காதல் தேரினிலே…

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: November 15, 2024
பார்வையிட்டோர்: 8,102 
 
 

(2009ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 1-3 | அத்தியாயம் 4-6 | அத்தியாயம் 7-9

அத்தியாயம்-4

“அந்த சனியனுக்கு திடீர்னு ஷுகர் வந்திருக்கு. நாளைக்கு புல் செக்கப் பண்ண சொல்லி டாக்டர் என் தலையில் இடியை தூக்கிப் போட்டுட்டான். போதாததுக்கு குழந்தைக்கு தடுப்பூச் போடணும். எல்லாத்துக்கும் சேர்த்து மூவாயிரம் ஆகும். ரெண்டு மாசத்துவ திருப்பிக் குடுத்துடறேன், பிளீஸ்டா மச்சான்.”

“சீச்சி… எதுக்குடா கெஞ்சறே? தர்றேன். ஆனா, மாலினிக்குப் போய் ஷுகர் வந்திருக்குன்னா நம்பவே முடியலே. இவ்ளோ சின்ன வயசுல வருமா?” 

“என் தலை சுழி நல்லா இல்லாதப்ப எல்லாமே வரும்டா”

“பாவம்டா மாலினி!”

“அவ ஏன் பாவம்? நான் தான்டா பாவம்! எல்லாத் தொல்லையையும் சுமக்கிறேனே… நான் தான் பாவம்!”

“நீ ஏன்டா இவ்ளோ டென்ஷனாகறே? எல்லாம். சரியாப் போகும். வெளியேப் போய்ட்டு வரலாம்.” 

“ப….ண…ம்.” 

“அதுக்கு தான்டா..ஏ.டி.எம்.ல எடுத்துத் தர்றேன். கிளம்பு”

“தாங்க்ஸ்டா மச்சான்!” – நெகிழ்ச்சியுடன் அவன் கைகளைப் பற்றிக் கொண்டான் கேசவ். 


மூன்று அறைகள் கொண்ட சற்றே பெரிய வீடு. வழவழப்பான சிகப்பு நிற சிமெண்ட் தரை, ஹால் நடுவில் நீலக்கலரில் பூ வரையப்பட்டு நடுவில் கோலி பொருத்தியிருந்தது. ஹாலில் இருந்த இரண்டு தூண்களும், நீளக்கம்பி வைத்த ஜன்னலும், அந்த வீட்டுக்கு முப்பத்தைந்து நாற்பது வயதிருக்கும் என்றது. 

வாசலில் ஒரு பக்கம் முருங்கை மரமும், மறு பக்கம் அருநெல்லி மரமும், அதோடு பின்னிப் பிணைந்திருந்த குண்டு மல்லி செடியும், அந்த பழங்கால வீட்டிற்கு ஒரு சோலையைத் தந்தது. 

முருங்கை மரத்தை ஒட்டி ஒரு கை பம்ப் இருந்தது. 

யாரோ பம்ப் அடிக்கும் சப்தம் கேட்டு வெளியில் வந்தாள் காமாட்சி. 

பக்கத்து வீட்டு அஞ்சலை குடத்தில் தண்ணீர் அடித்துக் கொண்டிருப்பதைப் பார்த்து முகம் மாறியது காமாட்சிக்கு. 

“இது உனக்கே நல்லாயிருக்கா அஞ்சலை?”

“ஏன்க்கா…அப்படி கேட்கறே?” 

“உன் குடும்பம் நல்லாயிருக்கணும்…என் குடும்பம் நாசமாப் போகணுமா?” 

“என்னக்கா இப்படி எல்லாம் போறே? அப்படி என்னப் பண்ணிட்டேன் உன்னை?” 

“மணி என்ன? எட்டாகப் போகுது, விளக்கு வச்சப்பிறகு இப்படி என் வீட்டு பம்புல என்னை கேக்காம தண்ணியடிக்கறே!” 

“வீட்டுக்கு வெளியே தானக்கா இருக்கு?” 

“வீட்டுக்கு வெளியே இருந்தா… பொது சொத்தாயிடுமா? கவர்மென்ட்காரனா போட்டுக் கொடுத்தான்? என் பணம், என் இடம். இனி இந்த மாதிரி நைட்ல எல்லாம் தண்ணிப் பிடிக்கிற வேலையே வச்சுக்காதே!” 

“சரிக்கா மன்னிச்சிடு!” அதற்கு மேலும் அவளிடம் வாய் கொடுக்க அஞ்சி அகன்றாள் அஞ்சலை. 

உள்ளே வந்த அம்மாவிடம் சிடுசிடுத்தாள் பிரார்த்தனா. 

“ஏம்மா சாதாரண தண்ணி விஷவம். அதுக்குக்கூட சண்டைப் போடுவியா? நாளைக்கு நமக்கு ஏதாவது ஆபத்து, அவசரம்னா அக்கம், பக்கத்திலே இருந்து தான் உதவி வரும். அதை மறந்திடாதே!” 

”என்னைக்கிடி… நீ என்னைப்பத்தி நல்ல விதமாய் சொல்லியிருக்கே? இதிலே நீ எதுக்கு மூக்கை நுழைக்கிறே? போ… உங்கண்ணன் வந்துடுவான், அதுக்குள்ளே சட்னியை அரைச்சிடு!” 

“எல்லாம் அரைச்சாச்சு, மாவு புளிச்சுப் போய் பொங்கி வழியுது. நீ போய் அதுக்கிட்டே ரெண்டு அதட்டு அதட்டி அடக்கி வை!” 

“என்னடி, வர வர உனக்கு கிண்டல் அதிகமாப் போச்சு! அம்மாங்கிற மட்டு மரியாதை இல்லாம பேசறே?” காமாட்சி முறைத்தாள். 

“ஐயோ அம்மா அப்படியெல்லாம் எதுவுமில்லே.. உன் தவறை சுட்டிக்காட்டினேன். அது தப்பா?” 

“நான் உனக்குத்தாயா? நீ எனக்குத் தாயா?”

“ரிஸ்க்கான கேள்வி ஆளை விடு!”

பிரார்த்தனா அறைக்குள் ஓடிப் போனாள். 

வாசலில் பைக் வரும் சப்தத்தைத் தொடர்ந்து ஷூவை கழற்றிப் போட்டு விட்டு கெளசிக் உள்ளே வந்தான். 

“விட்டுக்கு வந்ததும், வராததுமா அந்தப் பரதேசி கூட எங்க கிளம்பிட்டே?”

“ஏம்மா இப்படியெல்லாம் போறே? கேசவ்வைப் போய் பரதேசிங்கறே?” 

“பரதேசின்னு சொல்லாம என்னன்னு சொல்ல? நல்லக் குடும்பத்துல வசதியா பொறந்து, வளர்ந்து, தலையெடுத்ததும் பெத்தவங்களை மறந்து.. ஒரு பன்னாடைக்கூட ஓடிப்போய் என்ன வாழ்ந்து கட்டிக்கிட்டான்? அவன் ஆத்தாக்காரி போன வாரம் மார்க்கெட்ல என்கிட்ட இவனை தெனச்சு அழறா. சரி… அவன் எதுக்கு வந்தான்? பணம் கேட்டானா?” 

“சும்மா பார்க்க வந்தான்மா…நீ வேற குடையாதே… பசிக்குது.. என்ன இருக்கு?”

“தோசை… புதினா சட்னி!” 

“இன்னிக்கு காலைல, நேத்து நைட்ல, நேத்திக்கு காலைல தொடர்ந்து தோசைதான் சாப்பிட்டுக்கிட்டிருக்கறதா ஞாபகம்!” 

“மாவு இன்னும் காலிவாகலே. உட்காரு சூடாப் போட்டு எடுத்துட்டு வற்றேன்!” 

உடைமாற்றி அமர்ந்தவனின் முன் தட்டில் சூடாய், வட்டமாய் வந்து விழுந்த தோசையின் வரசத்தில் புளித்த வீச்சம். 

பிய்த்து வாயில் வைத்தவனின் முகம் கோணியது.

“என்னம்மா இது…ரொம்பப் புளிக்குதே!” 

“சட்னியா? ஏன்டி… எக்கச்சக்கமா புளிய வச்சு அரைச்சுத் தொலைச்சிட்டியா?” 

“சட்னி நல்லாதான் இருக்கு. தோசை தான் ரொம்ப புளிக்குது..”

“மூணு நாளாயிடுச்சுன்னா மாவு புளிக்க தானே செய்யும்?”

“அதுக்கு தான் பிரிட்ஜ் வாங்கித் தர்தேங்கிறேன். வேணாங்கறே!” 

“நமக்கு பிரிட்ஜ் எதுக்கு? அதை உன் தங்கச்சி கல்யாணத்துக்கு வாங்கிக்குடு. இந்த வீட்டுக்கு தேவையான சீர் செனத்திய… உன்னைக் கட்டிக்கப் போறவ கொண்டு வரட்டும்.” 

“இப்படி பேசறது தப்பும்மா. இந்த காலத்துவ ஒரு மிடில்கிளாஸ் பேமிலி தங்களோட சம்பாத்தியத்துல மூணு வேளை நல்ல சாப்பாடு சாப்பிடறதே பெரும்பாடா இருக்கு. நீ என்னடான்னா வீட்ல மிக்ஸி, கிரைண்டர் தவிர, ஒரு கட்டிலோ, பிரிட்ஜோ, வாஷிங்மெஷினோ வாங்க விடாம வீட்டுக்கு வரப்போற மருமக கொண்டு வரட்டும்னு வீட்டையே காலியா வச்சிருக்கே. பாவம்மா!” 

”பாவமாவது, புண்ணியமாவது, வரப்போறவளுக்காக இப்பவே வக்காலத்து வாங்காதே! உன் பொண்டாட்டி கொண்டு வர்ற வரதட்சணைய வச்சு தான் பிரார்த்தனாவோட கம்யாணத்தை நடத்தப் போறேன்.” 

“அம்மா நீ போறது உனக்கே அசிங்கமாயில்லே? பெத்தப் பொண்ணை கரை சேர்க்க யாரோ ஒரு தகப்பன் கஷ்டப்பட்டு சம்பாதிச்கக் கொடுக்கணுமா?  அதை விட நான் இப்படியே இருந்துடலாம்!” 

“வயசுப் பொண்ணு இவ்ளோ பேசக் கூடாது. வாயை மூடு! இந்த காலத்துல எத்தனை பேருக்குடி சொந்த வீடு இருக்கு? வாடகை வீட்லேயே கடைசிவரை காலம் தள்றவங்க நிறைய பேர். ஒரு வேளை இந்த வீட்டுக்கு வரப்போறவளோட பிறந்த இடம் வாடகை வீடா இருந்தா அவ அதிர்ஷ்டசாலி தானே? நமக்கென்னடி விசாலமான வீடு. அதுவும் சொந்த வீடு. 

எனக்கப்புறம் ஆளப்போறவ அவ தானே? அதுக்காக அவளைப் பெந்தவன் கஷ்டப்படறதிலே தப்பேயில்லே. ராஜா மாதிரி பிள்ளையை பெத்து வச்சிருக்கேன் பாரு… மகாராணி மாதிரி ஒரு மருமகளை கொண்டு வர்றேனா, இல்லையான்னு?” 

கௌசிக்கும், பிரார்த்தனாவும் சலிப்புடன் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். 

“அம்மா எப்பப் பார்த்தாலும் இதே பேச்சு தானா? தோசையும் புளிக்குது… அதை விட உன் பேச்சும்.. அண்ணா நான் என் ரூம்லேயே போய் சாப்பிட்டுக்கறேன்.” தட்டுடன் உள்ளே எழுந்துப் போனாள் பிரார்த்தனா. 

“கொழுப்பு ஜாஸ்தியாய்டுச்சு… வேறென்ன சொல்ல?” சிடுசிடுத்தபடி உள்ளேச் சென்றாள் காமாட்சி. 

உள்ளே சிரித்தபடி சென்ற பிரார்த்தனா கல்லூரியில் இறுதியாண்டு பி.பி.ஏ. படிக்கும் அழகான…நல்ல பெண்! 

அத்தியாயம்-5

“டைமாச்சு சீக்கிரம் எடுத்துட்டு வா… சாப்பிட்டுட்டு கிளம்பணுமில்லே? செகண்ட் ஹேண்ட்ல வாங்கின பைக்கையும் வித்தாச்சு. பஸ்ல போய், ரயிலைப் பிடிச்சு…தாம்பரம் போகணும்….சீக்கிரம்!” கேசவ் பாபரத்தான். 

ஒரு ஹால் கொஞ்சமே விஸ்தாரமாய் இருந்தது, அது தான் பெட்ரூமாகவும் இருந்தது. ஒரு பாத்ரூம். சமையலறை! அவ்வளவு தான். அதற்கே ஆயிரத்து ஐநூறு ரூபாய் வாடகை! தவிர கரண்ட்டுக்கும், தண்ணீருக்கும் தனியாக வசூலித்தார்கள். 

கேசவ் ஒரு தளியார் கம்பெனியில் வேலை செய்தான். அவன் வாங்கும் ஆராயிரம் ரூபாய் சம்பளத்தில், வீட்டு வாடகை, சாப்பாடு, போக்குவரத்து செலவு, மருந்துவ செலவு என முழி பிதுங்கிப் போயிற்று. மாதாமாதம் கடன் வாங்கினானே ஒழிய சேமிப்பு என்று எதுவும் இல்லை.

“வந்தியா?” 

“இதே வந்துட்டேங்க!” சமையல் பாத்திரங்களோடு அருகில் அமர்ந்தாள், மாலினி. 

தட்டை வைத்துப் பரிமாறினாள். 

“என்ன சமையல்” 

“ரசம். அவரைக்காய் பொரியல்!” 

“தலைவிதிடா சாமி!” நெற்றியில் அறைந்துக் கொண்டான்.

மாலினி பரிதாபமாய் விழித்தாள். 

“என் நேரத்தைப் பார்த்தியா? டிபன்னு ஒண்ணு இருந்ததையே மறந்தாச்சு. மூணு வேளைக்கும் ஒரே சாப்பாடு போடு. என் மூஞ்சியையே பார்த்திட்டிருந்தா என்ன அர்த்தம்?” சிடுசிடுப்பாய் கேட்டான். 

எச்சிலை விழுங்கிக் கொண்ட மாலினி பவ்யமாய் பரிமாறினாள்.

வேண்டா வெறுப்பாய் பிசைந்து சாப்பிட்டவன், “இந்த அவரைக்காயை பொரியல் தவிர வேற மாதிரி சமைக்கத் தெரியாதா?” 

“சமைக்கிறேங்க.” 

“தினத்துக்கும் ஒரே மாதிரி சமையல். 

எப்படி இருந்தவன் நான்? காலைல விதவிதமாய் டிபன், கறியும், மீனும் இல்லாம மதிய சமையலே கிடையாது. 

எல்லாமே ரெண்டு மூணு வருஷத்துல தலை கீழா மாறிப்போச்சுல்ல?” இடது கையால் ஷேவ் பண்ணாத தாடையை சொரிந்துக் கொண்டான். 

மாலினி… மதிய உணவடங்கிய சின்ன டிபன் கேரியரை அவன் வழக்கமாய் எடுத்துப் போகும் பேகில் வைத்தாள். 

இளைத்து, கறுத்து. முடிக்கொட்டி, மெலிதாகிப்போன பின்னலுடன் வசீகரம் தொலைந்திருந்த மாலினியை வெறுப்பு மண்டிய பார்வையுடன் நோக்கினான். 

உத்திரத்தில் மாட்டியிருந்த தூளி லேசாய் ஆடத்தொடங்கி… சிணுங்கி அழ ஆரம்பித்தது குழத்தை. 

“இதோ இதோ அம்மா வந்துட்டேன்டி செல்லம், போட்டுக்கறீங்களா?” 

“நீ போ நான் போட்டுக்கறேன்!” 

“என் கண்ணம்மாவுக்கு பசிக்குதா ஒரு நிமிஷம் பொறுத்துக்குவியாம். அம்மா பால் எடுத்துட்டு வருவேனாம்…” தூளியிலிருந்த குழந்தையை தரையில் அமர வைத்து விட்டு, சமையலறைக்குள் ஓடினாள் மாலினி.

தரையில் அமர்ந்திருந்த ஒண்ணே கால் வயது சவுந்தர்யா தந்தையைப் பார்த்து சிரித்தது. 

சிரிக்கக்கூட பொறுமையின்றி அதன் கன்னத்தை லேசாய் தட்டிக் கொடுத்து அவசரமாய் சாப்பிட்டான். 

பால் பாட்டிலோடு வந்த மாலினி குழந்தையை மடியில் இருத்திப் புகட்டினாள். 

“பத்து மணிக்கு நானும் ஜி.எச். போறேங்க.” 

“எதுக்கு?” 

“மத்திலி செக்கப். ஷூகருக்கு மாத்திரை வாங்கிட்டு வரணும்!” 

“சரி!” சட்டை பொத்தானை மாட்டிக் கொண்டு, சட்டையை முழங்கை வரை மடித்து விட்டான். 

“அப்பவே.. தலை தலையாய் அடிச்சுக்கிட்டேனே மாலினி…என் பேச்சைக் கேட்டியா?” 

“எ.. என்னங்க?” குழந்தைக்கு பால் புகட்டுவதை நிறுத்தி விட்டு கணவனை ஏறிட்டாள். 

“லவ் பண்ணிட்டோம்ங்கறதுக்காக கல்யாணம் பண்ணியே ஆகணும்னு கழுத்துல கத்திய வச்சியே. 

இப்பப் பார்த்தியா. தினமும் ரசமும், அப்பளமும் தான் சாப்பிடற மாதிரி வாழ்க்கைன்னு ஆகிப்போச்சு. இப்ப ஒரு உண்மையை சொல்றேன் கேட்டுக்கோ.

ஆரம்பத்திலேர்ந்தே வீட்ல பார்க்கிற பொண்ணை தான் கல்யாணம் பண்ணிக்கணும்னு தீர்மானமா இருந்தேன். பொண்ணும், பொருளும், சீரா, கவர்ன்மெண்ட் வேலையும் தர போட்டிப் போட்டாங்க. ப்ச் எல்லாம் மாறிப்போச்சு.” 

“….?!”

“உன் கூட ஆரம்பத்துல வெறும் ஃப்ரண்ட்ஷிப்போட தான் பழகினேன். நல்லா போசிச்சுப்பார்… முதல்ல நீ தான் பிரபோஸ் பண்ணினே. நான் கூட இதெல்லாம் சரி வராதுன்னு சொன்னேன். அதுக்கப்புறம் நாளடைவில் ஒரு சலனம் மனசுக்குள்ளே உண்டாச்சு. எந்த நேரத்துல… எப்ப உன் கிட்ட நானும் ஐ லவ் யூன்னு சொன்னேன்னு எனக்கே இப்ப ஞாபகம் இல்லே. வீட்டை எதிர்த்து கல்யாணம் பண்ணிக்கிட்டோம் இப்ப? 

என்ன வாழககை இது? காதல், கண்றாவின்னு மனசை அலைபாய விட்டதால நீயும் நல்லாயில்லே. நானும் நல்லாயில்லே! காதல்னு ஒண்னை கண்டுபிடிச்சவன் இப்ப மட்டும் என் எதிரே வந்தான்னா அவனை கொலைப் பண்ணிட்டு ஜெயிலுக்குப் போகக் கூட தயங்க மாட்டேன்.” 

எரிச்சலும், வெறுப்புமாய் பேசி விட்டு, அவளிடம் சொல்லிக் கொள்ளாமலே அலுவலகம் புறப்பட்டுச் சென்றான் கேசவ்.

மாலினி திகைப்புடன் வாசலையேப் பார்த்தாள். 

சமீப காலமாய் கேசவ்வின் பேச்சு இந்த ரீதியில் தான் இருக்கிறது.

சலிப்பும், எரிச்சலும் பேச்சில் விஞ்சி நிற்கிறது. திருமணமான ஏழெட்டு மாதம் வரை எல்லா காதல் வயப்பட்ட கணவனைப் போல் தான் அவனும் இருந்தான். ஆனால் திருமணமாகி நான்காவது மாதத்திலேயே கருவுற்றாள். 

மகிழ்ந்தான்.

இரண்டு பக்கமும் அவர்களை ஏற்றுக் கொள்ளாததால் யாருடைய உதவியுமின்றி தன் உழைப்பால் குடும்பத்தை நடத்திய போது அவனுக்கும் பெருமையாக தான் இருந்தது. 

ஆனால், அதன் பிறகு தான்… அவனுக்கு கஷ்டம் ஆரம்பமானது. மாலினிக்கு கர்ப்ப கால சர்க்கரை நோய் இருந்ததால் காலை, இரவு இரண்டு வேளையும் இன்சுலின் இன்ஜெக்ஷன் போட வேண்டிய சூழ்நிலை. 

வயிற்றிலிருக்கும் குழந்தைக்காகவும், மருந்து, ஊசி என்று ஏகமாய் செலவாக வட்டிக்கு கடன் வாங்கினான். 

பிறந்ததும் பெண்ணாய் இருக்க அவன் கவலை அப்போதே ஆரம்பித்தது. 

அவன் வயதொத்த நண்பர்கள் வசதியான இடங்களில் பெண் பார்த்து கல்யாணம் பண்ணி, வீடு, கார் என்று செட்டிலாகி விட, அவர்களிடமே கைக்கும், வாய்க்கும் எட்டாமல் கடன் வாங்க கை நீட்டியபோது தான், வாழ்க்கையின் யதார்த்தமும், காதல் என்பது காற்றடைத்த பலூன் எனவும் புரிந்ததுப் போல் உணர்ந்தான்.

குழந்தைப் பிறந்த பிறகும் ஏற்றுக்கொள்ளாத பெற்றோர் ஒரு பக்கம். மாலினி வீடு நடுத்தர வர்க்கம் தான். ஜாதியும் கவுரவமும் இரு கண்கள் என நினைக்கும் பெற்றோர். மாலிலிக்கும் பிறகு இரண்டு தங்கைகள் வேறு. அதனால் அவளை ஒரேடியாய் தலை முழுகி விட்டார்கள்.

கேசவ் மாறிப்போனான். வேலை முடிந்தும் வீட்டிற்கு வரப்பிடிக்காமல் வெளியில் அலைந்து இரலில் பதினொன்று, பனிரெண்டு மணியென வீடு திரும்புவது வாடிக்கையானது.

குழந்தை பிறந்ததும் சர்க்கரை வியாதி போய் விட்டிருந்தது மாலினிக்கு ஆனால் குழந்தைக்கு ஒரு வயதானதும் மறுபடியும் அந்த நோய் வந்து விட்டது.

கவலை, போதிய சத்தான உணவின்மை, உறக்கமின்மை என்று, வலிய நோய் வந்து ஒட்டிக் கொண்டது.

மேலும் செலவு! காதல் மட்டுமல்ல…மனைவியும் கசந்துப் போனாள் கேசவ்விற்கு.

ஆரம்பத்தில் அவன் பேச்சும், உதாசீனமும் மாலினியை ரொம்பவே இதயத்தை அரித்துத் தின்றது.

இப்போது பழகி விட்டது.

ஆனால், ஒன்று மட்டும் தான் புரியவில்லை.

அவளின் எதிர்காலம் எப்படியிருக்கும்?

மடியிலிருந்த குழந்தை அவளைப் பார்த்து சிரித்தது. தன்னை மறந்து அவளும் புன்னகைத்தாள். அவள் மனக்காயம் போற்றும் அருமருந்து அச்சிரிப்பு மட்டும் தான்!

அத்தியாயம்-6

அம்மாவின் சில நடவடிக்கைகளுக்கு முகம் சுளிப்பானே ஒழிய கௌசிக் அவளை எதிர்த்து ஒரு வார்த்தை பேச மாட்டான். அந்தளவு தைரியமெல்லாம் கிடையாது. பிரார்த்தனா அவனுக்கும் சேர்த்து வைத்துப் பேசும் தைரியசாலி.

அம்மாவிடம் தன் காதல் விஷயத்தை எப்படி சொல்வது என்று தொடை நடுங்கிக் கொண்டிருப்பவன். அதே சமயம் சில விஷயங்கள் அவள் பேசும் போது எரிச்சலை தந்தாலும், ஆழ்ந்து சிந்தித்தால் அதில் நியாயம் ஒளிந்திருப்பதையும் உணர்வான். 

எனினும் ஒரு தைரியம், நம்பிக்கை! 

கண்டிப்பாய் அவந்திகாவின் அம்மா போட்டிருக்கிற கேஸ் அவர்கள் பக்கம் ஜெயிக்கும். அதனால் அவந்திகாவைப் பற்றி பேசும் போது அம்மாவின் எதிர்ப்பு இருக்காது என்று! 

அன்று அதிசயமாய் அவன் அழைத்ததும் ரெஸ்டாரண்ட் போக சம்மதித்தாள் அவந்திகா. 

“காத்ரீனா புயல் சென்னைக்கு வர வாய்ப்பிருக்கு அவந்தி.” 

“சென்னைக்கா? அதுக்கான அறிகுறியே இல்வையே” 

“அதான் நீ ரெஸ்டாரெண்ட் வந்திருக்கியே… இது போதாதும்!”

“வரலேன்னாலும் தப்பு. வந்தாலும் கிணடல் பண்றிங்க.”

“எம் பொம்முக்குட்டிய நான் கிண்டல் பண்ணாம வேற யார் பண்ணுவா?” 

“சார் செம ஜாலி மூட்ல இருக்கிங்க போல” 

பைக்கை பார்க்கிப் பகுதியில் ஸ்டாண்ட் போட்டு விட்டு, அவளை ஒரு மாதிரி லுக் விட்டான். 

“ஆமா. செம் மூட்ல தான் இருக்கேன். இந்த ரெஸ்டாரண்ட் மாடியில லாட்ஜும் இருக்கு. ரூம் போட்றவா!” 

“ச்சீ… பேச்சைப்பாகு… நான் இப்படியே போய்டுவேன்!”

“ஏய்…. சும்மா விளையாட்டுக்குடா! கல்யாணத்துக்கு முன்னாடி பெரிய தப்பெல்லாம் பண்ற அளவுக்கு சத்தியமா எனக்கு தைரியமில்லே! நீ கேட்டதுக்கு ஜாலியா பதில் சொன்னேள் அவ்வளவு தான்!” 

மேற்கு கலரோட மேஜை காலியாயிருக்க அமர்ந்தனர்.

“இல்லே மதியம் போன் பண்ணினப்ப அப்செட்ல இருந்தீங்க. இப்ப ஜாலியா இருக்கீங்கன்னதும் அப்படிக் கேட்டேன்.” 

“ஆமாம் அவந்தி மதியம் பயங்கர டென்ஷன்ல இருந்தேன்.” 

“ஆபிஸ்ல பிரச்னையா?” 

“ம்ஹூம் என் கூட வொர்க் பண்ற முரளியால்….” 

“என்னாச்சு?” 

“அவன் ஒரு ஏமானி!”

“சரி!” 

‘”அவங்கம்மா சமீபத்தில இறந்துட்டாங்க. சொந்த வீடு அடமானத்துவ இருக்க. கூடப்பிறந்தவங்க ஒரு அண்ணனும், தங்கிச்சியும், வீடு மூணு பேருக்கும் தான்!அண்ணனும், தங்கச்சியும் கொஞ்சம் கஷ்டத்துல இருக்காங்களாம். 

அதனால் அவங்கம்மா வீட்டுப்பேர்ல வாங்கின ரெண்டு லட்ச ரூபாய் இவன் ஆபிஸ்ல லோன் போட்டு மீட்கப் போறானாம்.

“அதனால் என்ன” 

“அதனால் என்னவா? வீட்ல மூணு பேருக்கும் உரிமை இருக்கிறப்ப, கடன்லேயும் மூணு பேருக்கும் பங்கு இருக்கு தானே? மத்த ரெண்டு பேரும் கஷ்டப்படறாங்கன்றதுக்காக… இவன் ஏன் மொத்த பாரத்தையும் சுமக்கணும்?”

“கூடப்பிறந்தவங்கன்னா உதவிப் பண்றது தானே நல்லது. அதிலென்ன தப்பிருக்கு?” 

“சரியாப் போச்சு. இவன் ஏமாலிங்கறதால அவங்க அப்படி வேஷம் போடறாங்க. ஏன் அவங்க கடன் பட்ட்டுமே சொத்துக் கிடைக்குதில்லே? அப்புறயென்ன? யார் கிட்டேயாவது வாங்கித் தர வேண்டியது தானே? இல்லையா…விட்டை வித்து கடனை அடைச்சு மீதிய ஷேர் பண்ணிக்க வேண்டியதுதான்?” 

“அதுக்காக வீட்டை விக்கறதா?” 

“விக்கலேன்னா முரளி ஒரு ஏமாளியாவிடுவான்”

“சரி… அவர் நான கூடப்பிறந்தவங்களுக்காக தான் கடன் அடைக்கறேங்ககிறாரே… செய்யட்டுமே. இந்த காலத்திலே ஒரு கைப்பிடி நிலம் வாங்கறதே முடியாத காரியம். அதைவீடா மாத்தறது. தலைகீழா நின்னு தண்ணிக்குடிக்கிற மாதிரி சொல்றீங்களே.. தப்பில்லையா?” 

“என்ன தப்பிருக்கு? இந்த காலத்திலே அண்ணனாவது தம்பியாவது? அவங்களங்க சம்பாதிச்சதை பாதுகாத்து வச்சுக்கலேன்னா.. உருப்படவே முடியாது. ஒருந்தர் மூலம் ஆதாயம் கிடைக்கும்னா பத்து வயது இளையவனா இருந்தாக் கூட அண்ணனா ஏத்துக்கலாம். தப்பேயில்லே? சுயநலமா இல்லேன்னா..எதிர்காலத்திலே வானமே கூரைன்னு நடுத்தெருவிலே தான் நிக்கணும்!” 

அவன் கருத்தை அவந்திகாவினால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. பல விஷயங்களில் அவன் கருத்துக்கள் சுயநலமாகவே இருக்கும். வெறும் பணமும், சுயநலமும் மட்டும் தான் வாழ்க்கை என்றால்…. உற்றம், சுற்றம் என்று எதற்கு? அன்பில்லாமல், காசு, பணம் என்று சுமர்ஷியலாக வாழ்ந்து விட முடியுமா?” 

அவள் பெரும்பாலும் அவன் கருத்துக்களுக்கு எதிர்வாதம் செய்வதில்லை. 

இப்போதும் மவுனமானாள். 

“என்ன சாப்பிடறே?”

“ஏதாவது!” 

“முரளிக்கு நான் பண்ணின அட்வைஸ் பத்தி என்ன நினைக்கிறே அவந்தி?” 

“ரெஸ்டாரண்ட் வந்ததே பெரிய விஷயம். அதிலே முரளியர் பத்தி பேசியே டைமை வேஸ்ட் பண்ணனுமா?”

“அதுக்கில்லே… இதிலே எனக்கென்ன லாபம் சொல்லு? அவன் நல்லாயிருக்கணும்னு தானே சொன்னேன். பட், என் பேச்சையே கேட்க மாட்டேங்கிறான்.” 

“பிளீஸ்… வேற பேசுவோமே…!” 

“ஓகே…ஓகே!” 


“அம்மா, சப்பாத்தி ரெடி. சாப்பிட வா!”

கிச்சனிலிருந்து குரல் கொடுத்தாள் அவந்திகா. 

“….?!”

பதில் குரல் வராமல் போகவே மறுபடி அழைத்தாள். 

“அம்மா.. உன்னைத் தான்.. டிவியில சவுண்ட்டை கொஞ்சம் குறை, நான் பேசறது காதிலே விழுதா?” 

இந்த முறையும் பதிலில்லை. 

பருப்புக் கூட்டை தாளித்து இறக்கி வைத்து விட்டு, கைகை கழுவிக் கொண்டு ஹாலுக்கு வந்தாள். 

“எவ்ளோ நேரமா கத்த… அம்மா…என்னம்மா ஆச்சு?” திடுக்கிட்டவளாய் ஓடி வந்தாள். 

டிவியில் சீரியல் ஓடிக் கொண்டிருக்க, சீதாலட்சுமி சோபாவில் சுருண்டுப் படுத்திருந்தாள். 

“அம்மா….அம்மா” 

“ம்…ம்” 

அம்மாவைத் தொட்டுத் திருப்பியவள் முன்னிலும் அதிர்ந்தாள்.

உடம்பு உலைக்களமாய் கொதித்தது.

“அம்மா.. என்னம்மா உடம்பு இப்படி கொதிக்குது? எந்திரி….” 

“மு..டி..ய…லே!” 

“என்னாச்சு… நல்லாதானேம்மா இருந்தே?” 

“…!”

“இரு… அண்ணாவுக்கு போள் பண்றேன்!” 

தன் செல்போனை எடுத்து உடனடியாகத் தொடர்பு கொண்டாள்.

பத்தே நிமிடத்தில் வீட்டிற்குள் நுழைந்தான் பரமேஷ்வர். 

“என்ன அவந்திகா… என்னாச்சு?” 

“தெரியலேண்ணா… திடீர்னு பார்த்தா எக்கச்சக்கமா காய்ச்சல்!”

“நான் ஆபீஸ்லேர்ந்து வரும்போதுக் கூட நல்லாதானே இருந்தாங்க?” 

“ஆமாண்ணா.. இப்பதான் நீ வந்துப்போன பிறகு, ஒரு மணி நேரம் கழிச்சு. அந்த லாயர் என் செல்லுல போன் பண்ணி அம்மாக்கிட்டே பேசணும்னான். அதுக்குப் பிறகு தான் இப்படி. அரை மயக்கத்துல இருக்காங்க…. எந்திரிக்கவும் முடியல…” 

“மைகாட்…அந்த லாயர் எதையாவது சொல்லி இருப்பான். பேசிட்டிருக்க கோமில்லே… நான் போய் ஆட்டோவை அழைச்சிட்டு வந்திடறேன். நீயும் ரெடியாயிரு…” 

“சரிண்ணா!”

– தொடரும்…

– காதல் தேரினிலே… (நாவல்), மார்ச் 2009, தேவியின் கண்மணி மாத இதழ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *