஏழு நாளும் அவர சாகாமல் இருக்க வச்சு, அவர டார்ச்சல் பண்ணி அப்புறம் 7ஆவது நாள் கொன்னு இருக்காங்க.அந்த குடோன் ரெம்ப பழசு அது யூஸ் ல இல்லனு நல்லா ஸ்டெடி பண்ணி, கொலை பண்ணி இருக்காங்க.அதை அந்த குடோன் இருக்குற இடத்தில் இருக்குறவங்க தான் பண்ண முடியும் ஏன்னா டெய்லியும் அந்த கில்லர் வந்து,வந்து போயி இருக்கான வெளி ஆளா இருக்க வாய்ப்பு இல்ல.சோ எங்க பார்வை அந்த குடோன் இருக்குற தெருல இருக்குற ஆளுங்கள் பக்கம் போச்சு, அவங்க எல்லாரும் அப்பாவி மாரி தான் தெரிச்சாங்க,ஆன அந்த அப்பாவி கூட்டத்துக்கு உள்ள தான் அந்த கில்லர் இருக்கனும்னு எனக்கு தோணுச்சு.சோ எல்லாரையும் ரெம்ப சீரியஸ்சா கவனிச்சோம்.

அப்புறம் அந்த டாக்டர் அட்டெண்ட் பண்ண கேஸ்ல யார்,யார் இறந்தாங்கன்னு ஒரு லிஸ்ட் எடுத்தோம்.அப்ப ஒரு தடயம் சிக்குச்சு.

அவர் அட்டெண்ட் பண்ண கேஸ்ல நாங்க சஸ்பெக்ட் பண்ணுற தெருல ஒரு பொண்ணோட தம்பி இறந்து இருக்கான்னு.அந்த பொண்ணு பேரு மனிஷா,அம்மா அப்பா இல்ல.அவளுக்கு ஒரே தம்பி அவனும் ஆக்சிடெண்ட்ல செத்துடானு.சோ எங்க கவனம் அவ பக்கம் போச்சு,நல்லா அப்பாவி மாரி அந்த பொண்ணு பேசுனா,எங்களுக்கு அந்த இடத்துல ஒரு செயின் வேற கிடைச்சுது அது யாருதுன்னு ஒரு பக்கம் விசாரணை போச்சு,எல்லாம் ஒரு இடத்துல வந்து முடித்தது.அந்த செயின் மனிஷா ஓடதுன்னு ப்ரூப் ஆச்சு, சோ மனிஷா அர்ரெஸ்ட் பண்ணி விசாரிச்சப்போ அவ ஒத்துகிட்டா ஆமா நா தான் கொலை பண்ணேனு,என் தம்பியை கேவலம் பணம் கட்டலனு ட்ரீட்மெண்ட் பண்ணாம சாகடிச்சுட்டான் அவன்,அதுமட்டும் இல்லாம உன் தம்பி செத்தது சரியா மூணு மணினு எண்ட நக்கலா வேற பேசினான்.அதான்

அவனை டார்ச்சல் பண்ணி கொன்னேன் என்றால்.

உடனே மணி சார் அவங்க கொலை பண்ணலனு நீங்க எப்படி சார் கண்டுபிடிச்சிங்க? என்றார். ஜெகனோ அந்த பொண்ணு பத்தி விசாரிக்க வரைக்கும் எல்லாம் நல்ல விதமா தான் சொன்னாங்க.அந்த பொண்ணு சாலரில பாதி அனாதை ஆசிரமம் குடுத்துரும்னு, எல்லாருக்கும் உதவி பண்ணும் அப்பிடினு பாசிட்டிவ்வா தான் சொன்னாங்க.அப்புறம் தான் தெரிச்சது அந்த குடோன்க்கு வேற வழி மூலமாவும் போலாம்னு.அத தான் கொல்ல வந்தவன் யூஸ் பண்ணி இருக்கணும்.சோ அந்த வழியாக போயி பாத்தோம் அது அந்த அனாதை ஆசிரமம் போறதுக்கான ரோடு,அப்புறம் மனிஷா தம்பி ரிப்போர்ட் பாத்தோம் அதுல தான் அவங்க இதுல சம்பந்தப்படலனு தெரிந்தது.அவங்க தம்பி செத்தது 8 மணி ஆன அவங்க எங்க கிட்ட சொன்னது 3 மணினு.ஆன யாரை காப்பாத்த இதை பண்ணுறாங்கன்னு தேடுனோம்.

அவங்களுக்கு தெரியாம அவங்களே எங்களுக்கு ஒரு தகவல் சொல்லிட்டாங்க மூணு மணினு.நாங்க சேகரிச்ச ரிப்போர்ட் ல யாரு மூணு மணிக்கு செத்து இருக்காங்கன்னு பாத்தோம். கொலையாளி சிக்கிடான்.அது அனாதை ஆசிரமத்துல உள்ள ஒரு பையன் தான் அந்த டாக்டர் ட்ரிட்மெண்ட் பாத்து,மூணு மணிக்கு செத்து இருக்கான்,மனிஷா தம்பி மாரி தான் ஒரு ஆக்சிடெண்ட் ஆகி செத்து இருக்கான்,அந்த அனாதை ஆசிரமம் ஓனர் சஞ்ஜையை விசாரிச்சோம்.அவர் உண்மைய ஒத்துகிட்டாரு, அவர்

தான் அந்த கொலை பண்ணேன்னு. மேலும் மனிஷா எனக்காக தான் பொய் சொல்லி உங்க கவனத்த அவ பக்கம் கொண்டு போயி,அதான் அந்த செயின் விஷயம் அவளே தான் அங்க போட்டா நீங்க கண்டுபிடிக்கணும்னு,

அந்த டாக்டர் கெட்டவன். மனிஷா தம்பி,என்னோட ஆசிரமத்தில் ஒரு பையன் எல்லாரையும் கேவலம் ஒரு பணம் கட்டலன்னு ட்ரீட்மெண்ட் பாக்காம கொன்னுடான்.பாவம் அந்த குழந்தைங்க, ஆக்சிடெண்ட் ஆன அப்ப எவ்வளவு வலி இருந்து இருக்கும்,அந்த வலிய அந்த டாக்டருக்கு ஏழு நாலும் காட்டுனேன். அவனை கொன்னு முடுச்சு வரும் போது மனிஷா என்னை பாத்துட்டா அவ கிட்ட எல்லா உண்மையும் சொன்னேன். பைத்தியகாரி தனக்கு தான் யாரும் இல்லையே நான் ஜெயிலுக்கு போறேன்,நீங்க ஆசிரம குழந்தைகல பாத்துகோங்கன்னு எண்ட சொன்ன,ஆனா என் மனச்சாட்சி கேக்கல அதான் நீங்க கேட்டதும் உண்மையை சொல்லுறேன் அப்பிடினு சொன்னாரு.

சஞ்சய் ஆசிரம பொறுப்பை மனிஷாவிடம் கொடுத்துவிட்டு போலீஸ்சில் சரண் அடைந்தார்.சூப்பர் சார் என்று மணி பாராட்டி பேட்டியை முடித்தார்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *