வசீகரா

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: November 5, 2017
பார்வையிட்டோர்: 15,505 
 
 

அன்னைக்கு ஒரு பின்னேர டைம் கேடீவில வசீகரா படம் போட்டிருந்தாங்க , வெளியில லைட்டா மழை…. டீவில கோவில் ல சினேகா விஜய் ய பாத்து என்னைத்தவிர இன்னொரு பொண்ண பாத்தா கொன்னுடுவன் என்டு மிரட்டி காதல் சொல்லுற சீன் ,

அது 2012 ம் ஆண்டு , ஸ்மாட் போன் பரவலா யார் கையிலையும் வந்திராத காலம் …. sony ericsson போன் ஒன்னு வச்சிருந்தன் … இனிமையான நினைவுகளோடு A Beginning………

“புயலாய் வந்தாய்…. இடியாய் வந்தாய் கையையோ….. “ மேசையில சாஜ்ல இருந்த போன் றிங் பண்ணுது , எடுத்து

ஹலோ ……. இது நான்

ஹலோ நீங்க யார் பேசுறிங்க கொஞ்ச நேரத்துக்கு முதல் கோல் பண்ணி இருந்திங்க….

இல்லயே …… கோல் எதுவும் பண்ணலையே நான் …

நீங்க இல்லாம உங்க போனே தானா கால் பண்ணிச்சா மூஞ்சியபாரு …..

யார்டா இது சும்மா இருந்தவன் கிட்ட போன் பண்ணி இப்பிடி கதைக்குது ….. எனக்குள்

சாரி றோங் நம்பர் வையுங்க, மாறி எடுபட்டிருக்கும் போல …

இனி கோல் பண்ற வேல வைக்காதீங்க .. தான் கோல் பண்ணினன் என்டு சொல்லுறதுக்கே தைரியம் இல்ல இதில வந்துட்டார் .. அதுவா பண்ணிச்சாம் …

சட்டென்டு வைச்சிட்டாள் … சைக் என்னடா இதுனு திரும்ப டீவி பக்கம் திரும்பினன் … விஜய் ஊருக்கு போறதுக்கு ரெடி பண்ற சீன் … ஒரு சிறிய இடைவேலைக்கு பிறகுனு போட …..

அவளவு நேரமா அம்மா கூட சம்போஷா குழைச்சுட்டு இருந்த தங்கச்சி எனக்கும் இரண்டு பிடி எடுத்துட்டு டீவி பக்கம் வந்தாள் ,

கஜன் உனக்கு ஏதும் கோல் வந்தா ஆன்சர் பண்ணாத நான் தான் என் பிரண்ட்க்கு கோல் பண்ணினன், உன் போனில ஆனா அவ ஆன்சர் பண்ணல ,

யேய் அது நீயாடி பண்ணின வேல இந்த கிழி கிழிக்கிறாள் ,

கோல் பண்ணாளா நான் என்டு சொன்னியா அவளுக்கு …

இல்லடி எனக்கு எப்பிடி தெரியும் நீ என்டு…

சரி இனி வந்தா ஆன்சர் பண்ணாத சரியா

சரி ஓகேடி நா இனி பண்ணவே மாட்டட்டடன்…….

என்னடா இழுக்கிறா அவ ஒரு மாதிரி ஸ்போட்டஸ் சம்பியன் வேற அடி தான் வாங்க போறா …..

ஹே ஹே நம்ம லெவலுக்கு நா எல்லாம் அவள போயி….. போ ….போ…. வீட்டக்கூட்டு வீட்டக்கூட்டு ……

மழை கொஞ்சம் விட்டிருந்திச்சு சைக்கிளை எடுத்துக்கொண்டு நல்லூரடிக்கு போனன் , கடைசியா கோல் வந்த நம்பருங்கு கோல் பண்ணிணன் மறுபடியும் அந்த ஹலோ இப்ப கொஞ்சம் கோவமா இருந்திச்சு …… கொஞ்சமா ரொம்பவே…. கோவமா…….

ஹப்பி பேர்தடே டூ யூ…… நா இந்த பக்கம்

எனக்கு இன்னைக்கு பிறந்தநாள் இல்லயே….

அந்தப்பக்கம் அவ

அப்பிடியா அப்ப எப்ப உங்க பிறந்தநாள்??

அத தெரிஞ்சு என்ன பண்ண போறிங்க….

றியோல்ஒரு மெகா ஸ்பெசல் வாங்கி தர மாட்டிங்களா…. என்ன ??

ஊரு பேரு தெரியாதவங்களுக்கு எல்லாம் வாங்கி தாறதில்லங்க …..

பறவால்ல தெரிஞ்சுகிட்டே வாங்கி தாங்க….

கொண்ணுடுவன், பாத்துக்குங்க….

மை காட் …. என்னய கொண்டுட்டு நீங்க என்னங்க பண்ண போறிங்க …..

நா என்ன பண்ணனும்னு எதிர்பாக்கிறீங்க …

ஒரு தாஜ்மகால் ஆச்சும் கட்டுவீங்களோனு நினைச்சன்……

ஹா ஹா …..

ஏங்க சிரிச்சிங்களா…….

இல்ல அழுதனான் உங்க கத கேட்டு…

இப்பிடி தான் உங்க ஊரில அழுவாங்களா….

யோவ் ….. என்னயா வேணும் …. உன் அட்ரெஸ் சொல்லுயா தேடி வந்தாச்சும் அடிச்சுடுறன் …..

மை நேம் இஸ் கந்தன் , சன் ஒப் சிவபெருமான் , நல்லூர் உள்வீதி, யாழ்ப்பாணம் ,

நா கெட்ட வார்த்த பேசி பாத்திருக்கீங்க , பாத்துடாதீங்க ….

ஏங்க திட்டுறிங்க, என்னைப் பாக்கல அதான் இப்பிடி பாத்தீங்க என்டு வைங்களேன் ….

அப்பிடியே இவற்ற அழகில மயங்கிடுவமா…..

பின்ன….. நா கண்ணடிச்சாலே மயங்கிடுவீங்க

அப்பவும் மயங்கல என்டா ….

கட்டால அடிச்சுடுவன் , கண்டிப்பா மயங்கிடுவிங்க ….

யோவ் , இந்த பச்சப்புள்ள செத்திடும் யா…

பறவாலங்க , நா உங்கள மாதிரி இல்லங்க நீங்க செத்தா நா ஒரு குட்டி தாஜ்மஹால் ஆச்சும் கட்டுவன்ங்க …. அப்றம் நீங்க பேசுறது கூட என் வைப் பேசுற போலையே இருக்குங்க….

ஆஹா … அப்பிடியா… உங்க வைப் பேரென்ன…

அது நீங்க சொன்னா தான் தெரியும்

கொல விழும் ………

என்னை கல்யாணம் பண்ணிக்கப்போற பொண்ணு ரொம்ப குடுத்து வச்சவ தெரியுமா …

அப்பிடியா எனக்கு தெரியாதே , ஏன் அப்பிடி

ஏன்னா எல்லா பொண்ணுங்களும் கல்யாணம் ஆகி இல்லத்தரிசியா தானே இன்னொரு வீட்ட போவாங்க , என்னோட வைப் இளவரசியா என் வீட்ட வருவாங்க

ப்பா …. கை கால் எல்லாம் அரிக்குது….

இது தாங்க கிழமைக்கு ஒருக்கா ஆச்சும் குளிக்கனும் என்டுறது …

த்த்த்தூ தூ தூ …….

சரி விடுங்க….. அப்பறம் சாப்டிங்களா கொண்டிங்களா … லவ் மேரேஞ் ஆ …. அரேஞ் மாரேஞ் ஆ….

ஹே ஹே என்ன இதெல்லாம் ……

இல்லங்க சும்மா பேசிட்டு இருக்கலாம் என்டு……

அச்சோ….. அம்மா கூப்பிடுறாங்க நா போகனும் வைக்கிறன் வைக்கிறன் ……

ச்சா வைச்சுட்டாளே …… ரொம்ப அழகா கதைக்குறாள் ஆனா பேர் கேக்காம விட்டுட்டனே …… நல்லூர் பின் வீதிக்கு போய் அண்ணை இரண்டு வெட்டு வடை தாங்க…. கட்டிட்டு வீட்ட போனன்…. திரும்ப எப்ப கூப்பிடுவா கோல் பண்ணினா ஆன்சர் பண்ணுவாளா அந்த முகம் தெரியாத அழகி ….

வீட்டபோய் சேரவும் மெசேஞ் வருது ….. கீங் கீங்……. நீங்க யாரு உங்க பேரென்ன …..

நீங்க சொல்லுங்க உங்க பேரென்ன …..

எதுக்கு என் பேரு உங்களுக்கு

போன்ல சேவ் பண்ண தான் இல்லனா பாட்டிமா குட்டிமா அப்பிடி தான் ஏதும் சேவ் பண்ணனும்

சரி தாங்க உங்க பேரு என்ன

எதுக்கு நம்பர சேவ் பண்ணி வைக்கவா

இல்ல தாத்தா உங்கள நல்லா திட்டுறதுக்கு …

ஓ திட்டெல்லாம் தெரியுமா ….

பின்ன படிச்சது எங்க வேம்படி எல்லா …. சட்டப்படி கதப்பம் தெரியும தானே

அடிப்பாவி .. உங்கள நல்ல பொண்ணுனு தப்பால நினைச்சுட்டு இருந்துட்டன் ….

ரொம்ப ரொம்ப கெட்ட பொண்ணு ஆயிடுவன், இப்ப நீங்க உங்க பேரு சொல்லல என்டா

கஜன் என்டு சொன்னா எப்பிடியும் வேணுகா ன்ட அண்ணா என்டு கண்டு பிடிச்சுடுவாள் , வேற ஏதாவது பேரு சொல்லி தான் கதைக்கனும் .. என்ன பேரு சொல்லலாம் …

ஏன் மெசேஞ் லேட் பிசியா…. இது அவ….

அண்ணைக்கு நான் அறிஞ்சோ அறியாமலோ சொன்ன பேரு தான் ……

சொல்லுறன் …..நா கார்த்திக் …. நீங்க சொல்லுங்க பிளீஸ் …..உங்க நேம் என்ன ……

அவ பேரு என்னங்க ……. உங்களுக்கு தெரியுமா….. தெரிஞ்சா சொல்லுங்களேன் பிளீஸ் …….

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *