ஸ்வப்னப்பரியா

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: குமுதம்
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: June 16, 2019
பார்வையிட்டோர்: 59,315 
 
 

ஸ்வப்னப்பரியா பார்ப்பதற்கு ஜில்லென்று இருந்தாள். அசலான நாமகரணப் பெயர் விஜய கனகம்மா நாகலா தேவி என்பது தான். சினிமாவுக்கு தான் இந்த மாதிரி ரயில் நீளப்பெயர்கள் ஆகாதவை ஆயிற்றே?

அதிலும் இது சரியான காரமான அந்திய பெயர்.

அதை அடித்து திருத்தி ஸ்வப்னப்ரியா என்று ஆக்கியவன் பலப்பல வருடங்களாக ஹீரோவாகவே ஆட்டமாடி கொண்டிருக்கும் சதா சிவராஜாவாக இருந்து பின் சினிமாவுக்காக ஸ்ரீராஜ் ஆன மக்களின் இதயநாயகன் தான்.

இத்த வருஷத்தில் எவ்வளவோ ஹீரோயின்களை பார்த்து விட்டான். அவனோடு சேர்ந்து நடித்தாலே ஒரு எகிறு எகிறலாம் என்பது தான் கோலிவுட்டின் ராசி.

இவர்களில் ஸ்வப்னப்ரியா கொஞ்சம் ஆச்சரிய அதிசய ரகம். இவள் பின்புலம் அதிர்வுகள் நிரம்பிய ஒரு பெரும் சோகம்.

ஸ்ரீராஜுக்கு ஒரு பிரத்யேக பங்களா உண்டு.

அய்யா அங்கே தான் ஓய்வெடுப்பார். கதை கேட்பார்.

அந்த பங்களாவுக்கு ஒரு வேலைக்காரி தேவைப்பட்ட போது ஒரு பம்பாய்கார நாகலா தேவியை அனுப்பி வைத்தார்.

மும்பை சிகப்பு விளக்கு பகுதியில் சிக்கி சின்னா பின்னமாகியிருந்தவளை மூன்று லட்சத்துக்கு வாங்கி தன்வசம் வைத்திருந்தவர் ஐந்து லட்சத்துக்கு ஸ்ரீராஜுக்கு விற்று விட்டார்.

கொஞ்ச நாள் வெச்சிருந்து அனுபவிச்சிட்டு இஷ்டம் போல செய்யுங்க என்கிற சேட்டின் மெய்ஞான உபதேசத்தால் ஸ்ரீராஜிடம் வந்து சேர்ந்தாள்
விஜயகனகம்மா நாகலா தேவி.

தனக்கு தொடநர்த்து வாய்ப்பு தரும் இயக்குநர் ஒருவருக்கு அவளையே விருந்தாக்கிட, அவர் தான் இவள் படுக்கைக்கு மட்டுமல்ல சினிமா இன்டஸ்டஸ்ரியின் ரசனைக்கும் உரியவள் என்பதை கண்டறிந்தார்.

விதி சிலர் வாழ்வில் டெண்டுல்கர் போல நூறு செஞ்சுரி எல்லாம் போடும் விஜய கனகம்மா நாகலா தேவி வாழ்வில் அது தயாராகியது.

ஸ்ரீரானி“ படம் ஒன்றில் ஐ.ஏ.எஸ். எழுதிவிட்டு ரிசல்ட்க்கு காத்திருந்த கேப்பில் ஒரு இளம்பெண் நடிக்க வந்தாள். அவள் மச்சு காற்றில் கூட ஆங்கிலம் கொடி கட்டி பறந்தது. ஸ்ரீராஜிக்கோ தமிழே தகராறு. அத்தோடு தொட்டி நடிக்கும்போது அவன் கொஞ்சம் சுதந்திரம் எடுத்து கொள்ளவும் செட்டிலேயே அறைந்து விட்டாள் அவள்.

நல்லவேளை பணத்தை கொடுத்து பத்திரிகைகிகளில் தன் வீரத்தழும்பு தெரியாதபடி பார்த்து கொண்ட ஸ்ரீராஜ் அந்த ஐ.ஏ.எஸ். காரில் எதிரில் விஜய கனகம்மா நாகலா தேவியை ஸ்ரீஹீரோயினாக ஆக்கி அந்த படத்தையும் வெள்ளி விழா காண செய்தான்.

அதன் பிறகே வி.நாகதேவியும் ஸ்வப்னப்ரியாவானாள் மட்டுமா?

ஒரே படம் அவளை கனவுக்கன்னி ரேஞ்சுக்கு கொண்டு சென்று விட்டது ஸ்ரீராஜ் வரையில் பணத்தையே பாலாக கறக்கும் பசுவாகவும் ஆகிவிட்டாள்.

அவளை புக் செய்ய யார் வந்தாலும் ஸ்ரீராஜை தான் பார்க்க வேண்டும். கேட்டால் நன்தான் கார்டியன் என்றான் ஏற்கனவே இரண்டு மனைவிகள். அதனால் மூன்றாவது இடம் ஒதுக்குவதிலும் சிக்கல்.

கடந்த சில வருடங்களில் ஸ்வப்னரியாவும் ஒரு பத்து பதினைந்து படங்கள் செய்து விட்டாள். அவ்வளவுக்கும் கோடிகளில் தான் சம்பளம்.

எல்லாமே ஸ்ரீராஜின் பெட்டியை நிரப்புவது தான் கொடுமை.

ஆனால் அதை எல்லாம் நினைத்து புழுங்கவோ இல்லை கலங்கவோ ஸ்வப்னப்ரியா தயாராக இல்லை. இந்த விசுவாசத்துக்கு வெடி வைபபது
போல வந்து நின்றவன் தான் அமுதவன் என்கிற ரசிகன்.

அவள் பெயரை மார்பில் பச்சையாக குத்தி கொண்டும் அவளுக்கு ரசிகர் மன்றம் வைத்தும் ஒரு படி மேலே போய் கோயில் கட்டவும் தயாராக
இருக்கிறான்.

ஒரு அவுட்டோர் ஷூட்டிங்கின் போது அவள் காரில் வரும்போது வழிöல்லாம் கட் அவுட் வைத்து பூத்தூவி அவளை ஒரு தேவதை லெவலுக்கு
கொண்டு போய் விட்டான்.

ஸ்வப்னப்ரியாவும் அவனை அழைத்து பேசினாள். அமுதவன் உங்க அனபுக்கு ரொம்ப நன்றி.. ஆனா இதெல்லாம் டூமச். என்றாள்.

ஆமாங்க டூ மச் தான். எனக்கும் தெரியுது. ஆனா என்வரைல நீங்க ஒரு உலக அழகி. உங்க அழகு என்னை தூங்க விடமாட்டேஙங்குது. என்று அவன் மிக வெளிப்படையாக பேசவும் அதை கேட்டு சற்று ஆடித்தான் போனாள் ஸ்பரியா.

நெடுநேரம். அவனையே வெறித்து பார்த்தாள். பிறகு கேட்டாள்.

ஆமா நீங்க என்ன பண்றீங்க?

நான் ஒரு ரியல்எஸ்டேட் ஓனர்ங்க.. பணத்துக்கு பஞ்சமே இல்லை. ஒரு கிராமமே எங்களுக்கு சொந்தம்னா பார்த்துங்களேன்.

கல்யாணமாயிடிச்சா?

என்ன கேள்விங்க இது. பண்ணிக்கிட்ட உங்கள பண்ணிக்கணும். அது நடக்காதுன்னும் நல்லா தெரியும். அதனால .உங்க நினைப்போட காலம்பூரா பிரம்மாசாரியாவே இருந்துடற முடிவுல இருக்கேன்.

அவனது ஒவ்வொரு பதிலுமே முத்துன தேங்காய் சரி பாதியாக உடைபடுவது போல் இருந்தது.

அமுதவன் இப்படி ஜொள்ளு விட்டு துணிச்சலாக பேசுவதும் பழகுவதும் அப்போதே டச் அப் பாய் ஒருவன் மூலம் ஸ்ரீராஜ் காதுக்கும் போனது.
அவுட்டோர் ஸ்பாட்டுக்கே வந்து விட்டான் ஸ்ரீராஜ்.

யெல்லோ அம்பரல்லா ஒன்றின் கீழ் அமர்ந்து கொண்டு அமுதவனிடம் சிரித்து பேசி கொண்டிருநதவள் ஸ்ரீராஜ் வரவும் சற்று அரண்டு போனாள்.

அமுதவனும் சார் நீங்களா நான் உங்களுக்கும் ரசிகன் சார். என்று உற்சாகமானான்.

சந்தோஷம்.. கொஞ்சம் அப்படி போறியா? நான் கொஞ்சம் தனியா பேசனும்.

ஐய்யோ தாதராளமா சார். அமுதவன் விலகிட ஒரு நாற்காலியை அசிஸ்டென்ட் டைரக்டர் ஒருவன் வேகமாய் கொண்டு வந்து போட்டான்.

அதில் அமர்ந்த வேகத்தில் சிகரெட் உதட்டில் பற்றிக்கொண்டு புகை மூளத் தொடங்கியது.

நான் எவ்வளவோ சொல்லிட்டேன். ஆனா அவர் தான் கேக்க மாட்டேங்கறாரு என் மேல வெறியா இருக்காரு என்று மென்று விழுங்கியபடி சொன்னாள்.

சரி விடு… இனி இவன் இல்லை எவனும் கிட்ட வராதபடி பண்றேன். நீ வேலையை பார். ஒண்ண மட்டும் நல்லா ஞாபகம் வெச்சுக்கோ. உனக்க எல்லாமே நான் தான். நீ என் அடிமை. அவன் அப்படி சொன்னதில் ஒரு அழுத்தம் இருந்தது. அது அவள் அடி வயிற்றில் சற்று அமிலம் பீறிடவும் வைத்தது.

எழுந்து கொண்டான்.

டைரக்டர் சிரித்தபடி வந்தார்.

எங்க இவ்வளவு தூரம்? பட்சி பறந்துடும்கற பயம் வந்துட்ட மாதிரி தெரியுதே….? என்று சினிமா டயலாக் போலவே கேட்டார்.

பறந்துடுமா? அவனும் திருப்பி கேட்டான்.

நிச்சயமாக நானும் பாத்துக்கிட்டுதானே இருக்கேன்.

என்னை மீறி போற துணிசசல் இவளுக்கு இருக்குன்னா நினைக்கறீங்க?

எல்லாம் விசாரிச்சுட்டேன் சார். அம்மணியும் மனசளவுல சரண்டாராயிட்டாங்க. அநியாயத்துக்கு கிறுக்கா இருக்கான். உங்கள எப்படி சமாளிக்கறது என்பது தான் இப்ப அம்மணிக்கு கேள்வி. சம்பாதிச்சதை எல்லாம் எடுத்துக்கோ என்னை விட்டு நான் போய் அவன் கூட குடும்பம் நடத்தறேன்னு சொல்ற நாள் தூரத்துல இல்லை.

டைரக்டர் புளியை கரைத்தார். ஸ்ரீராஜும் நகம் கடித்தான்.

என்ன செய்ய போறீங்க? டைரக்டர் இறுதியாக கேட்டார்.

வேடிக்கை பாருங்க…

அவன் பதிலில் ஒரு மர்மம் ஒளிந்திருந்தது.

அந்த மர்மம் மறுநாள் காலை பேப்பரில் வெட்ட வெளிச்சமாகி விட்டது.

பிரீபல நடிகை ஸ்வப்ரப்ரியாவை கழ்பழிக்க முயன்ற வாலிபர் கைது என்கிற எட்டு கால பத்திரிகை செய்தி ஸ்வப்னப்ரியாவையே ஒரு
உலுக்கு உலுக்கி விட்டது.

ஸ்ரீராஜ் பொங்கிவிட்டான் என்பதும் புரிந்தது. தனிமையில் அவளால் அழத்தான் முடிந்தது. முதல்தடவையாக அழகாக அதே சமயம் பெண்ணாக பிறந்து விட்டது எவ்வளவு பெரிய தவறு அது எவ்வளவு பெரிய பாவம் என்று எண்ணியவள் குலுங்கி குலுங்கி அழுதாள்.

பாவம் அமுதவன்

பாசங்காய் ஒரு முறை கூட தன் மேலான மயக்கத்தை கூட கம்பீரமாய் வெளிப்படுத்தினானே…

நினைத்து நினைத்து அழுதவளுக்கு அடுத்தக்கட்ட அதிர்ச்சி தகவலும் வந்து சேர்ந்தது.

அமுதவன் அவமானம் தாங்காமல் தற்கொலையும் செய்து கொண்டு விட்டான் என்கிற அந்த செய்தி அவளுக்கு மயக்கத்தையே வரவழைத்து
விட்டது. சில நாட்களுக்கு பிறகு ஷூட்டிங் ஸ்பாட்

கதாநாயகன் ஸ்ரீராஜின் காதலியாக ஸ்பரியா… இடம் கொடைக்கானலின் தற்கொலை பள்ளத்தாக்கு இருவரும் காதலில் தோல்வியுற்று பள்ளத்தாக்கில் குதித்து தற்கொலை செய்து கொள்வது போல காட்சி.

இதில் கதாநாயகன் தெய்வாதீனமாக தப்பி விடுவான். புத்தி பேதலித்துவிடும். புதிய கதாநாயகி வந்து அவனது பேதலித்த புத்தியை
குணப்படுத்தி அவன் காதலின் ரணத்துக்கு அவளே மருந்தாவள் என்கிற வழக்கமான காதல் கதைதான்.

டைரக்டர் கேமரா கோணம் பார்த்து விட்டு வந்தார்.ஸ்ரீராஜுக்கும் ஸ்பரியாவுக்கும் டூப்புகள் காத்திருந்தனர். ஸ்ரீராஜையும், ஸ்பரியாவையும்
விளிம்பில் நிறுத்தி குளோஸ் அப் எடுத்து கொண்டு அவர்களை அனுப்பி விட்டு டூப்பை வைத்து ஷூட்டிங்கை தொடருவதாக பிளான்.

பள்ளத்தாக்கை மேக கூட்டம் மூடியிருந்தது.

ஷூட்டிங்கை பார்க்க கூட்டமும் சேர்ந்திருந்தது. ஷாட் போகலாமா? என்று டைரக்டர் கேட்க, ஸ்ரீராஜ் எழுந்து நின்றான். ஸ்பரியாவும்
தயாரானாள்.

இருவரும் ஒரு பாறை மேல் ஏறி நின்றனர்.

சோகமாக முகத்தை வெச்சுகிட்டு கண்ணீரோட குதிக்கற மாதிரி பாவ்லா பண்ணா போதும் டைரக்டர் மைக்கில் கூறினார். பின் கேமராமேனை பார்த்தார்.

ரெடி ஸ்டார்ட் கேமரா… ஆக்ஷன் என்ற அவர் குரலை தொடர்ந்து இருவர் முகத்திலும் பாவனை.

ஸ்வப்னப்ரியா கண்ணீஙராடு அப்படியே ஸ்ரீராஜ்ஜை இழுத்து அணைத்தாள். அவனிடம் அதிர்ச்சி.

ஏய் என்ன பண்றே… இது ஷாட்ல கிடையாது. என்று அலறினான் அவன்.

உனக்கு இனி வாழ்க்கையும் கிடையாது. என்றவள் அப்படியே அவனை கட்டி கொண்டு பள்ளத்தில் குதிக்க தொடங்கினாள்.

அவள் வரையில் பள்ளத்தாக்கை நிரப்பி கொண்டு நிற்கும் மேக பொதிகளுக்கு நடுவே அமுதவன் அவளுக்காக இரு கரங்களை நீட்டி கொண்டு காத்திருப்பது போல் தோன்றியது.

ஆனால் ஷூட்டிங் யூனிட்டோ உறைந்து போயிருந்தது.

– செப்டம்பர் 2012

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *