கதையாசிரியர்:
தின/வார இதழ்: குமுதம்
கதைத்தொகுப்பு: காதல்  
கதைப்பதிவு: December 21, 2012
பார்வையிட்டோர்: 15,942 
 
 

வலைத் தளத்தில் மேய்ந்து கொண்டிருந்த போது திறந்து வைத்து இருந்த முகனூலில் செய்தி ஒன்று முளைத்தது.

”ஹாய் ராகவ் ,என்ன நாலு நாளாய் ஆளை கானோம்?”

”பிஸி…மாண்டியா வரைக்கும் போக வேண்டியிருந்தது..”

வர்ஷினி ஆறு மாதப் பழக்கம்.நண்பனின் நண்பனின் தோழியின் நண்பனின் தோழி.ஒண்ணு விட்ட அத்தை மகள் மாதிரி ஒண்ணு விட்ட நண்பனின் தோழி.எனக்கும் தோழி.நட்புக் கோரல் வந்த உடனேயே ஏற்றுக் கொள்ளாமல் கொஞ்சம் ஃஃபிலிம் காண்பித்து விட்டு பின் ஏற்றுக் கொண்டேன்.

”என்ன செய்கிறாய் நீ ?”- என் முதல் கேள்வியிலேயே தெறித்த ஒருமையை ரசித்தாளா என்ன?

”உனக்கு தைரியம் தான்”

”எதுக்கு ?”

”முதல் முறை சாட்டில் வருகிறேன்..நீ போடுகிறாய்”

”நான் இப்படி யார் கிட்டயும் அதிகமா பேசினது இல்ல.என்னமோ உன்னோட விவரக் குறிப்புகளைப் பார்த்த உடனேயே ரொம்ப நெருக்கமா ஃபீல் பண்ணேன்..”

”அட இது ரீல்..சும்மா வார்த்தையைப் வீசிப் பார்க்கறது என்ன செய்றா பார்ப்போன்னு ?”

”சத்தியமா அப்படி கிடையாது..உண்மையைதாம்பா சொல்றேன்..”

”என்ன புத்தகம்பா படிச்சே?”- அவளின் முகனூல் அட்டையே புத்தகங்கள் தான்.

“‘அம்ருதா பாட்டில் ஆதி பர்வம் ..க்ராபிக்ஸ் நாவல்”

”வாவ் ஹவ் இஸ் இட் ”

”பிரமாதம் …அம்ருதா ஃப்ரான்ஸ் போறாங்கன்னு தளத்தில படிச்சேன்…ப்ரான்ஸ்ல்லயே தங்கி மூனு மாசம் ஒரு கிராபிக்ஸ் நாவல் ஒண்ணு எழுதனுமாம் ..லக்கி இல்ல”

”ம்..”

“எங்களுக்கு பி.ஹெச்.பி பெர்சன்ஸ் நாலு பேர் வேணும்..புது புக் செல்லிங்க் சைட் ஒண்ணுக்கு யாராவது இருந்தா சொல்லேன்..”

இப்படி ஆரம்பித்த உரையாடல் மூன்றாவது மாதம் கடந்து வெற்றிக் கரமாய் ஒடிக் கொண்டிருந்தது.

”ஹாய் பெங்களூர்ல்ல எங்க இருக்க ?”

“” டாலர்ஸ் காலணி?”

”ஓ…ஹை கிளாஸ் …வெறும் மந்திரிங்க இருக்கற இடம் ஆச்சே..யூ லிவ் தேர்…சொந்த வீடா?”

”’சரிதான்,நண்பரோட வீடு…வெளி நாட்டுல இருக்கார்…”

”தனியாவா இருக்க”

”ஆமாம் …” என் நாக்கில் சனி அன்றுதான் உட்கார்ந்தது.

”இந்த வாரம் நாம் சந்திக்கலாமா?”

”எதுக்கு?”

” ம் பல்லாங்குழி விளையாட…போர் அடிக்குது…சனிக்கிழமை லீவ்தானே?”

”ஆமாம்”

”வெள்ளிக்கிழமை நைட்டே நேரே வந்துடறேன்..”

”ஆர் யூ சீரியஸ்”

”ஹாய் என்ன பயமா இருக்கா..நான் உன்னை ரேப் பண்ணிட மாட்டேன்..”அவள் சொல்ல நான் அனிச்சையாக அவளின் சுய தகவல் பக்கம் போய் அவளின் புகைப்படங்களைப் பார்க்க ஆரம்பித்தேன்.

இருபது வயது டால்டா!

”என்னடா பதில் காணோம்”

”ம்…எங்க உன்னைப் பிக் அப் பண்ணனும்?”

”ராகவ் நீ ஒண்ணும் பிக் அப் பண்ண வேண்டாம்..அட்ரஸ் கொடு நானே வந்துடறேன்..”

எனக்குள் படபடப்பு அதிகரித்தது.

“ஓ.கே.நம்பர் சொல்லு..எஸ்.எம்.எஸ்.பண்றேன்”

”ஓ.கே.”

அடுத்த நிமிடம் மேஸேஜ் பாக்ஸில் வந்து விழுந்தது எண்.கூடவே ‘இந்த எண்ணை கூப்பிட வேண்டாம்’என்று துணைச் செய்தி வேறு.

முகவரியை எஸ்.எம்.ஸித்தேன்.

இரண்டு நாள் தூக்கம் துக்கமானது.

பெரிய வீட்டில் தன்னந்ததனியாய் புரண்டு புரண்டு படுத்து ஒரு சின்ன சாம்பிள் குப்பி ரம் காலி செய்து வீட்டின் உள்ளே இருந்த நீச்சல் குளத்தில் குட்டிப்பையன் மாதிரி காலை விட்டு ஆட்டியபடியே இருந்தேன்.

சனிக்கிழமை என்றால் வீட்டின் வேலைக்காரன் ஓசுருக்கு ஓகி விடுவான்.அவனை பலவந்தமாய் வெள்ளிக் கிழமை காலையிலேயே கிளப்பி விட்டேன்.

சரியாய் வெள்ளிக்கிழமை நாலு மணிக்கு கம்பெனியிலிருந்து கிளம்பும் போது கைப் பேசியில் தகவல் வந்து விழுந்தது.

”நேரே வந்து விடுகிறேன்..சரியா ஆறு மணிக்கு இருப்பேன்..வர்ஷினி.’

எழு வருஷமாய் ஒப்டிமைஸ் செய்த உடம்பு.

ஸ்பரிசத்திற்கு ஏங்கிக் கொண்டுதான் இருந்தது.

நான் புத்தன் இல்லை,அதே சமயம் பெண் பித்தனும் இல்லை.

ஐந்து மணிக்கு பங்களாவிற்கு போயாகி விட்டது.

பிரிட்ஜில் கொறிக்ஸ் எல்லாம் இருக்கிறது.

நண்பரின் பாரில் எல்லாம் இருக்கிறது.இத்தனை நாளில் ஒரு முறையோ இரண்டு முறையோ போயிருப்பேன்.

ஐந்து ஐம்பதிற்கு வெளியில் ஹாரன் ஸ்ப்தம்.

ஆட்டோ டோரை திறக்க ரிமோட்டை அழுத்தினேன்.

விலாங்கு மீன் போல் அந்த ஃபிகோ கார் உள்ளே வழுக்கி வர நான் வழுக்க ஆரம்பித்து விட்டேன்.

வாசல் கேட் மூடிக் கொள்ள –

அவள் உள்ளிருந்து இறங்கினாள்.

வாவ்!

முகனூல் போட்டோ பொய்.

நேரில் தமன்னா,அமலா பால்,சினேகா மூன்று பேரையும் மிக்சியில் போட்டு இரண்டு சுற்று சுற்றியது போல் இருந்தாள்.

‘ஹாய்’என்றவள் என்னை அணைத்தாள்.

ஸ்விஸ் பனிப்புயல் !

அணைப்பிலேயே தகித்தது.

வீட்டை சுற்றிப் பார்த்தாள்.

நீச்சல் குளம் பார்த்தாள்.

‘வாவ்..ஃபெண்டாஸ்டிக்’என் பக்கம் திரும்பினாள்.

‘யெஸ்”

“இதை கொஞ்சம் பிடி”‘

சாவிக்கொத்து,கைப் பேசி,குட்டி ஹாண்ட் பேக்.

சப்ஜாடாய் என் கையில் திணித்து விட்டு நீச்சல் குளத்தில் பாய்ந்தாள்.

ஒயின் குடித்த நரியைப் பார்த்திருக்கிறீர்களா?

என்னை இப்பொழுது பார்த்திருக்க வேண்டும்.

உள்ளே டால்பினாய் பாய்ந்தவள் வெளியில் வந்த போது எனக்கு பாதி உயிரே தண்ணிக்குள் போய் விட்டது.மேலே இருந்த டாப்ஸை கழட்டி வீசினாள்.பூ போட்ட உள்ளாடை இன்-ஸ்கர்ட் தாண்டித் தெரிந்தது.

எம்பி தலைகீழாய் பாய நங்கூரம் போட்டது ஸ்கர்ட்.

ஆட்டம் ஆட்டம் ஆட்டம்.

மேலே வந்தவள் “கொஞ்சமாய் சாப்பிட்டு திரும்ப வரலாமே”

”மே”

ஆள்தான் பூசினாப் போல் இருந்தாலே ஒழிய அரைப் பாட்டில் ‘ப்ளோஸம் ஹில்’ ஒயினை காலி செய்தாள்.

நான் வெகு நேரம் சின்னக் கிண்ணத்தில் நக்கிக் கொண்டிருந்தோம்.

டூ கட் த ஸ்டோரி ஷார்ட்-

அவளும் நானும் பெட்டில் சரிந்த போது என் கைப் பேசி ஒலிக்க –

நான் எடுக்க –

”நோ ராகவ்…நான் மூடுல இருக்கும் போது கைப் பேசியை வெறுக்கிறேன் ‘என்று பிடுங்கி அடைத்து சோபாவில் கடாய்சினாள்.

இரண்டு பேரும் சாப்ட் வேர் ஹார்ட் வேர் ஆராய்ச்சியில் இறங்கி இரண்டு நாளில் டாக்டர் பட்டம் வாங்கும் அளவுக்கு எங்களை களைக்க வைத்தோம்.

ஞாயிற்றுக் கிழமை கிளம்பும் போது என் இதய ஐ.சி.எகிறும் அளவுக்கு உதடைக் கவ்விக் கிழித்துப் போனாள்.

திங்கள் கிழமை காலியில் ஐ.டி.கம்பெனியில் நுழைந்த போதுதான் நினைவில் வர கைப் பேசியை ஆன் செய்தேன்.

உள்ளே நுழைந்ததுமே ரிசப்ஷன் ஆண்டி ”சி.ஈ.ஒ. வைட்டிங்க் ஃபார் யூ”என்றாள்.

உள்ளேப் போக- பைப்பை ஊதிக் கொண்டிருந்தவர்-

”டாமிலட் எங்க போனீங்க ரெண்டு நாள்..?””

”வாட் ஹாப்பண்ட் சார்”

”லாஸ்ட் ,வீ லாஸ்ட் ஃபைவ் மில்லியன் டாலர்ஸ்.காண்ட்ராக்ட்..தேதியை மறந்துட்டிங்களா.இருபது,இருபத்து ஒண்ணு…உங்க நம்பரை ட்ரைப் பண்ணி பண்ணி ஒய்ஞ்சுட்டாங்க..நாற்பத்தெட்டு மணி நேரத்துல தலைகீழாய்ப் போச்சு,ஃபாண்டஸி வேர் கொத்திட்டுப் போயிட்டான்..”

”வாட்?”

“ஐ.ம் சாரி பேப்பர் போடுங்க..”என்றார்.

வந்தவன் மெயில் ராஜினாமித்து விட்டு திரும்பிய –

டாலர்ஸ் காலணி வீட்டில் நுழைந்து முகனூலில் எட்டிப் பார்க்க-

அவள் தன் கவரை மாற்றியிருந்தாள்.

ஒரு சின்னப் பையன் குனிந்து ட்ரவுசரை அவிழ்த்து குண்டி காட்டிக் கொண்டிருந்தான்.

அவள் ப்ரொபஷனில்-

எம்.டி ஃபாண்டஸி வேர் என்று மாற்றியிருந்தாள்.

– 13 டிசம்பர் 2012

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *