பார்த்துக்கொண்டிருந்தால் என்னாவது?

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: September 28, 2022
பார்வையிட்டோர்: 10,221 
 

அது ஒரு மிக பெரிய டெலிகாம் நிறுவனம் பத்து மாடி கட்டிடம் கொண்டது, கட்டிடத்தின் பெயர் AP எண்டர்பிரைசஸ் லிமிடெட். காண்போரை வியப்பில் ஆழ்த்தியது அத்தனை வேலைப்பாடுகள் நிறைந்த கட்டிடம் அது..

அங்கு ரிசப்ஷன் அருகில் இருபது நபர்கள் ஆண்கள், பெண்கள் இருபாலரும் உட்கார்ந்து கொண்டு இருந்தனர் பதட்டமாக. இன்று நேர்முகத் தேர்வு அவர்களுக்கு. இப்படிப்பட்ட பெரிய நிறுவனத்தில் வேலை கிடைப்பது சுலபம் இல்லை அதனால் இந்த பதட்டம் அவர்களுக்குள்..

அ‌ந்த கூட்டத்தில் விதி விலக்காக எந்த ஒரு பயமுமின்றி அமர்ந்திருந்தாள் நம் கதையின் நாயகி பார்வதி. காண்போரை மறுபடியும் திரும்பி பார்க்கச் சொல்லும் அழகு, ஆனால் அவள் கண்களில் ஒளி இல்லை..

ஒவ்வொருத்தரையும் அழைத்து நேர்முகத் தேர்வை நடத்தினார் அந்த நிறுவனத்தின் மேனேஜர் தீபக் கபூர். இந்த இன்டர்வியூவில் ஒருத்தரின் பதில் கூட திருப்தி அளிக்கவில்லை சிறிது கடுப்பானார். கடைசி ஆளாக உள்ளே நுழைந்தாள் பார்வதி அவளின் பயோடெட்டாவை பார்த்து வியந்தார்..

“ஹம் நல்லா படிச்சிருக்கா பாக்கலாம் எப்படி பதில் சொல்ற” என்று தீபக் சில கேள்விகளை கேட்டார் அவர் கேட்கும் அத்தனை கேள்விகளுக்கும் பொறுமையுடன் மற்றும் தெளிவாக பதில் அளித்தாள் பார்வதி அவளின் அறிவுக் கூர்மையான பதில்களை பார்த்து அவள் இந்த வேலைக்கு தகுதி ஆனவள் என்று அவளை பிஏவாக அப்பாயின்மென்ட் செய்தார்….

பார்வதியை சிறிது நேரம் இருக்கும் படி சொல்லிட்டு அப்பாயின்மென்ட் லெட்டர் தருவதற்கு முன் காண்ட்ராக்ட் லெட்டரை தந்தார் அதில், ரெண்டு வருடம் தொடர்ந்து வேலையில் இருக்க வேண்டும் என்று இருந்தது அதை படித்துப் பார்த்து சற்று யோசித்தாலும் தற்போது இந்த வேலை ரொம்ப அவசியம் என்பதால் அதில் இருந்த காண்ட்ராக்ட் பேப்பர் கூடவே ஒரு சில பேப்பரில் கையெழுத்துப் போட்டாள். இந்த கையெழுத்து தான் நாளை அவள் தலையெழுத்தை மாற்றும் என்பது தெரியாமல்…

அவள் கையெழுத்திட்ட பேப்பர்களை பெற்றுக் கொண்டு தீபக் அவளை நாளை மறுநாள் வேலைக்கு சேரும் படி கூறினார்.அவளின் வேலை பிஏ அந்த கம்பெனி முதலாளிக்கு மற்றும் சொன்னான் அது யார் என்று சொல்லவில்லை, அப்படி மட்டும் சொல்லிருந்தால் அன்றே அந்த வேலையை விட்டு சென்றிருப்பாள்..

பார்வதி சென்றதை உறுதி செய்தவுடன் அவள் கையெழுத்திட்ட தாள்களை கொண்டு அந்த கட்டிடத்தின் ஐந்தாம் தளத்திற்குச் சென்றான். அங்கு ஒரு பெரிய அறையின் முன்பு நின்றான் அதில் அந்த நிறுவனத்தின் தலைவர் மற்றும் நம் கதையின் நாயகன் திரு.ஆதித்ய கண்ணன் என்று பெயர் பொறிக்க பட்டிருந்தது…

அ‌ந்த அறைக் கதவை திறந்து கொண்டு உள்ளே சென்று பார்த்தான் தீபக் அங்கு ஆதி தன் முன் இருக்கும் சிஸ்டத்தில் பார்வதி செல்வதைப் பார்த்துக் கொண்டு இருந்தான்….

“டேய் மச்சான் இந்தா நீ சொன்னா மாதிரி பேப்பர்ஸ்ல கையெழுத்து வாங்கிட்டேன்” என்று அந்த தாள்களை தந்தான் தீபக்.

“ஹம் சூப்பர் டா மச்சான், நான் யார்னு சொல்லல தானா” என்றான் ஆதி.

“ஹம் ஆமாடா. நெக்ஸ்ட் என்னடா பண்ண போற, அந்த பொண்ண பார்த்தா கொஞ்சம் இல்ல ரொம்பவே கோவப்படுற பொண்ணு மாதிரி இருக்கா எப்படிடா சமாளிக்கப் போற???” தீபக்

“பண்ணி தான் ஆகணும்டா வேற வழி இல்ல” – ஆதி

“அப்புறம் உன்கிட்ட ஒண்ணு கேட்கணும் தப்பா நினைக்காதடா” என்றான் தீபக்

“டேய் உனக்கு கேட்க எல்லா உரிமையும் இருக்கு என்ன கேட்கணும் சொல்லுடா” – ஆதி

“அது வந்து யாருடா அந்த பொண்ணு அவளுக்காக ஏன் இவ்வளவு பண்ணற? அவள லவ் பண்றியா? நீ லவ் பண்ணேன அந்த பொண்ணு ஒரு ஒரு” சற்று சொல்ல தயங்கினான் தீபக்

“ஹம் சொல்லுடா அவ கைம்பெண் அதான சொல்ல வர” – ஆதி

“ஆமாம்” என்று தலை அசைத்தான் “தீபக்

“ஆமாடா அவள லவ் பண்றேன் ஏழு வருஷமா, பண்றேன்னு சொல்றத விட பண்ணோம் நாங்க” என்று மூச்சு இழுத்து விட்டு சொன்னான் – ஆதி

“என்னடா சொல்ற மச்சி கொஞ்சம் புரியற மாதிரி சொல்லு” – தீபக்

“கண்டிப்பா சொல்றேன் இப்போ இல்ல இன்னைக்கு நைட் சொல்றேன் தீபக்” – ஆதி

“சரிடா ஆனா பார்த்து அந்த பொண்ணு தைரியமான பொண்ணு மாதிரி இருக்கு அடி வாங்கிட போற பார்த்து பண்ணு” – தீபக்

“யாரு அவளா நீ வேற,” என்று சிரித்தான் ஆதி.

“சரிடா நான் சொன்னா மாதிரி இன்னிக்கே நாங்க கையெழுத்து போட்ட பேப்பர்ஸ் பதிவு பண்ணிடு ஏற்க்கனவே அங்க பேசிட்டேன் நீ இத ஜஸ்ட் அங்க கொடுத்தா போதும்” என்றான் ஆதி…

தன் இருக்கையில் சாய்ந்த படி ‘வெல்கம் டூ அவர் ஆபீஸ் பொண்டாட்டி’ என்று மர்மாக சிரித்தான் – ஆதி

**

அ‌ந்த அலுவலகம் விட்டு வெளியே வந்ததும் பாருவின் மனதில் சொல்ல முடியாத ஓர் உணர்வு, ‘இங்க ஏதோ தாப்பா இருக்கே என்று குழம்பி கொண்டு இருந்தாள். அதே மனதுடன் தன் ஸ்கூட்டியை உயிர்ப்பித்தாள் சில பல யோசனைகளுடன் வீடு வந்து சேர்ந்தாள்.

இங்கு பார்வதி வீட்டு வாசலில் கால் எடுத்து வைத்ததும், அம்மா என்று தன் மழலை மொழியில் கூறிக் கொண்டு ஓடி வந்தான் அர்ஜுன். பார்வதியின் மகன் ரெண்டு வயது பிஞ்சு அவள் கால்களை அணைத்துக் கொண்டு இருந்தான் சிரித்த முகத்துடன்..

அவன் முகத்தை பார்த்ததும் தன் கவலைகளை மறந்து, “லட்டு குட்டி என்னடா கண்ணா அம்மாவ ரொம்ப தேடுனீங்களா” – பாரு

“ஆம மீ நீங்க ஓப்ஸ் போய் இருக்கிங்க பாட்டி சொன்னாங்க, அங்க போன தான் எனக்கு நீங்க சாக்கீ வாங்கி தருவீங்க சொன்னாங்க “என்றான் தன் மழலை மொழியில்.

“ஆமாடா செல்லம் அம்மா உங்களுக்கு வாங்கிட்டு வந்திருக்கேன் இந்தாடா கண்ணா” – பாரு

இவர்களின் பேச்சுக் குரல்கள் கேட்டுக் கொண்டு வெளியில் சிரித்த படியே வந்தார் பாக்கியம், பார்வதியின் மாமியார்..

“அம்மாவும் பையனும் வெளியேவே நின்னு பேச போறிங்களா இல்ல வீட்டுக்குள்ள வர ஐடியா இருக்கா” புன்னகையுடன் கேட்டார் பாக்கியம்

“இ‌தோ வந்துட்டோம் அத்தை” என்று இருவரும் வீட்டிற்குள் ஓடினார்கள்.

என்ன தான் வெளியே சிரித்தாலும் பாருவின் முகம் ஏதோ குழப்பத்தில் இருக்குது என்று புரிந்து கொண்டார் பாக்கியம்

தன் உடை மாற்றிக் கொண்டு வந்து தன் செல்ல மகனுடன் பாரு விளையாடி கொண்டிருந்தாள். பாருவிற்கு காபி கலந்து கொண்டு வந்தார் பாக்கியம்…

“இ‌ந்தாமா காபி குடி”

பின் மெல்ல தன் பேச்சை ஆரம்பித்தார்,

” என்னாச்சு இன்னைக்கு போன இன்டர்வியூ? உனக்கு வேலை கிடைச்சிருச்சாமா?” – பாக்கியம்

“கிடைச்சிருச்சு அத்தை” – பாரு

“அப்போ ஏன்மா உன் முகம் வாட்டமா இருக்கு, என்ன குழப்பம்” – பாக்கியம்

“அ‌ந்த கம்பெனியில் இருந்து வெளியே வந்ததுல இருந்து ஒரே குழப்பமா இருக்கு என்னனு சொல்ல தெரியாதா ஒரு உணர்வு அத்தை” – பாரு

“அதுக்கு தானா முதலே சொன்னேன் நம்ம கம்பெனி இருக்கும் போது எதுக்கு வெளியே வேற கம்பெனியில் வோர்க் பண்ண போற கேட்டேன். உன் மாமாக்கு கூட இருந்து ஹெல்ப் பண்ணலாமே மா?? அது மட்டும் இல்ல நீ உனக்குன்னு இல்லாம குழந்தைக்காக இன்னொரு கல்யாணம் பண்ணிக்கோமா என்று சிறு விசும்பலுடன் கூறினார்” – பாக்கியம்

“எனக்கு நம்ம கம்பெனில வோர்க் பண்ண பிடிக்காது உங்களுக்கு தெரியாதா அத்தை??? அப்புறம் எனக்கு என் பையனும் அவனுக்கு நானும் போதும் எங்களுக்கு நடுவுல யாரும் புதுசா வேணாம் அத்தை -” பாரு

“தெரியுமா நீ எதுக்கு வர மாட்டேங்குற என்று” வெளியில் இருந்து பதில் வந்தது. “தினேஷ் பண்ண தப்புக்கு நாங்க உன்கிட்ட பல தடவை மன்னிப்பு கேட்டோம் ஆனா உனக்கு எங்களை மன்னிக்க பிடிக்கல தான” என்று கூறிக் கொண்டே உள்ளே நுழைந்தார் சிவராமன், பார்வதியின் மாமனார்..

“ஐயோ மாமா அப்படி எதுவும் இல்லை நீங்க ரெண்டு பேரும் ஒரு அப்பா அம்மா இட‌த்த‌ி‌ல் இருந்து என்னை நல்லா பார்த்துக்கிறீங்க.. இது போதும் எனக்கு உங்க மகன் சொத்து எதுவும் வேணாம், அவர் பண்ணதே போதும்” என்று கண்கள் கலங்கி அங்கு சுவற்றில் ஆணவமாக சிரித்த படியே இவர்களை பார்த்த தினேஷின் புகைப்படத்தை பார்த்தாள் பாரு..

இப்படியே இவர்கள் பேசி கொண்டு இருந்தனர். இரவு உணவுகளை முடித்து விட்டு தங்கள் அறைகளுக்குள் சென்றனர்.

அறைக்குள் வந்தவுடன் பாக்கியம் தன் கணவனிடம், “ஏங்க இவ ஏன் இப்படி இருக்கா, கால காலத்தில் இவளுக்கு இன்னொரு கல்யாணம் பண்ணனும் இருந்தா இவ இப்படி பிடி கொடுக்காம பேசுறாளேங்க” என்றார்..

“பொறுமையா இரு பாக்கியா அதான் அவன் எல்லாத்தையும் பார்த்துக்கிறேன் சொல்லிட்டானே. நாம கடவுள் கிட்ட வேண்டிக்கலாம் அவ மனசு மாறும்”….

இங்கோ பார்வதி தன் மகனை தூங்க வைத்து அவன் தூங்கும் அழகை பார்த்து ரசித்துக் கொண்டிருந்தாள், அப்படியே அவள் கட்டாய கல்யாணத்தை நினைத்து பார்த்துக் கொண்டிருந்தாள்..

பார்வதி தன் சிறு வயதில் இருக்கும் பொழுது பெற்றோர்களை ஒரு விபத்தில் சிக்கி உயிரிழந்தனர். அவர்கள் இவளுக்காக விட்டுச் சென்றது ஒரு வீடும் சில நகைகளும் மட்டுமே..

பின்பு சிவராமன் மற்றும் பாக்கியம் இவளை தங்கள் மகளைப் போல் வளர்த்து வந்தனர். சிவராமன் பாருவின் தாய் லட்சுமியின் அண்ணன். இவர் சிறு தொழில் தொடங்கி நடத்தி வந்தார்…

இ‌ந்த தம்பதியரின் ஒரே மகன் தான் தினேஷ், வெளிநாட்டிற்குச் சென்று முதுகலை பட்டப்படிப்பு படித்து முடித்தான். பின் தன் தந்தையின் தொழிலை எடுத்து நடத்தினான். தன் தந்தையை விட இவன் பன் மடங்கு லாபத்தை கொண்டு வந்தான் அந்த தொழிலில், அதுவும் சிறிது காலத்தில்.

அவன் ஆரம்பத்தில் இருந்து தன் சுயநலத்துக்காக எதையும் செய்ய கூடியவன், இவனின் பழக்க வழக்கங்கள் அனைத்தும் தவறானவை எல்லாம் அவனின் நண்பர்களின் சேர்க்கையால்….

ஆரம்பத்தில் இருந்து பாருவின் மீ்து இவனுக்கு ஒரு கண் இருந்துக் கொண்டிருந்தது ஆனால் அது காதல் இல்லை. அவளை எப்பொழுதும் ஏதாவது வம்பு இழுத்துக் கொண்டிருந்தான். அவனின் செய்கைகள் பிடிக்காததால் எப்பொழுதும் அவனை விட்டு விலகியே இருப்பாள்.

தன் அத்தை மாமாவிற்காக அவனின் எல்லா தொந்தரவையும் பொறுத்துக் கொண்டிருந்தாள்..

இப்படியே காலங்கள் சென்று கொண்டு இருந்தது, பார்வதி தன் கல்லூரி இறுதி ஆண்டில் காலடி எடுத்து வைத்த போது தான் அவள் வாழ்வில் அவனை முதன் முதலில் சந்தித்தாள் கண்டதும் காதல் வந்துவிட்டது இருவருக்கும். இவள் கல்லூரியில் கேம்பஸ் இன்டர்வியூ நடத்த வந்தான் அவனின் கம்பெனி AK எண்டர்பிரைசஸ் சார்பாக. (அந்த கம்பெனி தான் இன்று AP எண்டர்பிரைசஸாக மாறியது….)

அ‌ந்த இன்டர்வியூவில் செலக்ட் ஆகி அந்த கம்பெனியில் வேலைக்கு சேர்ந்தாள்.

இவர்கள் இருவருக்குள்ளும் அதிக பேச்சு வார்த்தைகள் இருந்தது இல்லை, பார்வையாலே தங்கள் காதலை பரிமாற்றம் செய்து கொண்டனர்…

ஒரு நாள் தினேஷ் பாருவின் அறைக்குள் சென்றான் அப்போது அவளது டைரி அவனின் கண்ணில் பட்டது அதை எடுத்து படித்தான். அதில் அவளின் பெற்றவர்கள் இறப்பை பற்றியும் அந்த வலி மற்றும் இவனின் தாய் மற்றும் தந்தை மீ்து இவள் வைத்திருக்கும் பாசத்தை பற்றியும் இருந்தது…

அப்படியே அந்த டைரியை படிக்கும் போது தினேஷ் மீதுள்ள வெறுப்பு மற்றும் அவள் காதலை பற்றி எழுதி இருந்தாள். அதைப் படித்தவுடன் தினேஷிற்கு கோவம் தலைக்கு மேல் அதிகமானது. யார் என்று தெரியாத ஒருவன் மீ்து பொறாமை கொண்டான்..

உடனே தன் பெற்றவர்களிடம் சென்று பாருவை தனக்கு திருமணம் செய்து வைக்கும் படி கேட்டுக் கொண்டான். அவர்களுக்கு இவனின் குணம் தெரிந்ததால் இதில் பார்வதியின் முழு சம்மதம் வேண்டும் என்று கூறினார்கள் அது மட்டுமில்லாமல் அவளின் சில மாற்றங்கள் அவர்கள் உணர்ந்ததால் அவள் யாரையோ விரும்புகிறாள் என்று தெரிந்து கொண்டனர்..

அதேப்போல் பாரு தன் அத்தை மாமாவிடம் தான் விரும்பும் நபரை பற்றி தெரிவித்தாள், அவர்களுக்கு அதீத மகிழ்ச்சி இதில் அவர்களும் அதற்கு சம்மதம் தெரிவித்தனர்….

முதலில் உன் காதலை அந்த பையனிடம் தெரிவிக்கும் படி கூறினர் அவனுக்கும் இதில் சம்மதம் என்றாள், அவன் வீட்டில் இருந்து முறைப்படி பெண் கேட்கும்படி சொன்னார் சிவராமன்…

அவனுக்கு தெரிந்தது அவள் சம்மதம் தெரிவிக்க மாட்டாள், கூடவே தன் பெற்றோர்களும் இதற்கு உடந்தை என்று அதனால் குறுக்கு வழியை கையாண்டான்…

இவர்கள் இங்கு மகிழ்ச்சியில் பேசிய அனை‌த்தையு‌ம் கண்களில் க்ரோதத்துடன் அனைத்தையும் கேட்டுக் கொண்டு இருந்தான் தினேஷ்…..

அ‌ந்த வாரம் இறுதியில் ஞாயிறு அன்று அனைவரும் கோவிலுக்கு சென்றனர்.. அன்று தான் தன் திட்டத்தை நிறைவேற்ற எண்ணினான். அனைவரும் கண்களை மூடி சாமி கும்பிடும் போது அந்த சந்தர்பத்தை பயன் படுத்திக் கொண்டு தான் கொண்டு வந்த தாலியை பார்வதியின் கழுத்தில் கட்டினான்..

தன் கழுத்தில் ஏதோ உரசுவது போல் தெரிய தன் கண்களை திறந்தாள் அப்போது தினேஷின் செய்கையில் கண்டு அதிர்ந்த பார்வதி அவனை அடிக்க ஆரம்பித்தாள்.

அ‌ந்த அடி விழும் சத்தத்தை கேட்ட மற்ற இருவரும் தங்களின் மகனின் செயலை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

சிவராமன் தன் மகன் என்றும் பாராமல் கோவிலில் அனைவர் முன்பும் அடித்தார்…

தங்கள் வீட்டிற்குள் வந்ததும் “ஏண்டா எப்படி பண்ண” என்று தினேஷை பார்த்து கேட்டார் கண்களில் கோவத்துடன் – சிவராமன்

“நான் உங்ககிட்ட ஏற்கனவே சொல்லி இருக்கேன் ..அவள புடிச்சிருக்கு எனக்கு கல்யாணம் பண்ணி வைங்க என்று நீங்க கேட்கல அதான் நான் இப்படி பண்ணேன்” – தினேஷ்

“டேய் அவ வேற ஒருத்தன விரும்புறா”- சிவராமன்

“எல்லாம் எனக்கு தெரியும்” என்றான் திமிருடன் தினேஷ்

“அப்போ எல்லாம் தெரிஞ்சி தான் நீ இப்படி பண்ணியா அடேய் நீ நல்லா இருக்கா மாட்டா ஒரு பொண்ணோட பாவத்தை கொட்டிக்காத” என்று கதறி அழுதாள் பாக்கியம்

“பார்வதி நீ அந்த தாலியை கழற்றி விட்டு உன் வாழ்க்கையை பாரு மா” – சிவராமன்

இங்கோ தன் வாழ்க்கை இப்படி ஒரே நாளில் நாசமானது நினைத்து அதிர்ச்சியில் அமர்ந்து இருந்தாள் கண்களில் நீருடன்… அவளுக்கு எதுவும் கேட்கவில்லை இப்பவே இந்த பூமி பிளந்து அதில் போய் விட மாட்டோமா என்று இருந்தாள்….

சிவராமனின் பேச்சை கேட்டு கோவம் கொண்ட தினேஷ் அப்படி ஏதாவது பண்ணனும் இவ நினைச்சா உங்க ரெண்டு பேரையும் உயிரோடு சமாதி ஆக்குவேன் என்று எச்சரித்து விட்டுச்சென்றான்..

அவனின் பேச்சைக் கேட்டு அனைவரும் அதிர்ந்தனர்..

யார் யாருக்கு ஆறுதல் கூறுவது என்று தெரியாமல் அனைவரும் ஒரே இடத்தில் அமர்ந்து இருந்தனர் கண்கள் கலங்கிய நிலையில்..

துக்கம் தாங்காமல் பார்வதி பாக்கியத்தின் மடியில் தலை வைத்துப் படுத்து அழுதவள் அப்படியே உறங்கியும் போனாள்..

இரவு நேரம் நெருங்கியது அனைவரும் அந்த இடத்தை விட்டு நகரவில்லை. தினேஷ் அங்கு வந்தான் “எல்லாரும் இப்போ என்ன நடந்துச்சுனு இப்படி அழுது ஸீன் கிரியேட் பண்ணுரிங்க???”

பார்வதியை பார்த்து, “ஏய் நீ இன்னும் இங்க என்ன பண்ணிட்டு இருக்க ஒழுங்கா நம்ம ரூமுக்கு வா.. இல்லன்னா உன்ன அடிச்சு இழுத்துட்டு போகுற மாதிரி இருக்கும்” என்றான். அவன் பேச்சை புரிந்துக் கொண்ட பார்வதிக்கு வயிற்றில் புளியைக் கரைத்தது போல் இருந்தது….

‘அய்யோ கடவுளே என் நிலைமை இப்படி ஒரே நாளுல மாறனுமா ‘என்று உள்ளுக்குள் அழுதாள், எதுவும் பேச விரும்பாமல் அவன் பின்னே சென்றாள்..

தினேஷ் ரூமை தாழ்ப்பாள் போட்டான். பார்வதி தன் கண்களை மூடிக் கொண்டு ஒரு மரப் பொம்மையை போல் கட்டிலில் படுத்தாள் எந்த வித உணர்ச்சியும் இல்லாமல். அவள் அருகில் வந்த தினேஷ் காய்ந்த மாடு கம்பத்தை மேய்ப்பதை போல் அவளை பிச்சி மேய்ந்தான். அத்தனை வலிகளும் அவள் பொறுத்துக் கொண்டிருந்தாள், அந்த இரவு அவளுக்கு தூங்கா இரவாக அமைந்தது…

மறுநாள் காலையில் எழுந்து குளியல் அறைக்குச் சென்றாள், தன் நிலைமையை நினைத்து கொண்டு அழுதுவிட்டாள் கண்களில் நீர் வற்ற..

அதன் பின் பார்வதி வேலைக்கு செல்லவில்லை அவளுடைய ராஜினாமா கடிதத்தை மட்டும் அனுப்பி வைத்தாள்..

இவள் வாராத காரணத்தை தெரிந்து அதிர்ந்து போனான் அவள் காதலன் ஆதித்யா கண்ணன்..

அவனுக்கு திருமணம் நடந்தது மட்டும் தெரிய வந்தது ஆனால் காரணம் தெரியாமல் போனது..

இப்படியே நாட்கள் போனது அனைவருக்கும் வலியும் வேதனையுடன்.

கல்யாணம் ஆகி இரண்டு வருடம் முடிந்த நிலையில் ஒரு நாள் பார்வதி வீட்டில் வேலை செய்யும் போது மயங்கி விழுந்தாள் பின்பு அவளை மருத்துவரிடம் சென்று பரிசோதித்து பார்த்த பொழுது தான் தெரிந்தது அவள் தாய்மை அடைந்தாள் என்று, அனைவருக்கும் மகிழ்ச்சி அளித்தது குழந்தை வரும் நேரமாவது தன் மகன் திருந்துவான் என்று அந்த பெற்றவர்கள் நினைத்தார்கள்…

வீட்டிற்குள் வந்ததும் அந்த மகிழ்ச்சியான செய்தியை தன் மகனிடம் கூறினர், அதை கேட்டு சிறிதும் அலட்டிக் கொள்ளாமல் அவர்களின் தலையில் ஒரு பெரிய குண்டைத் தூக்கிப் போட்டான் தினேஷ்…

“இப்போதைக்கு குழந்தை வேண்டாம் அதை கலைச்சுடுங்க, இன்னும் ரெண்டு வருஷம் கழிச்சு பார்த்துக்கலாம் “என்றான் தினேஷ்

அதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவன் தாய் “டேய் அது உன் ரத்தம் டா அவளே ரெண்டு வருஷம் கழிச்சு இப்போ தான் உண்டாகி இருக்கா அதை போய் கலைக்க சொல்றியே உனக்கு மனசாட்சியே இல்லையா டா???” – பாக்கியா

“ஓ, அவளுக்கு குழந்தை உண்டாக லேட் ஆகுது நினைச்சிங்களா, ஹு ஹம் நான் தான் அவளுக்கு பாலில் குழந்தை தள்ளிப் போட மாத்திரையை கலந்து கொடுத்தேன்” – தினேஷ்

அனைவரும் பேச்சற்று

இருந்தனர் அதிர்ச்சியில்…..

“ஆமாடா இத நான் இருபத்தி ஆறு வருஷத்துக்கு முன்னாடி பண்ணிருந்தா இன்னைக்கு நீ இப்படி பாவத்திற்கு மேல் பாவம் பண்ணிருக்க மாட்ட டா” என்று தலையில் அடித்துக் கொண்டு அழுதார் பாக்கியா.

“தோ பாருங்க நான் பிசினஸ் விஷயமா வெளியே போயிட்டு வரப் போறேன் அதுக்குள்ள இவளை ஹாஸ்பிடல் கூட்டிட்டு போய் எல்லாத்தையும் கலைச்சுடுங்க” – தினேஷ்

அப்படி கூறிவிட்டு வெளியில் சென்றான் தினேஷ்..

இ‌ந்த அரக்கனால், இனிமேல் எங்களுக்கு என்ன நடந்தாலும் பரவாயில்லை தங்கள் குடும்ப வாரிசுக்கு எதுவும் ஆக விடாமல் பார்த்துக்க கடவுளே என்று வேண்டினர்கள் அந்த பெரியவர்கள்.

அவர்களின் வேண்டுதலுக்கு செவி சாய்த்த அந்தக் கடவுள் தினேஷ் சென்ற காரில் ப்ரேக் பிடிபடாமல் போய் விட்டது. அந்த வாகனம் ஒரு மரத்தில் மோதி வெடித்து சிதறியது அவன் எலும்பு கூட மிஞ்சாமல்..

அவன் இறந்த செய்தி கேட்டு அவனை பெற்றவர்கள் ஒரு துளி கண்ணீர் கூட சிந்தவில்லை, அவனுக்கு செய்ய வேண்டிய அனைத்து காரியங்களும் செய்து முடித்து விட்டு, தங்கள் மருமகளையும் பேரப் பிள்ளையையும் கவனிக்க ஆரம்பித்தனர்..

இப்படியே நாட்கள் உருண்டோடின.. பார்வதிக்கு பிரசவ வலி ஏற்பட்டது, ஓர் அழகான மகனை ஈன்றெடுத்தாள்…

சிவராமனுக்கும் பாக்கியத்துக்கும் தங்கள் மகனை சரியாக வளர்க்க தவறி விட்டோம் இனிமேல் தங்கள் பேரனை நல்ல படியாக வளர்க்க வேண்டும் என்று முடிவெடுத்தனர். அது மட்டுமில்லாமல் தினேஷ் தான் அந்த குழந்தையின் தந்தை என்று சொல்லாமல் வளர்க்க வேண்டும் என்று எண்ணினர்….

இவர்கள் மூவருக்கும் அர்ஜூன் தான் அவர்களின் உலகம் என்று வாழ்ந்து வந்தனர்…

இனி –

தன் கசப்பான கடந்த காலத்தை நினைத்து தன் குழந்தையின் முகத்தை பார்த்துக் கொண்டு இருந்தாள்..அப்படியே தன் குழந்தையை அணைத்துக் கொண்டு உறங்கினாள்..

இங்கு ஆதியின் வீட்டில் –

தன் நண்பன் தீபக்கிடம் அவள் வாழ்வில் நடந்த அனைத்தையுமே கூறினான் ஆதி ..

“பாவம் டா அந்த பொண்ணு இவ்வளவு கஷ்டப்பட்டு இருக்காளா அவ வாழ்க்கையில” என்று வருந்தினான்.” சரிடா உனக்கு எப்படி இந்த விஷயம் தெரிய வந்தது” என்று கேட்டான் தீபக்

“ஹம் சொல்றேன்டா கொஞ்ச நாளைக்கு முன்னாடி ஒரு ஆல் ஓவர் சென்னை பிசினஸ் மீட்டிங் போயிருந்தேன்.. அந்த மீட்டிங்ல தான் சிவராமன் அவர மீட் பண்ணேன் அவருக்கு என்ன பத்தி நல்லா தெரிஞ்சிருக்கு அல்றேடி பாரு வேற சொல்லி இருக்கா. அவர் என்கிட்ட கொஞ்சம் பெர்சனலா மீட் பண்ணனும் சொன்னார். அப்போ தான் அவ லைஃப்ல நடந்த விஷயத்த சொன்னார்.

உங்களுக்கு இன்னும் பார்வதி மேல விருப்பம் இருக்கானு கேட்டார்.

ஆமா சொன்னேன் அவளுக்கு நல்ல ஒரு வாழ்க்கை கொடுக்க ஆசைப் படுகிறேன் அது மட்டும் இல்லாமல் அவ மகன் இனிமேல் எனக்கும் மகன், அவர கவலை பட வேண்டாம் சொல்லிட்டேன். ஆனா அவளுக்கு கல்யாணத்து மேல விருப்பம் இல்லை..”

“சரி ஆனா உங்க வீட்டுல பாருவ” என்று இழுத்தான் தீபக்

“அவங்க எல்லாருக்கும் இதுல சம்மதம்.. பாரு மட்டும் சரி சொன்னா அடுத்த முகூர்த்தத்தில் கல்யாணம் வெச்சுக்கலாம் சொன்னாங்க” என்று மகிழ்ச்சியுடன் சொன்னான் ஆதி

ஆச்சரியமாக ஆதியை பார்த்தான் தீபக்….

“டேய் வாயால லவ் சொல்லி பார்க், பீச் போய் சுத்துற பேர் தான் லவ் இல்ல எங்களுக்குள்ள எந்த பேச்சு இல்லாமல் இருக்கலாம் ஆனா எங்க கண்கள் பேசும்டா எப்போதும். நாங்க ஒருத்தர ஒருத்தர் எவ்வளவு லவ் பண்றோம் எங்களுக்கு தெரியும். அதான் அவள நினைச்சு இத்தனை வருஷம் கல்யாணம் பண்ணிக்கல….

இப்போ அவ ஒரு கஷ்டத்துல இருக்கும் போது எப்படி அவள விட்டுட்டு போக முடியும் சொல்லு, அது மட்டும் இல்ல டெய்லி அர்ஜுன் இருக்குற பிளே ஸ்கூல் போய் அவன மீட் பண்ணி சாக்லேட், ஐஸ் கிரீம் எல்லாம் வாங்கி தரேன் நான் தான் அவன் அப்பானு ரிஜிஸ்டர் பண்ணி வெச்சிருக்கேன்” என்றான் ஆதி

“டேய் நாளைக்கு அந்த குட்டி பையன் பார்வதி கிட்ட ஏதாவது சொல்லி வெச்சா என்ன பண்ணுவ” ஷாக்காக கேட்டான் தீபக்

“ஹா ஹா ஹா! யூ டோன்ட் வோரி அதுக்கெல்லாம் ட்ரைன் பண்ணிட்டேன்” நான் என்று கண் அடித்தான் – ஆதி

தன் நண்பனின் நல்லெண்ணத்தை புரிந்து கொண்டான் தீபக், இதுல கண்டிப்பா அவனுக்கு ஹெல்ப் பண்றேன் சொன்னான்..

இரு தினங்கள் சென்றது..

காலையில் எழுந்ததும் பார்வதி வீட்டு வேலைகள் எல்லாம் முடித்துவிட்டு தன் மகனையும் குளிப்பாட்டி அவனுக்கு தேவையானதை தயார் செய்து பிளே ஸ்கூலில் விட்டுட்டு தன் அலுவலகத்திற்கு சென்றாள்.

அங்கு தீபக்கை பார்த்தாள்…

“குட் மார்னிங் சார்” என்றாள். பதிலுக்கு “குட் மார்னிங் பார்வதி “என்றான்.

“இன்னைக்கு உங்க வோர்க் பாக்குறதுக்கு முன்னாடி நம்ம பாஸ் போய் மீட் பண்ணுவோம்

வாங்க “என்று அழைத்துச் சென்றான்.

அ‌ந்த அறையின் கதவை தட்டிக் கொண்டு உள்ளே சென்றார்கள் இருவரும்…

ஆதியை பார்த்ததும் ஒரு பக்கம் மகிழ்ச்சி மறுபக்கம் அதிர்ச்சி அடைந்தாள் பார்வதி. இருக்காதா பின்னே காதல் கொண்ட மனது ஆச்சே சொன்னால் தான் காதலா என்ன..

அவளைப் பார்த்ததும் எந்த வித உணர்ச்சி இல்லாமல், அவர்களை அமரச் சொன்னான் – ஆதி

“சார் இவங்க உங்க நியூ பிஏ” – தீபக்

“ஓ அப்படியா, உங்க பெயர் என்ன” என்றான் – ஆதி

இங்கு என்ன நடக்குது என்று புரியாமல் பேந்த பேந்த முழித்தாள் பார்வதி.

‘இவரு என் ஆதி தானா பின்ன ஏன் இப்படி பேசறாரு, ஒருவேளை என்னை மறந்துட்டாரா’ என்று யோசித்துக் கொண்டு அவன் கண்களை பார்த்தாள் அதில் தெரிந்த ஏதோ ஒன்று அவளால் அவனை பார்க்க முடியாமல் தலை கவிழ்ந்தாள்…

இவர்களுக்கு தனிமை தர வேண்டி தனக்கு இல்லாத வேலை இருப்பதாகச் சொல்லி தீபக் நகர்ந்து சென்றான்…

“இப்படியே தலை கவிழ்ந்து உட்கார்ந்தா என்ன அர்த்தம், நான் என்ன பார்க்க பேய் மாதிரி இருக்கேனா “என்று குறும்புடன் பேசினான்

அவன் பேச்சைக் கேட்டு துணுக்குற்று அவனைப் பார்த்தாள். இவருக்கு இப்படி எல்லாம் கூட பேசத் தெரியுமா என்ற ரீதியில்…

அவள் எண்ண ஓட்டங்களை புரிந்து கொண்டு மனதில் நினைத்தான் “அன்னைக்கு நான் பேசிருந்தா இன்னைக்கு நீ இவ்வளவு கஷ்ட பட்டிருக்க மாட்ட பாரு, அதான் இனிமேல் உன்ன மிஸ் பண்ண மாட்டேன் உன்கிட்ட பேசி பேசி வழிக்கு கொண்டு வருவேன் “- ஆதி

“நத்திங் சார் பயம் இல்லை உங்கள பார்த்தா “என்றாள் பாரு

“ஹம் சரி நீங்க போகலாம், அங்க தீபக் கிட்ட உங்க வோர்க் ஷெட்யூல் பத்தி கேட்டு தெரிஞ்சிக்கொங்க, ஆல் தி பெஸ்ட்” என்று கை நீட்டினான் – ஆதி

பதிலுக்கு கைக் குலுக்கி “தாங்க்ஸ் “என்றாள் பாரு

ஆதியின் அறையை விட்டு வெளியே வந்த பார்வதி தீபக்கை சந்தித்தாள்….

அவளின் வேலையை பற்றி விவரித்தான் ஆதியின் மீட்டிங் மற்றும் வோர்க் ஷெட்யூல் டெய்லி இன்ஃபார்ம் பண்ணனும், மீட்டிங்க்கு கூடவே போகனும் அது வெளியூர் ஆனாலும் சரி என்று ஒரு பெரிய லிஸ்ட் குடுத்தான்.

இதை கேட்ட பாரு சந்தோசம் அடைந்தாள், இனிமேல் என் ஆதி கூட இருக்க போறேன் என்று நினைத்தாள்., அடுத்த நொடியில் இது என்னது என் நிலைமை என்ன நான் போய் இதுக்கு எல்லாம் ஆசை படலாமா இது ரொம்ப தப்பு, இனி ஆதி கிட்ட கொஞ்சம் பார்த்து பேசணும் அவர் கண்ண கூட பார்க்க கூடாது. அவருக்கு கல்யாணம் கூட ஆயிருக்கலாம் தேவை இல்லாம நினைக்க வேண்டாம் என்று தன் மனதிற்கு கடிவாளம் போட்டாள்….

“என்ன மேடம் யோசனை” என்று கேட்டான் தீபக்..

“சாரி சார் சொல்லுங்க” என்றாள், பின்பு அனைத்தையும் குறித்துக் கொண்டாள்…

மதியம் மேல் ஆதி தன் அறையில் இருந்து வெளியே சென்றான் அர்ஜுனை காணச் சென்றான் பின் ஒரு மணி நேரம் கழித்து வந்து தன் வேலைகளை பார்த்தான்…

இவை அனைத்தையும் பார்வதி பார்த்துக் கொண்டு இருந்தாள்,ஆனால் அவன் பார்க்கும் போது தலை குனிந்து கொள்வாள். ஆதியின் அறையில் தான் பார்வதியின் இருக்கையை போட்டனர் அப்போ தான் லவ் சீக்கிரம் வருமா டெய்லி பார்த்துக் கொண்டு இருந்தா அந்த தீபக் ஐடியா இது..

இப்படியே நாட்கள் சென்று கொண்டு இருந்தது…

வேலை நேரம் தவிர மற்ற நேரத்தில் பார்வதியை இம்ப்ரஸ் பண்ண சில முயற்சிகள் மேற்கொண்டான். அதில் சிலது பார்வதி என்ன கலர் புடவை கட்டிக் கொண்டு வரளோ அதே நிறத்தில் ஷர்ட் அணிவது, ஒரே நேரத்தில் லிப்ட்டில் வருவது, அவள் கீழே தடுக்கி விழும் போது பிடிப்பது என்று சில பல காமெடிகள் பண்ணிக் கொண்டு இருந்தான்..

ஆதியின் இச்செயல்கள் பார்வதிக்கு அவன் மீ்து இருந்த காதல் திரும்பவும் பூக்க ஆரம்பித்தது ஆனால் அவளின் தற்போதைய நிலைமை அவன் மீ்து எழும் காதலை அணைப் போட்டு மூடி வைத்தாள்..

ஆதிக்கு நன்றாக தெரிகிறது அவள் கண்களில் தெரியும் அவன் மீ்து உள்ள காதலை ஆனால் அதை ஒப்பு கொள்ள அவளுக்கு என்ன பிரச்னை என்று தான் புரியவில்லை..

ஆதி பார்வதியை இம்ப்ரஸ் பண்ண பல வழிகள் முயற்சி பண்ணா கூட எந்த இடத்திலும் பார்வதியை வழிக்கு கொண்டு வர முடியவில்லை எந்த இடத்துல இந்த பிரச்சனை என்று யோசித்தான் அவனுக்கு அது பிடிபட்டு விட்டது….

இதற்கு ஒரே வழி அவளிடம் நேரடியாக பேச வேண்டும் என்று முடிவெடுத்தான்…..

ஒரு மீட்டிங்க்கு செல்ல வேண்டும் என்று கூறி அவளை ஒரு ரிசார்ட் கூட்டி சென்றான். மீட்டிங் தொடங்க இன்னும் ஒரு மணி நேரம் இருக்கு என்று சொல்லி தங்களுக்கு ஒரு அறை எடுத்தான்…

அவர்கள் இருவருக்கும் காபி ஆர்டர் செய்தான். பார்வதியை உட்கார சொல்லி அவளுக்கு காபி குடுத்தான். அந்த அறையில் இருக்கும் பால்கனியில் இருவரும் நின்று அங்கு இருந்த கடல் அலைகளை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தனர்..

ஆதி தன் பேச்சை ஆரம்பித்தான் “பாரு அந்த கடல் அலைகள் கரைக்கு வரது பார்க்கும் போது உனக்கு என்ன தோணுது” என்று கேட்டான்….

“அ‌ந்த அலைகள் கரைக்கு வரும் பொழுது ஏதோ சொல்ல வரா மாதிரி இருக்கு ஆனா அதனால சொல்ல முடியாம திரும்பவும் தன் பழைய நிலைக்கே செல்லுது ஆதி” என்றாள்….

” ஹம் ஆமா பார்வதி, அந்த அலை போல தான் நானும் என் நிலைமையும், ரொம்ப நாளா உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லனும் தான் மனசு சொல்லுது ஆனா பக்கத்துல வரும் போது சொல்ல முடியல” என்றான்…..

அவன் கண்களையே பார்த்துக் கொண்டு இருந்தாள்.

அவன் ஒரு பெரு மூச்சு விட்டு “ஐ லவ் யூ பாரு” என்றான்…

“சாரி ஆதி இது நமக்கு செட் ஆகாது.. என் நிலைமை வேற பிளீஸ் புரிஞ்சிக்க ஆதி என்னால கல்யாணம் பத்தி திரும்ப நினைக்க முடியாது வாழ்க்கையில் ஒரு வாட்டி பட்டது போதும் இனிமேல் வேணாம் எனக்கு என் பையன் இருக்கான் அவன் போதும், நீங்க உங்க லைப் பாருங்க” என்றாள்..

“ஹே நீ தான் என் வாழ்க்கை உன்ன நினைச்சு தான் இத்தன வருடம் கல்யாணம் பண்ணிக்கல, உன்ன தவிர வேற யாரையும் என்னால மனைவி இடத்துல வெச்சு பார்க்க முடியாது. உனக்கு என்ன ப்ராப்ளம் இப்ப நீ இருக்குற இந்த கோலம் தானா, இது ஒரு விஷயமே இல்லை. முதல உனக்கு நடந்தது கல்யாணமே இல்லை. ரெண்டு மனசும் ஒண்ணா சேர்ந்தா தான் காதல், கல்யாணம் எல்லாம், அந்த இடியட் உன் விருப்பம் இல்லாம கட்டுனத போய் நீ சீரியஸா எடுக்க தேவை இல்ல. இது ஒரு விஷயமா எடுத்து உன்ன என் லைப்ல இருந்து திரும்ப மிஸ் பண்ண விரும்பல” என்றான் கண்களில் கண்ணீருடன்…

“போதும் ஆதி நிறுத்துங்க.. என் மனசு யாரையும் ஏத்துக்காது, என் மனசு ஏற்க்கனவே செத்துப் போயிடுச்சு பிளீஸ் இதுக்கு மேல இத பத்தி பேச வேணாம் நாம கிளம்பலாம் ஆதி “என்று கதறி அழ ஆரம்பித்தாள்..

அவள் கைகளைப் பிடித்து அருகில் இழுத்தான், அவன் இழுத்த விதத்தில் அவனின் நெஞ்சின் மேல் விழுந்தாள்..

அவள் முகத்தை அருகில் கொண்டு வந்து “என் கண்ண பார்த்து சொல்லு உனக்கு என்ன பிடிக்காதா?? உன் மனசுல என்னைக்குமே நான் இருந்தது இல்லையா சொல்லு டி” என்றான்…

அவளால் அவன் கண்களை பார்க்க திராணி இல்லாமல் அவன் நெஞ்சிலே சாய்ந்து அழுக ஆரம்பித்தாள் இத்தனை வருடம் அவ எதிர்ப்பார்த்த இடம் அவன் நெஞ்சு….

அவன் நெஞ்சு முழுவதும் அவள் கண்ணீரால் நனைந்தது. அதைப் பார்க்க முடியாமல் அவளை அருகில் கொண்டு வந்து அவள் கண்களை பார்த்துக் கொண்டு இருந்தான்.

என்ன நினைத்தானோ அவள் கண்களை பார்த்துக் கொண்டே அவள் இதழ்களை சிறைச் செய்தான். நொடிகள் நிமிடங்கள் ஆகின ஆனால் அவள் இதழ்கள் விடு படவில்லை.. அந்த முத்தத்தில் காமம் இல்லை, இத்தனை வருடம் சொல்லாமல் போன காதலும் அவனின் அன்பும் மட்டும் தான் தெரிந்தது அவளுக்கு. அவளும் அதை ஏற்றுக் கொண்டாள் கண்களை மூடி, அதிலே அவள் காதலையும் சொல்லி விட்டாள்…

ஆதியின் தொலைபேசியின் சத்தத்தில் இருவரும் தங்கள் சுயநினைவிற்கு வந்தனர்

பார்வதிக்கு வெட்கம் ஆட்க் கொண்டது அவன் முகத்தை பாராமல் திரும்பிக் கொண்டாள்..

அவளின் வெட்கத்தை ரசித்துக் கொண்டே அந்த கால் உயிர்ப்பித்தான், எதிர்முனையில் தீபக் “என்னடா மச்சான் ஆச்சு” என்று கேட்டான்.

“ஹம் எல்லாம் ஓகே ஆச்சு லூசு ஃபர்ஸ்ட் கால் கட் பண்ணுடா” என்று பல்லைக் கடித்துக் கொண்டு கூறினான்..

“டேய் நிஜமாவடா சூப்பர் டா மச்சான் வாழ்த்துக்கள்” என்றான். “சரிடா, நான் ஃபர்ஸ்ட் உங்க வீட்டுக்கும் பார்வதி வீட்டுக்கும் கால் பண்ணி சொல்லி அவங்கள உன் வீட்டுக்கு வர சொல்லிடுறேன்” என்றான்..

தொலைபேசி வைத்து விட்டு திரும்பி பார்வதியை இறுக்கி அணைத்து கொண்டான்… பார்வதி கேட்டாள்” உனக்கு எப்படி என் வாழ்க்கையில் நட‌ந்த விஷயம் தெரிஞ்சது ஆதி? …..

பின்பு ஆதி, சிவராமன் தன்னை சந்தித்த விஷயம் மற்றும் ஆதி தினமும் அர்ஜுனை சந்திப்பது அனை‌த்தையு‌ம் கூறினான்.

“என்ன சொல்லிறிங்க ஆதி, அர்ஜுனை பார்த்திங்களா?? அதான் டெய்லி லஞ்ச் டைம்ல வெளியே போயிட்டு வர்றீங்களா?” என்று முறைத்துப் பார்த்தாள்…..

“ஹம் “என்று தலை ஆட்டி சிரித்தான்..

“அவன் கூட ஒரு வார்த்தை இத பத்தி சொல்லல பார்த்திங்களா” என்று கோபித்துக் கொண்டாள்….

“அடியே பொண்டாட்டி நம்ம பையன எதுவும் சொல்லாத, நான் தான் அவன்கிட்ட சொல்ல வேண்டாம் சொன்னேன் தெரியுமா. அதான் குழந்தை எதுவும் சொல்லல” என்று கண்ணடித்து சிரித்தான்..

“அது சரி மிஸ்டர்.ஆதி அது என்ன பொண்டாட்டி னு சந்துல சிந்து பாடுரீங்க” என்று தன் ஒற்றை புருவத்தை உயர்த்திக் கொண்டு கேட்டாள்…

“அதுவாடி என் செல்லக்குட்டி நமக்கு அல்றேடி மேரேஜ் முடிஞ்சு அதை ரிஜிஸ்டரும் பண்ணிட்டேன்” என்றான் சிரித்துக் கொண்டே….

“ஐயோ ஆதி ஆர் யூ சீரியஸ்??? இது எப்போ நடந்தது எனக்கு தெரியாம??”

“ஹம் அதுவா நீ இன்டர்வியூக்கு வந்த அன்னைக்கே உன்கிட்ட காண்ட்ராக்ட் பேப்பர்ஸ்ல சைன் பண்ணும் போதே நம்ம மேரேஜ் டாக்குமெண்டஸ் உள்ள வெச்சு சைன் வாங்கிட்டேன்” என்று கேலியாக சிரித்தான் அவளை பார்த்து..

“இது எதுக்கு இப்படி பண்ணிங்க ஆதி” என்று கேட்டாள்…

“அதுவா ஒருவேளை உன்ன சமாதானம் பண்ண முடியாம போச்சுனா அதுக்கு தான் எதுக்கும் முன் எச்சரிக்கையா நம்ம மேரேஜ் ரிஜிஸ்டர் பண்ணிட்டேன்… சிவா அப்பா வேற உனக்கு மேரேஜ் பண்ண விருப்பம் இல்ல சொன்னாரா அதான் இந்த ஏற்பாடு..”

அவன் சொன்னாவுடன் பார்வதியின் முகம் சிறிதாக மாறியது, “ஆமாம் ஆதி அந்த தினேஷ் அவனால பட்ட கஷ்டம் அப்படி” என்று கண் கலங்கினாள்..

“சரி அதை விடு பொண்டாட்டி” என்று கொஞ்சினான்….

அவன் கொஞ்சலில் சற்று சிவந்த அவள் முகம் அதை மறைக்கும் முயற்சியில் பேச ஆரம்பித்தாள், “ஆதி எனக்கு மயக்கமே வருது வேற என்ன எல்லாம் பண்ணி வெச்சு இருக்கிங்க அதையும் சொல்லுங்க மொத்தமா மயக்கம் போடுறேன்” என்றாள் கேலியாய்….

அவள் செயலில் சிரிப்பை அடக்க முடியாமல் தவித்தான் “அடியேய் நான் வேறெதுவும் பண்ணல போதுமா” என்றான் சிரித்துக் கொண்டே..

“சரிடி பொண்டாட்டி வாங்க நமக்காக வீட்டுல எல்லாரும் வெயிட் பண்ணறாங்க..”

இருவரும் கிளம்பி சென்றனர்..

இவர்களை ஆரத்தி எடுத்து வீட்டினுள் வரவேற்றனர்…

அர்ஜூன் அப்பா என்று ஆதியை கட்டிக் கொண்டு முத்த மழை பெய்தான்..

“டேய் லட்டு அப்பா வந்ததும் இந்த அம்மாவ மறந்துட்டல” என்றாள் பொய் கோபத்துடன்….

“ஐயோ அம்மா அப்படி இல்ல” என்று ஆதியிடம் இருந்து பார்வதியிடம் தாவினான். தன் தாயை அணைத்துக் கொண்டான்…

இவர்களின் பாசத்தை பார்த்து பெரியவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்…

அடுத்த முகூர்த்தத்தில் அனைவரின் ஆசிர்வாதத்துடன் இவர்களின் திருமணம் வெகு விமர்சையாக நடந்து….

இவர்களின் வாழ்க்கை இனிதாய் பயணிக்கும்……

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *