காதல் தேரினிலே…

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: November 17, 2024
பார்வையிட்டோர்: 5,263 
 
 

(2009ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 4-6 | அத்தியாயம் 7-9 | அத்தியாயம் 10-12

அத்தியாயம்-7

ஹார்ட்அட்டாக்!
 
டாக்டர் சொன்ன வார்க்கை சின்னது தான். ஆனால் அது அந்த இரு உயிர்களிடத்திலும் அதிர்வலை மிகப்பெரியது. ஆபத்தான ஏற்படுத்திய கட்டத்தை சீதாலட்சுமி தாண்டி விட்டாலும், பிள்ளைகள் இருவரும் நடுங்கிக்கொண்டிருந்தனர். 

பரமேஷவர் லாயருக்கு தொடர்பு கொண்டு அம்மாவிடம் பேசிய விஷயம் பற்றி கேட்ட போது தான் அதன் வீரியமும், அம்மாவிற்கு வந்த அட்டாக்கிற்கான காரியமும் புரிந்தது. 

கேஸ் இவர்கள் பக்கம் ஆட்டம் கண்டு விட்டது, எந்த ஆதாரமும், சாட்சியமும் இல்லாததால் வாரிசதாரராக இவர்களை கணக்கில் எடுத்துக் கொள்ள முடியாது. கேஸ் தோற்று விடும் சூழ்நிலை. 

ஜெயிப்போம் என்று இருந்த ஒரே சொத்தையும் விற்று, இதுநாள் வரை நிலைத்திருந்த நம்பிக்கை நகர்ந்து விழவும்… மகளின் எதிர்காலம் என்கிற கேள்விக்குறி விஸ்வருமெடுத்து… அவள் நெஞ்சில் நிலை கொண்டதன் விளைவு… 

சீதாலட்சுமி இப்போது ஆஸ்பத்திரியில்.

பரமேஷ்வருக்கு கூட அச்செய்தி அதிர்ச்சியாக தான் இருந்தது. அம்மா நம்பிக்கையாய் சொல்லி… சொல்லி… கேஸ் ஜெயித்து விடுமோ என்று கொஞ்சம் நம்பிக்கை இதயத்தின் மூலையில் ஒட்டிக் கொண்டிருந்தது நிஜம். 

பாவம்… அம்மா எப்படி தாங்கிக் கொண்டிருக்க முடியும்?

நான்கு நாட்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை தரப்பட்ட பின்பு வீட்டிற்கு அழைத்து வரப்பட்டாள். 

ஈஸிசேரில் சாய்ந்தமர்ந்திருந்த சீதாலட்சுமியின் கண்களில் கலக்கம். 

அலுவலகத்துக்கு விடுப்பு போட்டு விட்டு அம்மாவை கவனித்துக் கொண்டிருந்த அவந்திகா. அம்மாவுக்கு ஓட்ஸ் கஞ்சி தயாரித்து எடுத்து வந்தாள். 

மகனையே பார்த்திருந்த சீதாலட்சுமி கண்கலங்கினாள்.

“அம்மா… இதை சாப்பிட்டுடு… ” முக்காலியை அவள் முன் இழுத்து அதன்மேல் கஞ்சி கிண்ணத்தை வைத்தவள் அம்மாவைப்  பார்த்து திடுக்கிட்டாள். 

“என்னம்மா… ஏன் கண்ணு கலங்கியிருக்கு? நெஞ்சுவலிக்கிற மாதிரி இருக்கா?” 

கேட்டதும் தான். அடுத்து கணமே அவளிடமிருந்து கேவல் வெளிப்பட்டது. 

பயந்துப் போனவள், “அண்ணா… இங்கே வாயேன்!” என்றழைத்தாள் 

பதட்டமான குரலுக்கு பத்தே நொடியில் அங்கிருந்த பாமேஷ்வர் அலுவலகம் போகும் அவசரத்தில் இருந்தான். சட்டையின் ஒரு கை மட்டும் மாட்டப்பட்டிருந்தது. 

“என்ன…. என்னாச்சு அவந்தி?” 

“என்னன்னே தெரியலே… அம்மா அழறாங்க…”

“ஏம்மா… என்ன செய்யுது? ஹாஸ்பிடல் போகலாமா?” தங்கைக்கு மேல் பதறினான். 

“இ..இல்லே..எ… எனக்கு ஒண்ணும் இல்லே!”

“சரி.. ஏன் அழறோ?” 

“நான் பாடுபட்டதெல்லாம் பாழாப்போயிடுச்சே பரமு?”

“ப்ச்… டாக்டர் என்ன சொல்லி அனுப்பினார்!” 

இப்படியெல்லாம் எமோஷனவாகக் கூடாதுன்னு தானே? உன் உடம்பை நீயே கொடுத்துக்கறியேம்மா! எதையும் நினைக்காதே!”

“எப்படி முடியும் பரமு? என் பொண்ணு கொடி மாதிரி வளர்ந்து நிக்குறாளே! அவளை கரையேத்த வேணாமா? அந்தக் குடும்பத்துக்கு தெரியாதா உங்களுக்கு இருக்கிற உரிமை எல்லாம்? படுபாவிங்க. 

நியாயம், நேர்மை எல்லாம் சட்டம் பார்க்கறதில்லையா? பணக்காரங்களுக்காக மட்டும் தான் நீதிமன்றமா?அவங்களை மாதிரி சட்டத்தோட வாயை அடைக்க என்கிட்ட பணமில்லையே! இருந்த ஒரு சொத்தையும் வித்துட்டேனே! பொட்டப்புள்ளயை எப்படி கரையேத்தப் போறேன்?” 

“அம்மா திரும்ப… திரும்ப.. அதையே ஏம்மா பேசிட்டிருக்கே? இன்னும் ஜட்ஜ்மெண்ட் வரலே! நீயே ஏன் கற்பனைப் பண்ணிக்கறே?” 

“நீதிபதி சொல்லிதானா தீர்ப்பு தெரியணும்? அதான் தெரிஞ்சுப் போச்சோ பரமு இப்படிப் பண்ணினா என்ன?” 

“எப்படிம்மா?” 

“நான் நேராப் போய் அவங்க கால்ல விழுந்து, எங்களுக்கு சேர வேண்டியதுல பாதியாவது குடுங்கன்னு கேட்கட்டுமா? தரமாட்டாங்களா என்ன?” 

பரிதாபமாய் கேட்ட தாய் முன் மண்டியிட்டு அமர்ந்தான் பரமேஷ்வர். 

“எதுக்கும்மா.. நீ எம்மா அவங்க கால்லப் போய் விழணும்? என்ன அவசியம் வந்துச்சு? அப்படிப்பட்ட பணம் என்னத்துக்கு? உணர்ச்சி மேலிடக் கேட்டான். 

“அவந்திகாவை கரையேந்தணுமே பரமு?” 

“அவ உனக்கு மட்டும் மகள் இல்லே. எனக்கு தங்கையும் கூட! நானில்லையாமா உங்களுக்கு? என் தங்கச்சிக்கு கல்யாணம் பண்ண எனக்குத் தெரியாதாம்மா?” 

“நீ எப்படிப்பா சமாளிப்பே?” 

“அந்த கவலை உனக்கு வேணாம்மா! இன்னொன்னையும் சொல்லிடறேன். அவந்திகாவுக்கு கல்யாணம் பண்ணாம… நான் பண்ணிக்க மாட்டேன்” 

“ப..ர…மு!”

“அ..ண்…ணா!”


“இப்ப எப்படியிருக்காங்க உங்கம்மா!” கிளிஞ்சல்களைப் பொறுக்கி அலைக்குள் எறிந்தபடி கேட்டான் கவுசிக் 

“பரவாயில்லே… ஆனா எப்பவும் என்னைப் பத்தியே நினைச்சு.. நினைச்சு கவலைப்படறாங்க.” 

“அது எல்லா அம்மாங்களுக்கும் உண்டான பயம். இயற்கையான, நியாயமான கவலைதானே? 

எங்கம்மாவும் என் தங்கச்சியை நினைச்சு கவலை படறாங்க. என் கல்யாணம் மூலமா அவளை கரையேத்த நினைக்கிறாங்க. இதுவும் நியாயமான எதிர்பார்ப்புதானே?” 

“….?!”

“என்ன அவந்தி அப்படிப் பார்க்கிறே?” 

“ஓ… ஒண்ணுமில்லே!” 

“உங்கம்மாவுக்கு நீதான் ஆறுதல் சொல்லணும், நம்பிக்கை தரணும்… என் மனசு சொல்லுது.. கேஸ் உங்க பக்கம் ஜெயிக்கும் பாரேன்!” 

“சப்போஸ் ஜெயிக்கலேன்னா?” 

“அந்த பேச்சுக்கே இடமில்லை… கண்டிப்பா ஜெயிக்கும்” 

திரும்ப திரும்ப அவன் அதையே பேச, அவந்திகாவிற்கு சங்கடமாய் இருந்தது. மனதின் பாரம் கூடியது. பயம் வேர் விட்டது. 

கேஸ் ஜெயிக்காமல் போனால் கவுசிக்கின் நடவடிக்கை என்னவாய் இருக்கும்? 

வேண்டாம்… கண்டதையும் நினைத்து அவநம்பிக்கையை மனதில் விதைக்க வேண்டாம். 

கவுசிக் எப்பவும் இப்படித்தான்.. யதார்த்தமாய் பேசும் வெளிப்படையான ஆண்! ஆனால், என் மீது உயிரையே வைத்திருப்பவன்! 

தன்னைத் தானே சமாதானப்படுத்திக் கொண்டவளின் முகம் தெளிவை பூசிக் கொண்டது. 

“என்னண்ணா.. ரெண்டு சப்பாத்திதான் சாப்பிட்டே… எந்திரிச்சிட்டே?” ஆச்சரியமாய் கேட்டாள் அவந்திகா. 

“போதும் அவந்தி… ஈவ்னிங் ஒரு பிரண்டோட லைட்டா டிபன் சாப்பிட்டேன்!” என்றான் பொய்யாய்.

“ஆனாலும், கொஞ்ச நாளா நீ  சரியாவே சாப்பிடறதில்லேண்ணா!” 

நிஜம் தான் அவன் பசி உணர்வே மரத்துப் போய் விட்டிருந்தது. 

அம்மாவை அவன் தேற்றினாலும், அவனுள் அந்த கவலையும், பயமும் மிகுந்திருந்தது. 

“அவந்திகாவை நல்ல இடத்தில் மணமுடிக்க வேண்டும். இப்போதுள்ள விலைவாசியில் ஒரு குண்டூசி வாங்க வேண்டும் என்றாலும், சேமிப்பு என்று இருந்தால் தான் சாத்தியம். இருந்த ஒரு சொத்தையும் கேஸிற்காக வித்தாயிற்று. இனி அவனின் சம்பாத்தியத்தை சேமித்து வைத்தால்தான் முடியும், குறைந்த பட்சம் நான்கு லட்சமாவது தேவைப்படும். எந்த காலத்தில் சம்பாதித்து கரையேற்றுவது வயதாகி விடுமே!” 

“என்ன செய்து சம்பாதிப்பது?” 

“எப்படியாவது.. எப்படியாவது என் தங்கைக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்து தந்தே தீர வேண்டும்!” 

அத்தியாயம்-8

கவுசிக் படித்துக் கொண்டிருந்த புத்தகத்தை மூடி வைத்தான். மனம் அதில் லயிக்கவில்லை. அவன் எண்ணமெல்லாம் அவந்திகாவிடம் சென்றது. 

“ஒரு வேளை அந்த கேஸ் தோற்றுவிட்டால்? அவந்திகாவை கட்டின புடவையோடு நான் ஏற்றுக் கொள்வேன். அம்மா ஏற்றுக் கொள்வானா?பிரார்த்தனாவிற்கு திருமணம் செய்ய…. என் திருமணத்தை அல்லவா எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறாள்? என்ன செய்யப்போகிறேன்?”

“அண்ணா பால்!” பிரார்த்தனா பால் தம்ளரை நீட்டினாள். 

“அண்ணா உன்னைத்தான்!” 

“அ.. என்ன பிரார்த்தனா?” 

“பால்!” 

“தாங்கஸ்” வாங்கக் கொண்டான். 

“ரொம்ப குழப்பமா இருக்கே போலிருக்கே!” 

“சேச்சே.. எதுக்கு?” 

“எப்படிடா. அம்மாவை சம்மதிக்க வைக்கறதுன்னு” 

“எதுக்கு சம்மதிக்க வைக்கணும்?” 

“உன் லவ்வரை கல்யாணம் பண்ணிக்கறதுக்கு!”  குடித்துக் கொண்டிருந்த பால் புரையேறியது. 

“மெதுவா…” 

“ஏய்… என்ன சொல்றே நீ?”. 

“இன்னைக்கு அவங்க போட்டுட்டு இருந்த பிங்க் கலர் சுடிதார் அம்சமாயிருந்தது”. 

“ஏய்… நீ என்ன சொல்றேன்னேப் புரியலே”. 

“அறுதப் பழசான டயலாக் இது! நீ ஒரு பொண்ணை டவடிக்கிற விஷயம் எனக்கு எப்பவோ தெரியும். நாலஞ்சு முறை உங்க ரெண்டுபேரையும் சேர்த்துப் பார்த்திருக்கேன். பீச்சை தவிர வேறெங்கேயும் கூட்டிட்டுப் போக மாட்டியா? எப்பப்பார்த்தாலும் பீச்ல…அலுக்கலே உங்களுக்கு?” 

“ஏய்.. நீ எப்படி அங்கே?” 

“லாஸ்ட் அவர் போரடிக்கறப்ப என் பிரண்ட்ஸோட மெரீனா வருவேன். அப்பதான் அண்ணியப் பார்த்தேன்…அவங்க பேரென்ன?”  

“அதெல்லாம் எதுக்கு உனக்கு… போ!” 

“ஏன்…. எரிஞ்சு விழறே? நான் உன் சைட் தான்…. ஒகேவா? பார்த்தா மிடில் கிளாஸ் மாதிரி தெரியறாங்க. ஐ லைக் ஹர். அம்மா ஒத்துக்கலேன்னா…. ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்க… கைவிட்றாதே!”

“பிரார்த்தனா..உன் வேலைய மட்டும் பாரு..போ!” அழுத்தமாய் சொன்னான். 

“வர வர நீயும் அம்மாவை மாதிரி சிடுமூஞ்சியா மாறிட்டு வர்றே” சலிப்புடன் வெளியேறினாள்.

‘போச்சுடா…இவளுக்கும் தெரிஞ்சு போச்சா?’ 

அன்று முஸ்லிம் பண்டிகையையொட்டி அரசு விடுமுறை.

வீட்டிலிருக்க போரடித்தது. கேசவ்வை பார்த்து வரலாமே என்று தோன்ற அவன் வீட்டிற்கு பைக்கை செலுத்தினான் கவுசிக். 

வாசலில் பைக் நிற்கும்போதே… “சனியனே…இருக்கிற செலவு போதாதுன்னு.. இதுவேறயா..சே. வீடா இது” என்று எரிந்து விழுந்த கேசவ்வின் குரல் வரவேற்றது. 

“குழந்தைக்கு என்னங்க நெரியும்? நீங்க இல்லே பத்திரமா வச்சிருக்கணும். அதுக்குப் போய் சனியன்னு திட்றீங்க?” 

“அப்படியென்ன வெட்டி முறிக்கிற சமையல் பண்றே? அதே சமயம்… காய்ஞ்சு போன ஏதாவதொரு காய்கறி பிரட்டல்.. இதுதானே! குழந்தைய இருப்பிலே வச்சுக்கிட்டு செய்யறது தானே?”

“குழந்தைக்கு இருமல் வேற, எண்ணெய் நெடி ஆகாது!” 

“எல்லாத்துக்கும் ஒரு பதிலை ரெடியா வச்சுக்கத் தெரியுது. உன் குழந்தைக்கு செல்போனை எடுத்து சொம்புத் தண்ணிக்குள்ள போடக்கூடாதுன்னு சொல்லி வளர்க்கத் தெரியாதா?” 

“கேசவ்…” 

“யாரு?'” அர்ச்சனையை பாதியில் நிறுத்திவிட்டு வாசலுக்கு வந்தவன் ஆச்சர்யமும், திகைப்புமாய் “கவு…சி…க்!” என்றான்.

“நல்லாருக்கியா? இதான் உன் பொண்ணா? ஸாரிடா… குழந்தைக்கு எதுவுமே வாங்காம வந்துட்டேன்!” 

“பரவாயில்லே.. உள்ளே வா! ஏய் மாலினி…. காபி போடு”

“பிளீஸ்… வரும்போதே சாப்பிட்டுட்டு தான் வந்தேன்…வேண்டாம்!” 

“வாங்க!” என்று புன்னகைத்தாள் மாலினி. 

“நல்லாருக்கீங்களா?” என்றவனுக்கு அவளைப் பார்க்கையில் பாவமாக இருந்தது. 

திருமணமான புதிதில் அவளைப் பார்த்திருக்கிறான். அப்போதைக்கு இப்போது உருவத்தில் ஏகப்பட்ட வித்தியாசம் சோர்ந்து இளைத்துப் போயிருந்தாள். 

சம்பிரதாய பேச்சுக்களிடையே வீட்டின் ஏழ்மையை கவனிக்காமல் இல்லை. 

வேசவ்விற்கு ஒரு பக்கம் உதைப்பாக இருந்தது. 

‘கடனாக கொடுத்த பணத்தை கேட்க வத்திருப்பானோ?’

“இங்கே காத்து வசதி இல்லை. வாயேன் பக்கத்திலே பார்க் இருக்கு. அங்கே போய் பேசுவோம்” 

“ஓ..ஷ்யூர்!”

நடந்தே சென்றனர். 

வயதான விழட்டுப் பெரியவர்கள் ஏதோ யோசனையுடன் ஆளுக்கொரு இடத்தில் அமர்ந்து இருந்தனர். 

“ஏன்டா மாலினிகிட்டே இப்படி கத்தறே… பாவம்டா!”

“நானா, மாலிலியா?” 

“ஏன்டா இப்படிக் கேக்கறே?”

“வெறுத்துப் போச்சு கவுசிக்! அறுபது வயசுல வரவேண்டிய அலுப்பு களைப் பெல்லாம் இப்பவே வந்துடுச்சு!” 

“…?!”

“’வாழ்க்கையை ஓட்டறதே கஷ்டமாயிருக்கு கவுசிக், வாய்க்கு ருசியா, மனசுக்கு நிறைவா சாப்பிட்டு எத்தனை வருஷமாயிடுச்சுத் தெரியுமா?” 

“…?!”

“இதெல்லாத்துக்கும் என்ன காரணம் தெரியுமா?”

“சொல்லு!” 

“காதல்! பாழாய் போன லவ்வு!”

“காதலா?” வியப்பாய் கேட்டான். 

“ஆமாண்டா வாழ்க்கைன்னா என்ன? சந்தோஷமா, மனசுக்கு நிறைவா வாழுறது தானே? ஆனா, காதல்ங்கற மாய வார்த்தைய நம்பி அதுல தலைய கொடுத்து மீள முடியாம அவஸ்தைப் படறேன். நல்லா வாழறதுக்கு காதல் தேவையில்லை, வசதி வளர்ப்பும், சொந்த பந்தங்களும் தான் முக்கியம். தடுக்கி விழறப்ப, தடுமாறி நிக்கறப்ப… கைப்பிடிச்சுக்கக் கூட பக்கத்துல ஒரு சொந்த பந்தம் இல்லே கவுசிக்!” 

“அப்ப காதலே தப்புங்கறியா?”

“காதலிக்கறது தப்பில்லே.. அவளையே கல்யாணம் பண்ணிக்கறதுதான் தப்பு!”

“என்னடா சொல்றே” 

“யாரையாவது லவ் பண்றியா?” என்றான் அடிக்குரலில். 

“ம்..”

“பொண்ணு வசதியான இடமா?” 

“இல்லே!” 

“அப்ப தப்பித்தவறிக்கூட கல்யாணம் பண்ணிக்காதே!” 

“என்ன கேசவ்.. இப்படி பேசறே!” 

“உன் நன்மைக்காக தான் சொல்றேன். நாம சாதாரண நிலமைவில் இருந்து வசதியான பொண்ணை கல்யாணம் பண்ணிக்கலாம். அப்ப, நம்ம சொந்த பந்தம் யாரும் பிரியவும் போறதில்லே. நம்ம தகுதியும் உயரும். ஆனா காதல்னு சொல்லிக்கிட்டு பரிதாபப்பட்டு நமக்குக் இழே இருக்கிற பொண்ணை கல்யாணம் பண்ணிக்கறதை விடவும் முட்டாள் தனம் வேற எதுவும் இருக்க முடியாது.” 

“….!”

“என்னடா… ரொம்ப சுயநலமா பேசறானேன்னு பார்க்குறியா? அனுபவத்தை சொல்றேன். நீயாவது தப்பிச்சுக்க. மாலினிய கல்யாணம் பண்ணிக்கிட்டதால அவ வீட்லேயும் சப்போர்ட் இல்லே. என் வீட்டை பத்திதான் தெரியுமே. அப்பா இறந்ததுக்கும் என்னை சேர்க்கலே. தங்கச்சி கல்யாணத்துக்கும் கூப்பிடலே. தனிமரமாகிட்டேன் கவுசிக். இந்த மாலினிக்கு தேவையான அளவுக்கு படிப்பும் இல்லே. எந்த வேலைக்குன்னு அனுப்ப முடியும்? நோயாளிய வேற ஆயிட்டா. இந்த அழகிலே பொட்டைப்புள்ள வேற, சம்பாதிக்கறது பத்தாம கடன் வாங்கி தான் சமாளிக்கிறேன். எதிர்காலத்தை நினைச்சா பயமாயிருக்குடா… என்ன பண்ணப் போறேன்னே தெரியலே. வீட்டுக்கு போறதுக்கே பிடிக்கலே, நீயாவது புத்திசாலித்தனமா நடந்துக்க. அவ்வளவு தான் சொல்லுவேன்!” 

கவுசிக் குழம்பிப் போனான்.

இதயத்திலிருந்த அவந்திகாவின் உருவம்… தண்ணீர் பிம்பமாய் ஆடி நெளிந்தது. 

அத்தியாயம்-9

“என்னம்மா நீ…காபி கேட்டா பாயாசம் தர்றே! என்ன விசேஷம்? நம்ம பிரார்த்தனாவுக்கு இன்னைக்கு பர்த்டே கூட இல்லையே! எனக்கும் போனமாசம் முடிஞ்சுப் போச்சு. ஒரு வேளை, பிரார்த்தனாவுக்கு வரன் ஏதும் முடிவாகியிருக்கா?” அடுக்கடுக்காய் கேள்விகனை கேட்டபடி சுவைத்தான். 

“உனக்குத் தெரியாம பிரார்த்தனாவுக்கு எப்படி முடியும்? அதுவும் அவளுக்கு இப்போதைக்கு கல்யாணம் பண்ற எண்ணமும் இல்லை. உனக்கு முடிஞ்சப் பிறகுதானே அவ்ளுக்குப் பண்ண முடியும்?” பழைய பல்லவியையே பாடினாள் காமாட்சி. 

“அப்ப என்னதான் விஷயம்… சொல்லேம்மா?” 

“நான் கும்பிட்ட தெய்வம் கூரையை பிய்ச்சுக்கிட்டு கொட்டப்போகுது!” 

“கொஞ்சம் கூடப் புரியலே!” 

“சரி… எரி.. நேரடியா விஷயத்துக்கு வர்றேன். இன்னைக்கு என் அண்ணி கவுசல்யா நம்ம வீட்டுக்கு வந்திருந்தாங்க.” 

“கவுசல்யாவா… யாரது?” 

“என்ன கவுசிக், மறந்துட்டியா? என் மாமாவோட பெரிய பொண்ணு… நாமெல்லாம் ஒரு நாள் திருவேற்காடு கோவிலுக்கு போயிருந்தப்ப கார்ல வந்திருந்தாங்களே.. என்னைப் பார்த்ததும் கையப் பிடிச்சுக்கிட்டு அழுதாங்களே..” 

“ஓ…அந்த காலத்திலேயே ஓடிப்போய் கல்யாணம் பண்ணிக்கிட்டு. அதனால உங்க மாமா கூட அவங்களை ஒதுக்கி வச்சு இன்னைக்கு வரைக்கும் பேசவே இல்லேன்னு சொன்னியே… அவங்கதானே?” 

“அதென்ன ஓடிப்போய் கல்யாணம் பண்ணிக்கிட்டாங்கன்னு பட்டவர்த்தனமா சொல்றது? மனசுக்கு பிடிச்சவனை கல்யாணம் பண்ணிக்கிட்டா. இன்னைக்கு ஆள் அம்பு, படைன்னு மகாராணி மாதிரி வாழ்ந்துட்டு இருக்கா. எங்கண்ணியும் போள், பேத்தின்னு எடுத்துட்ட பிறகு… எங்க மாமாவுக்கு இன்னும் மனசு இறங்கலே, இப்பவோ, அப்பவோன்னு இழுத்துக் கிட்டு இருக்கிற மனுஷனுக்கு என்னத்துக்க இத்தனை விம்பு?” 

“அம்மா நான் ஒண்ணு கேட்டா தப்பா நினைக்க மாட்டியே!” 

“என்ன?” 

“என் பிரண்ட் கேசன் வீட்டை எதிர்த்து லவ் மேரேஜ் பண்ணிக்கிட்டதுக்கு திட்டிக்கிட்டே இருப்பே! ஆனா, உங்கண்ணி அதே விஷயத்தை பண்ணினதை சப்போர்ட் பண்ணி பேசறே?” 

“அதுவேற, இதுவேற! கேசல் கட்டிக்கிட்டது. ஒரு பஞ்சப்பராரியை, ஆனா, எங்கண்ணி புளியங்கொம்பையில்லே பிடிச்சிருக்காங்க. ஜாதி வேறங்கறதாலதாள் என் பெரியப்பா ஏத்துக்கலே, அதை விடு…. இப்ப நான் சொல்ல வந்ததே வேற….” 

“…!”

“மொதல்ல பாயசம் எல்லாத்தையும் சாப்பிட்டு முடி!”

“ம்..முடிச்சாச்சு… இந்தா!” 

டம்ளரை வாங்கி கீழே வைத்தவன், “நமக்கு நல்ல காலம் பொறந்திடுச்சி கவுசிக்!” என்றாள். 

“….?!”

“எங்கண்ணிக்கு மூணு பையன், ஒரு பொண்ணு! எல்லாரும் ஒரே குடும்பமா, ஒற்றுமையா இருக்காங்க. எல்லாருக்கும் தனித்தனி பிஸினஸ்னு பணம் கொட்டுது. அவங்க நம்ம வீட்டுல சம்பந்தம் வச்சுக்கணும்னு ஆசைப்படறாங்க நம்ப பிரார்த்தனாவுக்கும் ஒரு விடிவு காலம் பொறந்துடுச்சு!” 

“கேக்கவே சந்தோஷமா இருக்கும்மா. பிரார்த்தனா அவங்க வீட்டுக்கு மருமகளா ஆகறதுக்கு கொடுத்து வச்சிருக்கணும்தான்!” 

“அது சரி. எங்கண்ணியோட மூணு பிள்ளைகளுக்கும் கல்யாணம் ஆகி குழந்தை குட்டிகளும் பிறந்தாச்சு!” 

“அப்ப வேற?”

“அவங்க ஒரே பொண்ணு நீரஞ்சனாவை நம்ம விட்ட மருமகளா அனுப்பணும்னு பிடிவாதமா இருக்காங்க!” 

“அம்மா” தூக்கி வாரிப்போட்டது.

“என்னம்மா சொல்றீங்க?” 

“ஆமா கவுசிக்! அவங்க சொன்னப்ப முதல்ல நானே நம்பலே, ஏகப்பட்ட சொத்து! நிரஞ்சனாவைப் பார்த்திருக்காயா… அழகா, பாந்தமா இருப்பா, நிறைய படிச்சிருக்கா, அவ அழகுக்கும், அந்தஸ்துக்கும் எவ்வளவோ பெரிய இடத்திலேயெல்லாம் மாப்பிள்ளை பார்த்திருக்கலாம்.ஆனா, நம் சொந்த பந்தமெல்லாம் இந்த கல்யாணத்து மூலமா ஒண்ணா சேரணும்னு ஆசைப்படறாங்க. அதுவும் உன்னை ஏற்கனவே பார்த்திருக்காங்க இல்லே, ரொம்ப பிடிச்சிருக்காம். அவளை கல்யாணம் பண்ணிக்கிட்டா இந்த பிசாத்து வேலை கூட தேவையில்லை. காலத்துக்கும் உட்கார்ந்தே சாப்பிடலாம்!.” 

அம்மா சொல்ல, சொல்ல மலைப்பாய் இருந்தாலும், திகைப்பாய் இருந்தது. 

அவந்திகா நினைவிற்கு வந்து நடுக்கத்தை ஏற்படுத்தினாள். 


நிழல்கூட இருட்டில் நம்மை விட்டு பிரியும், அதுவும் சொந்தமில்லை. அது போல் எப்பேர்பட்ட உறவும்.. இறுதிவரை நம்முடன் இருப்பதில்லை.

கேஸ் எதிராளிகள் பக்கம் சாதகமாக தீர்ப்பு வர…. எதிர்பார்த்திருந்தாலுமே கூட…சீதாலட்சுமியின் நசிந்து போன இதயம் தோல்வியைக் கண்டு, எதிர்கொள்ள திராணியற்று.. உடனடியாக தன் இயக்கத்தை நிறுத்திக்கொண்டது. 

சீதாலெட்சுமி ஒரேயடியாய் இந்த உலகத்தை விட்டுப் போய் விட்டாள். 

இடித்து போய்விட்டனர்.அவள் பெற்ற இரு பிள்ளைகளும். 

பரமேஷ்வர் முன்னிருந்து எல்லா ஏற்பாடுகளையும் செய்தாலும், சொல்ல முடியாத ஒருவித பயம் அவனை வியாப்பித்திருந்தது. 

அவந்திகா தன்னியையிலேயே இவ்வை. கவுசிக் இறுதிச் சடங்கில் வந்து கலந்து கொண்டாலும்… அவன் மனசும் குழப்பத்தில் இருந்தது. 

அடுத்த சில தினங்களில் அம்மா நிரஞ்சனா பற்றி பேச்செடுக்க, ஏற்கவும் முடியாமல், மறுக்கவும் முடியாமல் திண்டாடினான். ஒரு மாறுதலை வேண்டி கேசவை சந்தித்தான். 

“என்ன கவுரிக் டல்லாயிருக்கே?” என்றான் கேசவ். ரோட்டோரத்தில் பத்து சேர் இரண்டு டேபிள் போட்டு கொஞ்சம் பாந்தமாய் தெரிந்த டீக்கடையில் அமர்ந்து ராகிமால்ட்டை உறிஞ்சியபடி “கொஞ்சம் மனசு சரியில்லை கேசவ்.. குழப்பமாலிருக்கேன்” 

“என்ன, லவ் மேட்டரா?”

“அதுவும் தான்!” 

“என்னாச்சு?” 

கொள்னான். 

அவந்திகா பற்றி, அவள் அம்மா இறந்தது பற்றி, அவனின் அம்மா நிரஞ்சனாவை மருமகளாக்கிக் கொள்ள தீவிரம் காட்டுவது பற்றி விளக்கமாய் சொன்னான். 

வாய்விட்டு சிரித்தான் கேசவ். 

“என்னடா… நான் இவ்வளோ சீரியஸா சொல்லிட்டிருக்கேன். நீபாட்டுக்கு சிரிக்கிறே!” 

“நீ எப்ப இந்த விஷயத்திலே குழம்ப ஆரம்பிச்சிட்டியோ.. அப்பவே நீ உங்கம்மா எடுக்கிற முடிவுக்கு தலையாட்ட தீர்மானிக்கப்பட்டேன்னு அர்த்தம்!” 

“நானா? அதெப்படி.. நான்தான் அவந்திகாவை..” 

“காதலிச்சே.. ஆனா இப்போ இல்லை! இப்பத்தான்நீ தெளிவா சிந்திக்க ஆரம்பிச்சிருக்கே. நான் பண்ணின தப்பை நீயும் பண்ணாதே! கை நிறைய பணத்தை எடுத்துக்கிட்டுப் போய் கிழிஞ்ச சட்டையை வாங்கிட்டு வர்றவன் முட்டாள்டா. காதல் வேற, கல்யாணம் வேற! காதலோட பணமும் சேர்ந்திருந்தா, அதுதான் காதல் கல்யாணம்! பணம்தான் வாழ்க்கை, பொண்ணு வசதின்னா கல்யாணம் பண்ணிக்க, இல்லையா.. கழட்டிவிடு! பாவம் பார்க்காதே. இல்லேன்னா உங்க வாழ்க்கையே பரிதாபமாகிடும். 

பொண்டாட்டி நம்ம மேல 10 பர்சன்ட் அன்பு செலுத்தி 90 பர்சன்ட் சுதந்திரமா விட்டாவே போதும், ஆம்பளைங்க ஜெயிச்சுடுவாங்க. அன்புக்குகட்டுப்பட்டு குழந்தை, குட்டின்னு ஒரு வட்டத்துக்குள்ளே சிக்கி வீட்டுக்கு சேவை பண்றதிலேயே பாதி வயசு ஓடிப் போயிடுது. நிம்மதியான வாழ்க்கைகு பணம் அவசியம். கை கொடுக்க உறவுக்கூடம் ரொம்ப அவசியம். அழகைப் பார்க்காதே! லைட்டை அணைச்சிட்டா எல்லாம் பொம்பளையும் ஒரே அழகு தான், ஒரே நிறம் தான். மாலினியை நேசிச்சு, வீட்டை, எதிர்த்து கல்யாணம் பண்ணினேன். இப்ப லவ்வை விட சலிப்பும், வெறுப்பும் தான் அதிகம். வார்த்தையாலேயே அவளை தினமும் கொல்றேன். வேற வழி தெரியலே. இல்லேன்னா… நா பைத்தியக்கரானாய்டுவேன். டைவர்ஸ் தான் ஒரே சொல்யூஷன். எனக்கு பணம் வேணும். பணத்தோட ஒரு விதவை இருக்கா. ஒரு மாசமாசு மனச விட்டுப் பழகறோம். இந்த வாழ்க்கையை பிடுங்கி அவளுக்கு கொடுத்துட்டா எல்லாக் கஷ்டமும் தீரும். பெண் குழந்தையைப் பெத்துட்டேன். அவளுக்கு பேங்கில ஒரு அம்வுண்ட்டை போட்டுடுவேன். வேற வழி தெரியலடா!” என்றான் உறுதியாய், கேஷுவலயாய்! 

கவுசிக் நிலைகுத்தினப் பார்வையோடு கேசவ்வை.. பார்த்தான்.

ஆனாலும்,, யோசிக்க ஆரம்பித்தான் தன்னைப் பற்றி! 

– தொடரும்…

– காதல் தேரினிலே… (நாவல்), மார்ச் 2009, தேவியின் கண்மணி மாத இதழ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *