பொழைச்சேன், இது எல்லாம் கனவா?

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: October 10, 2020
பார்வையிட்டோர்: 17,556 
 
 

நான் ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்தேன்.என் அப்பா ஒரு துணிக்கடையிலே வேலை செய்து வந்தார்.என் அம்மா ஒரு கையிலே தைக்கும் தையல் மெஷினை வைத்துக் கொண்டு, அக்கம் பக்க த்திலே இருந்த பெண்கணிகளுக்கு ‘ப்ளவுஸ்’’நைட்டி,உள் பாவாடை’ போன்றவற்றை எல்லாம் தைத்துக் கொண்டு கொஞ்சம் பணம் சம்பாதித்து வந்தாள்.
நான் பிறந்து பத்து வருடம் கழித்து எனக்கு ஒரு தம்பிப் பிறந்தான்.

நான் சின்ன வயதிலே இருந்து காலையிலே ஐந்து மணிக்கு எல்லாம் எழுந்து என் வீட்டுக்குப் பக்கத்திலே இருந்த கார்பரேஷன் மைதனாத்தில் பதினைந்து சுற்றுகள் சுற்றி விட்டு,அந்த மைதானத்தில் இருந்த ‘பாரில் நிறைய உடல் பயிற்சிகளை எல்லாம் பண்ணி வந்து என் உடம்பை நல்ல கட்டு மஸ்தாக வைத்துக் கொண்டு வந்தேன்.என் அம்மவிடம் கெஞ்சிக் கூட்டாடி பணம் வாங்கிக் கொண்டு போய்என் வீட்டுக்கு பக்கத்திலே புதிதாகத் திறந்த ஒரு ‘ஜிம்மில்’ சேர்ந்து நிறைய உடல் பயிற்சிகளை எல்லாம் பண்ணி வந்துக் கொண்டு இருந்தேன்.

நான் ‘ப்லஸ் டூ பாஸ்’ பண்ணீனவுடன் SC ST.’கோட்டா’வில் அண்ணா இஞ்சினியா¢ங்க் கல்லூரியில் ஒரு சீட் வாங்கி சேர்ந்தேன்.அன்று இரவு நான் சந்தோஷத்தில் படுத்த எனக்கு, நல்ல தூக்கம் வந்தது.

நான் சிந்தாத்ரிபேட்டையிலே இருக்கும் என் வீட்டில் இருந்து ‘பஸ்’ ஸ்டாண்டுக்கு நடந்து வந்து ‘பஸ்ஸே’ப் பிடித்து கல்லூரிக்குப் போய் வந்துக் கொண்டு இருந்தேன்.வகுப்புகள் ஆரம்பிக்க பத்து நிமிஷம் இருக்கும் போது,ஒரு படகுப் போல இருந்த காரில் இருந்து ரெண்டு போலீஸ் ‘கான்ஸ்டபிள்’கள் வெளியே வந்து காரின் கதவை திறந்த பிறகு,மெல்ல கல்லுரி பையை தோளில் மாட்டிக் கொண்டு ‘ஸ்டைலாக’ இறங்குவாள் மாநில நிதி அமைச்சரின் அருமை மகள் நளினி.

அந்த வருட இறுதியிலே கல்லூரியிலே ‘ஆண் அழகன்’ போட்டியும் ‘பெண் அழகி’ போட்டியும் நடந்தது.மேடையிலே தேர்வு செய்ய இரண்டு கல்லூரி ஆண் ‘ப்ரப்ஸர்களும்,இரண்டு பெண் ‘ப்ரப்ஸர்களும் உட்கார்ந்துக் கொண்டு இருந்தார்கள்.

போட்டி ஆரம்பித்தது.

முதலில் ‘பெண் அழகி’ ஆரம்பித்தவுடன் நிறைய கல்லுரி பெண்கள் அந்த போட்டியில் கலந்துக் கொண்டு வித விதமான உடைகள் எல்லாம் அணிந்துக் கொண்டு தங்கள் அழகை காட்டிக் கொண்டு இருந்து விட்டு மேடையை விட்டு கீழே இறங்கிப் போனார்கள்.அந்தப் போட்டியிலே இது வரை யாரும் அணீயாத ஒரு புது விதமான உடையை அணிந்துக் கொண்டு நளினியும் தன் அழகை பல கோணங்களில் காட்டி விட்டு இறங்கிப் போனாள்.

அடுத்து ‘ஆண்’ அழகன் போட்டி நடந்தது.நிறைய கல்லுரி பையன்கள் கலந்துக் கொண்டு தங்கள் உடல் ‘மஸ்த்தை’ கைகளை மடக்கி, முதுப் புறத்தையும், வயிற்றுப் பாகத்தையும், தோள்களின் ‘புஷ்டி’யையும் எல்லாம் காட்டி விட்டு கிழே இறங்கிப் போனார்கள்.நான் மேடை ஏறீனதும் எல்லா மாணவர்கள் ‘விஸில்’ அடித்தும் மாணவிகள் பலத்த கைத் தட்டல்களும் செய்துக் கொண்டு இருந்தார் கள்.நான் என் ‘உடல் அமைப்பை’ மற்றவர்கள் காட்டினதை விட இன்னும் கொஞ்சம் அதிகமாகவே காட்டி விட்டு கீழே இறங்கினேன்.

போட்டித் தேர்வாளர்கள் கலந்துப் பேசி ‘பெண் அழகியாக’ நளினியையும் ‘ஆண் அழகனாக’ என்னையும் தேர்வு செய்து எங்கள் இருவருக்கும் பரிசு கேடயம் கொடுத்து கௌரவித்தார்கள்.பரிசை வாங்கிக் கொண்டு நான் அப்போது நளினியை இவ்வளவு கிட்டத்திலே பார்த்தேன்.நளினி என்னிடம் ‘ஹாய்’ என்று சொன்னது என் காதிலே எங்கே விழுந்தது.நான் தான் அவள் அழகிலே மூழ்கி இருந்தேனே!!

அவள் என்னைப் பார்த்து “நான் ‘ஹாய்’ன்னு சொல்றேன்.நீஅதுக்கு ‘ஹாய்’ன்னு சொல்லாம, என்னவோ ‘மிட்டாய் கடையை பாத்துக்கிட்டு இருக்கிற குழந்தே போல என்னேயே பாத்துகிட்டு இருக்கியே” என்று கடிந்துக் கொண்ட பிறகு தான் நான் என் சுய நினைவுக்கு வந்து “சாரி நளீனி, ரொம்ப சாரி.நான் சொல்லாதது ரொம்ப தப்பு தான்” என்று மன்னிப்பைக் கேட்டு விட்டு கேடயத்தை எடுத்துக் கொண்டு கிழே இறங்கி வந்தேன்.

அன்றில் இருந்து நளினி என்னோடு கல்லுரி முடிந்ததும் கல்லூரியிலே இருந்த ஒரு ‘பார்க்கில்’ பேசி பழக ஆரம்பித்தாள்.நாளடைவிலே எங்கள் பேச்சு ‘காதலாக மலர’த் தொடங்கியது.எனக்கு சந் தோஷம் தாங்கவில்லை.நான் என்னையே கிள்ளீப் பார்த்துக் கொண்டேன்.எனக்கு ‘சுரீர்’ என்று வலித்தது.

அந்த கல்லுரி பாக்கில் நாங்கள் இருவரும் ஒரு ஆறு மாசம் ‘மனம் விட்டு’ப் பழகி வந்தோம். அப்படி பேசி வந்த போது, நான் என் குடும்ப சூழ் நிலையை அவளுக்கு சொன்னேன். நளினி நான் சொன்னதைப் பற்றி கொஞ்சம் கூட கவலைப்படாமல் என்னுடன் ‘பழகி’ வந்தாள். நான் என் மனசிலே ‘நளினி, தனக்கு இந்த எழை பணக்கார வித்தியாசம் ஒரு ‘ப்ராப்லெம்’ இல்லைன்னு நினைக்கறாப் போல் இருக்கு’என்று நினைத்து மிகவும் சந்தோஷப் பட்டேன்.

நளினி என்னிடம் பேசி விட்டு,கிளம்ப தயாராகும் போது அவள் கல்லூரிக்கு வரும் படகு கார் வந்து நிற்கும். வழக்கம் போல இரண்டு ‘காண்ஸ்டபிள்’ கள் கார் ததவைத் திறந்ததும் எனக்கு ‘பை’ ‘பை’க் காட்டி விட்டு காரில் ஏறிக் கொண்டு போய்க் கொண்டு இருந்தாள் நளினி.

நான் வீட்டுக்கு ‘பஸ்ஸில்’ வந்துக் கொண்டு இருந்த போது டிரைவர் தலைக்கு மேலே இருந்த வானொலிப் பெட்டியிலே இருந்து ‘தேண் கிண்ணம்’ நிகழச்சி ஒலித்துக் கொண்டு இருந்தது.அடுத்து வந்த பாட்டில் “மாளிகையில் அவள் வீடு, மரக் கிளையில் என் கூடு,இதில் நான்,அந்த மான் கூடுவது ஏது……” என்று ‘எம்ஜீயார் ஜெயலலிதாவை நினைத்து வாயை அசைத்து பாடும் போது, டீ.எம் சௌந் திர ராஜன் குரல் ஒலித்துக் கொண்டு இருந்தது.இந்த பாட்டுக்கும் என் காதலுக்கும் எவ்வளவு பொருத்தம்.’அந்தப் படத்தில் ‘எம்ஜீயார் ‘ஜெயலலிதாவை மணந்துக் கொண்டார். என் வாழக்கையிலே எனக்கு நளீனி கிடைப்பாளா’என்று யோஜனைப் பண்ணிக் கொண்டு இருக்கும் போது ‘கண்டக்டர்’ நான் இறங்க வேண்டிய இடத்தை உரக்க சொன்னவுடன்,நான் என் கல்லுரிப் பையை வேக வேகமாக எடுத்துக் கொண்டு ‘பஸ்ஸை’ விட்டு கீழே இறங்கினேன்.

அடுத்த நாள் நளினி என்னிடம் பேசி விட்டு கிளம்பினவுடன்,நான் என் கல்லூரி பையை எடுத்துக் கொண்டு எழுந்தவுடன் நளினி போகும் ஒரு படகு கார் என் எதிரே வந்து நின்றது.அதிலே இருந்தி இறங்கின ரெண்டு ‘கான்ஸ்டபிள்’ கள் என்னை அப்படியே ‘அலாக்காக’த் தூக்கி காரில் போட்டுக் கொண்டு,காரை ஓட்டிக் கொண்டு போய் ஒரு பெரிய தோட்டம் சூழ்ந்த ஒரு பெரிய பங்களா முன்னால் இறக்கி,என்னை இறுக்கப் படித்துக் கொண்டு அந்த பங்களாவுக்குப் போய் அந்த பங்களா ஹாலில் கொண்டு போய் விட்டார்கள்.’என்ன பிடிப்பா,சுத்த இடும்புப் பிடி போல இருக்கே’ என்று நினைத்து என் கையை தடவை விட்டுக் கொண்டேன்.

நான் அந்த ‘ஹாலை’ நோட்டம் விட்டேன்.உயர்ந்து இருந்த சுவற்றில் புலி முகமும்,கரடி முகமும்,மான் முகமும்,சிங்கத்தின் முகமும் பதிந்து இருந்தது.அந்த கொடிய மிருகங்களின் முகங் களை பார்த்ததும் எனக்கு வேர்த்துக் கொட்டியது.நான் என் முகத்தை கையிலே துடைத்துக் கொண்டு இருந்த போது “நீ தாண்டா மணீயா” என்று ஒரு சிங்கத்தின் குரல் கேட்டது.

‘சுவத்லே இருக்கிற சிங்கம் பேசலையே,இந்த சிங்கத்தின் குரல் தரையிலே கேக்குதே’என்று பயந்துப் போய் நான் முகத்தில் இருந்து என் கையை எடுத்துக் கொண்டு பார்த்த போது என் எதிரே போட்டு இருந்த ஒரு பெரிய சோபாவில்,ஒரு பெரியவர்,தும்பப் பூ போல அப்போது தான் இஸ்திரி போட்ட ஒரு அரைக் கை சட்டையுடனும்,வேஷ்டியுடனும் உட்கார்ந்துக் கொண்டு இருந்ததைப் பார்த்தேன்.அவர் கையிலே ஒரு கைத் துப்பாகி இருந்தது.

‘சரி இவர் தான் பேசி இருக்கார் போல இருக்கு’என்று நினைத்து, நான் அவரைப் பார்க்கும் போது,அவர் மறுபடியும் தன் சிம்மக் குரலில் “டே ராஜா,இந்த துப்பாக்கிலே இன்னும் எத்தினி தோட்டா பாக்கி இருக்குடா” என்று கத்தினதும்,ஒருவன் அவர் எதிரில் வந்து நின்றுக் கொண்டு,தன் வாயைப் பொத்திக் கொண்டு “இன்னும் நாலு தோட்டா இருக்கு தலைவா” என்று சொல்லி விட்டு அப்படியே வாயைப் பொத்திக் கொண்டே பின்னுக்குப் போனான்.

“இந்த சின்னப் பயலுக்கு ரெண்டே போதும்” என்று சொல்லி விட்டு “ஏண்டா மணி,இந்த பங்களவே பாத்தியா.தோட்டமும் இந்த பங்களாவும் இருக்கிற மொத்த இடம் எத்தினி கிரவுண்ட் தெரியுமா.தெரிஞ்சுக்க மொத்தம் இருபத்தி அஞ்சு கிரவுண்ட்.சிந்தாத்ரி பேட்டையிலே ஒரு கால் கிரவுண்ட் வாடகை வூட்லே இருந்து வர உனக்கு,இருபத்தி அஞ்சு கிரவுண்ட்லே பங்களாவும், தோட்டமும் இருகிற ஒரு பொண்ணு கேக்குதா.காதல் பண்றயாமே என் பொண்ணே.உன் உயிர் மேலே உனக்கு ஆசை இருந்தா,இந்த நிமிஷத்லே இருந்து நளினியே மறந்திடு.இல்லேன்னா என் கைத் துப்பாக்கியிலே இருந்து வர ரெண்டு குண்டு உன் நெஞ்சிலே இருக்கிற ரத்தத்தே ரு¢சிப் பாத்து க் கிட்டு இருக்கும்.எப்படி வசதி அங்கே” என்று கத்தும் போது என் உடம்பு பூராவும் வேர்த்துக் கொட்டி என் ‘ஷர்ட்’’ பாண்ட்’ பூராவும் நனைத்து இருந்தது.

நான் உடனே மெல்ல என் வாயிலே கொஞ்சம் எச்சிலை வர வழைத்துக் கொண்டு “நான் இனிமே சத்தியமா நளினியே கண்ணெடுத்துக் கூட பாக்கமாட்டேங்க …”என்று தட்டுத் தடுமாறி சொன்னேன்.அவர் உடனே “அது.நல்ல பிள்ளே.என் கைத் துப்பாக்கி பத்தின பயம் இருக்கட்டும் உன் உடம்ப்லே” என்று கத்தி விட்டு,”இந்தப் பொடிப் பயலே கொண்டு போய் அவன் வூட்டுக்கு கிட்டே விடுங்க”என்று சொல்லி விட்டு எழுந்துப் போனார்.

அவர்கள் என்னை என் வீட்டுக்கு அருகில் விட்டு விட்டு போன பிறகு,” இப்படியே போனா அம்மா நம்மேக் கேப்பாங்க.இந்த சட்டை ‘பாண்ட்’ நல்லா காய்ஞ்ச பிறவு, நாம வீட்டுக்குப் போகலாம்” என்று நினைத்து நான் இருபது நிமிஷம் காற்றாட நின்றுக் கொண்டு இருந்தேன். ‘நாம் இனிமே அந்த நளினியே பாக்கக் கூடாது.பேசக் கூடாது’ என்று முடிவு பண்ணி நான் உண்டு,என் படிப்பு உண்டு என்று முடிவு பண்ணி கல்லூரிக்கு போய் வரலாம்’ என்று மனதில் நினைத்துக் கொண்டு வீட்டுக்குள் போனேன்.
அடுத்த நாள் நளினியே “ரொம்ப சாரி மணி.நீ என்னை தயவு செஞ்சி மன்னிச்சிடு.நான் என் அப்பா கிட்டே எவ்வளவோ போறாடிப் பாத்துட்டேன்.அவர் என் கிட்டே கோவத்லே “அந்த மணி இருந்தாத் தானே நீ அவனே காதலிப்பே. நான் இன்னிக்கே இருந்த இடம் தெரியாம பண்ணீடறேன்” என்று கத்தினதும் நான் உடனே “அப்பா நான் மணியே காதலிக்கலே.நீங்க அவனே ஒன்னும் பண்ணீடாதீங்க” என்று அழுதுக் கொண்டே சொன்னாள்.

நான் உடனே நளினியிடம்” நல்ல வேளை உங்க அப்பா என்னே ஒரு புறாவே சுடறாப் போல சுட்டுத் தள்ளாம விட்டாறே.அவர் என்னே அப்படி சுட்டு இருந்தா, நீ இப்போ என்னே உயிரோடவே பாத்து இருக்க முடியாது.நாம இனிமே ‘ப்ரெண்ட்ஸ்’ போல பழகி வரலாம்.நம்ம காதலுக்கு ஒரு முழுக்குப் போட்டுடலாம்” என்று சொல்லி விட்டு ‘விடு’ ‘விடு’ என்று கிளம்பிப் போய் விட்டேன்.

எங்கள் “காதல்” ஒரு விடியா இரவாகவே போயிற்று.

என் ‘காதல் தோல்வி’ எனக்கு மிகுந்த வருத்தத்தைக் கொடுத்தது.நான் பல நாட்கள் அந்த வருத்ததில் இருந்து வந்தேன்.

நளினியின் அப்பா கொடுத்த துப்பாக்கி மிரட்டல், நான் ஒரு பணக்கார பெண்ணைக் காதலி த்தால் கிடைக்கும் ‘பரிசை’ இவைகளை அடிக்கடி ஞாபகப் படுத்திக் கொண்டு இருந்தேன்.

அன்றில் இருந்து நான் என் மனதில் ஒரு முடிவு எடுத்துக் கொண்டேன்.

’இனிமே இந்தக் கல்லுரியிலே என் படிப்பு முடிகிற வரைக்கும் நான் யாரையும் காதலிக்கப் போவதே இல்லே.இந்த ஏழைப் ‘பணக்கார காதல்’ எல்லாம் வெறுமே சினிமாவிலே தான் நடக்கும்.நிஜ வாழக்கையிலே நடக்கவே நடக்காது.சினிமாவிலே நடப்பதைப் பார்த்து நாம ஏமாறவே கூடாது.நம்ம படிப்பு நல்ல விதமா முடிஞ்சப் புறமா,அப்பா அம்மாவே நமக்கு ஒரு நல்ல பொண்ணாப் பாத்து கல்யாணம் கட்டி வக்கச் சொல்லணும்’ என்று என் மனதில் சொல்லிக் கொண்டேன்.

நான் நல்ல விதமாக B.E.’பாஸ்’ பண்ணி ஒரு நல்ல IT கமபனியிலே வேலைக்கு சேர்ந்தேன். நான் வேலையிலே சேர்ந்து இரண்டு வருடங்கள் ஆயிற்று.

அன்று இரவு என் அப்பா அவர் வேலை செய்யும் துணிகடையை விட்டு பத்து மணிக்கு வீட்டுக்கு வந்தார்.அவர் விட்டுக்கு வந்ததும் வராததுமாய் என்னையும் என் அம்மாவையும் பார்த்து “நம்ப மணி B.E.’பாஸ்’ பண்ணி விட்டு,ஒரு நல்ல IT கமபனியிலே வேலைலே இருக்கான்னு எப்படியோ என் மானேஜருக்கு தெரிஞ்சு இருக்கு வனஜா.அவர் என் கிட்டே வந்து ‘மாணிக்கம் உன் பையனுக்கு நான் என் பொண்ணே கட்டிக் குடுக்கலாம்ன்னு ரொம்ப ஆசைப் படறேன்.நீ உங்க வீட்டிலே உன் சம்சாரத்துக்கு கிட்டேயும் பையன் கிட்டேயும் கொஞ்சம் கேட்டு எனக்கு சொல்ல முடியுமா’ன்னு என் கையேப் பிடிச்சுக் கேடட்டர்.எனக்கு என்ன சொல்றதுன்னே கொஞ்ச நேரம் புரியலே.அப்புறமா என்னே சமாளிச்சு கிட்டு ’சரி சார்,நான் வீட்லே என் சம்சாரத்து கிட்டேயும், என் மகன் கிட்டேயும் கேட்டுட்டு இன்னும் ரெண்டு நாள்ளே சொல்றேன்’ன்னு சொல்லி விட்டு வந்து இருக்கேன்” என்று சொன்னார்.அவருக்கு வேர்த்துக் கொட்டியது.

அவர் தன் தோள் மேலே போட்டுக் கொண்டு இருந்த துண்டினால் துடைத்துக் கொண்டார். என் அம்மா அவரைப் பார்த்து “ஏங்க,அவரு உங்க மானேஜரு.நீங்க அவருக்கு கீழே வேலை செஞ்சுக் கிட்டு வறீங்க.எப்படிங்க இந்த சம்மந்தம் நடக்கும்.நீங்க அதே யோஜனேயே பண்ணலயாங்க”என்று எழை பணக்கார வித்தியாசத்தை என் அப்பாவுக்கு ஞாபகப் படுத்தினாள்.

உடனே என் அப்பா “நான் யோஜனைப் பண்னாம இருந்து இருப்பேனா வனஜா.அவருக்கு அவர் பொண்ணுக்கு B.E.’பாஸ்’ பண்ணி ஒரு நல்ல IT கமபனியிலே வேலைலே இருக்கும் நம்ம பையன் மேலே தானே ‘கண்ணு’.உன் மேலேயும் என் மேலேயும் இல்லையே.ஒரு ITகம்பனிலே நல்லா சம்பாத்திக்கற ஒரு பையன் அவருக்கு மருமவனா கிடைக்கணும்ன்னு அவரு ஆசைப் படறாரு. சரி, மணி, நீ என்னடா சொல்றே”என்று என்னைப் பார்த்துக் கேட்டார்.

எனக்கு என்ன சொல்வது என்று கொஞ்சம் நேரம் வரை தெரியவில்லை.நான் சும்மா இருந்தேன்.

என் அப்பா “எனக்கு என்னவோ நம்ம மணிக்கு ஒரு பெரிய இடம் அமைஞ்சா சந்தோஷம் தான்.நான் ‘சரி’ன்னு சொல்லட்டுமா வனஜா” என்று கேட்டதும்,என் அம்மா “நான் நம்ப மணிக்கு, நம்மளே மாதிரி இருக்கிற ஒரு குடும்பத்லே ஒரு பொண்ணே எடுத்தா,வர மருமவ எனக்குக் கூட மாட ஒத்தாசையா இருப்பான்னுத் தானே நினைச்சுக் கிட்டு இருந்தேன்.நீங்க என்னடான்னா..” என்று என் அம்மா சொல்லி முடிக்கவில்லை “வனஜா,நீ எந்த உலகத்லே இருக்கே.நமப பையன் BE.படிச்சுட்டு கை நிறைய சம்பாதிக்கறான். எங்க மானேஜர் பொண்ணு நல்ல படிப்புப் படிச்சுட்டு ‘பாங்க்’லே வேலே செய்யுது.மணியே கல்யாணம் பண்ணிக்கற பொண்ணு உனக்கு தினமும் அம்மிலே மசாலா அறைச்சுக் குடுக்கும்ன்னு கனவு கண்டுக் கிட்டு வரயா.அந்த ஆசை எல்லாத்தையும் மறந்துட்டு வர பழகு” என்று சொன்னதும் வனஜா சும்மா இருந்து விட்டாள்.

கொஞ்ச நேரம் ஆனதும் ‘சரி,நம்ம புருஷன் ரொம்ப ஆசை படறார்.மணிக்கு ஒரு நல்ல பொண்ணா அமைஞ்சா நல்லது தானே’என்று நினைத்து, என் அப்பாவைப் பார்த்து” உங்க முகத்தேப் பாத்தா,நீங்க இந்த சம்மந்தம் பண்ணீக்க ரொம்பவே ஆசைப் படறா மாதிரி எனக்குத் தோணுது.உங்க ஆசையே நான் ஏன் கெடுக்கணும்.’சரி’ன்னு சொல்லுங்க” என்று சொன்னதும் என் அப்பா சந்தோஷப் பட்டு தன் கை கால்களை எல்லாம் கழுவிக் கொண்டு சாப்பிட உட்கார்ந்தார்.

அன்று இரவு சாப்பிடும் போது என் அப்பா “வனஜா இன்னிக்கு சாம்பார் ரொம்பவே நல்லா இருக்கு” என்று சொல்லி விட்டு இரண்டு கை அதிகமாகவே சாப்பிட்டார்.அவர் மனதில்’ நம்ம மானேஜரே நமக்கு சம்மந்தியா வறப் போறாரே’ என்கிற சந்தோஷம்அதிகமாக இருக்கவே அவர் ரெண்டு கை சாம்பார் சாதம் அதிகமாக சாப்பிட்டதில் ஒரு ஆச்சரியமும் இல்லையே!!

என் அப்பாவும் அவர் மானேஜரும் ஜாதகப் பொருத்தம் பார்த்து ஜாதகங்கள் நன்றாக பொருந்தி இருக்கவே ‘பெண் பார்க்க’ நானும் என் அம்மாவும் அப்பாவும் என் தம்பியும் அவர்கள் வீட்டுக்குப் போனோம்.எல்லோரும் கொஞ்ச நேரம் பேசிக் கொண்டு இருந்தோம்.மானேஜர் அவங்க சம்சாரத்தைப் பார்த்து “நேரம் ஆவுது கமலா. சுதாவே எல்லாருக்கும் பலகாரம் குடுக்க சொல்லு” என்று சொன்னதும் அந்த அம்மா உள்ளே போய் அவங்க பொண்னு சுதாவிடம் சொன்னாள்.

சுதா பட்டுப் புடவை சர சரக்க அன்ன நடைப் போட்டு பலகாரத் தட்டுகளை எல்லாம் எடுத்துக் கொண்டு வந்து,முதலில் என் அப்பா,அம்மாவுக்குக் கொடுத்து விட்டு பிறகு எனக்கும் என் தம்பி க்கும் கொடுத்து விட்டு எதிரில் இருந்த ஒரு சோ¢ல் உட்கார்ந்துக் கொண்டாள்.சுதா பார்க்கவே மிகவும் அழகாய் இருந்தாள்.

பலகாரத்தை சாப்பிட்ட பிறகு சுதா மறுபடியும் சமையல் அறைக்குப் போய் எங்க எல்லோரு க்கும் ‘டவரா டம்ளா¢ல்’ ஆவி பொங்கும் ‘காபி’யை எடுத்துக் கொண்டு, மறுபடியும் அன்ன நடைப் போட்டு நடந்து வந்தாள்.

வழக்கமாக குடிக்கும் காபியை விட அன்று சுதா கொடுத்த ‘காபி ‘ரொம்பவே சுவையாக இருந்தது.ஒரு வேளை சுதாவுக்குத் தெரியாம அவ விரல் கொஞ்சம் அந்த ‘காபி’லே நனைத்து இருக்குமோ.சந்தோஷத்தில் என் மனம் அவ அழகை ரசித்துக் கொண்டு இருந்தது.இரு குடும்பங்க ளுக்கும் ‘இந்த சம்மந்தம்’ பிடித்து இருக்கவே எனக்கும் சுதாவுக்கும் கல்யாணம் நிச்சியம் ஆயிற்று.

என் வருங்கால மாமனாரும்,மாமியாரும் சுதாவுக்கு நிறைய நகைகள் எல்லாம் போட்டு ஒரு பெரிய சத்திரமாகப் பார்த்து எங்கள் கல்யாணத்தை ‘ஜாம்’ ‘ஜாம்’ என்று நடத்தினார்கள்.என் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் தம்பிக்கும்,ஏன் எனக்கும் இந்த கல்யாணம் ரொம்ப சந்தோஷதைக் கொடுத்தது.

நாங்கள் எல்லோரும் கொஞ்ச தனியாக இருக்கும் போது என் அப்பா எங்கள் எல்லோரிடமும், “நம்ம மணிக்கு இவ்வளவு பெரிய இடத்லே,ஒரு B.Com.’பஸ்ட் க்லாசிலே பாஸ்’ பண்ண அழகான பொண்ணு கிடைப்பான்னு நான் கனவிலே கூட நினக்கலே.அவன் உண்மையிலேயே ரொம்ப அதிர்ஷ்டக்காரன் வனஜா” என்று சொல்லி சந்தோஷப் பட்டார்.என் அம்மா அவரைப் பார்த்து “அந்த கடவுள் யார் யாரை புருஷன் பெண்ஜாதியாப் போட்டு இருக்கான்னு அவருக்குத் தாங்க தெரியும். நமக்கு அந்த மர்மம் தெரியாதுங்க” என்று கொஞ்சம் வேதாந்தமாக சொன்னாள்.

கல்யாணம் ஆன மறு நாளே என் மாமனார் என்னைப் பார்த்து “மாப்பிள்ளே,நான் உங்களுக்கும் சுதாவுக்கும் ‘ஹனி மூனு’க்கு டார்ஜலிங்கில் ஒரு 3 ஸ்டார் ஹோட்டலில் ஒரு ரூம் மூனு நாளைக்கு ‘புக்’ பண்ணி இருக்கேன்.நீங்க ரெண்டு பேரும் ஹௌரா வரைக்கும் ‘ஏர்லே’ போயிட்டு,அப்புறமா ‘சியால்டா’ ஸ்டேஷனில் இருந்து ராத்திரி பதினோரு மணிக்கு கிளம்பற ‘டார்ஜலிங்க் மெயிலில் பஸ்ட் க்லாஸில்’ ரெண்டு AC டிக்கட்டும் ‘புக்’ பண்ணி இருக்கேன்.என் ஒரே பொண்ணு சுதா என் கிட்டே ‘அப்பா எனக்கு கல்யாணம் ஆனா என் ‘ஹனி மூனை’ டார்ஜலிங்கில் வச்சுக்கணும் ரொம்ப ஆசைப் படறேன்னு’ சொல்லி இருந்தா.அவ ஆசையே நான் பூர்த்து பண்ணனும் மாப்பிள்ளே.நீங்க கொஞ்சம் மறுக்காம ஒத்துக்குங்க” என்று கையைப் பிடித்துக் கொண்டு கெஞ்சினார்.

நான் உடனே “அதுக்கென்ன மாமா.சுதா ஆசைப் பட்டா மாதிரியே நான் பண்றேன். நீங்க நிம்மதியா இருந்து வாங்க” என்று சொல்லி என் கையை அவா¢டம் இருந்து விடுவித்துக் கொண்டேன்.

‘அழகான மணைவியுடன் டார்ஜலிங்கில் ‘ஹனி மூன்’ பண்ணீக் கொள்ள யாருக்கும் கசக்கும் சொல்லுங்க!!.

குறிப்பிட்ட நாளில் நான் சுதாவை அழைத்துக் கொண்டு சென்னை ‘ஏர் போர்ட்டு’க்குக் கிளம்பிப் போனேன்.என் மனதில் ‘நாம இது வரைக்கும் சென்னை ‘ஏர் போர்ட்டு’க்குப் போனதே இல்லையே.எப்படி இருக்கும் இந்த அனுபவம்’ என்று யோஜனைப் பண்ணிக் கொண்டு இருந்தேன். சென்னை ‘ஏர்’ போர்ட்டில் இறங்கினதில் இருந்து,சுதாவே என்னை அழைத்துக் கொண்டு ஹௌரா போகும் ‘ப்லேனில்’ ஏறீனாள்.நான் ஒரு நிம்மதி பெரு மூச்சு விட்டேன்.

ஹௌராவில் இறங்கி ஒரு ‘டாக்சியை’ வைத்துக் கொண்டு,நானும் சுதாவும் ‘சியால்டா’ ரயில்வெ ஸ்டேஷனுக்கு வந்து,இரவு சாப்பாட்டை முடித்துக் கொண்டு சரியாக பதினோரூ மணிக்குக் கிளம்பும் ‘டார்ஜலிங்க் மெயிலில்’ என் மாமனார் ‘ரிசர்வ்’ பண்ணி இருந்த ‘AC பஸ்ட் க்லாசில்’ ஏறி உட்கார்ந்துக் கொண்டோம்.எனக்கு ‘சொர்க்க லோலத்தில்’ இருப்பது போல இருந்தது.சுதா என்னை பார்க்காத இருந்த போது நான் என்னையே கொஞ்சம் கிள்ளிப் பார்த்துக் கொண்டேன்.எனக்கு வலித்தது.

காலை ஆறு மணிக்கு ‘டார்ஜலிங்க் மெயில்’ டார்ஜலிங்க் ஸ்டேஷனுக்கு வந்து நின்றது.சுதா என்னைப் பார்த்து “ரெண்டு சூட் கேஸ்களையும் எடுத்துக் கிட்டு நீங்க மெல்ல இறங்குங்க.நான் முதல்லே கீழே இறங்கி டார்ஜலிங்க் மலை எல்லாத்தையும் பாத்து கிட்டு இருக்கேன்.நான் போட்டோ லே தான் பாத்து இருக்கேன்.முடிஞ்சா போட்டோவும் எடுத்துக் கிட்டு இருக்கேன்” என்று சொல்லி விட்டு என் பதிலுக்குக் கூட காத்து இல்லாமல்,காமிராவை டுத்துக் கொண்டு வண்டியை விட்டு கீழே இறங்கினாள்.என் ஆசை மணைவி சொன்ன பிறகு என்னால் மறுக்க முடியுமா!!,

நான் ரெண்டு ‘சூட் கேஸ்களை’ எடுத்துக் கொண்டு இறங்கப் போன போது என்னை தள்ளிக் கொண்டு மூன்று பிரயாணிகள் இறங்கினார்கள்.அவர்கள் இறங்கின பிறகு நான் ரெண்டு ‘சூட் கேஸ்களை எடுத்துக் கொண்டு மெல்ல வண்டியின் முதல் படியிலே காலை வைக்க நினைத்த போது, சுதாவை மூனு முகமூடிக்காரர்கள் சுதாவின் வாயிலே துணியை அடைத்து விட்டு அவளை அலாக் காக தூக்கிக் கொண்டு ஓட ஆரம்பித்தார்கள்.நான் உடனே ‘சூட் கேஸ்களை’ அப்படியே போட்டு விட்டு வேகமாக கீழே இறங்கி அவர்களை துரத்த நினைத்தேன்.

நான் பத்தடி தூரம் போவதற்குள்,வண்டியிலே இறங்கி வந்த பாசஞ்சர்கள் எனக்கு வழி விடா மல் அவர்கள் என்னைத் தள்ளிக் கொண்டு ஸ்டேஷனுக்கு வெளியே போகும் வழிக்கு வந்துக் கொண்டு இருந்தார்கள்.நான் அவர்களைத் தள்ளீக் கொண்டு இன்னும் பத்தடி தூரம் கூட போய் இருக்க மாட்டேன்,அந்த குமபல் சுதாவோடு ஒரு குறுக்கு வழியாகப் போய் என் கண்ணில் இருந்து மறைத்து விட்டார்கள்.

எனக்கு ரத்தம் உறைந்து விட்டது.எனக்கு ஒரு நிமிஷம் என்ன பண்ணூவது என்றே புரிய வில்லை.நான் திரும்பி வந்து என் ‘சூட் கேஸ்களை’ எடுத்துக் கொண்டு எதிரே இருந்த போலீஸ் ‘ஸ்டேஷனுக்கு’ப் போனேன்.அங்கே இருந்த இன்ஸ்பெக்டா¢டம் நான் அழுதுக் கொண்டே நடந்த எல்லா விஷயத்தையும் சொல்லி,”சார் நீங்க உடனே அந்த கும்பலை உடனே பிடிச்சு என் சுதாவை காப்பாத்தி என் கிட்டே குடுங்க” என்று ஆங்கிலத்திலே கத்தினேன்.

அந்த இன்ஸ்பெக்டர் என்னைப் பார்த்து கூலாக “பைட்டியே சாப்” என்று சேரைக் காட்டி உட்காரச் சொன்னார்.நான் உட்கார்ந்ததும் என்னைப் பார்த்து “ஆப் ஹிந்தி ஜாந்தே” என்று கேட்டதும் “நை இங்கிலிஷ் ஒன்லி” என்று மறுபடியும் கத்தினேன்.அந்த இன்ஸ்பெக்டர் என்னிடம் அவருக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் “சார்,இந்த மாதிரி கும்பல் இந்த ‘டார்ஜலிங்க் ஸ்டேஷன்லே’ சுத்துது.உங்க மாதிரி சௌத்லே இருந்து புதுசா கல்யாணம் பண்ணிக் கிட்டு இங்கே ‘ஹனி மூனுக்கு’ வர பெண்களை,கடத்தி கிட்டுப் போய் இங்கே இருக்கிற விபச்சார விடுதியிலே விட்டுடுறாங்க.இந்த விபச்சார விடுதி நடத்தறவங்க மாசா மாசம் என் கமிஷனருக்கு 30.000 ரூபாய் லஞ்சம் குடுத்து வறாங்க.நான் இதிலே தலையிட முடியாது.தலையிட்டா என் வேலேயே போயிடும்.என்னை மன்னி ச்சிடுங்க” என்று சொல்லி விட்டு தன் தொப்பியைப் போட்டுக் கொண்டு வெளியே போய் விட்டார்.

நான் அவரைத் துரத்திக் கொண்டே” சார்,நீங்க எப்படியாவது எனக்கு ‘ஹெல்ப்’ பண்ணுங்க” என்று சொன்னேன்.அவர் என்னைப் பார்த்து “ப்ளீஸ் கோ.ஐ கெனாட் ஹெல்ப் யூ” என்று கத்தி என்னைப் படித்துத் தள்ளீனார்.அவர் தள்ளீன வேகத்தில் நான் கீழே விழுந்து விட்டேன்.நான் உடனே “சுதா,சுதா….” என்று கத்திக் கொண்டு இருந்த போது என் பகத்திலே படுத்துக் கொண்டு இருந்த என் தம்பி ரவி என் தோளைப் பிடித்து உலுக்கி எழுப்பி “என்னண்னா ஏதோ வாய் பிணாத்த றீங்க.லவ்வா,யாருண்னா இந்த சுதா” என்று கேட்ட போது “நான் இப்போ எங்கே இருக்கேன்” என்று கேட்டு விட்டு என் கண்களை விழித்துப் பார்த்தேன்.

“அண்ணா,நீங்க என் கூடத் தான் ‘பெட் ரூம்லே’ படுத்துக் கிட்டு இருக்கீங்க” என்றுசொல்லி விட்டு என்னைப் பார்த்து மறுபடியும் “என்னண்ணா லவ்வா.யாருண்ணா இந்த சுதா” என்று கேட்ட போது நான் என் கனவு உலகில் இருந்து வெளியே வந்தேன்.என்னை சுதாரித்துக் கொண்டு”அது ஒன்னும் இல்லேடா ரவி.சுதா என் கீழே வேலை பண்ற ஒரு பொண்ணு.அவ வேலே செஞ்சுக் கிட்டு இருந்தப்ப ‘திடீர்’ன்னு மயக்கமா விழுந்துட்டா.நான் அதே பாத்து தான் ‘சுதா,சுதா’ன்னு கத்தினேன்” என்று சொல்லி சமாளித்தேன்.

நான் சொன்னதும் ரவி நமபி விட்டு எழுந்து பல் தேய்க்கப் போய் விட்டான்.என் கைகளைக்கூப்பிக் கொண்டு “கடவுளே,இது வரைக்கும் நான் கண்டது எல்லாம கனவா.நல்ல வேளே நான் பொழைச்சேன்.உனக்கு என் மனபூர்வமாவ நன்றி” என்று சொல்லி விட்டு படுக்கையை விட்டு எழுந்து ஹாலுக்கு வந்தேன்.

ஹாலில் என் அப்பா வனஜா “இப்பத் தான் உன் தம்பி வேலு ‘போன்’லே பேசினான்.இன்னும் கொஞ்ச நேரத்லே அவன் குடும்பத்தோடு நம்ம வீட்டுக்கு வறானாம். நாளைக்கு அவன் முதலாளிப் பொண்ணுக்கு சென்னையிலே கல்யாணமாம்.ஒரு நாள் முன்னமே சென்னைக்கு வந்து நம்மையும் பாத்துட்டு,நாளைக்கு கல்யாணத்தையும் பாத்துட்டுப் போறானாம்” என்று சொன்னார்.உடனே ”நானும் அவனேப் பாத்து ரொம்ப வருஷம் ஆவுது.அவன் வரட்டும்” என்று சொல்லி விட்டு சமையல் ரூமுக்குப் போனாள்.

நான் பல்லைத் தேய்த்து விட்டு ஹாலுக்கு வந்தேன்.என் அம்மா எனக்கு ‘காபி’யே கொண்டு வந்து நான் உட்கார்ந்துக் கொண்டு இருக்கும் ‘டைனிங்க் டேபிளில்’ வைத்தாள்.நான் ‘காபி’யை ருசித்துக் குடித்துக் கொண்டு இருக்கும் போது வாசலில் ஒரு ‘கால் டாக்ஸி’ வந்து நின்றது.அந்த ‘டாக்ஸி’யிலே இருந்து என் மாமா,மாமி,தங்கள் பைகளை எடுத்துக் கொண்டு ஒரு ‘அழகு பொட்ட லத்தையும்’ அழைத்துக் கொண்டு வீட்டுக்குள் வந்தார்கள்.

“சௌக்கியமா மாமா,சௌக்கியமா அக்கா” என்று கேட்டுக் கொண்டே வந்தார்கள்.என் அப்பா அவர்களை எல்லாம் “வாங்க, வாங்க” என்று வரவேற்றார்.என்அம்மா ”வாடா வேலு,உன்னேப் பாத்து பத்து வருஷத்துக்கு மேலேயே ஆவுது.யார் இது நம்ம ரமாவா.நல்லா ‘தள’ ‘தள’ன்னு வளந்து ஒரு அழகு பொம்மே மாதிரி இருக்கா. கமலா நீ உடனே அவளுக்கு சுத்திப் போடு.என் கண்ணே பட்டுடும் போல இருக்கு.இல்லே நானே ரமாவுக்குச் சுத்திப் போடறேன்” என்று சொல்லி விட்டு ஒரு பிடி உப்பை எடுத்துக் கொண்டு வந்து ரமாவுக்கு இடப் பக்கம் மூனு தடவையும். வலப் பக்கமும் தடவையும் சுத்திப் போட்டு விட்டு,அந்த உப்பைத் தண்ணீரிலே கரைத்தாள்.

ரமா என் அம்மவின் காலை தொட்டு ”ஆமாம் அத்தே,நான் ரமாவே தான்”என்று சொல்லி விட்டு தன் கண்களில் ஒத்திக் கொண்டாள்.என் அம்மா எல்லோருக்கும் டவரா டம்ளா¢ல் ‘காபி’யைக் கொடுத்தாள்.என் மாமா ‘காபி’யே குடித்துக் கொண்டே குடும்ப விஷயங்களை பேசிக் கொண்டு இருந்தார் வேலு.

“நாங்க இதுக்கு முன்னே ஒரு சின்ன வீட்லே ரொம்ப கஷ்டப் பட்டு வந்துக் கிட்டு இருந்தோம். மணி அவன் சம்பாதிக்க ஆரம்பிச்சவுடன், இந்த ‘ப்லாட்டை ‘லோன்’ போட்டு வாங்கி இருக்கான். இப்போ நாங்க நாலு பேரும் கொஞ்சம் வசதியா இந்த ‘ப்லாட்’லே இருந்து கிட்டு வறோம்”என்று சந்தோஷமாகச் சொன்னார் என் அப்பா.எனக்கு நேரம் ஆகி விடவே நான் ‘டிரஸ்’ பண்ணிக் கொண்டு என் ‘கம்ப்யூட்டர் பையை முதுகில் மாட்டிக் கொண்டு,ஹாலுக்கு வந்து, என் அம்மா,அப்பா, மாமா, மாமி இவர்களிடம் சொல்லிக் கொண்டு கிளம்ப தயாரானேன்.

என் மாமா உடனே “என்ன மாமா,அக்கா,மணி இப்போ ஒரு பெரிய ‘கம்ப்யூட்டர்’ படிச்சு விட்டு,ஒரு பெரிய வேலையிலே இருந்துக் கிட்டு வறான்.அவனுக்கு ‘பொண்ணுக் குடுக்க’ ‘க்யூலே’ நிறைய பேர் காத்துக் கிட்டு இருப்பாங்க.எனக்கு ரமா பொறந்தவுடனே,மேல் லோகத்லே இருந்து பாத்துக் கிட்டு இருக்கிற என் அம்மா அப்பா கிட்டே ‘நாங்க ரெண்டு குடும்பமும் உறவு விட்டு போவ விட மாட்டோம். ரமாவே நிச்சியமா மணிக்குக் கல்யாணம் பண்ணிப்போம்’ன்னு பண்ணிக் குடுத்த நீங்க சத்தியத்தே காப்பாத்தப் போறீங்களா, இல்லே……” என்று சொல்லும் போது அவர் கண்களில் கண்ணீர் வழிந்துக் கொண்டு இருந்தது.

அவர் தோளில் போட்டுக் கொண்டு இருந்த துண்டினால் துடைத்துக் கொண்டு இருந்தார்.

உடனே என் அப்பாவும் அம்மாவும் “வேலு,மணி ஒரு கலெக்டர் வேலே செஞ்சிக் கிட்டு வந்தாலும்,நாங்க செஞ்சிக் குடுத்த சத்தியத்தை மறக்கவே மாட்டோம்.மணிக்கும் ரமாவுக்கும் தான் கல்யாணம்.கவலையே விடு.உன் கண்ணே முன்னே துடே”என்று தன் தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டு இருந்த என் மாமாவை எழுப்பினார்கள்.நானே மா நிறம்.ரமா என்னை விட இன்னும் வெளுப்பாக இருந்தாள்.என் அப்பாவும் அம்மாவும் அப்படி சொன்னவுடன் ரமா கன்னங்கள் ஒரு ‘ஆப்பில் பழம்’ போல சிவந்ததை நான் கவனித்தேன்.

அவர் எழுந்துக் கொண்டு தன் கண்களைத் துடைத்துக் கொண்டே” அக்கா,மாமா,எனக்கு இந்த மூனு பெட் ரூம் ‘ப்லாட்டை’யும் வாசல்லே இருந்த ஒரு காரையும்,ரெண்டு பைக்கையும் பாத்ததும் சந்தேகம் வந்திடுச்சி.நான் கேட்டதே நீங்க ரெண்டு பேரும் தயவு செஞ்சி தப்பா எடுத்துக்காதீங்க”என்று தன் கைகளைக் கூப்பிக் கொண்டு கேட்டார்.

நான் எல்லோரிடமும் சொல்லிக் கொண்டு,ரமாவிடம் என் கண்ணால் சொல்லிக் கொண்டு வாசலுக்கு வந்து என் காரை ‘ஸ்டார்ட்’ பண்ணிக் கொண்டு,பெட்ரோல் பங்குக்கு வந்து பெட்ரோல் போட்டுக் கொண்டு, நூறு அடிக்கு ஒரு ‘சிக்னலில்’ நின்று,நின்று, என் ஆபீஸ்க்கு வந்தேன்.ஆனால் என் மனமோ பெட்ரோல் இல்லாமலே ஆகாயத்தில் அனாயாசமாக பறந்துக் கொண்டு இருந்தது.

நான் என் மனதில் “நல்ல வேளையா ரமா அப்பா கிட்டே நாலு தோட்டா போட்ட துப்பாக்கி இல்லே.ரமாவும் என்னை ‘ஹனு மூனுக்கு’‘டார்ஜலிங்க்’ அழைச்சுக் கிட்டுப் போன்ன்னு கேக்க மாட்டா. எல்லாத்துக்கு மேலே என் அம்மா ஆசைப் பட்டது போல ரமா என் அம்மா கிட்டே’மாமி’ ‘மாமி’ன்னு பேசிக் கிட்டு வந்து ‘மாமியார் மெச்சின மருவளா’ இருந்து வருவா.

நான் இதைத் தவிர வேறே என்ன கேக்கப் போறேன் அந்த கடவுளைச் சொல்லுங்க!!!.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *