நீயில்லாமல் நானுண்டு

0
கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: July 4, 2024
பார்வையிட்டோர்: 10,178 
 
 

(ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“பஞ்சாயத்தில் உன்னை கல்யாணம் பண்ணச் சொன்னால் நான் கண்டிப்பாக கட்டிக் கொள்ள வேண்டுமா? செல்லம்மா! நான் சொல்வதைக் கேள். திரும்பவும் சொல்லிக் கொள்கிறேன். நான் உன்னை வச்சிக்கிறேன், நான் என் அத்தை மகளை லட்சக்கணக்கான சொத்தோடு கல்யாணம் பண்ணிக்கிறேன்” என்றான் நாராயண்.

“நீ எல்லாம் ஒரு ஆம்பிளை. என்னைக் கல்யாணம் பண்ணிக் கொள்கிறேன் என்று எத்தனை முறை ஆசை காட்டினாய். இப்போ பணத்திற்காக அத்தைப் பொண்ணைக் கல்யாணம் பண்ணிக் கொள்ளப் போகிறாய், பஞ்சாயத்தில் உன்னை ஊரோடு சேர்த்துக் கொள்வார்களர் என்ன?” என்று கோபப்பட்டாள் செல்லம்மா.

“உலகத்திலே வேறே இடமே இல்லையாக்கும், செல்லம்மா?. நான் சொல்றதை கேள். என் அத்தை மகளை கட்டிக்கிட்டாலும், உன்னை வச்சிப் பார்த்துக்கிறேன். ஏற்கனவே நீ எங்கூட சுத்தினவ என்று ஊர் பூரா தெரிஞ்ச விஷயம். எந்தப் பயலும் கட்டிக்க மாட்டான் தெரியுமில்லே”

“அடப் போடா, நீ இப்படி என்னை உடம்புக்காக விரட்டி விரட்டிக் காதலிச்சேனு தெரிஞ்சிருந்தா, அன்றைக்கே உன் முகத்திலே காறித்துப்பியிருப்பேன். என்னவோ என்னை வச்சுக் கஞ்சி ஊற்றுவே, ஊரிலே நாராயண் பொண்டாட்டி அப்படின்னு பெருமை பேசிக்கலாம்னு நெனச்சேன். இப்போ சொல்றேன் கேட்டுக்கோ, நீ என்னை எப்போ வப்பாட்டியா வச்சிக்க நினைச்சியோ அப்பவே உனக்கும், எனக்கும் உறவு முறிஞ்சிப் போச்சு.

நானும் பட்டணம் போறேண்டா, நல்லவன் ஒருத்தனை தேடி உண்மையெல்லாம் சொல்லி கல்யாணம் பண்ணிண்டு வந்து வாழ்ந்து காட்டலை, நான் செல்லம்மாயில்லை” என்று கத்திவிட்டு நடந்தாள் நம்பிக்கையின் அடிப்படையில்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *