தீர்ந்து போன “மை”

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: April 19, 2016
பார்வையிட்டோர்: 26,153 
 
 

இணையத் தரவிறக்க மையம் முழுவதும் கூட்டமாக மாணவர்கள் நின்றனர். கைபேசியில் முயன்று தோல்வியுற்றதால் அனைவரும் தங்கள் தேர்வு முடிவுகளைப் பார்க்க ஆவலோடு நின்றனர்.

டேய் என்னடா, அரியர்ஸ் எல்லாம் கிளியரா, கம்ப்யூட்டர் சைன்ஸ் பாசா என்று அனிதா ஒரு மாணவனைக் கேட்கிறாள்.

போங்கடி, நீங்கள்லாம் பாசாகிட்டீங்களாக்கும், ஒரே திமிருல அலைறீங்க என்று அவன் அதட்டிச் சென்றான்.

ஏய் எரும, சும்மா இருக்க மாட்டியாடி, அவனுங்க திமிருக்கு ஃபெயில் ஆவானுங்க, கேட்டா நம்ம அசிங்கமா பேசுவானுங்கடி என்று அஞ்சலி தடுத்தாள்.

படிக்றது எவ்வளவு கஷ்டம்னு உனக்கு என்னடி தெரிய போகுது, அதுலயும் நம்ம காலேஜ் கோச்சிங் சொல்லவா வேணும், மீறி கேட்டா இன்டர்னல் மார்க் ல கை வப்பாங்க, எஜூகேசன கவர்மன்ட் எடுத்து நடத்தாத வர இந்த மாதிரி பிரைவேட் காலேஜஸ் அட்டானமஸ் காலேஜஸ் எல்லாம் அப்டித்தான்டி, என்று அனிதா புலம்பினாள்.

சரி அனி, ஊ ரிசல்ட் என்னாச்சுமா, என்று அரவிந்த் கேட்டான்.

நாம என்னைக்கு அண்ணா ஃபெயில் ஆகிருக்கோம், நம்ம ரிசல்ட்ல எய்ட்டி ஃபைக்கு குறஞ்சு மார்க்ஸ் வந்திருக்கா என்று அனிதா கூறினாள்.

பாத்தீயா, இதுதா அனிதா, ஆனா இந்த மார்க்ச போய் கிளாஸ்ல சொன்னா கடுப்பாகிடுவானுங்க, பசங்க மட்டும் இல்ல, நெறய கேர்ல்சும் அரியர்ஸ் வெச்சிருக்காங்க அனிதா, நா மேக்ஸ்ல அவுட் என்று அஞ்சலி கூறினாள்.

சொன்னா கேக்கணும் அஞ்சூ, டைம் இருக்கப்பவே டவுட்ஸ் எல்லாம் கிளியர் பன்னிக்கோனு சொன்னா எக்சாம்க்கு டைம் இருக்குனு அவாய்ட் பன்ன, இப்போ உன்ன பாஸ் மார்க் அவாய்ட் பன்னிடுச்சா என்று அனிதா அறிவுரை கூறினாள்.

சரி அனிதா, நீ நல்ல பெர்ஃபாமன்ஸ் பன்னியும் ஏம்மா ரொம்ப டல்லா இருக்க, என்று அர்ஜூன் கேட்டான்.

நா பாஸ் பன்னி என்ன அர்ஜூன், என்னோட அமுதா என்ன ஆனாங்குறது தெரியல, அவ ரெஜிஸ்டர் கோட் அடிச்சும் ஹேங் ஆகுது, அவ என்ன செய்றாங்குறதே தெரியல என்று அனிதா கூறினாள்.

ஏன்டி, அவதா திமிரு பன்னி உன்ன கிளாஸ்ல எல்லாருக்கும் முன்னால அசிங்கமா பேசிட்டு போயிட்டாளே, நீ இன்னுமா அவள நெனச்சுட்டு இருக்க என்று அஞ்சலி கேட்டாள்.

அவ கொழந்த அஞ்சூ, அவளுக்கு வெளி உலகம் பத்தி தெரியல, அதா அவ அப்டி பேசினா, அவ எனக்கு ஃப்ரண்ட் இல்ல அஞ்சூ, ஏ உயிர், அவ என்ன திட்டக் கூடவா நா உரிம தர மாட்டே என்று அனிதா கேட்டாள்.

இப்டீ அவள தலைல தூக்கி வச்சு ஆடு அனிதா, அவ உன்ன மதிக்க கூட மாட்றா என்று அர்ஜூன் கூறினான்.

அப்டி அவ எனக்கு என்ன துரோகம் செஞ்சுட்டானு கேக்குறேன், அவளே டைப்பாய்டு காய்ச்சல் வந்து அந்த கஷ்டத்தோட ஒரே ஒரு எக்சாம் மட்டும் எழுதிருக்கா, அவ பாஸ் ஆகணும்ங்குறதுதா இப்போ எனக்கு வேண்டிய குட் நியூஸ் என்று அனிதா கூறினாள்.

அனைவரும் இணைய மையத்திலிருந்து வந்து கொண்டிருந்தனர். பேருந்து நிறுத்தம் நோக்கி வந்தனர்.

ஏய் அனி, அங்க பாரு அமுதா வர்றா என்று அரவிந்த் கூறினான்.

அமுதா…….., என்று ஓடோடி சென்றாள் அனிதா.

சீ., நீ எதுக்கு என்ன பாக்க வர்ற, போ மரியாதயா என்று அமுதா விரட்டினாள்.

அது இருக்கட்டும் அமுதா, ஊ ரிசல்ட் என்னாச்சுடா என்று அனிதா கேட்டாள்.

இதோ பாருடி, ஊ மேல நா கொல வெறில இருக்கே, நீ எனக்கு செஞ்ச துரோகத்த நா வாழ்க்க முழுசும் மறக்க மாட்டே, ஏ மூஞ்சிலே முழிக்காத, ஓடி போயிரு என்று அமுதா நடக்கத் தொடங்கினாள்.

ஏய் அமுதா, நீ அவளுக்கு சொல்ல வேணாம், எங்கட்டயாவது சொல்லுமா, என்று அர்ஜூன் கேட்டான்.

வாங்கடா, எல்லாருமா சேந்துதான நா அஜீம்ம லவ் பன்றேன்னு தெரிஞ்சும் அவன மனச மாத்தி அனிதா பக்கம் திரும்ப வச்சீங்க என்று அமுதா கேட்டாள்.

லூசு மாதிரி பேசாத அமுதா, அஜீம்க்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் கெடயாது, அவனாத்தா அனிதாவ ஃபாலோ பன்னிட்டு இருக்கா என்று அஞ்சலி கூறினாள்.

ஆமா அஞ்சூ, ஃபாலோ பன்னட்டும், நீங்க எல்லாம் படிக்றீங்களா இல்ல வேற வேல ஏதும்…… என்று அமுதா சொற்களை நீட்டித்தாள்.

மரியாதையா பேசு அமுதா, நீ அஜீம்ம லவ் பன்ன, ஆனா அவன் உன்ன லவ் பன்னல, அவன் அனிதாவத்தா லவ் பன்றான், இப்பவும் அவன் அனிதாவ ஃபாலோ பன்றான், ஆனா அனிதா என்ன நெனச்சிருக்கானு உனக்கு தெரியுமா என்று அரவிந்த் அதட்டினான்.

என்ன நெனச்சிருப்பா, அவன கரெக்ட் பன்னி என்ன அனாதயாக்கணும்னு நெனச்சிருப்பா, நா ஏ அம்மாவ சின்ன வயசுலே எழந்தவ, ஏ சித்திதா என்ன ஏமாத்தி கொடும செய்றாங்கன்னா எல்லாருமே இப்ப கொடும செய்றாங்க, நா அனாத தானே என்று கூறி விட்டு இணையத் தரவிறக்க மையம் நோக்கி நடக்கத் தொடங்கினாள்.

இவளுக்கு நாம என்ன சொல்லி புரிய வைக்றது என்று அஞ்சலி புலம்பினாள்.

ஏய் அஞ்சூ, அமைதியா இருடி, அம்மூ இப்பத்தா ரிசல்ட் பாக்கப் போறா, அவ வந்து சொல்றத நா கேட்டு சந்தோசப் படணும், சரியா என்று அனிதா கேட்டாள்.

அவளாவது வர்றதாவது என்று அர்ஜூன் கூறினான்.

நிச்சயமா வருவா, அவ என்ன கடுப்பேத்துறதா நெனச்சு அவ நல்ல மார்க் வாங்கினத சொல்ல வருவா பாருங்களே என்று அனிதா புண்ணகைத்தாள்.

அனைவரும் காத்திருந்தனர். சற்று நேரத்தில் அங்கு பெரும் கூட்டம் கூடியது. ஏதோ விபத்து நேர்ந்து விட்டதாக பேசினர். உடனே அனைவரும் அங்கே சென்று பார்த்த போது அங்கே அமுதா மூன்றாவது மாடியில் இருந்து தற்கொலைக்கு முயற்சி செய்து குதித்த போது குறுக்கே இருந்த கேபிள் தடுத்ததால் வழி தடுமாறி ஒரு விறகுக் கட்டை அடுக்கின் மீது விழுந்து கிடந்தாள். அவள் கால்களில் அடிபட்டு இரத்தம் அதிகளவில் வெளியேறி இருந்தது. உடனே அவளை தோழர்களும் தோழிகளும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இரத்தம் அதிகளவில் வெளியேறி இருந்ததால் அவளுக்கு இரத்தம் தேவைப்பட்டது. ஆனால் அவளது இரத்தப்பிரிவு அவளது குடும்பத்தில் யாருக்கும் கிடையாது. அவளது அம்மாவிற்கு மட்டுமே இருந்தது. ஆனால் அவர் அப்போது உயிருடன் இல்லை. வெகு விரைவில் இரத்தம் தேவைப்பட்டது. விரைந்து வந்த அனிதா தனக்கு அதே இரத்தப்பிரிவு இருப்பதைக் கூறித் தன் தோழியின் உயிரைக் காக்க உதவினாள். ஆறு மணி நேரம் சென்ற பின் காவல்துறை அதிகாரிகள் அமுதா தற்கொலை முயன்றதால் விசாரனைக்காக வந்தனர். அமுதா தான் தேர்வுக்கு சரியாகப் பயின்றும் அன்று அவசரமாகக் கிளம்பி வந்ததால் பேனா எடுத்து வராமல் தேர்வு எழுத வந்தாளாம். வந்த பின்தான் தான் பேனா கொண்டு வரவில்லை என்பதை தெரிந்து கொண்டிருக்கிறாள். ஆனால் அதிர்ஷ்டவசமாக அவளது பர்சில் ஒரு பேனா இருந்திருந்தது. அதைக் கொண்டு இயற்பியல் தேர்வினை எழுதியிருந்தாள். ஆனால் பாதியில் அந்தப் பேனாவில் மை தீர்ந்து போய் விட்டதாம். எனினும் தாம் தேர்ச்சி அடைந்து விடுவோம் என்ற நம்பிக்கையோடு கிளம்பி வந்து விட்டாளாம். ஆனால் தேர்வு முடிவு தோல்வியைத் தந்ததும் பொறுத்துக் கொள்ள முடியாமல் தற்கொலைக்கு முயன்றதாகத் தெரிவித்தாள்.

பின் அவளைக் காண அனிதா ஆவலோடு வந்தாள்.

இவள யாரு அலோ பன்னது, இவதா ஏ லைஃபே ஸ்பாயில் பன்னவ, நா லவ் பன்ன பையன வல வீசி வசியம் பன்னி மாத்திட்டு இப்போ எனக்கு ஹெல்ப் பன்றா மாதிரி நடிக்கிறா என்று கூச்சலிட்டாள் அமுதா.

டியர் சிஸ்டர், நீங்க ரொம்ப அவசரப்படுறீங்க, நீங்க பேனால மை தீர்ந்ததால தானே சூசைட் வர போக வேண்டி வந்துச்சு என்று ஒரு செவிலியப் பெண் கேட்டாள்.

எஸ் மேடம், பட் இவ வர்றது……. என அமுதா கூற,

மை தீர்ந்தது உங்க பேனால இல்ல சிஸ்டர், உங்க மைண்ட்ல என்று செவிலியப் பெண் கூறினாள்.

சாரி மேடம், ஐ கான்ட் அண்டர்ஸ்டன்ட், என்று அமுதா கேட்டாள்.

ஆமம்மா, உங்களுக்கு திறமை இருக்க அளவுக்கு பொறுமை இல்ல, முதல்ல பொறு மை வேணும், அதத்தா சொன்னே, பேனா மை இல்லாம நீங்க இந்த முடிவ எடுக்கல, பொறு மை இல்லாம இந்த ராங் பிளான் எடுத்திருக்கீங்க என்று கூறினாள்.

அதுக்கும் இதுக்கும் என்ன மேடம் ரிலேசன் என்று அமுதா வினவினாள்

ஆமாங்க அமுதா, நீங்க பொறுமை இல்லாததால தான் எக்சாம்க்கு பேனா கொண்டு வரல, உங்க ஃப்ரண்சயே பகச்சுக்றீங்க, அதனால பக்கத்துல இருக்கவங்கட்ட ஹெல்ப் கேக்காம உங்க நாலேஜ்ச வேஸ்ட் பன்னி எக்சாம் எழுதாம வந்திருக்கீங்க, இப்போ அந்த பொறுமை இல்லாமத்தா இப்டி ஹாஸ்ப்பிட்டல்ல அட்மிட் ஆக வேண்டி வந்துருக்கு பாருங்க என்று செவிலியப் பெண் கூறினாள்.

இட்ஸ் ஓக்கே மேடம், ஐ அக்சப்ட் தெம், பட் இவ வந்து என்ன பாக்றது நா அக்சப்ட் பன்ன மாட்டேன் என்றாள் அமுதா.

பாருங்க அமுதா, இன்னும் நீங்க பொறுமை இல்லாம பேசுறீங்க, இப்போ நீங்க நார்மல் ஆனது யாரால, இந்த அனிதா தான், எஸ், அனிதா பிளட் டொனேட் பன்னலேன்னா நீங்க நார்மல் ஆறது டவுட் ஆகிருக்கும், முதல்ல பொறுமையா முடிவெடுங்க அமுதா, என்று செவிலியப் பெண் கூறினாள்.

மேடம், ஐ வில் டாக் வித் ஹெர், பிளீஸ் லீவ் ஹெர், அவ ரெஸ்ட் எடுக்கட்டும் என்று அனிதா அனுப்பினாள்.

அமுதா அனிதா முகத்தைப் பார்த்தாள். திரும்பிக் கொண்டாள். கண்ணீர் சிந்தி அழுதாள். அனிதா அவளை அமைதிப்படுத்த முயன்றாள்.

நா ஊ மூஞ்சில முழிக்கக் கூட லாயக்கில்லாதவ அனிதா, உன்னப் பாக்கக் கூட எனக்கு அறுகதை கிடையாது என்று அமுதா அழுதாள்.

அப்டி எல்லாம் பேசாத அம்மூ, நா உனக்கு அக்கா மாதிரி என்று அமைதிப்படுத்தினாள் அனிதா.

சாரி, நீ எனக்கு அக்கா இல்ல, ஏ அம்மா, ஏ அம்மாக்கும் எனக்கும் சேம் பிளட்டாம், அப்டின்னா ஏ அம்மா இன்னும் சாகல, நீதா ஏ அம்மா என்று அனிதாவின் கைகளைப் பிடித்து மார்பில் வைத்துக் கொண்டு அழுதாள்.

Print Friendly, PDF & Email

1 thought on “தீர்ந்து போன “மை”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *