(1981ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அவன் மெக்கன்சி சாலையக் கடந்து சிலிகி பேருந்து நிலையத்தை அடைய முயலும்போது அவள் மீண்டும் எதிர் பட்டாள். இச்சந்திப்பை நிச்சயமாக அவன் எதிர்பார்க்க வில்லைதான்.
ஒரு புன்னகையை மட்டும் இழையவிட்டு அவனைக் கடந்து அவன்நாலடிகள்கூட எடுத்துவைத் திருக்கமாட்டான் ”நீ இன்னுமா போகலை. அரைமணி நேரத்துக்கும் மேலாகுதே…” அவன் தயங்கியபடி கேட்டான்.
அவனுக்குத் தன் பின்புறத்தைக் காட்டிக்கொண்டு சற்றே தன் முகத்தை மட்டும் திருப்பி அவனைப் ‘பார்க்காமல்’ எங்கோ பார்ப்பவள் போல் பாவனை செய்து கொண்டு…
‘’இங்கே நின்னு பேசவேண்டாம். பக்கத்திலே ஆளு இருக்கு…” அவனுக்கு மட்டும் கேட்கக்கூடிய ரகசி ய குரலில் அவன் கிசுகிசுத்தாள்.
அவன் குரலில் தொளித்தது மருட்சிய? மகிழ்ச்சியா? அவனால் பகுத்தறிய முடியவில்லை. அந்த நிலையிலும் அவன் இல்லை அவளுடைய எழிலில் மனத்தைப் பறிகொடுத்துக் கிறங்கிக் கொண்டு நின்று கொண்டிருந்தான்.
‘அப்படியா?…’ என்றபடி அவன் இலேசாகத் தன் தலையைத் திருப்பிப் பரர்த்த போது, கொண்டை நிறைய கனகாம்பரம் மலர் சிரிக்க ஒரு நடுத்தர வயது மாதுவும், அருகில் முதியவர் ஒருவரும் பேசிக்கொண்டு நின்றிருந்தனர்.
“சரி என் பின்னால் வா…” என்று கூறியபடி அவள்- பதிலுரைப்பதற்கும் அவகாசம் அளிக்காமல், அவன் முன்னால் நடந்தான் . அவள் தன் அழகிய விழிகளை ஒருமுறை சுழலவிட்ட பிறகு, அவனைத் தொடர்ந்தாள்.
ரெக்ஸ் சினிமா அரங்கத்தைத் தாண்டி இடது பக்கம் திரும்பி சந்தடியற்ற ஒரு சாலையில் இருவரும் நடந்துகொண் டிருந்தனர்.
“நீங்க எங்கே போறீங்க?…”
“என் கூட சுவை நீர்ப் பருக வருவதில் உனக்குத் தடை ஒன்றுமில்லையே?…”
“நான் வீட்டுக்குப் போகணும்…”
“விரைவில போயிடலாம்.”
‘ஏதோ ஒரு குருட்டு நல்வினைக்காற்று இன்று என்பக்கம் வீசுகிறது. என்னைத் தழுவ ஓடிவரும் வசந்தகாலத் தென்றலை நழுவவிடுவதா? இன்று யார் முகத்தில் விழித்தேன்’ என்று எண்ணிக் கொண்டே அவளருகில் நடந்து கொண்டிருந்தான்.
முகத்தைப் பார்த்து அகத்தை அளவிடுவது இன்றைய அறிவியல் உலகில் அவ்வளவு எளிதல்ல. பண்டைக் காலத் தில் அது இயன்ற ஒன்றாய் இருந்திருக்கலாம். போட்டியும் பொறாமையும் ஏற்றமும் இறக்கமும் இல்லாதிருந்த காலம் அது. அக்கால மக்கள் இயற்கை அளித்ததை உண்டனர்; இன்பமரய் வாழ்ந்தனர்; உள்ளதைக் கொண்டு உவகை அடைந்தனர். அவர்களது மனத்தில் கரவு என்னம் கடு களவும் குடி கொண்டதில்லை. ஆனால் இன்றோ!…
வாழ்க்கையரங்கு போட்டிகள் நிகழும் தளமாகி விட்டது தன் முயற்சியில் வெற்றிபெறுவது “மட்டுமே” மனிதனிக்கு தலையாய குறிக்கோளாகிவிட்டது . அந்த இலக்கை நோக்கியே மனிதன் இயந்திர வேகத்தில் விரைந்து கொண்டிருக்கிறான். காரிய வெற்றிக்காக மனிதன் “எந்த வழியையும்” பின்பற்ற ஆயத்தமாக இருக்கிறான். இயந்திர மயமான வாழ்க்கை!
எதிலுமே வெளிப்படை இல்லாத கரவு மனப்பான்மை! உதட்டில் உறவு; உள்ளத்தில் பகை.
யாரை ஏற்பது, யாரை விடுப்பது என்று நல்லோர்- மயங்கும் நிலை.
எச்சரிக்கை யாகப் பழகவேண்டிய “மர்ம மனிதர்கள்” நிறைந்த உலகம்.
இத்தகைய நிலை எல்லாத் துறைகளிலும் உள்ளது. இப்படிப் பேரலியும் செயற்கையும் மலிந்துவிட்ட மனிதக் கூட்டத்தினரின் முகங்களைக் கொண்டு எவ்வாறு முடி- வெடுக்க இயலும்?
“மன்னிக்கணும்!…”
படித்துக் கொண்டிருந்த நூலை மூடிவிட்டு அவன் தலை நிமிர்ந்த போது, அவள் நின்று கொண்டிருந்தாள்.
வழியில் யரரோ நிறுத்திவிட்டுப் போயிருந்த காரில் சாய்ந்து கொண்டு, புதிதாக வாங்கிய புத்தகத்தைப் புரட்டியபடி தன் நண்பனுக்காகக் காத்துக் கொண்டிருந்த அவன், தன் எதிரே ஒரு பெண் வந்து நிறபாள் என்று எதிர் பார்க்கவில்லை தான்.
“வந்து… வந்து!..தப்பா நெனைச்சிக்காதீங்க. இங்க பத்தர் கடைங்க உள்ள தெரு எங்க இருக்கு?…” அவள் கேட்டாள் .
“பத்தர் கடைங்க பக்கத்துத் தெருவில இருக்குதுங்க… இல்லை… இல்லை! முன்பு இருந்தது உண்மைதான். இப்ப இல்லே. இந்த நகர்மயத் திட்டம் உங்களுக்குத் தெரியும்ல. அதனால பழைய கட்டிடங்களை எல்லாம் அழிச்சிட்டாங்க. நீங்க வர்ற வழியிலகூட பார்த்திருக்கலாமே?…” ஏதோ உளறி கொட்டினான்.
“வேற கடைகளே இல்லையா?…” அவள் குரலில் ஏமாற்றம் தொனித்தது.
“அதோ அங்க சிராங்கன் ரோடு தெரியுதில்லே, அங்க நிறைய நகைக் கடைங்க இருக்கு. அங்ககூட பத்தருங்சு இருப்பாங்களே…”
“அப்படியா? உங்க உதவிக்கு நன்றிங்க..” என்று கூறி விட்டு அவன் சிராங்கன் சாலையை நோக்கி நடக்க ஆரம்பித்து விட்டாள்.
அவள் நடையழகை ரசித்தவண்ணமே அவனும் அவளைத் தொடர்ந்தாள். அவள் சட்டென நின்றாள். அவள் முகம் கருத்துவிட்டது.
“ஏன் என் பின்னால வர்றீங்க?…”
“என்னங்க இது அநியாமா இருக்கு. நான் என் நண்பனுக்காகக் காத்துக் கொண்டிருந்தேன், வரலை, வீட்டுக்குப் புறப்பட்டுட்டேன். நானும் இந்த வழியாத்தான் போகணும்…”
“நீங்க எம் பின்னால வர்றதை யாராவது பாத்தா தப்பா நெனைக்க மாட்டாங்களா?…” அவள் குரலில் பரி தாபம் ஒலித்தது. என் பின்னால் தயவு செய்து வரரதீர்கள் என்று இறைஞ்சுவது போலிருந்தது .
“சரி நீ போ. நான் பிறகு போய்க் கொள்வேன்…” அவன் திரும்பி நடந்துவிட்டான். அவன் மறுபட்டியும் அவளைப் பார்க்கத் திரும்பிய போது அவளைக் காணவில்லை. சிராங்கன் ரோட்டின் தமிழர்க் கூட்டத்தில் அவளும் கலந் திருக்க வேண்டும் .
அந்நேரத்தில் அவன் நண்பனும் வந்துவிடவே, ஏறக் குறைய முக்கால் மணி நேரத்தை அரட்டையில் கோட்டை விட்டு வீட்டுக்குப் போகும் வழியில் அவன் மீண்டும் எதிர் பட்டாள்.
“அமைதி நிலையம்” மெய்யாகவே அரவமின்றி ஓய்ந் திருந்தது அப்பேரங்காடியின் எல்லாக் கடைகளுமே ஏறக் குறைய சாத்தப்படுவிட்டன. இரண்டாவது மாடியில் இருந்த “மில்க் கபே” மட்டும் உயிர்கொண்டு இயங்கிக் கொண்டிருந்தது.
அவனும் அவரும் அருகருகே அமர்ந்திருந்தனர். அவனுக்கெதிரே கோப்பையில் சூடான தேநீரும் தனித்தனியாகப் பாலும் சீனியும் வைக்கப்பட்டிருந்தன. அவளுக்கு “ஸ்ட்ராபர்ரி பால்” சொல்லியிருந்தான். அவளிடம் பக்குவமாகப் பேசி, அவளைத் தனியே ஒதுக்கிக்கொண்டு வந்து விட்ட பெருமையில் அவன் திளைத்திருந்தான்.
தேநீரில் பாலையும் சீனியையும் விட்டுக் கலக்கியவாறே அவன் கேட்டான், “உன் பேரு என்னன்னு தெரிஞ்சிக்கலாமா?…”
“வடிவுக்கரசி. எல்லாரும் வடிவுன்னு அழைப்பாங்க”
“நானும் அப்படியே அழைக்கலாமா?…”
பதிலில்லை. அவள் இதழ்களில் ஒரு மென்னகை கோல மிட்டது. அவள் மஞ்சள் நிற சேலை உடுத்தி இருந்தாள். என்றாலும் அவள் வெளிர் உடலில் அச்சேலை ஒட்டிக் கொண் டிருப்பதாகத் தெரியவில்லை. அவள் ஒற்றைக்கல் மூக்குத்தி அந்த அறையின் மங்கிய வெளிச்சத்திலும் ஒளிவீசிப் பிரகாசித்தது.
இருந்தாலும், அவள் முகத்தில் பட்டொளி வீசிப் படர்ந்திருந்த வனப்பிற்கு ஈடுசெய்வதாயில்லை.
“உங்க பேரைச் சொல்லலியே?…”
“எம் பேரு…மோகன்…”
“இந்த மாதிரி இடத்குக்கெல்லாம் அடிக்கடி “இது மாதிரி” வருவீங்களோ…”
“எப்போதாவது வருவேன்..”
திடீரென்று அங்கு அமைதி நிலவியது. ஏதாவது வாய் தவறி உளறிக் கொட்டிவிட்டேனோ என்று அவன் மனம் துணுக்குற்றது.
“நீங்க என்னைப் பத்தி என்ன நெனைச்சுக்கிட்டிருக்கீங்க?…” அவள்தான் மௌனத்தைக் கலைத்தாள். “ஏன் அப்படிக் கேட்கிறே?…”
“தன்னந்தனியா வந்து உங்கிட்ட ஒரு சிறு உதவி கேட்டதுனால, அளவுக்கு மீறி உரிமை எடுத்துகிட்டு இப்படி நடந்துக்கிறீங்களே, அதனால கேட்கிறேன்…”
அவளுக்கு என்ன மறுமொழி கூறுவதென்று அவனுக்குத் தெரியவில்லை. தர்மச்சங்கடமாகிவியிட்டது.
“நான் வரம்பு மீறி நடக்கலையே? வலுக்கட்டாயமா நான் உன்னை அழைச்சிகிட்டு வரலங்கிறதை நீ மறுக்க முடியாது…” அவள் முகத்தைப் பார்த்துக் கொண்டே கூறினான். அவளும் குறுகுறுவென்று அவனையேதான் பார்த்துக் கொண்டிருந்தான்.
இரண்டு மூன்று பெண்களோடு வெளியே செல்லும் வாய்ப்பு ஏற்பட்டதனால், பூங்கரக்களில் அப்பெண்களோடு சிரித்துப் பேசிப் பழகிய அனுபவம் அவனுக்குண்டு. சில “குறும்புத்தனங்கள்” செய்து மகிழ்ந்ததோடு சரி. எல்லை கடந்த நிலையை வன் அடைந்ததில்லை; அடைய முயற்சி எடுத்ததுமில்லை. இப்போதுதானே தேசிய சேவையையே முடித்திருக்கிறான். ஆள் என்னவோ பார்ப்பதற்கு இரண்டு பிள்ளைகளுக்குத் தகப்பனைப் போல வாட்ட சாட்டமாகத் தான் இருந்தான். ஏதோ ஓர் உந்துதலில் தான் வந்து விட்டது தவறாகிவிடுமோ என்று அவன் கணக்குப் போடத் தொடங்கினான்.
இருவரும் அப்பேரங்காடி நிலையத்தை விட்டு வெளி யேறும்போது இரவு மணி ஒன்பது ஞாயிற்றுத்கிழமையான படியால் சாலையில் மனித நடமாட்டம் குறைந்திருந்தது .
கண்டிப்பானவளாய் இருப்பாள் போல் தெரிகிறது அவளை வழியனுப்பிவிடுவதுதான் மரியாதை என்று ஏற் கனவே மோகன் முடிவெடுத்து வைத்கிருந்தான். இருந் தாலும் வேண்டுமென்றே அவள் வாயைக் கிளறினான்.
“வடிவு…”
“ம்…ம்…”
“பக்கத்தில் ஒரு பூங்கா இருக்கு. போய்க் கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருக்கலாமா?” அவன் தயங்கியபடி தான் கேட்டான்.
“என்ன பேசப் போறீங்க? இவ்வளவு நேரம் பேசியது போதாதா?…”
“அதெல்லாம் முடியாது. நேரமாகிவிட்டது. நான் வீடு திரும்ப வேண்டும் அம்மா திட்டுவார்” என்ற பதிலைத்தான் அவன் எதிர்பார்த்தான். அவள் மறுமொழியில் ஒரு தொய்வு காணப்படுகிறதே! “சும்மா அப்போது தோணு வதைப் பேசிக்கிட்டிருக்கலாம் வா. எழுதி வச்சிகிட்டாப் பேசப் போறோம்?…” அவன் இழுத்தான். அவன் மறுமொழி கூறவில்லை. அந்த நிலையச் சாதகமாகவே மோகன் பயன் படுத்திக் கொள்ள தீர்மானித்துவிட்டான்.
தன்னுடைய திறமையைத் தானே பாரரட்டிக் கொண் டான் மோகன். மாலை ஆறு மணிக்கும் இரவு ஒன்பது மணிக்கும் இடையில் நடந்து முடிந்துவிட்ட சம்பவங்களை அவனால் நம்ப முடியவில்லை அவன் திக்கு முக்காடிப் போனான் . சில மணி நேரத்திலேயே ஒரு பெண்ணைத் தன் வயப்படுத்திவிட்ட பெருமையில் தோளுயர்த்தி நடந்து கொண்டிருந்தான்
பூங்காவில் தனிமையில் ஓரிடத்தில் அமர்ந்தனர். இருவ ராலும் எதுவும் பேச முடியவில்லை அவர்கள் மட்டுமின்றி, அங்கு விரிந்து கிடந்த பசும் புல் தரையில் தங்களை மறந்த நிலையில் சரிந்து கிடந்த பல இணைகளும் எதுவும் பேசுவ தாகத் தெரியவில்லை பேச்சுத் தேவையற்ற ஓருலகம் அங்கே இயங்கிக் கொண்டிருந்தது
“வடிவு, நீ எவ்வளவு அழகா இருக்கிற தெரியுமா?…” அவள் தோளைப் பற்றினான்
“கையை எடுங்க. இதெல்லாம் எனக்குப் பிடிக்காது?” அவன் கரத்தைத் தட்டிவிட்டாள் . அவன் குரல் மெதுவாக ஒலித்தாலும் அதில் உறுதி இருந்தது.
“சும்மா பிகு பண்ணாதே… “ மீண்டும் அவளைப் பற்றினான்.
“இப்படி எல்லாம் நடந்துகிட்டீங்கன்னா நான் எழுந்து போயிடுவேன்…” அவள் எழுந்துவிட்டாள்.
இந்தத் தடவை அமைதியாக இருந்துவிட வேண்டிதுதான். அடுத்தத் தடவை வாய்ப்பை ஏற்படுத்திக் கொண்டு, வட்டியும் முதலுமாகப் பெற்றுக் கொள்ளலாம்.
“சரி சரி உக்காரு. இங்கெல்லாம் இப்படி நாகரிம் இல் லாம நடந்துக்கக் கூடாது. அவள் கரத்தைப் பற்றி உட்கார வைத்தான்.
பிறகு இருவரும் பேசிக் கொண்டிருந்தனர். அண்மை யில் பார்த்த சினிமா, கலந்து கொண்ட ஒரு விருந்து, விரும்பி வாங்கிய ஒரு பொருள்…இப்படி எவையோ சம்பந்தமில்லாமல் அவர்கள் உரையாடலில் குறுக்கிட்டு நேரத்தை விழுங்கிக் கொண்டிருந்தன.
இரவு மணி பத்தரையை நெருங்கும் போது அவர்கள் பூங்காவை விட்டு வெளியேறினர்.
“எனக்குத் தூக்கம் தூக்கமா வருது…” கொட்டாவி விட்ட வண்ணம் அவள் கூறினாள். அதைக்கேட்டு மோகன் சும்மா இருப்பானா?
“அப்படீன்னா, ஒரு “ரூம் எடுத்துத் தங்குவோமா?…” அவன் வேடிக்கையாகத்தான் கேட்டான்.
“நீங்களும் கூடதங்குவீங்களே! அதில்ல தொந்தரவு…” அவள் சாதாரணமரகத்தான் கூறினாள். ஆனால் அதைக் கேட்ட மோகன் திணறிப் போனான்.
இவள் என்ன சொல்கிறான்? இவள் பேசுவதைப் பார்த்தால் இரவிலும் தங்குவாள் போல் தெரிகிறதே. இதுவரை அவள் காட்டிய கண்டிப்புக்கும் இப்போது பேசுவதற்கும் தொடர்பே இல்லையே?
மோகன் அவளை ஏறிட்டு நோக்கினான். அவளும் அர்த்தத்தோடு பார்த்தாள். அந்தப் பார்வை முற்றிதும் புதிய பார்வை. அவனுக்கு வாயடைத்துப் போய் விட்டது.
“மணி பதினொன்றாகப் போகிறது. என் வீடு மார்சிலிங்ல இருக்குது. பஸ்சை விட்டு இறங்கி கம்பத்துப் பக்கம் இரண்டு கிலோ மீட்டர்தூரம் நடக்கணும்…” அவள் முடிக்கவில்லை.
மோகனுக்குத் தலை சுற்றியது. பையில் இரண்டு வெள்ளிகள் மட்டுமே இருப்பது அவனுக்கல்லவா தெரியும். தலைக்கேறியிருந்த பித்தம் கொஞ்சம் கொஞ்சமாக இறங்கத் தொடங்கியது.
– 1981, புதிய அலைகள், முதற் பதிப்பு: மார்ச் 1984, தமிழ்ப் புத்தகாலயம், சென்னை.