கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல் குடும்பம்
கதைப்பதிவு: May 1, 2012
பார்வையிட்டோர்: 12,763 
 
 

சார் வாட் டு யு வாண்ட் சார்”

இரண்டு காபியை பேரரிடம் ஆர்டர் செய்து விட்டு மீண்டும் தனது சோகமான பார்வைக்கு பின்னே போய் ஒளிந்து கொண்டான் சிவா (சிவச்சந்திரன்). ஆதரவாக ஒரு நண்பன் இல்லையென்றால் சோகத்தை கடக்க வழியேது, எதிரே கார்த்திக் அமர்ந்திருந்தான், அந்த ரெஸ்டாரெண்ட் மாலை மங்கிய வேலையில் மெலிதாக இசையை கசியவிட்டுக் கொண்டிருந்தது. அவர்களின் ஆழமான சோகமான மௌனம் கலையும் முன் அவர்களைப்பற்றி சிறிது தெரிந்து கொள்வது அவசியம்,

கார்த்திக், சிவா, இருவரும் சென்னை கல்லூரித் தோழர்கள், பொதுவாக கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களில் இருவகையினர் இருப்பார்கள். கேலி, கலாட்டா சைட் அடிப்பது, சினிமா, சிகரெட், கல்யாணி – ஹாட், சொக்கலால் – 555, இதற்கு நடுவில் சிறிது படிப்பு, இது ஒரு வகை, முதல் வகை, பெரும்பாலும் மாணவர்கள் இப்படித்தான் இருப்பார்கள். இன்னொரு வகையினர் இருக்கிறார்கள், பிரம்மாவால் அவசரத்தில் படைத்து தூக்கியெறியபட்ட இமயமலை சாமியார் தவறி போய் சென்னையில் பிறந்து விட்டால்???, அப்படி ஒரு வகையினர் கார்த்திக்கிற்கு இது வரை பீர் வாசனை எப்படி இருக்கும் என்பது கூட தெரியாது. புகை என்றால் அலர்ஜி, அதிலும் சிகரெட் புகை ஏழாம் பொருத்தம், பெண்கள் கிழக்கிலிருந்தால் இவன் மேற்கே, மகாத்மா காந்தியின் சத்தியசோதனை படித்ததிலிருந்து புலால் உண்பதை நிறுத்திவிட்டான், வாய் நிறைய வெத்தலையை போட்டு குதப்பி கொண்டிருப்பவர்களைப் பார்த்தால், இதுதான் தோன்றும் அவனுக்கு ‘எப்படி வாந்தி எடுக்காமல் இருக்கிறார்கள்@”, அதனால் இப்படி சொல்லிக்கொள்ளலாம், கார்த்திக்கிற்கு வெத்தலை பாக்கு பழக்கம் கூட கிடையாது ரொம்ப நல்லவன்,

பின் என்னதான் செய்வான், எதில் தான் திருப்தியுறுகிறான், சின்ன சின்ன திருப்தியுறுதலுக்கு விதிவிலக்காக யாரேனும் இருக்க முடியுமா என்ன? நிறைய புக்ஸ் படிப்பான் , சரியாக சொல்வதென்றால் அவன் புத்தகங்களின் மூலம் இன்னொரு உலகை சிருஷ்டித்து வைத்திருந்தான், அவ்வப்பொழுது இக உலகத்திற்கு வந்து போவான், பெற்றோர்கள் கூட பயந்தார்கள், இவன் ஏன் மற்ற மாணவர்களை போல் இயல்பாய் இல்லை, சிறு வயதிலேயே சோகையாக பிறந்து விட்டான், பொதுவாக குழந்தைகளால் பெற்றவர்களுக்கு இம்சைதான், ஆனால் கார்த்திக்கின் விஷயத்தில் அப்படியில்லை, சில மாட்டை தார்குச்சியை வைத்து குத்தினாலும் நகராது, ஏதோ நிஷ்டையில் ஆழ்ந்திருக்கும் யோகியைப் போல,

இயற்கையில் பெரும்பாலும் இப்படித்தான் நடக்கிறது, எதிர்எதிர் குணம் படைத்தவர்களுக்கு இடையேதான் நல்ல நட்பு மலர்கிறது, ஒருவரையொருவர் ஆச்சர்யபடத்தக்க வகையில் மதிக்கிறார்கள், தங்களிடம் இல்லாத அக்குணங்களை மதித்தல் என்னும் செயல் மூலமாக நிறைவு செய்யப்பார்க்கிறார்களோ என்னவோ, சிவாவும் , கார்த்திக்கும் கல்லூரி காலங்களிலிருந்து இன்றுவரை நல்ல நண்பர்களாக இருக்கிறார்கள்.

ரெஸ்டாரெண்டில் இன்று

முகத்தில முள் தாடி , புன்னகை தொலைந்து போன உதடுகள், வெடித்து போய் பாலம் பாலமாய் கண்கள் சிவந்து போய், தலையெல்லாம் கலைந்து போய், ஒரு சாப்ட்வேர் இன்ஜினியர் நிச்சயமாக மறந்து போயும் இப்படி மட்டும் இருக்க மாட்டான், சிவா ஒரு சாப்ட்வேர் இன்ஜினியர், அப்படி என்ன சோகம் அவனை பீடித்து விட்டது என்கிற கேள்வி எழுமானால், ஒரே வார்த்தையில் கூறுகிறேன் அவனுக்கு திருமணமாகி இன்றுடன் ஒரு வருடம் ஆகிறது, பஸ்ட் வெட்டிங் அனிவர்சரி, ஆனால் கையில் காபியுடன் , முகத்தில் தாடியுடன், மனைவி இருக்க வேண்டிய இடத்தில் நண்பன் கார்த்திக்குடன்,

‘ போன மாசம் வரை எங்களுக்குள்ள ஒரு மனஸ்தாபம் கூட வந்தது கிடையாது தெரியுமா போன 3 ஆம் தேதி, அன்னகை;குத்தான், ஆரம்பிச்சா, பேயாட்டம் ஆடுறா”

‘நீ அவள காதலிக்குறியா”

‘யெஸ் ஐ ஸ்டில் லவ் ஹர்”

‘என்ன பிரச்சனை”

‘அன்னைக்கு அவள கோவிலுக்கு கூட்டிப் போனேன், அங்க ரேவதி வந்துருந்தா”

‘ரேவதி???”

‘அதாண்டா வாத்துக்கு கைகால் முளைச்சமாதிரி இருப்பால்ல, பக்கத்து கிளாஸ்ல, மஞ்சள் புடவை கட்டிகிட்டு வருவாளே அடிக்கடி”

‘நீ கூட லவ் லெட்டர் குடுத்தப்ப, அழகா சதுர சதுரம்மா கிழிச்சு கைல கொடுத்தான்னு சொன்னியே அவளா?” கிண்டலுடன் கேட்டான் கார்த்திக்,

‘அவதான்………அவள பாத்து ரெண்டு வார்த்தை பேசினேன் , அன்னைக்கு ஆரம்பிச்சது சனி, நிம்மதியே போச்சுடா, டெய்லி விருந்து சாப்பிட்டுகிட்டு இருந்தேன், இப்போ ஒரு மாசமா பட்டினி”

‘நீ சந்தியாகிட்ட (சந்தியா சிவாவின் மனைவி) , ரேவதி மஞசள் புடவைல தேவதை மாதிரி இருப்பான்னு சொன்னியா?”

சிறிது நேர மௌனத்திற்கு பிறகு

‘உனக்கெப்படி தெரியும்”

‘என்கிட்டயே ரெண்டாயிரம் தடவையாவது பொலம்பியிருப்பியேடா………..இன்னும் என்னவெல்லாம் வருணிச்சயோ,”

இல்லடா அந்த டிபன் பாக்ஸ் மேட்டர விளையாட்டா சொன்னேன்”

தiலியலடித்துக் கொண்டான் கார்த்திக்,

‘டேய், நீ தாணடா சொல்வ, பொண்டாட்டிகிட்ட நேர்மையா பொய் கலப்பில்லாம நடந்துகிட்டா வாழ்க்கை சந்தோஷமா இருக்கும்னு”

‘அது தப்புன்னு எனக்கு நேர்ந்த அநுபவத்திலிருந்து என்னைக்கோ புரிஞ்சுகிட்டேன்”

‘என்னடா சொல்ற , காயத்ரியுமா”

தலையை மேலும் கீழுமாக ஆட்டினான் கார்த்திக்,

இந்த காயத்திரி , கார்த்திக்கின் மனைவி, இரண்டரை வருடங்களுக்கு முன்னதாகவே கார்த்திக்கின் மணவாழ்க்கை ஆரம்பமாகிவிட்டது, இந்த விஷயத்தில் கார்த்திக் சீனியர், மனைவியிடம் எதைச்சொல்ல வேண்டும், சொல்லக்கூடாது, மறைக்க வேண்டியவை, கூடாதவை , அநுபவம் நிறைய கற்றுக் கொடுத்துவிட்டது, ஆனால் எல்லாம் கண்கெட்ட பின் சூரிய நமஷ்காரம் தான் ஆம், கார்த்திக்-காயத்திரி ஒரு வருடத்திற்கு முன் டிவோர்ஸ் அப்ளை செய்திருந்தார்கள், இன்றுடன் கெடு முடிந்து , சட்டப்படி விவாகரத்தாகி பிரிந்து விட்டார்கள் , நேராக கோர்ட்டிலிருந்து நண்பனை பார்க்க வந்திருந்தான், தன் வழி தொட்டு பின் வரும் தன் நண்பனை பார்க்கும் பொழுது, ஒரு நகைச் சுவையின் ஆரம்பத்துள் நுழைவது போல் இருந்தது,

பல சமயங்களில் கவனித்திருக்க கூடிய விஷயம்தான் இது, பொரும்பாலும் ஊமைக்கோட்டானைப் போல அமைதியாக, ஒன்றும் தெரியாத பாப்பாவை நினைவுபடுத்துபவர்கள் தான் முதலில் காதல் வலையில் விழுகிறார்கள், அதுவும் உங்க வீட்டு காதல் எங்க வீட்டு காதல் அல்ல, தெய்வீக காதல், ஒரு சைக்கோவை போல செல்பிஸ்நெஸ்சுடன், இவர்களைப் போன்றவர்கள் காதலித்தால் ஆபத்து நண்பர்களுக்குத்;தான், எங்காவது ஓடிவிடவேண்டும், இல்லையென்றால் செத்தோம், காதலை காதலியிடம் சொல்லமாட்டார்கள் வருடக்கணக்காக, ஆனால் , சொல்ல முடியவில்லையே என்று வருத்தப் படுவார்கள், காதலி வேறு யாருடனாவது அருகருகே அமர்ந்தபடி வண்டியில் செல்வதை பார்த்துவிட்டால் அவ்வளவுதான் அடுத்த ஒரு மாதம் புலம்பித்தள்ளுவார்கள். எந்த ஒரு சின்ன விஷயத்திற்கும் கேடயமாக நண்பனைத்தான் பயன்படுத்துவார்கள், அது காதல் கடிதம் கொடுப்பதாக இருந்தாலும் சரி, மாலை வேளையில் பெண்கள் கல்லூரி வாசலில் காத்திருந்து பார்ப்பதாயிருந்தாலும் சரி,

கார்த்திக் – காயத்திரி காதலுக்கு பாலமாய் இருந்து பல்வேறு சுமைகளை சுமந்தவன் சிவா, கார்த்திக்கும் சில வீரபராக்ரம செயல்களையும் முரட்டுக் கோபத்துடன் செய்திருக்கிறான் , வேறு ஒன்றுமில்லை, ஒரு காதல் கடிதத்தை எழுதி அவள் கையில் கொடுக்காமல் அவள் முகவரிக்கு போஸ்ட் செய்துவிட்டான் (ஸ்டாம்ப் ஒட்டாமல்) கடிதம் காயத்திரியின் தந்தை கான்ஸ்டபிள் கந்தசாமியிடம் கிடைக்க, முதல் அறையை காயத்திரி வாங்கிக் கொண்டாள், பொறி கலங்கி போனவளுக்கு முதன் முறையாக விளங்கியது ஒரு முட்டாள் தன் பின்னே ஒண்ணரை வருடமாக சுத்திக்கொண்டிருப்பது, ஆர்வம் அதிகமானது அவனை பார்க்க வேண்டுமென்று, நேரம் கடந்து தன் முட்டாள் தனத்தை புரிந்து கொண்டான் கார்த்திக், வரப்போகும் பிரச்சனையை எதிர்கொள்ள தயாராயிருந்தாலும் சிவாவின் வற்புறுத்தலின் பேரில் மறைவு வாழ்க்கை வாழ நேர்ந்தது, கான்ஸ்டபிள் கந்தசாமி சரியான கடுப்பிலிருந்தார், வலைவீசி தேடிக் கொண்டிருந்தார், கையில் கிடைத்தால் கைமாதான்,

எத்தனை நாள் தான் மறைவு வாழ்க்கை வாழ்வது, காதலி கைமாறி விட்டால் , நிலைமை மோசமாகிவிடும். யோசனை முற்றி போக ஒரு முடிவுக்கு வந்தவனாய் கிளம்பினான் காய்த்ரியின் வீட்டை நோக்கி, கலவரத்தை எங்காவது நேரில் பார்திருக்கிறீர்களா, அன்று அங்கு நடந்தது, கார்த்திக்கின் உதட்டோரத்திலிருந்து ரத்தம் வலிந்து தாடையை தாண்டி தொண்டை வரை வலிந்திருந்தது, காயத்திரியின் அம்மா, சிவகாமியம்மாள் நெஞ்சை பிடித்து கொண்டு கீழே சரிந்தார், பின் ஐ.ச.pயு வில், கான்ஸ்;டபிள் கந்தசாமிக்குள்ளிருந்து சிறிது நேரம் அண்டர்டேக்கர் வெளிப்பட்டிருந்தான், நெய்பர்ஸ், அதாவது அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள், றுறுகு மேட்ச்சை லைவாக பார்த்து ரசித்து கொண்டிருந்தார்கள்,

சில வருடங்களுக்குள், காயத்ரி காதலித்து கர்ப்பமாகி, அபார்ஷன் ஆனது வரை கதையை டெவலப் செய்து , ஏதோ தங்களால் முடிந்த சேவையை அக்கம்பக்கத்து ஆத்துக்காரர்கள் கிளப்பி விட, சந்தியாவிற்கு மாப்பிள்ளை கிடைப்பது சிரமமாகிவிட்டது. யாரோ அட்வைஸ் செய்தார்கள் கந்தசாமிக்கு இப்படி,

‘அந்த பையன பத்தி விசாரிச்சேன்ப்பா, அப்படி ஒண்ணும் மோசமானவன் இல்லை, நல்ல குடும்பம் தான், நல்லா படிச்சிருக்கான், இப்போ ஏதோ ஒரு காலேஜ்ல வாத்தியார் வேலை பாக்குறானாம், பேசாம, மான ரோஷம் பாக்காம அந்த பையனுக்ககே முடிச்சு கொடுத்துடு”

கந்தசாமி பணிந்து போக தயாரானார், வாயில் ரத்தம் வர அடித்துவிட்டோமே, அவர்கள் ஒத்துக்கொள்வார்களா? ஒரு அப்பனா அப்படி என்ன தவறு செய்துவிட்டேன், எந்த அப்பனாயிருந்தாலும் இதைத்தான் செய்திருப்பான், புரிந்து கொள்வார்கள், படித்தவன்தானே, தைரியமாக வீட்டை நோக்கி சென்றார், தனது மனைவியுடன் ஒரு வார்த்தை கலந்து கொள்வோம் என்று, ஆனால் அங்கு பார்த்காட்சி, என்ன மாதிரியான உணர்ச்சியை வெளிப்படுத்துவது என்று தெரியவில்லை, கந்தசாமி அதிர்ச்சியில் குழும்பி போனார், இது எதிர்பாராத அதிர்ச்சியா, இல்லை, ஆனந்தமா, இப்பொழுது, நான் கோபப்படவேண்டுமா? சந்தோஷப்பட வேண்டுமா? இப்பொழுது எதைச் செய்தால் சரி, பேசாமல் இருந்து விடுவோமா, ஆம் அமைதியாக இருப்பது தான் சரி, இந்த அளவிற்கு தன் வாழ்க்கையில் குழம்பியதே இல்லை கந்தசாமி, சிவகாமி அம்மாள் நிதானித்துக் கொண்டு பேச ஆரம்பித்தார்,

‘இதோ பாருங்க எனக்கு என் பொண்ணு வாழ்க்கைதான் முக்கியம், உங்களோட உங்க பிடிவாதத்தோட 25 வருஷமா வாழ்ந்தாச்சு, அது என்னோட போகட்டும், இவ வாழ்க்கையாவது நல்லாருக்கட்டும்னு தான் இப்படி பண்ணேன், தப்பா இருந்தா மன்னிச்சுடுங்க, மன்னிக்க முடியலைன்னா கொன்னுடுங்க,”

சந்தசாமி அவ்வளவாக திரைப்படங்கள் பார்த்ததில்லையென்றாலும் ஒரு சில படங்கள் பார்த்திருக்கிறார், அப்படி பார்த்த படங்களுள் ஒன்று வேதம் புதிது, அந்த படத்திலிருந்து ஒரு காட்சி ஏனோ இந்நேரத்தில் நியாபகம் வந்தது, கன்னத்தை தடவிக் கொண்டார்,

கார்த்திக் – காயத்திரி ஜோடி மணக் கோலத்தில் கான்ஸ்டபிள் கந்தசாமி காலில் வந்து விழுந்தார்கள், ஆசிர்வாதம் செய்வதைத்தவிர வேறு என்ன செய்ய முடியும்,

கார்த்திக்கின் காதல் நிறைவேற்றத்தில் சிவாவின் பங்கு அதீதமானது, பல்வேறு சங்கடங்களுக்கு நடுவே நண்பனுக்கு பக்கபலமாக இருந்திருக்கிறான், ஆனால் திருமணத்திற்கு பிறகு பொண்டாட்டிதாசனாகிவிட்டானோ? என்று சந்தேகப்படுமளவிற்கு, நண்பர்கள் மறந்து தன்னந்தனியானதொரு வாழ்க்கையை ஏற்படுத்திக் கொண்டான கார்த்திக் ,

கிட்டத்தட்ட ஒண்ணரை வருடங்களுக்குப்பிறகு சிவா தன் நண்பனை சந்திருத்திருந்தான், இங்கு நடக்கின்ற ஆச்சர்யங்களுள் இதுவும் ஒன்று, வெளிநாடுகளில் வாழும் நண்பர்கள் கூட மாதம் ஒரு முறை தொடர்பு கொள்வார்கள், ஆனால் சென்னையில் அடுத்த தெருவில் வசித்து கொண்டு வருடக்கணக்கில் பார்த்துக் கொள்ளாமல் இருப்பார்கள், சுருங்கிவிட்ட வாழ்க்கையின் கோரப்பிடியில் ஒண்ணரை வருடங்களை விழுங்கிவிட்டு, ஏதோ ஒரு சக்தியின் உந்துதலுக்குட்பட்டு இருவரும அன்று சந்தித்து கொண்டார்கள்,

சிவாவின் ஆதங்கம் என்னவென்றால், அன்று சந்தித்தபொழுது கூட காயத்ரியுடனான மனமுறிவை பற்றி கூறவில்லை, ஆனால் அன்று சந்தித்த வேளையில் சிவா சந்தோஷமான படபடப்புடன் காணப்பட்டான், அதனால் தான் சொல்லவில்லையோ என்னவோ, சிவா அன்று தான் சந்தியாவை பார்த்திருந்தான் முதன் முதலாக, கசநளா-ல் காய்கறி வாங்கி கொண்டிருந்தாளாம், அவ்வளவு காய்கனிகளுக்கு மத்தியிலும் கசநளா ஆக இருந்தது அவள் மட்டும் தானாம், சுண்டிவிட்டால் ரத்தம் வந்து விடுமாம் அப்படி ஒரு சிவப்பாம், அய்யராத்து பொண்ணாம், புலம்பித் தள்ளிக் கொண்டிருந்தான், இவ்வளவு புலம்பலையும் கார்த்திக்கிடம் கொட்டுவதற்கு காரணம் உண்டு, கார்த்திக்கின் மனைவி காயத்திரியும், சந்தியாவும் ஒரே பள்ளியில் வேலைபார்க்கும் ஆசிரியைகள், நெருங்கிய தோழிகள், நியாபகப்படுத்தினான். தான் எவ்வாறெல்லாம் அவர்களுடைய காதலுக்கு உதவி செய்திருக்கிறேன் என்று, கார்த்திக்கால் வேறு என்னதான் செய்ய முடியும், ஒத்துக் கொண்டான் உதவி செய்வதாக,
ஆனால் அன்று எச்சரிக்க நினைத்தான், இந்த காதல் கீதல் எல்லாம் வேண்டாம், முதலில் தேனாக இனிக்கும், பின் வேம்பாக கசக்கும், வாழ்க்கை முழுவதும் எத்தகைய உணர்வானாலும் சமன் செய்யப்பட்டதாக இருக்க வேண்டும், எந்த ஒரு உணர்வு தலை தூக்குகிறதோ, ஆட்டம் போடுகிறதோ, அதற்கு எதிரான உணர்வை அநுவபவி;த்தே ஆக வேண்டும், காதலைக் கூட கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் நண்பா………., இதை எப்படி புரிந்து கொள்வான், பொறாமைப்படுகிறேன் என்று நினைப்பான், ஒதுங்க பார்க்கிறேன் என்று நினைப்பான், அவன் அநுபவப்படத்தான் வேண்டும், விதிவலியது,

அடுத்த 3 மாதங்களுக்குள் எல்லாம் முடிந்து விட்டது, பின்னால் துரத்தியது, போன் பேசியது, லவ் லெட்டர் கொடுத்தது, காயத்ரிதூது, சந்தியாவின் ஆரம்ப வெறுப்பு பின் ஏற்றுக் கொள்ளுதல், ஒரு மாத, பீச், சினிமா , பார்க், முட்டுக்காடு பின் பலத்த எதிர்ப்புக்கு நடுவே ரெஜிஸ்தார் அலுவலகத்தில் நண்பர்கள் உதவியுடன் திருமணம், இரு வீட்டாருக்கும விஷயம் தெரிந்து அழுகை, அம்மாவின் மயக்கம், தந்தையின் நெஞ்சுவலி, சாபம், அனதை;தும் முடிந்து இன்றுடன் ஒரு வருடம் கடந்து விட்டது,

முதல் மூன்று மாதம் ஜெட் வேகம், வாழ்வின் இன்ப காலங்கள் அடுத்த மூன்று மாதம், ஒருவரின் தவறு இன்னொருவருக்கு தெரிய ஆரம்பித்தது, சுட்டிக்காட்டிக்கொள்ள ஆரம்பித்தார்கள், 7 மாதம் 10 நாட்கள், முடிந்திருந்த அன்று இரவு 10 மணிக்கு பலாரென்று ஒரு அறை, சந்தியாவின் கண்ணம் சிவந்து விட்டது, கடுமையான சண்டை, இன்று இவ்வளவும் நடந்து விட்டதை ரெஸ்டாரெண்டில் நண்பனிடம் கூறிக் கொண்டிருந்தான் சிவா நேற்று எல்லை கடந்து விட்டது சண்டை, சந்தியா கோபத்தில் டிவோர்ஸ் அப்ளை செய்து விட்டாள்,

கார்த்திக் மென்மையாக சிரித்து கொண்டிருந்தான். சம்பந்தமேயில்லாத ரியாக்ஷன் , ஏற்கனவே துன்பத்திலிருந்த சிவாவுக்கு கோபத்தில் உதடுகள் துடித்தன.

‘என்னடா நான் என் கஷ்டத்த சொல்லிகிட்டிருக்கேன் நீ பாட்டுக்கு சிரிச்சுகிட்டு இருக்க”
கார்த்திக் சிநேகமாய் சிரித்தபடி காபி டம்ளரை சிவாவை நோக்கி நீட்டினான் சியர்ஸ் செய்வதற்காக,

ஒரு வருடத்திற்குப் பிறகு

ஆச்சர்யத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான் கார்த்திக், தேனாம்பேட்டை சிக்னலில் எதிர்புறத்திலிருந்து, பல்சரில் அந்த இருவர், அந்த இருவரைப் பற்றியும் நன்றாகத் தெரியும், மோகன், மோசமான பெண் பித்தன், அவனுக்கு இரண்டு குழந்தைகளும் மனைவியும் உண்டு, ஆனால் அடுத்தவன் மனைவிக்காக அலைபவன், ஒரு நாள் காயத்ரியிடம் கூட செருப்படி வாங்கியிருக்கிறான், அவனும் அதே பள்ளியில்தான் பி.டி மாஸ்டர், அன்றுதான் காயத்ரியை புரிந்து கொள்ள சரியான சந்தர்ப்பம் கிடைத்தது. என்னதான் சண்டை போட்டாலும், டைவர்ஸ் வாங்கிக் கொண்டு பிரிந்தாலும் இதயத்தின் அடி ஆழத்தில் அதே உண்மையான அன்பு, நெகிழ்ந்து போனான்,அடி வாங்கியவன் மேலும் தொந்தரவு கொடுக்க ஆரம்பித்தான், விஷயம் அறிந்து பொங்கி எழுந்த கார்த்திக், அன்றுதான் முதன் முறையாக அடிதடியில் இறங்கினான், மோகனின் ஒரு காது பிய்ந்து விட்டது. இப்பொழுது ஒட்டு போட்டுக் கொண்டிருந்தது தெரிந்தது, ஏதோ ஸ்போர்ட்ஸின் போது காதில் அடிபட்டுவிட்டதாக கதைவிட்டுருக்கிறான் போல,

ஆச்சர்யத்துக்கு காரணம் அவன் அல்ல பின்னே உட்கார்ந்திருந்த சந்தியாதான், அவள் இவ்வளவு பெரிய முட்டாளாக இருப்பாள் என்று நினைத்துக் கூட பார்க்கமுடியவில்லை,
‘அய்யோ சிவா இப்பொழுது என்ன நிலையில் இருப்பானோ” வண்டியை விரட்டினான் வேளச்சேரியை நோக்கி, தக்சன் பிளாட்டில் சி பிளாக்கில் கடைசி பிளாட், லிப்டுக்காக காத்திருக்க பொறுமையில்லாமல் இரண்டிரண்டு படிகளாக தாவி ஏறி சென்று கதவை தட்டினான், முகம் நிறைய தாடியுடன் ஒரு உருவம் வெளிப்பட்டது,

‘எக்ஸ்கியூஸ்மி இங்க சிவச்சந்திரன்னு” அந்த சோகமான கண்களை உற்று பார்த்தபடி கேட்டான்,
‘டேய்…………டேய், சிவா என்னடா இது ஆள் அடையாளம் தெரியாம ஏன்டா இப்படி ஆயிட்ட” அமைதியாக திரும்பிச்சென்று படுக்கையில் படுத்துக் கொண்டான், அறை முழுவதும் ஆல்ஹகால் நெடி, அது அறையே அல்ல குப்பை மேடு, அங்கிருக்கும் உ,பா பாட்டில்களை எடைக்கு போட்டால் கணிசமாக ஒரு தொகைதேறும் போல, படுக்கையில் திரும்பியிருந்தவனை கட்டாயப்படுத்தி திருப்பினான்,

‘டேய் நீ இங்க இப்படி இருக்க , அங்க உன் ஒய்ப் யார் கூடயோ பைக்ல போய்கிட்டு இருக்கா………என்னடா நடக்குது இங்க”

சிவாவின் கண்களில் சட்டென்று கண்ணீர் துளிர்த்தது, அவன் அழுது அன்றுதான் முதல் முறையாக பார்க்கிறான்,
‘அவனதான் கல்யாணம் பண்ணிக்க போறா”
அதிர்சிமேல் அதிர்ச்சியாக கொடுத்தால் என்னதான் செய்வது. இதை எப்படியாவது சரி செய்தாக வேண்டும் என்று முடிவெடுத்துக் கொண்டான்,

அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொள்ள, மீண்டும் திருமணம் செய்து கொண்ட கார்த்திக் – காயத்ரி தம்பதியினர் தங்களுக்குள் பேச்சு வார்த்தை நடத்தினர், அதன்படி மோகனின் வண்டவாளங்களை ஆதரங்களுடன் நிருபிக்க சந்தியாவை சந்தித்து பேசலாம் என்று முடிவெடுத்து அவள் இருப்பிடத்துக்கு சென்றனர், அங்கு!!!

கால்களுக்கிடையே முகத்தை புதைத்தபடி அமர்ந்திருந்தாள் சந்தியா கதவு தட்டப்படும் சத்தம் கேட்டதும் அதிர்ச்சியில் எழுந்து ஓடிச்சென்று கதவில் பொருத்தப்பட்டிருக்கும் லென்சின் வழியாக பார்த்தாள், கார்த்திக் – காயத்ரி, உள்ளே வந்தார்கள் மூவரும் ஹால் சோபாவில் அமர்ந்தார்கள், காயத்ரி மோகனை பற்றி ஆரம்பித்தாள், கணவன் மனைவி இருவரும் கண்ணாபின்னாவென குற்றம் சுமத்தினார்கள், சந்தியா பேசிக் கொண்டிருக்கும் போழுதே எதையும் காதில் வாங்கிக்கொள்ளாதவளைப் போல அசட்டையாக எழுந்து சென்றாள், அட்டாச்ட் பாத்ரும் கைப்பிடியை அழுத்தி கதவை திறந்தாள், உள்ளே விட்டத்தை பார்த்தபடி , கோணல் மாணலாக கீNழு கிடந்தான் மோகன், மார்பில் இதயப் பகுதியில் காய்நறுக்கும் கத்தி சொருகப்பட்டு உயிரை விட்டிருந்தான் , விஷயம் புரிந்து போனது,

இரண்டு நாட்களுக்கு பிறகு பத்திரிக்கைகளில் இவ்வாறு தலைப்புசெய்தி வெளியிடப்பட்டிருந்தது,

‘அடையாறு கூவம் ஆற்றில் அடையாளம் தெரியாத ஆண்பிணம் “

இரண்டு வருடங்களுக்கு பிறகு

இடம் : டெல்லி

சந்தியா: என்னங்க வரும் போது பாப்பாவுக்கு பால் பவுடர் வாங்கிட்டு வாங்க
சிவா : ம் , அப்புறம் சோப்பு, ஜான்சன் அண்ட் ஜான்சன், பாத் ஆயில் ன்னு ஒண்ணுஒண்ணா சொல்வ, பேசாம என்ன என்ன வேணும்னு எழுதிக்கொடுத்துடு,

சந்தியா : சரி, சரி, ரொம்ப அலட்டிக்காதிங்க,………. இன்னைக்கு அமீர்கான் படத்துக்கு கூட்டி போறேன்னு பிராமிஸ் பண்ணிருக்கிங்க நியாபகம் இருக்குல்ல,

சிவா : ம், ம்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *