பார்க்காமலே – ஒரு பக்க கதை

 

மாலினிக்கு சாட்டிங்கில் பழக்கமானான் தியானேஷ். சாட்டிங் பழக்கம் அவர்களை ஒருவரை ஒருவர் காதலிக்கும் நிலைக்கு கொண்டு விட்டிருந்தது. மாலினியின் தோழி கீதா அவளை எச்சரித்தாள்.

படு கிழங்கள்கூட இப்படி சாட்டிங்கில் ஏதாவது இளைஞன் படத்தைப் போட்டு இளம்பெண்களிடம் ஜொள்விட்டு பேசுவதாக

ஆனால் மாலினி நம்புவதாக இல்லை. ”வெப் கேமராவில் உன் தியானேஷை வரச் சொல்லுடி” என்றதற்கு அவன் ‘நாம் பார்க்காமலேயே லவ் பண்ணுவோம், இறுதியில் சந்திப்போம்” என்று கூறவும் மாலினிக்கும் சந்தேகம் தட்டியது.

கீதாவிடம் ஐடியா கேட்டாள்.

கீதா ஒரு ஐடியா கூறினாள். கம்ப்யூட்டரில் இல்லாமல் உங்கள் கைப்பட ஒரு கடிதம் அனுப்புங்கள் என்று மெசேஜ் தட்டச் சொன்னாள். அவனும் அனுப்புவதாகச் சொல்லி மெசேஜ் அனுப்பினான்.

இரண்டு நாளில் காதல் ரசம் சொட்டச் சொட்ட கடிதம் வந்தது.

கடிதத்தைப் படித்த கீதா சொன்னாள்.

”அடியேய் உன் ஆளூ ஆதாம் ஏவாளுக்குப் பொறந்த மூத்த பையன்டி, வயசு எப்படியும் அறுபதுக்கு மேலிருக்கும்”

எப்படிச் சொல்றே?

தமிழ் எழுத்தை உன் ஆளு எப்படி எழுதியிருக்கிறார் பாரு. எழுத்துச் சீர்திருத்தம் வர்றதுக்கு முன்னாடி வர்ற முறையில இதை பயன்படுத்திருக்கிறார். நம்ம ஏஜ் பசங்க இப்படி எழுதவே மாட்டாங்க”

என்று கீதா விளக்கவும் , கம்ப்யூட்டரில் அமர்ந்து அந்த ஜொள் ‘கிழவனுக்கு’ கெட்ட கெட்ட வார்த்தையில் மெயிலை தட்ட ஆரம்பித்தாள் மாலினி

- வி.சகிதா முருகன் (ஜனவரி 2013) 

தொடர்புடைய சிறுகதைகள்
தெரியணும்கிறது தெரியாம இருக்கக்கூடாது!
எனக்கு எப்பம்மா மீசை முளைக்கும்? அப்பா மாதிரி நான் எப்போ ஷேவிங் பண்ணிப்பேன் என்று அப்பாவியாய் கேட்கும் 12 வயது மகனிடம் நான் ஏடாகூடமாக ரியாக்டக செய்துவிடுவேன் என்று கலவரத்துடன் பார்த்தார் சுதாகர். “இன்னும் இரண்டு வருஷத்தில் சூப்பரா உனக்கு மீசை முளைக்கும், ...
மேலும் கதையை படிக்க...
அனுபமாவுக்கு இருபது வயது. எம்பிஏ படித்துக் கொண்டிருக்கிறாள். பார்ப்பதற்கு முகம் மட்டும் லட்சணம். ஆனால் உடம்பு வாளிப்பாக, புஷ்டியாக இருக்கும். எப்போதும் எதையாவது தின்றுகொண்டே இருப்பாள். அவளது வாய் அசைந்து கொண்டே இருக்கும். ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் ஆறு முறையாவது சாப்பிடுவாள். அது ...
மேலும் கதையை படிக்க...
காதலர்களின் சொர்க்கமான மெரீனா கடற்கரையில் முத்தமிட்டுக் கொண்டிருக்கும் காதலர்களுக்கும், காதலரைப் போல் காட்சியமைத்துக் கொண்ட கயவர்களுக்கும் இடையில் செம்மேகமும், சிவப்புக் கம்பளக் கடலும் ஒன்றோடொன்று முத்தமிட்டுக் கொண்டிருந்ததை ரசித்த படியே இரு தோள்கள் மட்டும் சற்று உரசிய படி இருவர் அமர்ந்திருந்தனர். ...
மேலும் கதையை படிக்க...
கதவு தட்டப் பட்டது..... கண்கள் எரிய... மெல்லத் திறந்தவன்... கதவு விரிய பார்த்தான்..... திரும்பி மேசையில் இருந்த கடிகாரத்தில் நேரம் பார்த்தான்... "ஓ...வெண்பனி வந்துட்டா போல....."- என்று மனதுக்குள் துள்ளிய கன்னியை திறந்தபடியே எழுந்து ஓடிச் சென்று கதவைத் திறந்தான்..... ஒரே மூச்சில். கதவைத் திறந்த ...
மேலும் கதையை படிக்க...
வானத்து சூரியன் மேகத்துக்குள் தன்னை மறைத்துகொண்டிருக்கும் போது பரபரப்பு இன்றி இயங்கி கொண்டிருந்த சாலையில் வேகமாக டூவிலரில் சந்துக்குள் இருந்து வந்தவனை மறைத்தார் முனியாண்டி எங்கடா போற?!. போலீஸ் நிக்குது எங்க பாத்தாலும் நீ எதுக்கு பைக்க எடுத்துக்கிட்டு இவ்ளோ வேகமா ...
மேலும் கதையை படிக்க...
‘‘அடுத்து என்ன நடந்திருக்கணும்னா...’’ நந்தகுமாரை ஏதாவது பத்திரிகையிலிருந்து அந்தரங்க சர்வேக்காக அணுகலாம். முதல் அனுபவம் எந்த வயதில் கிடைத்தது? சிநேகிதிகளை மாற்றிக்கொண்டு இருக்கிறீர்களா? இதுவரை எத்தனை பேருடன் நெருக்கம்? போன்ற கேள்விகளுக்கு அவனால் ஆராய்ச்சியாளர்களைத் திடுக்கிடவைக்க முடியும். ‘‘இன்பம், பரவசம், சந்தோஷம்... இந்த வார்த்தைகளுக்கெல்லாம் ...
மேலும் கதையை படிக்க...
‘‘மிஸ்டர் குமாரசாமி... நீங்க எப்படியாவது முப்பது லட்சத்தை ரெடி பண்ணிக் கொண்டு வாங்க. கபாலிகிட்ட பணத்தைக் குடுக்கும்போது, ஒளிஞ்சிருக்கிற நாங்க அவனைப் பிடிச்சிடுறோம்’’ என்றார் இன்ஸ்பெக்டர். ‘‘வெறும் பேப்பர உள்ள வச்சு மேல சில ரூபாய்களை வைக்கட்டுமா சார்?’’ - குமாரசாமி ...
மேலும் கதையை படிக்க...
நாலைந்து நாட்களாகத் தெருத் தெருவாகத் திரிந்தும் ஓர் எச்சில் இலை கூடக் கிடைக்கவில்லை ஒரு கிழட்டு நாய்க்கு. அப்படியே கிடைத்தாலும் மற்ற நாய்களுடன் போட்டியிட்டு அதைத் தின்ன முடியவில்லை அதனால். ஆகவே பசி ஒரு பக்கமும், வயோதிகத்தால் ஏற்பட்ட வாட்டம் இன்னொரு ...
மேலும் கதையை படிக்க...
லேடீஸ் கிளப்பிலிருந்து கொண்டு வந்திருந்த மேகஸினை ரம்யா சுவாரசியமாகப் படித்துக் கொண்டிருக்கையில் அவளது பத்து வயது மகன் ராகுல் சதா பேச்சுக் கொடுத்தவாறே இருந்தான். அவன் வாயை மூட எண்ணியவள், மேகஸினிலிருந்து உலகப் படம் ஒன்றைக் கிழித்தெடுத்து, கத்திரியால் அதைப் பல துண்டுகளாக ...
மேலும் கதையை படிக்க...
1990 வினோத், ஆசிரியர் மறுநாள் எழுதிக் கொண்டு வரச்சொன்ன பொதுக்கட்டுரையை எழுதி முடித்து விட்டு நிமிர்ந்தான். பின்னால் நிழலாடியது ராகுல்! “வினோத் சார் சொன்ன கட்டுரை எழுதிட்டியா?’ “முடிச்சிட்டேன் ராகுல். ஆமாம், ஒவ்வொரு முறையும் அடுத்தவங்க கட்டுரையை காப்பியடிச்சி எழுதிக்கிறே. நீயா முயற்சி செய்து, கற்பனை பண்ணி ...
மேலும் கதையை படிக்க...
தெரியணும்கிறது தெரியாம இருக்கக்கூடாது!
சாப்பாட்டுக் காதல்
காதலும் கோலமும்
யுத்தன்
ஊரடங்கு!
‘‘அடுத்து என்ன நடந்திருக்கணும்னா…’’
எத்தன் – ஒரு பக்க கதை
சமாதானம் – ஒரு பக்க கதை
உலகம் – ஒரு பக்க கதை
கற்றது – ஒரு பக்க கதை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)