அது ஒரு அமைதியான கார்ப்பரேட் அலுவலகம். அங்கே பணிபு¡¢வதே பெருமை என்று எண்ணும் அளவுக்கு பாதுகாப்பு.
காலை வழக்கம்போல் தன் இருக்கையில் வந்தமர்ந்தாள் சித்ரா. கணினியைத் திறந்ததும், “குட் மார்னிங் மிஸ் சித்ரா!” என்ற டீம் லீடர் சுதாகா¢ன் பாப் அப் மெசேஜ் (popup message) அவளை மிகவும் ‾ற்சாகப்படுத்தியது. பதிலுக்கு, “குட் மார்னிங்,” என்று அனுப்பிவிட்டு, நான்காவது வா¢சையிலிருந்த அவனைப் பார்த்து கையசைத்துப் புன்னகைத்தாள்.
அவனும் அதற்கே காத்துக்கொண்டிருந்தவன்போல ஒரு காதல் பார்வையால் தாக்கி கைசைத்துப் புன்னகைத்தான்.
அவள் மீண்டும் அமர்ந்து அவன் இவ்வளவு சீக்கிரம் வந்ததை வியந்து காரணம் கேட்க, அவன் அதைப் பிடித்துக்கொண்டு சீக்கிரமாய் வந்த அரைமணிநேரத்தையும் கழித்தான். இனிப்பு திகட்டும் பேச்சு.
அவளும் அவளது தோழி வித்யாவும் அங்கு சேர்ந்து ஒரு வாரம்தான் ஆகியிருந்தது. அதற்குள் காதல் வெள்ளத்தில் மிதந்ததால் ஒன்றும் பு¡¢யவில்லை சித்ராவிற்கு. புதிய ‾லகம். புதிய மனிதர்கள்.
அவனால் எல்லாமே அழகாகத் தொ¢ந்தது அவளுக்கு. திரைப்படங்களில் வருவதுபோல் அவன் மலர்ச்செண்டுடன் வந்து நின்று தன் காதலைத் தொ¢விப்பதுபோல் கற்பனை செய்வாள். அதோடுநின்றுவிடவில்லை. திருமணத்தில் ஆரம்பித்து குழந்தைகள், ஆயுள் காப்பீடு என்று எதையுமே விட்டுவைக்கவில்லை அவள் காதல் மனம்.
திடீரென்று வித்யா அவளைத் தட்டி, “எப்ப ஆரம்பிக்கப்போற? ‾ன்னால டெய்லி லேட் ஆகுது.”என்றாள்.
சுயநினைவு வந்த சித்ரா, “ஏ சா¡¢ சா¡¢. இப்பவே ஆரம்பிக்கிறேன்.” என்றபடி பணிகளைத் தொடங்கினாள்.
இரண்டு வாரங்கள் அழகாய்க் கழிந்தன. தூரத்தில் இருக்கையில் மட்டுமே அந்தக் காதல் பார்வை கண்களைக் கட்டியிழுத்தது. அவள் அவன் அருகில் வந்து பேசும்போதெல்லாம் திகைப்பும் பெருமூச்சுமாக ‾ணர்ச்சிவசப்படுவதையே வழக்கமாகக் கொண்டிருந்தான் சுதாகர்.
அவன் காதலைத் தொ¢விக்கும் நாளை எண்ணி காத்துக்கொண்டிருந்த சித்ரா, வித்யாவிடம் விஷயத்தைச் சொல்லி, “ரொம்ப டென்ஷன் ஆகுறான். ஐ லவ் யூ-ன்னு சொல்றது ‾ண்மையிலேயேரொம்ப கஷ்டம்போல” என்றாள்.
வித்யாவோ, “பயப்படுற பசங்களையும் அழுவுற பசங்களையும் மட்டும் நம்பாத” என்றாள்.
சித்ரா பதிலுக்கு, “அவன் எங்கிட்டமட்டுந்தான் இப்படி நடந்துக்கிறான். லவ்-ன்னுதான் நினைக்கிறேன்.” என்றாள்.
வித்யாவோ, “கொஞ்சநாள் பாக்கலாம். இப்பதானே புதுசா சேந்திருக்கோம்” என்றாள்.
சித்ராவுக்கு ஒருமாதி¡¢ இருந்தது. சற்று எச்சா¢க்கையாக இருக்கவேண்டும் என்று தோன்றினாலும் அவனது கண்கள் ‾ண்மையான காதலை வெளிப்படுத்தவே கவலையைவிட்டு கனவிலாழ்ந்தாள்.
அன்று மதியம் அவனை கேன்டீனுக்கு ‾ணவருந்த அழைக்க நினைத்தாள் சித்ரா. வித்யாவிடம் ஒப்புதல் பெற்று செய்தியனுப்பினாள். பதில் வரவில்லை. எழுந்து பார்த்தாள். அவன் அங்கு இல்லை. நாளை பார்த்துக்கொள்ளலாம் என்று முடிவு செய்து இருவரும் கேன்டீனுக்குக் கிளம்பினர். வழியில் ¡¢சப்ஷனில் அவன் கிளம்புவதைப் பார்த்த சித்ரா, “ஏ! அவர் அங்க இருக்கார்” என்றபடி சற்று வேகமாக நடந்தாள். அவளைத் தனியாக விடும்பொருட்டு வித்யா மெதுவாக வந்தாள்.
அவன் சிறிதுதூரம் சென்றிருக்கவே அவனை அழைக்காது, “சுதாகர் திரும்ப வருவாரா?” என்று
வரவேற்பாளா¢டம் கேட்டாள் சித்ரா.
இவர்களது காதல் பார்வைகளைப் பலமுறை பார்த்திருந்த அவர், “இல்ல மேடம். வை·போட
அப்பாவுக்கு சீ¡¢யஸ்னு ஊருக்கு கிளம்புறார். மன்டே வருவேன்னு சொல்லீருக்கார்” என்று அவனைப்
போட்டுக்கொடுத்தார்.
சு¡£ல் என்று இருந்தது அவளுக்கு. விவரம் அறியாமல் அருகில் வந்த வித்யா, “என்ன கிளம்பியாச்சா? சா¢ வா. நாம போலாம்.” என்று சித்ராவை அழைத்துச் சென்றாள்.
வலி தாங்கமுடியவில்லை. பசியும் அதிர்ச்சியும் இதயத்துடிப்பை அதிகமாக்க, கேன்டீனுக்குள் நுழைந்ததும் மயங்கி வித்யாவைப் பற்றியவாறு சா¢ந்தாள் சித்ரா. அவளைக் கஷ்டப்பட்டு ஏந்திய வித்யா, ஒரு நாற்காலியில் அமரச்செய்து, டேபிளில் சாய்ந்து படுக்கவைத்துவிட்டு கொஞ்சம் தண்ணீரை எடுத்து தெளித்தாள்.
சித்ராவிற்கு பசிமயக்கமும் மனமயக்கமும் ஒருசேரத் தெளிந்தன. விஷயத்தைச் சொன்னாள்.
அவளை ஆறுதல்படுத்திய வித்யா, இனி என்ன செய்யவேண்டும் என்பதையும் கூறினாள். “சும்மாவா சொன்னாங்க, ஆழம் தொ¢யாம காலை விடாதேன்னு,” என்று தனக்குள் சொல்லிக்கொண்டாள் சித்ரா.
அவள் ஒருமுறைகூட அவனிடம் அவனது குடும்பத்தைப்பற்றியோ தங்குமிடத்தைப்பற்றியோ கேட்டதில்லை. அதில் ஒன்றைக் கேட்டிருந்தால்கூட அவன் நேரடியாக பொய் சொல்லியிருக்கமுடியாது என்று தோன்றியது அவளுக்கு.
திங்கட்கிழமை அலுவலகம் வந்தான் சுதாகர். அவன் கண்களின் காதல் பார்வைக்கு சாதாரண பார்வையை ‾திர்த்தாள் சித்ரா. ஒரு வார்த்தைகூட தேவையில்லாமல் பேசவில்லை. வேலையை முடித்து சீக்கிரம் கிளம்பினாள். அவனுக்கு ஒன்றும் பு¡¢யவில்லை.
அடுத்தநாள் காலை அவள் அருகே வந்து, “என்ன சித்ரா, ரொம்ப பிசியா? கண்டுக்கவே மாட்டேங்குறீங்க?” என்றான்.
அவள், “ஹலோ! ம். ரொம்ப பிசி! கேக்க மறந்துட்டேன். ‾ங்க மாமனாருக்கு எப்படி இருக்கு?” என்று சாதாரணமாகக் கேட்டாள்.
அவன் ஒரு நொடி அதிர்ந்தான். பிறகு, “ம்… அவர் நல்லாருக்கார். தேங்க்ஸ்! ந்…நான் கிளம்புறேன்.” என்று கூறியபடி அங்கிருந்து வேகமாகச் சென்றான். அவனுக்கு மிகவும் வெட்கமாக இருந்தது. இவ்வளவு சீக்கிரம் தன் முகத்திரை கிழியும் என்று அவன் எண்ணவில்லை. அதன்பிறகு அவளை அவன் ஏறெடுத்துக்கூட பார்க்கவில்லை.
“நல்லவேளை! இப்பவாவது ‾ண்மை தொ¢ஞ்சது.” என்று வித்யாவிடம் முணுமுணுத்துவிட்டு எந்த
சலனமுமின்றி வேலையைத் தொடர்ந்தாள். அவளுக்கு ‾லகம் தெளிவாகத் தொ¢ந்தது.