காணாது போகுமோ காதல்

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: December 1, 2022
பார்வையிட்டோர்: 5,381 
 
 

பாகம் 6 | பாகம் 7 | பாகம் 8

ஸ்டோரில் அன்று ஏகப்பட்ட விஸிட்டர்கள் தேயிலை வாங்க நின்றனர். தேயிலை தோட்டங்களையும் அது ப்ராஸஸ் ஆகும் விதத்தை

யும் பார்க்க நிறைய பேர் தீபக் ஒப்புதலோடு பர்மிஷன் வாங்கி , பாக்ட்ரியைப் பார்த்துவிட்டு தேயிலை வாங்க ஸ்டோருக்கு வருவார்கள். அன்றும் அப்படித்தான் ஒரே கூட்டம். கூட்டத்தை சமாளித்து ஒருவழியாய் சேல்ஸ் கணக்கை சிவகுருவிடம் ஒப்படைத்து “M.D ஏன் இவ்வளவு பேருக்கு பர்மிஷன் தரணும்? நம்மால கண்ட்ரோல் பண்ண முடியலை.” ஆதிரா டயர்டாக உட்கார்ந்தாள். அப்போது இண்ட்ர்காம் ஒலித்தது. மானேஜர் ” ஆதிராவை M.D கூப்பிடுறாரு. வரச் சொல்லுங்க.”

ஆதிரா பரபரப்பாகி ” அந்த ஆளுக்கும் எனக்கும் ஆகாது. இன்னிக்கு என்ன சொல்லப் போகுதோ” என்று தன் ஆடையை சரிபண்ணிக் கொண்டு கிளம்பினாள். சிவகுரு ” பொறுமையா பேசு ஆதி. கோபப்படாதே. போகும் போது காசி சாரைப் பார்த்து விட்டுப் போம்மா.” ஆதிரா சரியென்று தலையாட்டி விட்டு போனாள். ஆதிரா காசிநாதன் அறைக்குள் எட்டிப் பார்த்தாள் ஆள் இல்லை. சரியென பக்கத்து அறையான M.D அறை கதைத் தட்டி ” மே ஐ கமின்?”

தீபக் “எஸ்”. ஆதிரா அழகாய் வந்து நின்றாள். தீபக் அவளை நிமிர்ந்து பார்த்தான்.’ அழகாய் இருக்கிறாள். ஆனால் திமிர் அதைவிட அதிகமாக உள்ளது.’

ஆதிரா ‘என்ன இவர் இப்படி பார்க்கிறார்? எதற்கு வரச் சொன்னார்?’தான் வேறு தனியே நிற்பது அவளுக்கு பதட்டத்தை கொடுத்தது.

தீபக் இவளை உட்காரச் சொல்லாமல் இண்ட்ர்காம் வழியாக செக்யூரிட்டியை வரச் சொன்னான்.

ஆதிரா ” என்னை வரச் சொன்னீங்களாமே”

தீபக் “ஆமா”

“எதுக்குன்னு நான் தெரிஞ்சுக்கலாமா?” ஆதிரா

“ஸ்டோரை சரியா மெயிண்டயின் பண்ண முடியுதா?”

ஆதிரா “பண்ண முடியுது.”

தீபக் “வேற ஏதாவது இஷ்யூஸ் இருக்கா?”

“இல்லை. ஆனா திடீர்னு விஸிட்டர்ஸ் நிறைய வரும் போது கொஞ்சம் திணறுது.”

அப்போது செக்யூரிட்டி பவ்யமாக கதவைத் திறந்து “உள்ளே வரலாமா ஸார்?” கேட்டான். தீபக் தலையசைத்ததும். வந்து கைகட்டி நின்றான்.

தீபக் அவனிடம் “சொல்லு.” என்றதும். அவன் “நான் அவுட் கேட்டில் இருக்கிறேன். இன்னிக்கு வந்த விஸிட்டர்களில் ஒருவன் தன் ஜெர்கின் உள்ளே நாலைந்து தேயிலை பாக்கெட் வச்சிருந்தார். நான் பிடிச்சு கேட்டதும் பணம் கொடுத்து வாங்கினேன்னு சமாளித்தான். பில் கேட்டதற்கு கொடுக்கலைன்னு சொன்னான்.”

ஆதிரா அவசரமாக “பில் கண்டிப்பா கொடுத்து விடுவோம்.”

தீபக் “மிஸ்..மிஸ்தானே?” என கேட்டவனை கோபமாகப் பார்த்து “மாரேஜ் ஆனவளாட்டம் தெரியறேனா?”

“கேட்டதற்கு பதில்”

ஆதிரா பல்லைக் கடித்துக் கொண்டு‌ “மிஸ் ஆதிரா.”

தீபக் கறாரான குரலில் “ஒருத்தர் பேசும்போது குறுக்கே பேசக் கூடாதுங்கிற மேனர்ஸ் தெரியுமா? மிஸ்.ஆதிரா.”

ஆதிரா முகம் அவமானத்தால் சுருங்கியது.

தீபக் “ஸ்டோருக்கு அடுத்து தான் வெளியே போற கேட் இருக்கு. ஃபாக்ட்ரியில் வேற எங்கும் விஸிட்டர்ஸ் ரீச்சில் தேயிலை பாக்கெட் இருக்காது. ஸோ…”

ஆதிரா “ஸோ வாட்?”

தீபக் கோபமாக “புராடக்ட் திருடு போனதற்கு பொறுப்பு நீங்கதான். தப்பும் பண்ணி விட்டு திமிரா பேசவும் உங்களால் எப்படி முடியுது மிஸ் ஆதிரா?”

ஆதிரா கலக்கமாக நின்றாள்.

தீபக் மனம் குதூகலித்தது.

தீபக் “இதுவே ஃபர்ஸ்ட் அண்ட் லாஸ்ட் வார்னிங். இனிமே இப்படி நடந்தால் ஐ வில் டிஸ்மிஸ் யூ. நீங்க போகலாம்.” ஆதிரா கண் கலங்க ஸ்டோருக்கு வந்தாள்

சிவகுரு “என்னாச்சும்மா?”

ஆதிரா கைகளால் முகத்தை மூடிக் கொண்டு அழுதாள்.

சிவகுரு பயந்து போனார். அருகில் வந்து “ஏதோ நடந்திருக்குன்னு புரியுது. M.D ஏதும் சொன்னாரா? ஏம்மா இப்படி அழறே? நீ இப்படி உடைந்து போகிறவ இல்லையே.” சில நொடிகள் கரைந்தது. ஆதிரா மெது மெதுவாக தன்னைக் கட்டுப்படுத்தி, அழுத முகத்தை பாத்ரூமில் போய் கழுவி வந்தாள். சிவகுருவைப் பார்த்து மெலிதாய் புன்னகைத்து “யாரோ தேயிலைப் பாக்கெட்களை ஸ்டோரிலிருந்து திருடிட்டுப் போய் கேட்டில் செக்யூரிட்டியிடம் மாட்டிக் கொண்டானாம். அந்த திருட்டுக்கு நான்தான் பொறுப்பு ஏற்கணும்னு கடுமையா திட்டிட்டார். ஒரு பொண்ணு கிட்டே எப்படி பிஹேவ் பண்ணணும்னு கூடத் தெரியலை.” என்ற போது கண் கலங்கியது.

சிவகுரு வருத்தமாக “எப்படி திருட்டுப் போயிருக்கும்? நீ சுத்தி சுத்தி கவனிச்சுகிட்டே தானே இருந்தே?”

“நம்ம நேரம். எப்படியோ தப்பு நடந்திருக்கு.”

சிவகுரு “சரி மனசு கஷ்டப்படாதே.”

ஆதிரா “இருங்க ஸார். ஸ்டோரைப் பார்த்துக்குங்க. நான் வந்துடுறேன்.”

“என்ன பண்ணப் போறே?”

“ப்ராஸஸிங் யூனிட்டில் வேலை முடிஞ்சதும் சரக்கு ஏத்துற இடத்துக்கும் ஸ்டோருக்கும் சரக்கு வருது. சரக்கு ஏத்துற இடத்துக்குப் போயி பார்த்துட்டு வர்றேன்.”

சிவகுரு “பார்த்தும்மா. ஏதும் வம்பில் மாட்டிக்காதே.”

“கம்பெனி ஐடிதான் வச்சிருக்கேனே. ஜெஸ்ட் சும்மா பார்க்கிற மாதிரி போறேன்.” என கிளம்பினாள். கழுத்தில் ஐடியை மாட்டிக் கொண்டாள்.

ப்ராஸஸிங் யூனிட் வாசலில் நின்ற செக்யூரிட்டியைப் பார்த்து புன்னகைத்து விட்டு சரக்கு டெஸ்பாட்ச் இடத்திற்கு வந்தாள். லாரிகளில் சரக்குகளை ஏற்றிக் கொண்டிருந்தனர். கோடவுனின் பின்புறம் தற்செயலாக போனபோது தேயிலை பாக்கெட் பேக்கிங் பார்சல் பிரிக்கப்பட்டு அதிலுள்ள சரக்குகள் பாதிக்குப் பாதி எடுக்கப்பட்டு வேறு இடத்திற்கு கொண்டு போனார்கள். ‘இங்கு என்ன நடக்கிறது? யார் எடுக்கிறார்கள்? உடனே மானேஜரிடம் தகவல் கொடுப்போம்.’என விரைந்து மானேஜர் அறைக்கு வந்தாள். ” ஸார் பேக்கிங்கை பிரிச்சு சரக்குகளை எங்கோ எடுத்துப் போறாங்க. வாங்க வந்து கையும் களவுமாய் பிடிங்க.”

மானேஜர் சாவகாசமாக ஃபைலில் கையெழுத்து போட்டபடி “இந்த விஷயம் ஏற்கனவே எனக்குத் தெரியும்.டென்ஷன் ஆகாதே. உட்கார்”

ஆதிரா கோபமாக “தெரியுமா என்ன இப்படி சொல்றீங்க? தெரிஞ்சுகிட்டு பேசாம இருக்கிறது நாம வேலை பார்க்கிற கம்பெனிக்கு செய்கிற துரோகம் இல்லையா?”

“பேசாம இல்லையே. உங்கிட்டே பேசிட்டு தான் இருக்கேன். அது மட்டும்தான் என்னால் முடியும்”

“ஏன் இப்படி பேசுறீங்க? நீங்க கேட்கலைன்னா என்ன நான் M.Dகிட்டே போய் சொல்றேன். செக்யூரிட்டி பிடிச்ச களவு கூட சரக்கு ஏத்தும் போது அங்கிருந்து எடுத்ததாகத்தான் இருக்கும். இதப்பத்தி M.Dயிடம் சொல்லிட்டு வர்றேன்.”

மானேஜர் அவசரமாக “நீ ஏதும் சொல்லாதே. சரக்குகள் இடம் மாறுவது திருடு போவது எல்லாம் காசிநாதன் தலைமையில் நடக்குது. தெரியுமா? காசி M.D யோட மாமா. அப்புறம் எப்படி இதையெல்லாம் தடுக்க முடியும்?”

ஆதிரா அதிர்ச்சியில் உறைந்து நின்றிருந்தாள்.

– தொடரும்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *