(2009ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 10-12 | அத்தியாயம் 13-15 | அத்தியாயம் 16-18
அத்தியாயம்-13
“காபி சாப்பிடுங்க சித்தப்பா… ஆறிடப்போவுது!” பரமேஷ்வர் வந்திருந்த உறவினரை உபசரித்தார்.
“பரவாயில்லே பரமு நான் சூடா சாப்பிடறதில்லே ஆறட்டும். அண்ணியோட மரணம் நான் எதிர்பார்க்காதது. சரி விடு. அதைப் பத்தியே பேசி என்னாகப் போருது? அவந்திகா எங்கே?”
“ஆபிசுக்கு போயிருக்கா… வர லேட்டாகும். நீங்க. முக்கியமான விஷயம் பேசணும், உடனே வாடான்னு சொன்னதால் அரைநாள் லீவுபோட்டுட்டு வந்தேன், என்ன விஷயம் சித்தப்பா?”
“ஏற்கனவே நீ சொல்லியிருந்தேயில்லே.. அவந்திகாவுக்கு வரன் பார்க்கச் சொல்லி…அது விஷயமாதான் இந்த வீட்டு பெரிய தலை செத்துபோச்சு… உடனே ஒரு நல்ல காரியம் பண்ணினா நல்லது!”
“என்ன அலையன்ஸ்… சொல்லுங்க?”
“சுத்தி வளைச்சு… நமக்கு தூரந்து சொந்தம் வேணும். பெரிய எடம். ஒரு பொண்ணு. ஒரு பையன், பையன் ஐ.டி.யில வேலை பார்க்கிறான். கை நிறைய சம்பளம். அவங்க அப்பா, தாத்தான்னு சேர்த்து வச்ச சொத்து இருக்கு, சொந்தமா மூனு வீடு! கெட்ட பழக்கம் எதுமில்லே!”
“என்ன சித்தப்பா.. நான் அவந்திகாவுக்கில்லே மாப்பிள்ளை பார்க்கச் சொன்னேன்!”
“நானும் அவளுக்குத்தானே சொல்றேன்!”
“நீங்க பெரிய எடத்து பையனை இல்லே சொல்றீங்க! எங்க தகுதிக்கு ஏத்த இடமா இருந்தா பரவாயில்லே! அவந்திகாவுக்கு எப்படியாவது ஒரு இருபது பவுன் போட்ருவேன். என்னால முடிஞ்ச சீர் பண்ணிடுவேன். பையன் பிரைவேட் கம்பெனியில வேலை செய்தாலும் பரவாயில்லே… நல்லவனா, ஒழுக்கமானவனா, என் தங்கச்சிய கண்கலங்காம பார்த்துக்கறவனா இருந்தா போதும்.”
“அவசரப்படாதே பரமு… நான் இன்னும் முழுசா சொல்லி முடிக்கலே..”
“…?!”
“அவங்க வரப்போற மருமகளுக்கு இதைப் போடு. அதைப்போடுன்னு எந்த கண்டிஷனும் சொல்லலே. அவங்க இஷ்டப்படறதை செய்யட்டும். பொண்ணு நல்ல குணமாயிருந்தா போதும். ஆனா…”
“சொல்லுங்க”
“ஒரே வீட்லே பொண்ணு குடுத்து பொண்ணு எடுக்ணும்ங்கறதுதான் அவங்களோட நிபந்தனை!”
“…?!”
“அதுவும் அந்தப் பொண்ணுக்கு…”
“ம்…” என்றான் யோசனையாய்.
சித்தப்பா எல்லாமே சொல்லி முடித்தார்.
“இதை நீ ஏத்துக்கணும்னு சொல்லலை. நல்ல வசதியான இடம், உனக்கு பிடிக்கலேன்னா வேற அவையன்ஸ் பார்க்கலாம்”
“இல்லே சித்தப்பா. என் சைடு எந்த பிரச்சனையும் இல்லே அவந்தி வரட்டும், அவகிட்டே ஒரு வார்த்தை கேட்டுட்டு சொல்லிடறேன்.”
“என்ன அவசரம் பரமு… டைம் எடுத்துக்க.. நிறைய யோசி..”
“இல்லே சித்தப்பா… அவந்திகாவுக்கு இப்படியொரு நல்ல இடம் அமையறது கஷ்டம்”
“அது சரிதான்பா.. உன் எதிர்காலத்தை பத்தியும் யோசிக்க வேணாமா?”
“இதிலே யோசிக்க எதுவுமே இல்லே. இப்ப எனக்கு அவந்தி சம்மதிக்கணுமேன்ற கவலை மட்டும் தான் இருக்கு. சின்ன வயசிலேர்ந்தே கஷ்டப்பட்டு வளர்ந்தவ.. போற இடத்திலேயாவது நல்லாயிருக்கட்டும்”
சித்தப்பா அவனை நெகிழ்ச்சியுடன் பார்த்தார்.
தங்கையிடம் சுருக்கமாய் சொன்னான்.
எதிர்பார்க்காத அவந்திகா தடுமாறிப் போனாள், “என்னண்ணா திடீர்னு. என்ன அவசரம். இப்போ?”
“அம்மாவோட கவலையே எதிர்காலத்தைப் பத்திதானே? இப்ப எனக்கும் அதே சிந்தனைதான்.”
“எனக்கு இப்ப வேண்டாம்ண்ணா… நீ மட்டும் பண்ணிக்க?”
“எனக்கென்னம்மா அப்படி அவசரம்? குலசேகரன் சித்தப்பா உனக்காக பாத்த வரன் இது? ஒரே வீட்லே பொண்ணு குடுத்து பொண்ணு எடுக்கணும்னு சொன்னாங்களாம். உன்னை வீட்ல வச்சுக்கிட்டு எனக்கென்னம்மா அப்படி அவசரம்? பிடிக்கலேன்னா சொல்லு… வேற இடம் பார்க்கலாம். அதை விட்டுட்டு என்னை முதல்ல பண்ணிக்கன்னுல்லாம் சொல்லாதே! உனக்கு எப்ப தோணுதோ, அதுவரைக்கும் எனக்கும் வேணாம். நீ யாரையாவது விரும்பறதாயிருந்தாலும் சொல்லு!”
“இ… இல்லேண்ணா அப்படி எதுவும் இல்லே!” என்றாள் அவசரமாய்.
“யோசிச்சு நிதானமா சொல்லு!” என்றான் பரமேஷ்வர்.
அதற்கடுத்த நாட்களில் குலசேகரன் சித்தப்பாவும் அவள் மனதை கரைக்க…
மேலும் அண்ணனுக்கு பாரமாய் இருக்க விரும்பாமல் ஏகப்பட்ட யோசனைக்கு பின், அரை மனதுடன் சம்மதித்தாள்.
முழு விபரமும் அறிந்தால் தங்கை சம்மதிக்க மாட்டாள் என்பதால்… இருபக்கமும் திருமணத்திற்கு முன் அதிக சந்திப்பு ஏற்படுவதை தடுக்குமாறு சித்தப்பாவிடம் சொல்ல அவரும் மாப்பிள்ளை வீட்டாரிடம் பேசினார்.
“அம்மா இறந்து எட்டு மாசம்தான் ஆகுது. முன்னே நின்னு செய்யறதுக்கு யாரும் இல்லாத வீடு. இந்த பெண் பார்க்கிற வைபவமெல்லாம் எதுக்குன்னு பீல் பண்றார். அவங்க போட்டோ இதிலே இருக்கு. உங்க பொண்ணு, பையனோட போட்டோ குடுங்க காண்பிச்சிடறேன். ஒரு நல்ல நாள்ல கோவில்ல வச்சு சந்திக்கலாம்.”
சம்மந்தியம்மா சந்திரமதிக்கு நிம்மதி.
கிடைத்த சந்தர்ப்பத்தை நழுவ விடாமல் பெரிய மனதுடன், “அதுக்கென்னங்க பாவம். பெத்தவங்க இல்லாத வீடு.. அவங்க உணர்வுக்கும் மரியாதை கொடுக்கணுமில்லையா? மார்கழி நடந்திட்டிருக்கு. இப்ப எந்த நல்ல காரியமும் பண்ண வேண்டாம். தை மாசம் முதல் முகூர்த்தம்தான் பசங்க ஜாதகப்படி சரியான நாள், அன்னைக்கே நிச்சயதார்த்தமும், கல்யாணமும் வச்சுக்கலாம்.”
“இதுவும் நல்ல விஷயம்தான். பரமுகிட்டே சொல்லிடறேன். மாப்பிள்ளை. எங்க பொண்ணுகிட்டே பேச விருப்பப்பட்டா… இந்தாங்க… இது அவந்திகாவோட நம்பர்…”
”ஐயோ… எதுக்குங்க.. நாங்க கொஞ்சம் கட்டுப்பாடு. கல்யாணத்துக்கு முன்னாடியே இதுமாதிரி பேசிக்கிறதெல்லாம். வழக்கமில்லைங்க. என் பையன் சித்தார்த்தும் அப்படிதான். படிச்சவன், மைசூர்ல கை நிறைய சம்பளத்துல வேலை பார்க்கிறாள். ஆனாலும் பெத்தவங்களுக்கு பயந்து நடப்பவன். ஒரு கெட்ட பழக்கமும் இல்லீங்க. இதுல ரெண்டு பேரோட போட்டாவில் கனிகா என்கிற கன்னிகா பரமேஸ்வரியை… முதல் பார்வையிலேயே பிடித்து விட்டது. குழந்தைத் தனமான முகம், நிறமாக, களையாக இருந்தாள்.
சித்தார்த்தும் அவன் சாயலில்தான் இருந்தான். நாகரீகமாக, கண்களில் ஆழத்துடன்.. பார்க்க பிரமாதமாய் இருந்தான்.
திருப்தியுடன் அவந்திகாவிடம் போட்டோவை காட்னான்.
பார்த்தாள்… ஆனால் மலரில் பதிய மறுத்தான். மௌன சிரிப்பொன்றை உதிர்க்க.. அதுவே போதுமானதாய் இருந்தது பரமேஷ்வருக்கு.
எந்த சடங்கும், சம்பிரதாரமும் இல்லாத திருமண முடிவு அவந்திகாவிற்கு வியப்பைத் தந்தது. ஏதேதோ காரணம் சொல்கிறார்கள், ஆனாலும் வசதியான இடம். தங்களுக்கு சம்பந்தமே இல்லாத இடத்தில் சம்பந்தம் பேசியதும், நேரில் இதுவரை பரஸ்பரம் பார்க்காததும் யோசிக்க வைத்தது.
இடையில் ஒருமுறை சந்திரமதி வந்து பார்த்தாள். அவளிடம் பரிவுடன் பேசினாள். எல்லாம் சரி.. அந்த சித்தார்த் ஒருமுறைக்கூட போனில் பேச முடியாதது இயல்பான விஷயமாய் தெரியவில்லை.
‘ஆனால், கனிகா போன்ற பெண் அமைய அண்ணனுக்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும்’ என்ற திருத்தியோடு, இச்சந்தேகங்களை கேள்விகளாக ஆக்காமல் வாய்மூடிக் கொண்டாள்.
திருமணம் நடந்தேறியது.
அத்தியாயம்-14
கோவிலில் திருமணம். ஹோட்டலில் ரிசப்ஷன் விமரிசையாக நடந்தது. தடபுடலான விருந்து பெரும்பாலும் கார்களில் வந்திறங்கிய உறவினர்கள், அவந்திகாவிற்கு ஒரே ஒரு ஆச்சரியம் மட்டும் தான். திருமணம் நடக்கும் வரையிலும் சரி அதன்பிள் நடந்த பால் பழம் சாப்பிடும் வைபவத்திலும் சரி இதோ வரவேற்பு நடந்து கொண்டிருக்கும்போதும் சரி, சித்தார்த் அவளை நிமிர்ந்து கூட பார்க்கவில்லை. ஒரு வார்த்தை கூட பேசவில்லை.
தெளிவாய் புரித்தது.
அவருக்கு என்னை மணமுடிப்பதில் விருப்பமில்லை.
பிறகேன்?
முதலிரவில் விடை கிடைத்தது.
இடப்பாற்றாக்குறை… அது இதென்ன காரணங்கள் சொல்லி முதலிரவை தன் வீட்டிலேயே ஏற்பாடு செய்தாள் சந்திரமதி.
பரமேஷ்வர் எல்லாவற்றிற்கும் சந்தோஷமாய் தலையாட்டினான்.
தங்கைக்கு மிக உயர்ந்த இடத்தில் மணமுடித்து வைத்தாயிற்று. கண்ணுக்கு நிறைவாய் மாப்பிள்ளை. அம்மாவின் ஆத்மா சாந்தியடைந்திருக்கும். மனம் நிறைத்திருந்தது. தன் வம்சத்தை அதற்காக விலையாக கொடுத்ததில் துளியும் வருத்தமில்லை அவனுக்கு.
ஆம்…அவன் மணந்து கொண்ட கன்னிகா பரமேஸ்வரி…பதினோறு வயதில் விபத்தில் அடிபட்டு கர்ப்பப்பை கிழிந்து துவம்சம் ஆகிவிட்டது.
அவளால் பூப்பெய்தவும் முடியாது. தாய்மை அடையவும் முடியாது. தாம்பத்ய சுகம் கூட அரைகுறையாகத்தான்.. இப்படிப்பட்ட பெண்ணை எப்படி கரையேற்ற முடியும்? அதற்கு தன் மகன் சித்தார்த் வாழ்க்கையை விலையாக வைத்தாள் சந்திரமதி. பரமேஷ்வரின் ஏழ்மையை தனக்கு சாதகமாக்கி அவந்திகாவை மருமகளாக்கிக் கொண்டாள்.
அலங்கரிக்கப்பட்ட அறையினுள், மெருகேற்றி அழகுப் பதுமையாக அவந்திகாவை அனுப்பி வைத்தனர்.
திறந்திருந்த கதவை உள் தாழிட்டாள். சித்தார்த் கட்டிலில் இவளுக்கு முதுகு காட்டி அமர்ந்திருந்தான். இவள் வருவதை யூகித்ததும், நிமிர்ந்து பாராமலேயே எழுந்தான். புகைத்துக் கொண்டிருந்த சிகரெட்டை காலால் நசுக்கி தரையில் விரிப்பை போட்டு படுத்துக் கொண்டு மற்றொரு விரிப்பால் தலை வரை போர்த்திக்கொண்டான்.
அவன் செய்கை முகத்தில் அடிப்பது போல் இருந்தது.
ஆனால், திட்டவட்டமாகப் புரிந்தது.
அவன் மனதில் வேறொருத்தி இருக்கிறாள். வற்புறுத்தப்பட்டிருக்கிறான். வேறு வழியின்றி என்னை மணந்திருக்கிறான்.
சரி.. எதற்காக வற்புறுத்த வேண்டும்? எந்த விதத்திலும் பொருத்தமில்லாத இடத்தில் சம்பந்தம் வைத்துக் கொண்டது எதற்காக?
புரியவே இல்லை.
அதற்கு மேல் யோசிக்கவும் களைப்பாக இருந்தது. ஒரு வார்த்தையாவது அவன் பேசியிருக்கலாம் என்று தோன்றியது. அட்லீஸ்ட், “உன்னை எனக்கு பிடிக்கவில்லை,” என்றாவது சொல்லி இருக்கலாம்.
இருக்கட்டும் அவனாகவே தனக்குள் அலசி ஆராய்ந்து நிதர்சனம் புரிந்து கொள்ளும் வரை காத்திருப்போம்.
இந்த தனிமை எனக்கும் தேவைதான். என் மனசும் காதல் தோல்வியால் புண்பட்டிருக்கிறதல்லாவா?
கட்டிலில் படுத்துக்கொண்டாள்.
அவள் கண்விழித்தபோது மணி ஆறு!
புதிய வீட்டில், புதிய சூழலில் அவ்வளவு நேரம் தூங்கிக் கொண்டிருந்தது வெட்கத்தைத் தர அரக்க பரக்க எழுந்தாள்.
அப்போதுதான் கவனித்தாள் சித்தார்த் இல்லை.
ஒரு வேளை பாத்ரூமில் இருக்கிறானோ அறைக்குள்ளேயே இருந்த பாத்குமின் கதவில் கை வைத்தாள்.
திறந்து கொண்டது.
வெளியே இருப்பான்.
அவந்திகா அவசர அவசரமாய் குளித்து, உடையுடுத்திக் கொண்டு வெளியே வந்தாள்.
பரமேஷ்னர் ஹாலில் பேப்பர் படித்துக் கொண்டிருக்க நாணத்துடன் கனிகா காபி தந்தாள். மென் சிரிப்புடன் வாங்கிக் கொண்டான். ரசனையான காட்சி. மிச்சமிருந்த உறவினர்கள் விருந்து சமைப்பதில் மும்முரமாகியிருக்க.. கல்யாண களை வீடு முழுக்க விரவிக் கிடந்தது.
“அவந்திம்மா” தாயின் கனிவும், அன்பும் மிளிர்ந்த வார்த்தையில் பரவசப்பட்டு திரும்பினாள்.
மாமியார் நின்றிருந்தார்.
மருமகளின் முகத்தில் அவசரமாய் எதையோ ஆராய்ந்தாள்.
அவந்திகா புன்னகைத்தாள்.
“ஏம்மா இவ்வளவு சீக்கிரம் எந்திரிச்சிட்டே? களைச்சிப் போயிருப்பே தூங்கியிருக்கலாமே! என்ன அவசரம்?”
“நேரங்கழிச்சி எந்திரிச்சு பழக்கமில்லேம்மா…”
“ஏ… என்ன என்ன சொன்னே?”
“நேரங்கழிச்சி”
“அதில்லே கடைசியா என்னை என்னன்னு சொன்னே?” ஆர்வமாய் கேட்டாள்.
“அ… அம்மா அம்மான்னு!”
“என் ராஜாத்தி இனி நீ என்னை எப்பவும் அம்மான்னே கூப்பிடு..நீயும் எனக்கு பொண்ணுதான்டி கண்ணே!” சட்டென நீர் மல்க அவளைக் கட்டிக் கொண்டாள் சந்திரமதி.
எதிர்பார்க்காத அவத்திகாவும் நெகிழ்ந்துதான் போனாள்.
புது உறவு அதுவும் அம்மாவாக கிடைத்திருப்பது அதுவும் புருந்த வீட்டில்!” அதிர்ஷ்டம் தானே?
கீழேயிருந்த பரமேஷ்வர் இந்த காட்சியை பார்த்து விட்ட ஆச்சர்யமும், பரவசமுமாய் முகிழ்த்த கண்ணீரை கட்டுப்படுத்த திணறினான்.
தங்கையை நல்லதொரு இடத்தில் பாதுகாப்பாக சேர்த்து விட்டோம் என்ற நிம்மதியில் கன்னிகாவை அழைத்துச் கொண்டு தங்கள் அறைதோக்கிச் சென்றான். மனைவியை பற்றியிருந்த கரத்தினுள் காதலின் கதகதப்பு அதிகரித்திருந்தது.
மருமகளிடம் சித்தார்த் பற்றி எதையும் கேட்கவும் தயக்கமாய் இருந்தது.
மகனுக்கு விருப்பமில்லாத திருமணம். மிரட்டி பணிய வைத்ததெல்லாம்… தன் நடவடிக்கை மூலம் முதலிரவில் அவந்திகாவிடம் தெரியபடுத்தியிருப்பானோ?
“என்ன குறை இவளிடம்? களங்கமில்லா அழகு முகம்? கனிவும், பணிவும் மிகுந்திருந்த நடவடிக்கை, மனசு மாறியிருக்காதா மகனிடம்? எப்படி கேட்பது?”
“அவந்திம்மா. காபி தரட்டா?”
“ம்….”
“ஒரு நிமிஷம்… இந்த சோபாவிலே உட்காரு.. வந்திடறேன்.”
ஐந்து நிமிடம் கடந்த பின் சந்திரமதி காபி தட்டுடன் வந்தாள்.
இரண்டு பீங்கால் கோப்பைகளில் ஆவி பறந்தது.
“எடுத்துட்டு போம்மா!”
“இதையா எங்கேம்மா!”
“உங்க ரூமுக்குத்தான். சித்தார்த்துக்கு எந்திரிச்சதும் பெட்காபி தந்தாகணும். சொல்லலையா உன்கிட்ட?”
“அவர் இல்லையேம்மா!”
“புரியலே…”
“எ..ன்..ன.. சொல்..றே?” சந்திரமதியின் முகம் மாறியது.
உள்ளுக்குள் கிலி பரவத் தொடங்கியது.
ஐந்து மணிக்கே கண் விழித்துக் கொண்டாள் சந்திரமதி.
அதன்பிறகு சித்தார்த் வெளியே செல்ல வாய்ப்பே இல்லை. ஒரு வேளை மொட்டை மாடியில்?
“கொஞ்சம் இரு.. வந்துட்டேன்!” சந்திரமதி தன் வீடு முழுக்க சல்லடைப் போட்டு தேடினாள்.
சித்தார்த் எங்குமில்லை.
எங்கே போனான்?
“ஏங்க… நம்ம.. சித்…”
“இரு ..போன் அடிக்குது!” தலையணை பக்கத்தில் இருந்த செல்போனை எடுத்து ‘ஹலோ’ என்றார்.
“ம்… இரு… தர்றேன்… சித்தார்த் பேசறான்… இந்தா!” மனைவியிடம் நீட்டினார்.
“சித்தார்த்?” நடுங்கின விரல்கள்.
அத்தியாயம்-15
“ஹலோ….”
“ம்… என்னாசிரித்தான்.
“நீ…நீ எப்ப வெளியேப் போனே?”
“போகணும்னு நினைச்சிட்டா எப்படியும் போய்ட முடியுமில்லையா?”
“ஏன் ஒரு மாதிரி பேசறே? உக்கிரம் வீட்டுக்கு வா! அவந்திகா உனக்காக காத்திருக்கா!”
“யாரும்மா அவ?'”
“ஏன் இப்படி பேசுறே? அவ உன் பொண்டாட்டி!..”
“இல்லேம்மா..அவ உன் மருமகள் அவ்வளவுதான்.
என்னைக்குமே… எந்த ஜென்மத்திலேயுமே அவ எனக்கு பொண்டாட்டியா ஆகவே முடியாது.”
“சி.த்..தா..ர்..த்!” உதடுகள் நடுங்கின.
“என் பொண்டாட்டி… இதோ என் பக்கத்திலே இருக்கா.”
“சித்தார்த்!”.
“கத்தாதேம்மா… என்னை பேசவிடு உன் சுயநலத்துக்காக… உன் பொண்ணு வாழ்க்கைக்காக விஷத்தை கையிலே வச்சுக்கிட்டு என்னை மிரட்டி… எவளோ ஒருத்தி கழுத்துல தாலியக் கட்ட வச்சே! இல்லே… கனிகாவுக்கு ஒரு வாழ்க்கை அமையட்டுமேன்னு தான்.. அந்த கல்யாணத்துக்கே சம்மதிச்சேன், ஆனா, அதுக்காக அனிதாவை மறந்துட முடியுமா?”
“சித்தார்த்.. நீ தப்புப் பண்றே.. அவந்திகா சட்டப்படி உன் மனைவி!”
“ஆனா மனசுக்கு? ஒண்ணுத் தெரியுமா? இன்னும் அவளை நான் சரியா நிமிர்ந்து கூட பார்த்ததில்லே… ஒரே ஒரு வார்த்தை கூட பேசினதில்லே… நான் அனிதாவுக்கு துரோகம் பண்ணுவேனா?”
“அதுக்காக…?”
“மொத்தமா என் அனிதாகிட்டே வந்துட்டேன்!”
“ஏன்டா உன் புத்தி கேடு கெட்டு போகுது? அருமையா உனக்கு சொந்தமான பொண்டாட்டி இங்கே இருக்கப்ப எவனோ வேண்டாமனு டைவர்ஸ் பண்ணிட்டு போனவளை லவ் பண்றேன்.. அவளை தான் கல்யாணம் பண்ணிக்கப் போறேன்னு வந்து நின்னா… எந்த பெத்தவங்க? உன்னை பெத்தவளுக்கு உனக்கு நல்லது பண்ணத் தெரியாதா? என்னடா குறைச்சல் உனக்கு? எவளோ ஒருத்திக்கு ரெண்டாவது புருஷனா போகனும்னு ஒத்தைக்கால்ல நிக்கறே?”
“புரியாமப் பேசறியே… இப்ப நானும் கல்யாணம் ஆனவன்தானே?
“இதோ பார்…வில்லங்கமாகவே பேசிட்டிருக்கே! இது சரியில்லே, நானே போய் போலீஸ் ஸ்டேஷன்ல கம்பளைண்ட் பண்ணுவேன். சட்டப்படி நீ இப்ப அவந்திகாவோட புருஷன். அவளுக்கு துரோகம் பண்ண நினைச்சியான்னா உள்ளேப் போய்டுவே!”
“தெரியும்மா.. சட்டத்தால என்ள வேணாலும் செய்ய முடியும்னு எனக்கும் தெரியும். ஆனா… இனி எந்த சட்டத்தாலேயும், என்னையும் அனிதாவையும் பிரிக்க முடியாத பந்தத்தை நான் ஏற்படுத்திக்கிட்டாச்சு.”
“டேய்..”
“கொஞ்சம் பேசவிடும்மா… எனக்கு நேரமில்லே…”
“இன்னைக்கு எனக்கும் அனிதாவுக்கும் கல்யாணம் ஆயிடுச்சு. மனசால மட்டுமில்லே… உடலாலேயும் நாங்க இணைஞ்சாச்சு…”
“சித்தார்த்…”
“குறுக்கே பேசாதே… என்னால முடியலே! போதும்மா… என் அனிதாவோட நாலு மணி நேரம் வாழ்ந்துட்டேன். இனி எங்களை யாராலேயும் பிரிக்க முடியாது. நாங்க ரெண்டு பேரும் நிறைய தூக்க மாத்திரை சாப்பிட்டுட்டோம்..”
“ஐயோ… சித்தார்த்… சித்தார்த். இப்ப எங்கே இருக்கே?” அலறினாள் சந்திரமதி.
“என்னாச்சு சந்திரா…” ரங்கராஜன் பதற்றமானார்.
“என்னை கோழையாக்கிட்டேம்மா! கனிகாவுக்கு வேற அலையன்ஸ் கிடைக்காத என்ன? ஆனா அதை காரணம் காட்டி என் வாழ்க்கைய நாசமாக்கிட்டியேம்மா. அனிதாவும் பாவம்மா…நல்லவ. எத்தனையோ விதவைங்க மறுமணம் பண்ணிக்கலையா? நானும் அந்த மாதிரி பண்ணியிருந்தா தியாகின்னு சொல்லியிருப்பே! டைவர்ஸ் பண்ணிகிட்ட பொண்ணுங்கன்னா மோசமானவங்கன்னு யார் சொன்னது உனக்கு? ஒரு படுபாவிகிட்டேர்ந்து டைவர்ஸ் வாங்கினப் பொண்ணு…இப்ப என் கூட சேர்ந்து செத்துக்கிட்டிருக்காளே.. அவளையாம்மா கெட்டவன்னு சொல்றே”
“இப்ப எங்கேடா இருக்கே? பெத்த வயிறு எரியுதே…!”
“பேச முடியலேம்மா.. அனிதா வீட்லேதான் இருக்கேன், தயவுப்பண்ணி எங்க ரெண்டு பேரையும் ஒண்ணா சேர்த்து எரிச்சிடு. எங்க சாம்பலும் ஒண்ணா கலக்கட்டும். பிரிச்சிடாதேம்மா…ப்..ளீ..ஸ்!”
எதிர்முனை ஆப் ஆனது.
சந்திரமதி, ரங்கராஜன், பரமேஸ்வர் எல்லோரும் அளிதாவின் வீட்டை அடைந்த போது… எல்லாமே முடிந்து விட்டிருந்தது.
சித்தார்த்தும், அனிதாவும் மணக்கோலத்தில் ஒருவர் கையை ஒருவர் பற்றியபடி கட்டிலில் சடலமாகி இருந்தனர்.
பெற்றவர்கள் வாயிலும், வயிற்றிலும் அடித்துக் கொள்ள… பரமேஷ்வர் மின்சார கம்பியை மிதித்த தினுசில் நின்றான்.
நேற்று இதே மணக்கோலத்தில் நின்றிருந்த அவந்திகா கண்முன் வந்து கலக்கமுற செய்தாள்.
என்ன நடந்தது?
இதற்காகவா அவசரப்பட்டேன்?
இனி அவந்திகா?
ஐயோ… கடவுளே!
போலீஸ் வந்தது. அனிதாவின் பெற்றோருக்கும் தகவல் போனது.
இறந்தவர்கள் சுடிதமும் எழுதி வைத்திருந்தனர், அதன் படி வேறு வழியின்றி இருவரையும் ஒன்றாய் சேர்த்து எரித்தனர்.
அவர்கள்… காதலிலும் வென்று விட்டார்கன் கல்யாணத்திலும் ஒன்று சேர்ந்து விட்டனர்.
ஆனால் அவந்திகா?
காதலிலும் தோற்றுவிட்டாள்.
கல்யாணத்திலும் தோற்று விட்டாள்.
வெகுநேரம் கழித்தே அவள் காதுக்கு விஷயம் போனது.
திகைத்துப் போனாள்.
ஆனால், கண்ணீர் மட்டும் வரவேயில்லை.
வாசலில் வேறொரு பெண்ணுடன் ஈடனமாக வீற்றிருந்தவனை பரிதாபமாக பார்க்கத் தோன்றியதே தவிர…தன் வாழ்க்கை சிதிலமாகிப் போன உணர்வே வரவில்லை.
எப்படி வரும்?
நேற்றுதான்… மணமேடையில் அவனை முதன் முதலாகப் பார்த்தாள். அதன் பின் ஒரே ஒரு வார்த்தை? புன்னகை? ம்ஹும்… எதுவும் பரிமாறிக் கொள்ளவே இல்லையே!
ஏதோ… வந்தான்…போனான்! எல்லாம் ஒரே நாளில் நடந்து முடிந்து விட்டது.
பழகியிருந்தாலாவது…அந்த மாசத்திற்கு இரண்டு சொட்டு கண்ணீர் வரலாம்.
தாலி கட்டும்போது காற்று உரசுவதுப் போல் அவன் விரல் கழுத்தில் பட்டது போல் நினைவு.
நிஜம்தானா?
யோசித்துப் பார்த்தால் அதுக்கூட இல்லைப்போல்தான் தோன்றியது.
“அவி… அவந்திம்மா ஏம்மா இப்படி கல்லு மாதிரி உட்கார்ந்திருக்கே… அழுதிடும்மா… அழு, அழு…உன்னை பார்த்தா பயமாருக்குடா!” பரமேஷ்வர்தான் அவளைப் பிடித்து உலுக்கி.. கதறினான்.
“முடியலேண்ணா… நிஜமாகவே அழுகை வரலே. எதற்காக…யாருக்காக அழணும்! யாரிந்த சித்தார்த்?பெத்தவங்க கட்டாயத்துக்கு தாலி கட்டினான். தன்னை நம்பியவளோட சேர்ந்து உயிரை விட்டான். இதுக்காக நான் ஏன் அழணும்? எனக்கும், அவனுக்கும் என்ன சம்பந்தமிருக்கு? நான் காதல்ல தோத்தப்ப அமுதேன். அதுக்கு காரணமிருக்கு என்னா கௌசிக்கை நான் நேசிச்சேன். விலகினப்ப வலிச்சது. இங்கே எதுவுமே நடக்கலையேன்னா, இதெல்லாம் விடுண்ணா நான் ஒரு விஷயம் கேள்விப்பட்டேன். நிஜமா கேட்கணும். இப்ப எதையும் பேச முடியாது. ஆனா கேட்டே ஆகணும். இதிலே பலிகடா யாரு? நியா? நானா?” உள்ளுக்குள் எண்ணங்கள் முட்டி மோதிக்கொண்டன.
“ஏம்மா அப்படி பார்க்கிறே?”
வேதனையுடன் கண்களை இறுக மூடிக் கொண்டாள் அவந்திகா.
– தொடரும்…
– காதல் தேரினிலே… (நாவல்), மார்ச் 2009, தேவியின் கண்மணி மாத இதழ்.