காதல் தேரினிலே…

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: November 19, 2024
பார்வையிட்டோர்: 3,697 
 
 

(2009ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 7-9 | அத்தியாயம் 10-12 | அத்தியாயம் 13-15

அத்தியாயம்-10

பத்தாவது முறையாக மறுபடி எண்ணை அழுத்தினாள். எதிர்முளை சிணுங்கிக் கொண்டே இருந்தது. கவுசிக் போன் அட்டென்ட் பண்ணவில்லை. 

யோசனையுடன் தன் செல்போனையே பார்த்துக் கொண்டிருந்தாள் அவந்திகா 

கொஞ்ச நாளாய் இப்படித்தான். கவுசிக்கிற்கு போன் பண்ணினால், எப்போதாவது பேசுவான். அப்படியும் வேலையில் இருக்கேன், அப்புறம் பேசறேன் என்பான். மற்றொருமுறை, ‘ஸாரி அவந்திகா, பிஸியாய் இருக்கேன். வரமுடியாதே!’ என்று அடுத்த வார்த்தை பேசுமுன் கட் பண்ணினான். 

அவந்திகா வெள்ளந்தியானப் பெண் அல்ல. பணிபுரிவதற்கென்று படிதாண்டி வரும் பெண்கள் இப்போதெல்லாம் போனஸாய் மனிதர்களையும் படித்து விடுகிற வாய்ப்பு இலகுவாய் அமைந்து விடுகிறது. 

அம்மா இறப்பதற்கு முன்பே.. கவுசிக்கின் காதலை மீறிய, சுயநலம் மிகுந்திருந்ததை உணர்ந்திருந்தாள். அவன் தெளிவானவன். வாழ்க்கையை உணர்ச்சியோடு அணுகாதவன்.. என்பது புரித்துதான் இருந்தது. ஆனாலும், யதார்த்த சூழலை மீறி, தன் மீதான அன்பு எல்லாவற்றையும் தோற்கடித்து விடாதா என்கிற ஏக்கமும் எதிர்பார்ப்பும் அவள் மனதை சூழ்ந்திருந்தது. 

ஆனால்… 

அம்மா இறந்து விட்டாள். அவன் நடவடிக்கை மாறிவிடுமோ என்று உள்ளத்து மூளையில் சுழன்றடித்த சிறுகாற்று மண்டலம், புயலாய் மாறி பயமுறுத்துகிறது. 

அவன் தன்னை தவிர்ப்பது நிதர்சனமாய் புரிகிறது என்றாலும், இல்லை என் எண்ணம் தவறு. கவுசிக் என்னை ஏமாற்ற மாட்டான் என்று நிருபிக்க மனசும் பரபரத்தது. 

பரமேஷ்வருக்கு தங்கையின் சோகம் குழ்ந்த முகம், ரணப்படுத்தியது. அம்மாவின் மரணம் சாதாரணமானதல்ல, எனினும் கூடவே அவளுக்கு தன் எதிர்காலத்தை பற்றிய பயமும் இருக்குமல்லவா? அம்மா கடைசி வரை பயந்து, பயந்து அவள் மனதிலும் அதை விதைத்து விட்டு போயிருக்கிறாள்.

இருவர் மட்டுமே இருந்த வீட்டில் மவுனம்.. நிலைத்து ஆட்சி செய்தது. 

அண்ணனுக்கு காபியை கொண்டு வந்து தந்தாள்.

“நீயும் எடுத்துக்கிட்டு வந்து உட்கார்.அவந்தி” 

“சரிண்ணா!” 

காபியுடன் வந்து அமர்ந்தாள். 

“அம்மா இப்படி திடீர்னு நம்மளை விட்டு போயிடுவாங்கன்னு எதிர்பார்க்கலே அவந்தி.” 

“ஆமாண்ணா!” 

“இந்த வீட்ல நீயும் தானும் தான்! அட்லிஸ்ட் நியாவது கொஞ்சம் தெலிவான.. உன் முகம் பார்த்து நான் மனசை தேத்திக்குவேன்” 

“முயற்சிப் பண்றேண்ணா!”

“அப்புறம்… அம்மா பயந்தது போலவே உன் வாழ்க்கையை நினைச்சு நீயும் பயப்படக்கூடாது. நான் இருக்கேன். உனக்கொரு நல்ல வாழ்க்கையை அமைச்சுத்தரவேண்டியது என் பொறுப்பு, கடமை!” 

“இப்ப எதுக்குண்ணா அந்த பேச்செல்லாம். எனக்கு எந்த பயமும் இல்லை. நீயாவது கடைசி வரை என்கூடவேயிரு!” என்றாள் நெகிழ்ச்சியுடன். 

“ஏம்மா இப்படியெல்லாம் பேசறே? நமக்குள்ளே நாலஞ்சு வயசு வித்தியாசம்தான். ஆனாலும் நீ எனக்கு மகள் மாதிரி! புரிஞ்சுக்க”, தங்கையின் தலையை இதமாய் வருடிக்கொடுத்தான். 

அந்த நேரம். காலிங் பெல் அலறியது. 

“இரு…நான் போய் திறக்கிறேன்.” 

கதவைத் திறந்த பரமேஷ்வர் வந்திருந்த பெண்ணை கணநேரம் நெற்றிசுருக்கி, பின்புரிய அட…மாலினி…நீயா… வாம்மா…உள்ளே வா!” என்றான். 

குரல் கேட்டு ஆச்சயமாய் ஒடிவந்தாள் அவந்திகா.

“மாலினியட வாடி.. உள்ளே வா! உன் குழந்தையா? எவ்ளோ நாளாச்சு உன்னைப் பார்த்து.. உட்கார்!” 

“அம்மா இறந்ததை கேள்விப்பட்டேன். இப்பதான் எனக்கு விஷயமே தெரியும்” என்றாள் மாலினி. 

உறங்கிக் கொண்டிருந்த குழந்தையை வாங்கி கட்டியில் கிடத்தினாள் அவந்திகா. 

மாலினியும், அவளும் பள்ளித் தோழிகள். அவள் காதல் வாய்ப்பட்டு ஒரு வாலிபனுடன் ஒடிப்போனது வரை தெரியும். அதற்கு பின் அவர்களுக்கு எந்த சந்திப்பும் இல்லை. இடைப்பட்ட இள்னொரு தோழி மூலமாக விபரம் அறிந்த வந்திருக்கிறாள். 

சீதாலெட்சுமி பற்றி சிறிது நேரம் சிலாகித்து விட்டு “இப்ப எங்கே இருக்கிற மாலினி?” என்றாள். 

பரமேஷ்வர், “நான் வெளியே போயிட்டு வந்திடறேன். மாலினியை சாப்பிட விடாம அனுப்பாதே” என்றான். 

“இல்லே பரமுண்ணா. அவர் ஏழு மணிக்கு வந்திடுவார். அதுக்குள்ளே போய்டணும்!” 

“என்ன அவசாம்? சொல்லிக்கலாம் விடு! நான் வந்திடறேன்” என்று வெளியேறினான். 

அடுத்த கணமே, அவந்திகாவின் கையைப் பற்றிக் கொண்டே மாலினியின் கண்களில் முட்டிக்கொண்டு நின்றது கண்ணீர். 

“என்ன மாலினி?” என்றாள் அவந்திகாபதற்றமுடன், “நீ எங்கே வேலை செய்யறேன்னு எனக்குத் தெரியாது. ஆனா. எனக்கும் ஒரு வேலை வாங்கிக்குடு அவந்தி…” என்றாள் அழுகையினுடே.

“மொதல்ல அழறதை நிறுத்து, என்னாச்சு உனக்கு?” 

“என் புருஷன் ரொம்ப சீக்கிரம் என்ன டைவர்ன் பண்ணிடுவார்ன்னு தோணுது” 

“என்னடி, பைத்தியம் மாதிரி உளர்றே!” 

“உண்மையதான் சொல்றேன்” என்றவள் கேசவ் தினமும் அவனை கடுமையான வார்த்தைகளால் சாடுவதையும், கொஞ்ச நாளாய் அவர் நடவடிக்கை சரியில்லாததையும், வேறு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டு இருக்கலாம் என்று சந்தேகப்படுவதையும் கூறினாள். 

“நம்பவே முடியலே மாலினி! உன்னைப் பத்தி எல்லாமே தெரிஞ்சுதானே காதலிச்சு கல்யாணம் பண்ணினார்? ஒரு குழந்தையும் பெத்துட்ட பிறகு அந்தஸ்து பேதம் கண்ணை உருத்துதாமா? சும்மாவிடக்கூடாதூ மாலினி. மாதர் சங்கத்துல போய் முறையிடலாம்!” என்றாள் கோபமாக. 

“முறையிட்டு. அதுக்குப் பிறகு மனச ஒத்து வாழ்ந்திடுவாரா?. இன்னுமில்லே வெறுப்பு அதிகமாகும்? காலம் முழுக்க சந்தோஷமில்லாம, திட்டிக்கிட்டும், அடிச்சுக்கிட்டும், அமுதுகிட்டும் வாழறதா வாழ்க்கை? ரெண்டு பேர்ல யாராவது ஒருத்தராவது சந்தோஷமாயிருக்கலாம் இல்லையா? அந்த வாய்ப்பு அவருக்கு கிடைச்சா, குறுக்கே நின்னு வழிமறிச்சா மட்டுமே எனக்கு சந்தோஷம் கிடைச்சிடுமா? எனக்கு என் பொண்ணு இருக்கா. அவ வளர்ற சூழ்நிலை மாறணும். அவளுக்காக இனி வாழ்ந்திட்டுப் போறேன்“ என்றால் நெக்குறுக. 

“என்ன வேலைத் தெரியும் உனக்கு? எப்படி சமாளிப்பே?”

“பறவைகளோட உணவை கடவுள் கூட்டில் எறியறதில்லை அவந்தி. எனக்கான உணவை கடவுள் என் ரெண்டு கைகள்ல மறைச்சு வச்சிருக்கார். உழைக்க தயாரா இருக்கேன். எந்த வேலையாய் இருந்தாலும் பரவாயில்லை. பிளீஸ்ப்பா… ஏற்பாடு பண்ணு!” 

“செய்றேன் மாலினி.. தைரியமாயிரு!” 

தனக்கும் சேர்த்து மாலினி எச்சரித்து விட்டு செல்வது போலிருந்தது அவந்திகாவிற்கு. கவுசிக்கின் ஒதுங்கலும் அதைத்தானே சொன்னது. 


காமாட்சி மகனை ஒரு வழியாய்.. பேசிப் பேசி தன் வழிக்கு கொண்டு வந்து விட்டாள். 

“அடுத்த வாரம் நாள் நல்லாயிருக்கு… சம்பிரதாயத்துக்கு பொண்ணு பார்க்க வந்துடுங்கண்ணு அண்ணி போன் பண்ணினாங்க… வர்றோம்னு சொல்லிடட்டுமா கவுசிக்?” 

“கொஞ்ச நாள் போகட்டும்மேம்மா. என்னைக் கொஞ்சம் பிரியா விடு!” 

“கல்யாணத்தை உடனே வச்சுக்க வேணாம். 

நிச்சயதார்த்தம் மட்டும் முடிச்சுடலாம். நல்ல காரியத்தை ஏன் தள்ளிப்போடணும்? வேற யாராவது நிரஞ்சனாவை கொத்திட்டுப் போய்டக்கூடாது. அடுத்து பிராத்தனா இருக்கா. அவளையும் நினைச்சுப் பார்த்துக்க.. நல்ல வரனாப் பார்த்து அமோகமா கல்யாணம் பண்ணிக் கொடுக்கலாம்.” 

“….?”

“ஜோஸியர்கிட்டே உன் ஜாதகம் காட்டினேன். சுக்ரதிசை ஆரம்பிக்குதாம். தேவையில்லாத சங்கடமெல்லாம் உன்னைவிட்டு ஓடிப்போகுமாம். கல்யாண யோகம் வத்துடுச்சாம். வசதியான இடத்துல தான் பொண்ணு அமையும்னு அடிச்சு சொல்லிட்டார். நல்ல விஷயத்தை தள்ளிப்போடாதே கவுசிக்!” 

கவுசிக் தயங்குதவற்கு குழப்பம் காரணமில்லை, அவன் தெளிவாகத்தான் இருக்கிறான். கேசவ் வாழ்க்கையின் ரியாவிட்டியை துல்லியமா உணர்த்திவிட்டான். அதன் பின் நிறஞ்சனாதான் தன் பெஸ்ட் சாய்ஸ் என்பதையும் தீர்மானித்து விட்டான். ஆனால்,  இதை நாசூக்காக அவந்திகாவிடம் சொல்லிவிட்டு அம்மாவிடம் சம்மதம் சொல்லலாம் என்று நினைத்திருந்தான். அம்மா விடறமாதிரி தெரியலையே! 

“சொல்லு கவுசிக்!” 

“சரிம்மா. உன் இஷ்டம். பார்த்து செய்.”

“இது போதும் கவுசிக்… நான் போய் அங்காளம் மகனுக்கு ஒரு அர்ச்சனை பண்ணிட்டு வந்திடறேன்.. பிரார்த்தனா.. குக்கர்ல பருப்பு வச்சிருக்கேன், விசில் வந்ததும் இறக்கீடு!” என்று கூறிவிட்டு காமாட்சி மகிழ்ச்சிப் பொங்க வெளியேறினாள். 

“பிரார்த்தனா…கொஞ்சம் தண்ணி கொண்டு வாயேன்!” அலுப்புடன் சேரில் அமர்ந்தான் கவுசிக். 

அத்தியாயம்-11

“எதுக்குண்ணா.. உன் காதலிய ஒரேடியா கை கழுவறதுக்கா?” அவன் முன் தம்னரை நீட்டியபடி கேட்டாள் பிரார்த்தனா. 

“ஏய்.. என்னப் பேசறே?” வாங்கி அருந்தினான்.

”எல்லாத்தையும் பார்த்துட்டுதாள் இருக்கேன். வசதியான பொண்ணு கிடைச்சதும்.. காதலிச்சிட்டிருந்த பொண்ணை கழற்றி விடறியே.. எதுக்குண்ணா? எனக்காகவா?” 

“இதோ பார்.. நீ சின்னப்பொண்ணு.. இதெல்லாம் பேசக்கூடாது.. சில விஷயங்கள் குடும்பத்துக்காக அனுசரிச்சிக்கிட்டு போறதுதான் நல்லது. கஷ்டப்படறதுக்காக கல்யாணம்? வாழறதுக்குத்தானே? யோசிச்சு புத்திசாலித்தனமா எடுத்த முடிவு இது! உனக்கும் சரி. நம்ம குடும்பத்துக்கும் சரி.. இது தான் சரி!” 

“ஏதேது..நீயென்னமோ தியாகி மாதிரிப் பேசறே! பணம் தான் வாழ்க்கைன்னா, காதல்ங்கற உணர்வுக்கும், கணவன், மனைவிங்கற பந்த்துக்கும் என்னதான் அர்த்தம்? கல்யாணத்தையும், கணவன்-மனைவி உறவையும் கமர்ஷியலா பார்க்க ஆரம்பிச்சிட்ட பிறகு.. வாழ்க்கை உண்மையானதா இருக்கும்னு நினைக்கறியா? ஒரு பொண்ணோட் கண்ணீருக்கு மேல… நீ காரோட்டிக்கிட்டு போகப்போறியா? இவ்ளோதானா நீ? ச்சை!” கசப்புடன் அந்த அறையை விட்டு அகன்றாள் பிரார்த்தனா. 

தங்கை பேசியதெல்லாம் உறைத்தது… கணநேரம் தான், கேசவ்வை நினைத்து கொண்டான். ஜிவ்வென்று புது ரத்தம் பாய்ந்தது உடம்பில்.


“பேசணும்… பர்மிஷன் போட்டுட்டு வரமுடியுமா?’ என்று வெகுநாள் கழித்து கவுசிக் போனில் அழைத்த போதே புரிந்து விட்டது….இது வழக்கமான இதயப் பரிமாறல் சந்திப்பில்லை என்று. 

அவன் ஏதோவொரு குண்டை தூக்கிபோட்டு வேதனைபடுத்தப் போகிறான் என்று புரிந்தாலும் வலித்தது. அதை நாங்கிக் கொள்ள கூடிய சக்தி இருக்கிறதா என்று புரியவில்லை. 

கடற்கரையையொட்டி பூங்காவில் அமர்ந்தனர். தடுமாற்றமும், அந்நியப்பார்வையும் மிகுந்திருந்தது கவுசிக்கிடம். 

படபடத்த உள்ளத்தை மட்டுப்படுத்தி மெல்ல புள்ளகைத்தாள். 

“நல்லாயிருக்கீங்களா கவுசிக்?” என்று கேட்டாள். 

“ம்..நீ?”

“ம்!”

அடுத்த கணம், சாலையில் விரைந்தோடும் வண்டிகளையும், பலூன் பிடித்தபடி ஓடியாடி விளையாடும் சிறுவர்களையும் வேடிக்கை பார்த்தான். 

பத்து நிமிடம் கடந்தது. 

அந்த சூழ்நிலை அவந்திகாவிற்கு அவதியாய் இருந்தது.

“சொல்லுங்க… என்ன விஷயம் கவுசிக்?” – நேரடியாக விஷயத்திற்கு வந்தாள். 

“நான் ஒரு முடிவெடுத்திருக்கிறேன். தீர யோசிச்சு எடுத்த முடிவு. பிராக்டிக்லா எடுத்த முடிவு.. இதுக்காக நீ வருத்தப்படுவே..பட், எனக்கு வேற வழி தெரியலே…” 

“ம்..” என்றாள், அடுத்து அவன் என்ன சொல்லப் போகிறாள் என்பதை அறிந்து.. அதனால் ஏற்படப்போகும் வலியை ஜீரணிக்க, ஏற்றுக் கொள்ளத் தயாராகி விட்டாள். 

“நான் உன்னை லவ் பண்ணியது நிஜம். ஆனா எல்லாவற்றையும் லவ்வும் மேரேஜ்ல முடியறதில்லை இல்லையா அவந்திகா?” 

அவளுக்கு-அலுப்பாய் இருந்தது. அந்த மோசமான விஷயத்தை சீக்கிரம் சொல்லி தொலைத்தால் என்ன?இதிலென்ன சஸ்பென்ஸ்? அதான் என்னை சந்திப்பதை அவாய்ட் பண்ணி எடுக்கப் போகும் முடிவை முன்பே உணர்த்தி விட்டானே! 

அவனை நிமிர்ந்து நேருக்கு நேர் விழிகளை சந்தித்தாள்.

“மேரேஜ் பிக்ஸ் ஆயிடுச்சா கவுசிக்?”

எதிர்பார்க்கவில்லை கவுசிக். 

“அவந்திகா.. உனக்கு எப்படி?”

“புரிஞ்சுக்கிட்டேன்” 

“என்னை.. தப்பா..நினைக்கறியா?”

“எப்படி நினைக்கணும்னு சொல்லுங்க?” 

“ஃபிராக்டிகலா யோசி அவந்திகா, என்னை மட்டுமே குற்றம் சொல்லாதே! ஒவ்வொருத்தனுக்கம் சில லட்சியசங்கள் இருக்கும். எனக்கும் இருக்கு. எங்க வீட்ல நானும், அம்மாவும், தங்கையும் மட்டும் தான். வீடு நிறைய உறவுகள் இருக்கணும்னு ஆசைப்படுவேன். எனக்கு வரப்போற மனைவிக்கு உடன் பிறந்த சொந்தங்கள் நிறைய இருக்கணும்னு ஆசைப்பட்டேன். அவநிறைய படிச்சவளா, புத்திசாலியா இருக்கணும். எதிர்காலத்தில் நான் தொழிலதிபரா உயரும் போது அவ எனக்கு சப்போர்ட்ட இருக்கணும். ஆனா, உங்க வீட்ல உனக்கு அண்ணனை தவிர யாருமில்லை. வெறும் எக்னாமிக்ஸ் படிச்சிருக்கிறே. அதை வச்சுகிட்டு நீ எப்படி என் லட்சியத்துக்கு துணையா இருக்க முடியும்?” 

மழுப்பலான அவளின் காரணங்கள் சிரிப்பை உண்டாக்கின.

“இதெல்லாம், நாம முதன் முதலாக சந்தித்தபோதே என்னிடம் இருந்த தகுதிகள் தானே?” 

“நிஜம் தான், ஆனா, உன் மேல இருந்த நேசம் இதையெல்லாம் பெரிசு படுத்தலை. ஏன், நானே கூட இந்தப் படிப்பே போதும். வீட்டோட நல்ல பொண்டாட்டியா இருன்னு சொல்லியிருக்கேன். அந்தளவுக்கு பாசம் கண்ணை மறைச்சது. ஆனா, வாழ்க்கையை என் சூழ்நிலைல, என் கண்ணோட்டத்துல இருந்து பார்க்கிறப்ப.. நான் எடுத்த முடிவு சரியில்லேன்னு புரிஞ்சுது. ஒருத்தரை ஒருத்தர் நேசிக்கறதும், புரிஞ்சுக்கறதும் மட்டுமே கல்யாணத்துக்கான தகுதிகளாயிடாது அவந்திகா. அதுக்கும் மேலே நிறைய இருக்குது. யோசிக்காம நாம முடிவெடுத்துட்டு பின்னாடி வருந்தப்படக் கூடாதுல்லியா?”

அவன் தன் பக்கம் நியாயமிருப்பது போல் பெரியதாய் பிரசங்கம் பண்ண…பொங்கிய கோபத்தை அடக்க பெரும்பாடு பட்டாள் அவந்திகா. 

“பரவாயில்லை கவுசிக்… என்னால் புரிஞ்சுக்க முடியது… எப்ப கல்யாணம் பிக்ஸ் பண்ணியிருக்கீங்க?” 

“அ…அது…நிச்சயாதார்த்தம் தான் முடிவு பண்ணி இருக்காங்க. வர்ற பதினஞ்சம் தேதி!”
 
“கங்கிராட்ஸ் கவுசிக்!”

“நீயும் கண்டிப்பா வரணும்” 

சிரித்தாள், முகத்தில் பொலிவை மீறி வலி தெரிந்தது. 

“இன்விடேஷன் அனுப்புங்க. கண்டிப்பா வர்றேன்”. அவன் கேள்விக்கு நேரடியாக பதிலளிக்காமல் சொன்னாள். 

“….?!”

“நேரமாச்சு கிளம்பறேன். அண்ணன் காத்துக்கிட்டிருப்பார்!”

சட்டென புறப்பட்டாள், 

முதுகை வெறித்துப் பார்த்த கவுசிக்கிற்கு புரிந்தது… அவள் கண்கள் கலங்கிக் கொண்டிருப்பது. “வேறு வழி தெரியவில்லை அவந்திதா. ஸாரி!”


குளிக்கும் போது தண்ணீரோடு, கண்ணீரும் சேர்ந்து கரைந்து ஓடியது. இம்சித்த இதயத்தை அடக்கத் தெரியாமல் திண்டாடினாள், அண்ணன் எதிரில் இயல்பாய் இருப்பது போல் காட்டிக் கொள்ளத்தான் சிரமப்பட்டாள். காரணம், அவளுக்கு நடிக்கத் தெரியவில்லை. 

அம்மாவின் மரணம் அவளை இன்னும் இயல்புக்கு கொண்டு வரவில்லை என்றே தமயன் நினைத்தான். 

அதிகம் எதிர்பார்பில்லாத அன்பிள் தோல்வி யாரையுமே நிலை குலையவே செய்து விடும். 

அவந்திகாவின் ஆசை, மாட மாளிகையோ, கணவனின் பணமோ, உடம்பெங்கும் நகைகளோ அல்ல. 

அன்பு.. என்றுமே மாறாத அன்பு! 

அதனாலோ என்னவோ நொறுங்கிப்போய் விட்டாள்.

காரணம் எதுவாயினும்.. நேசித்த ஒரு பெண்ணை எப்படித் தூக்கி எறிய முடியும்? 

பணம் மட்டும் தான் வாழ்க்கையின் அஸ்திவாரமா? அது இல்லாவிட்டால் வாழவே முடியாதா? 

அப்படியானால் செலிட்டு கணவனும், குருட்டுமனைவியும்தான் பிரச்சனையின்றி வாழமுடியும் போல! 

தன் காலத்தை வெளியில் காட்டிக் கொள்ள விரும்பவில்லை அவந்திகா. 

அவள் முகவரிக்கு நிச்சயதார்த்த அழைப்பிதழ் அனுப்பி இருந்தான் கவுசிக். 

அப்படிப்பட்ட விழாவிற்கு போவதை விட பெரிய வலி எதுவுமில்வை. தோல்வி கண்ட இதயத்திற்கு. ஆனால், போகாவிட்டால் தான் அவனையை நினைத்து மருகிக் கொண்டிருக்கிறோம் என ஆண் மனது நினைக்குமே! 

சின்ன ஈகோ தலைதூக்க… 

அவந்திகா.. நிச்சயதார்த்த விழாவிற்கு சென்றாள். 

அத்தியாயம்-12

சிட்டியில் பெரிய மண்டபம், வாசலிலேயே மிக பிரமாண்டமானதிரை வைத்து மேடையில் நடப்பதைக் காட்டிக் கொண்டிருந்தார்கள். 

நிறைய கூட்டம். பணக்காரர்களைக் கொண்ட மனிதர்கள். பெரிய இடத்து சம்பந்தம் என்பது அப்பட்டமாய் தெரிந்தது. 

மேடையில் ஏகப்பட்ட உறவுக் கூட்டம். மாலை மாலையாய் நகைகள். 

கௌசிக்கின் பக்கத்தில் நின்றிருந்த நிரஞ்சனா நிறமாய், பொலிவாய், அழகாய் இருந்தாள். சத்தம் போட்டு சிரித்தாள். 

கேஷூவலாய் கெளரிக்கின் தோள் தொட்டுப் பேசினாள். வெகு நாள் பழக்கம் போல்! 

ஏன் முடியாது? இரண்டு மாதமாய் அவளை ஒதுக்கி வைத்திருந்தானே? அவளுடன் பேசிப் பழக அந்த அவகாசம் போதுமே! 

இருவரையும் ஒரு சேர பார்த்தபோது இதயத்தை ரம்பம் கொண்டு அறுப்பது போல் இருந்தது. 

மெல்ல… மேடையேறினாள். 

கௌசிக் என்ன சொன்னானோ…? 

“யூ..கான்ட் சீட் மீ டியர்!” செல்லமாய் அவன் கன்னத்தை தட்டி கோபப்பட்டாள் நிரஞ்சனா. பதிலுக்கு அவனும் சிரித்தபடி எதையோ சொல்ல வாயெடுத்தவன்…அவந்திகாவை பார்த்து விட்டான். இந்த பதினைந்து நாட்களில் இன்னும் இளைத்ததுப் போல் தெரிந்தாள். 

“வாழ்த்துக்கள்” என்றபடி சிறு புன்னகையுடன் அவனிடம் பொக்கேயை நீட்டினாள். 

அழைத்திருந்தானேயொழிய அவள் வருவாள் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை கெளசிக். 

அதிர்த்தவன் சட்டென தன் நிலை உணர்ந்து இயல்புக்கு வந்தான். 

“வாங்க அவந்திகா. பரமேஷ்வர் வரலியா?.” 

“நிரஞ்சனா இது அவந்திகா. என் நண்பன் பரமேஷ்வரோட தங்கை!” 

“ஹாய்…” 

“ஹலோ..”

மனதிற்குள் அவனின் சாமர்த்தியத்தை நினைத்து சிரித்துக் கொண்டாள். 

“அவந்திகா… இது நிரஞ்சனா, அவங்க நிரஞ்சனவோட அம்மா. இது அவளோட பெரிய அண்ணி, அவங்க ரெண்டாவது அண்ணி. அதோ.

ஆஷ் கலர் சூட் போட்டிருக்காரே… அவர்தான் பெரிய அண்ணன். வரிசையாய் அவனின் புதிய உறவுகளை பெருமையாய் அறிமுகப்படுத்தியபோது… அவந்தியகாவின் நெஞ்சடைத்தது. 

அவர்கள் மத்தியில் தான் தனியாக, அனாதை போல் உணர்ந்தாள்.


“அவங்க மண்டபத்தை விட்டு வெளியே போகும்போது… கண்களெல்லாம் கலங்கிப் போய்… சே.. பார்த்ததுமே.. மனச துடிச்சுப்போச்சு.” பிரார்த்தனா அங்கலாய்த்தாள். 

“இப்ப என்னை என்ன பண்ணச் சொல்றே” 

“இதை சொல்ல உனக்கு வெட்கமாயில்லையாண்ணா? ஒரு பெண்ணோடகனவுகளை சிதைத்து… அதை காரணம் காட்டி., என் வாழ்க்கையோட அஸ்திவாரத்தை கட்ட நினைச்சீங்கன்னா, ஸாரி… அப்படிப்பட்ட கல்யாணமே எனக்கு வேணாம்!” 

“ஏய் என்ன நீ அதிகமா பேசறே?” 

“நீ பண்ணின அநியாயத்தை சொன்னேன். புது பணக்காரனாயிட்டே நீ பண்ணின துரோகமெல்லாம் பெரிய விஷயமாகவே தெரியாதே!” வெறுப்பாய் அண்ணனை பார்த்து விட்டு நகர்ந்தாள் பிரார்த்தனா. 

ஏதோ… சின்னப் பெண் பிதற்றுகிறாள் என்றுதான் நினைத்தான். ஆனால், சுளீர் என உறைக்கும்படி அடுத்த ஒரு வாரத்தியேயே அந்த காரியத்தை செய்தாள் பிரார்த்தனா. 

தான் காதலித்த சந்துருவை பதிவுத் திருமணம் செய்து கொண்டு வீட்டிற்கே வந்தாள் பிரார்த்தனா. 

எதிர்பார்க்காத காமாட்சி ஆவேசமாய் கத்தி மூர்ச்சையாகிப் போனாள். 

கௌசிக் கோபத்தில் கத்தினான். 

“என்ன காரியம் பண்ணிட்டு வந்திருக்கே?” 

“கல்யாணம்தானே பண்ணியிருக்கேன்? காரியம், கீரியம்னு அபசகுணமா பேசறே! நானும் இவரும் மனப்பூர்வமா, உண்மையா நேசிச்சோம். வீட்ல சொல்லி கல்யாணம் பண்ணிக்கணும்னு தான் ஆசைப்பட்டோம். ஆனா பாவம் செய்து வந்த பணத்துல என் கல்யாணம் நடக்கறதை நான் விரும்பலே. அதான் இந்த முடிவு. 

சந்துரு சம்பாதிக்கிற பணம் போதும். அவங்க வீட்லேயும் எங்க காதலை ஏத்துக்கிட்டாங்க. பிரச்சனையில்லாம குடும்பம் நடத்த இது போதுமேண்ணா! நாங்க வர்றோம்” என்று சந்துருவின் கரத்துடன் தன் கரம் கோர்த்து திரும்பி நடந்தாள் பிரார்த்தனா. கௌசிக் திக் பிரமையுடன் நின்றிருந்தான். 


நாளாக ஆக பொலிவிழந்து போன தங்கையை உள்ளம் துடிக்க பார்த்தான் பரமேஷ்வர். 

அம்மா இறந்து ஐந்து மாதம் ஆகிறது. அவனாவது ஓரளவு மனதை திடப்படுத்திக் கொண்டு விட்டான். அவளை எப்படி திடப்படுத்துவது? 

“அவந்தி…” 

“என்னண்ணா?” 

“இப்படிவந்து உட்கார்!” 

“சப்பாத்திக்கு மாவு பிசைஞ்சிட்டிருக்கேன்.” 

“பரவாயில்லை.. அதை அப்புறம் பார்த்துக்கலாம். இப்படி வா!”

“சொல்லுண்ணா” கையை கழுவாமலே வந்தமர்ந்தாள்.

“இப்படியே இருந்தா எப்படி அவந்தி?” 

“புரியலே” 

“ஆனது ஆச்சு, அம்மா இறந்தது மறக்கமுடியாத வேதனைதான். இப்படி நடை பிணமா வலம் வர்றதை பார்க்கறப்ப கஷ்டமாயிருக்கு அவந்தி! இதோ பார் உன்னை கரையேத்தாம நான் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்.. பயப்படாதே!” 

“நீதான் என்னை தப்பா புரிஞ்சுக்கிட்டே. நான் எப்பவும் உன் தங்கச்சியா இருக்கணும்னுதான் ஆசைப்படறேன். அப்படியே இருந்துடறேனே!” 

“அப்படியே இருந்துட்டா அம்மாவோட ஆத்மா சாத்தியடைஞ்சிடுமா? நீ வேணா பார்… அம்மா ஆசைப்பட்டதை விடவும் உன்னை எவ்வளோ பெரிய இடத்துல சேர்க்கிறேன்னு!”

உதடு பிரியாமல் சிரித்துவிட்டு எழுந்து கிச்சனிற்கு சென்றாள்.

அலுவலகம் செல்ல ஷேர் ஆட்டோவிற்காக காந்திருந்தாள் அவந்திகா. எல்லாமே ஏழெட்டு பயணிகளுடன் திமிறிக் கொண்டு வந்த ஆட்டோ, மேலும் பயணிகளை ஏற்றிக் கொள்ள நிறுத்தத்தில் வந்து நின்றது. அவர்களில் ஒருத்தியாக இருக்கி, பிதுங்கி உட்கார விரும்பாமல் வேறொரு ஆட்டோவிற்காக காத்திருந்தபோதுதாள் அவர்களைப் பார்ந்தாள். 

புத்தம் புது காரில் திருமணமாகி இரண்டு மாதமே ஆகியிருந்து புதுமண தம்பதியர் கெளசிக்கும். நிரஞ்சனாவும் ஏதோ ஜோக் சொல்லி சிரித்தபடி பஸ் நிறுத்தத்தை ஒட்டியிருந்த பெட்ரோல் பங்கில், பெட்ரோல் நிரப்பு காத்திருந்தனர்… 

அவனுடன் பைக்கில பட்டும் படாமல், விண்ணை முட்டும் காதலுடன் பயணித்த நினைவுகள் எழ, கண்களில் நீர்திரையிட்டு பிம்பங்கள் தழும்பின. 

அவன் கண்ணில் படுவதை விரும்பாத அவந்திகா.. புறப்பட எத்தனித்த ஷேர் ஆட்டோவில் ஏறி.. கும்பலோடு ஐக்கியமானாள். 

இந்த சாலையில்தான் கௌசிக்கின் அலுவலகமும் இருப்பதால் ஏற்கனவே ஓரிருமுறை அவர்களை பார்த்து உடைந்து போய் இருக்கிறாள். அதற்காகவே அவள் பார்த்து வந்த வேலையை விட்டு, வேறு வேலைக்கு முயற்சித்து வந்தாள். 

அடுத்த வாரம் அதற்கான நல்ல தகவல் வரும் என்றாள் நம்பகமான தோழி ஒருத்தி. 


சிட்டியில் புகழ்பெற்ற சூப்பர் மார்க்கெட்! 

அலங்கார கலைப் பொருட்கள் அடங்கிய பிரிவு! 

“எனக்காக, நான் சொன்னதும் கவர்ன்மெண்ட் வேலையை ரிஸைன் பண்ணிட்டு அண்ணனுங்க கூட சேர்ந்து பிலினஸ் பண்ண சம்மதிச்சு என் டார்லிங்குக்கு… நான்தான் பிரசன்ட் பண்ணுவேன்!” 

நிரஞ்சனா கொஞ்சலாய் சிணுங்கினாள். 

“நோ.. நோ.. எனக்கு கவர்ன்மெண்ட் வேலை கிடைச்சதே எதிர்பாராமத்தான். 

ஆனா, என்னோட கனவு. லட்சியம் எல்லாமே பிஸினஸ்மேனா ஆகணுங்கறதுதான். அது உன் மூலமாதானே நனவாச்சு, 

ஸோ, என்னுள் நுழைந்த என் முதல் காதலிக்கு என் அன்பு பரிசு இந்த தாஜ்மகால், பிடிச்சிருக்காடார்லிங்!” 

கௌசிக் மனைவியை நேசமுடன் ஏறிட்டான். “வாவ்.. தாங்க்ஸ்டா செல்லம்!” அதீத மகிழ்ச்சியில் சுற்றுப்புறம் மறந்து கணவனின் கன்னத்தை ஈரப்படுத்தினாள் நிரஞ்சனா. 

இந்தக் காட்சி புதிதாய் வேலைக்கு சேர்ந்திருந்த சூப்பர்வைசர் அவந்திகா கண்களில் தானா பட வேண்டும்? 

அந்த சின்ன இதயம் வேதனையில் விம்மியது. 

– தொடரும்…

– காதல் தேரினிலே… (நாவல்), மார்ச் 2009, தேவியின் கண்மணி மாத இதழ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *