கரைப்பார் கரைத்தால் கண்ணியும் கரையும்

 

என்னோட பேரு ராம், நா பொறந்தது வளந்தது எல்லாம் சென்னை. எனக்கு எல்லாமே என்னோட ஃப்ரென்ட் குமார் தான்.

உயிர் காப்பான் தோழன்னு சும்மாவா சொல்வாங்க, காசு பணம் எதிர் பார்க்கமா பழக்கர ஓரே உறவு நட்பு மட்டும்தான.

ஆனா இந்த காதல் மட்டும் வந்துடுச்சுன்னா, கடவுளே முன்னாடி வந்தாலும் கம்முன்னு கடடான்னு சொல்லிட்டு அவன் வேலைய பாக்க ஆரமிச்சுருவானுங்க.

இதுல என்னோட ஃப்ரென்ட் மட்டும் விதிவிலக்கா என்ன, நல்லா தான் இருந்தான் அவள பாக்கரவரைக்கும்.

அவ பேரு ஷிவானி.

“இந்தஉலகத்துலபாக்கஅழகாஇருக்கறதுஎல்லாம்ஒருவகைலஆபத்தானதுதான்”, அவளும் அப்படி தான்.

இவ வந்ததுல இருந்து என்னைய மட்டும் இல்ல, அவன் அம்மா அப்பாவையும் கண்டுக்க மாட்றான். இந்த லச்சணத்துல எனக்கும் அவ கம்பனில ஆஃபர் கெடச்சுடுச்சு இனிமே அவனுக்காக தூது போவ சொல்வான்.

சிலநாட்களுக்குபிறகுஷிவானிஆஃபீஸ் …

“ஹாய் ஷிவானி என்ன நியாபகம் இருக்கா நா குமார் ஃப்ரென்ட் ராம்”.

“ஹாய் நீங்க எப்ப இங்க ஜாய்ன் பண்ணிங்க”.

“வாய்ப்பு கிடைக்கும் போது யூஸ் பண்ணிக்க வேண்டியதுதான் அது பொண்ணா இருந்தாலும் சரி பொருளா இருந்தாலும் சரி”.

“நல்லா பேசுறிங்க அப்பறம் ஆஃபீஸ் எப்புடி இருக்கு எல்லாம் செட்டாகிடுச்சா”.

“பரவால்ல என்ன வெள்ளக்காரனுக்கு சலாம் போடறத நெனச்சா தான் கொஞ்சம் கஸ்ட்டமா இருக்கு”.

“சரி நா வரன் கொஞ்சம் வேல இருக்கு ஈவ்னிங்க் மீட்பன்னலாம்”

“ஓகே பாய், வேலதான் முக்கியம்ன்னு நீ நெனைக்கற, ஆனா அவன் நீதான் முக்கியம்ன்னு உன்னையே நினச்சு சுத்துரான்”.

அடுத்தநாள்ராம்வீட்டில் …

வேலைக்கு சேந்தாச்சு சரி எப்புடியும் பார்ட்டி கேப்பான் சரி அவன கூப்புடுவோம்.

“மச்சி எங்கடா இருக்க”.

“நா என்னோட ஆள் கூட சினிமாக்கு வந்துருக்கன்டா”

“பயபுள்ள விடாதாட்ருக்கே, சரி மச்சி நைட் ஒரு பார்ட்டி உனக்கு மட்டும்”.

“என்னடா ஏதாவது விசேசமா”.

“நீ வா சொல்றன்”

“எங்கடா வரணும்”

“ஆமாண்டா உன்ன லிமெரிடியன்ல வச்சு பார்ட்டி குடுக்க போறன் நாதாரி நம்ம பார்க்குதான்டா”.

“ஓகே மச்சி, மறக்கமா ஒரு தந்தூரி ஃபுல் ஆடர் பண்ணிடு”

நைட்பார் …

மணி 9 ஆச்சு இன்னும் அந்த பக்கிய காணும், சரி அவனுக்கு போன போடுவோம்.

“டே எங்கடா இருக்க”.

“பார்க்கு வெளியதான் பார்க்கிங்ல இருக்கன்டா”.

“சீக்கிரம் வாடா”.“ஹாய்டா என்ன ட்ரீட்லாம்”.

“எனக்கு வேல கெடச்சுடுச்சு அதான்”.

“கங்கிராட்ஸ் எவ்ளோ மச்சி சம்பளம்”.

“மாசம் புல்லா குடிக்க போதும் டா,இந்தா ஒரு கட்டிங் போடு சியர்ஸ்”.

“எந்த கம்பனி மச்சி”

“உன்னோட ஆளு இருக்கற கம்பனிலதான் ஜாய்ன் பண்ணிருக்கன்”.

“வசதியா போச்சு இனிமே அவள கண்ணும் கருத்துமா பாத்துக்க ஒரு அண்ணன் கெடச்சுட்டான்”.

“நா அண்ணன்னா இருக்கறது இருக்கட்டும், நீ எப்படா லவ்வறா நடந்துக்க போற”.

“ஏன்டா, இப்ப என்ன ஆச்சு”.

“டே இப்ப நீ வொர்க் பண்ற கம்பனில இருந்துகிட்டு அவ கூட டைம் ஸ்பென்ட் பண்றது ரொம்ப கஸ்ட்டம் டா, பேசாம நீ என்னோட கம்பணியில ஜாய்ன் பண்ணிடு, வேலைக்கு வேலையும் ஆச்சு அவளோட ஜாலியா டைம் பாஸ் பண்ண மாதிரியும் ஆச்சு”.

“நீ சொல்றதும் கரெக்ட்தான் பட் நா எப்புடி மச்சி ஜாய்ன் பண்றது”.

“டே HR-ர கரக்ட் பண்ணறது என்னோட பொறுப்பு. நாளைக்கு கால் லெட்டர் வரும் வந்து இன்டர்‌வ்யூ அட்டேன் பண்ணு. நாதான் இன்டர்‌வ்யூ டெஸ்க்ல இருப்பன்”.

“ஓகே மச்சி சியர்ஸ்”.

சிலவாரங்களுக்குபிறகு …

ஒரு மீடிங்க் நடக்குது அதுல ராம், குமார் அப்பறம் ஷிவானியும் இருக்காங்க. ப்ராஜெக்ட் மேனேஜர் குமார் ஷிவானிய பாத்து இனிமே ராம்தான் டீம் லீட்டுன்னு அறிமுகம் பண்ணி வைக்கிறார், மீடிங்க் முடிஞ்சதும் குமார் ராம்மிடம்.

“மச்சி கங்கிராட்ஸ் டா”.

“அட போடா”.

“ஏன்டா?”

“குவாட்டர்ல தண்ணியே கலக்காம அடிச்ச மாதிரி இருக்கு டா” .

“விடு மச்சி மனுசனா பொறந்தா எல்லாத்தையும் அனுபவிக்கணும், இனிமே உன்ன வாங்க ஸார் போங்க சார்ன்னு கூப்படனும்”.

“போட டே போய் வேலைய பாரு டா”.

“பாத்தியா பதவி வந்ததும் பாவளா பண்ற, சரி சரி உன்னோட கெத்த விட்றாத. நா போய் என்னோட வேலைய பாக்கறன்”.

“அவன் அவன் கஸ்ட்டம் அவன் அவனுக்குதான் தெரியும் போடா”.மேனேஜர் ஒரு புது ப்ராஜெக்ட் ராம்க்கு அசைன் பண்றார்.

“ராம் மனசுக்குள்ள ==> கோத்து விட்டுடானுகலே, சரி நம்மகிட்டதான் ரெண்டு பலிஆடு இருக்கே பலிக்குடுத்துருவோம்”.“ஷிவானி புது ப்ராஜெக்ட் வந்துருக்கு 3 டேஸ் டைம் என்ன பண்ணலாம். குமார் நீ ஏதாவது சொல்லுடா”.

“ஒரு ஐடியா நானும் ஷிவானியும் நைட் ஸிஃப்ட் வொர்க் பண்ணடுமா”

“வேணாம் டா என்னோட வேலைக்கு ஆப்பு வாச்சுடாத. ஓகே ஒரு ஐடியாதரன் இத மூணு மாடூலா பிரிச்சி நாம வேல பாப்போம் ஷிவானி என்ன சொல்ற”.

“ப்ராப்லம் இல்ல ஆனா இதுல டைம் ரொம்ப கம்மியா இருக்கு. ஓகே ஹார்ட் வொர்க் பண்ணுவோம், முடிஞ்ச வரைக்கும் சீக்கிரமா குடுக்க முயற்ச்சி பண்ணுவோம்”.

“சரி டச்லே இருங்க சொதப்பிராதீங்க, உங்க சண்டைலாம் ஆஃபீஸ் முடிஞ்சதும் வச்சுக்கோங்க”.

3 நாள்கழித்து …

சரியான டைம்ல ப்ராஜெக்ட் முடிக்க முடியல. குமாரும் ஷிவானியும் ஒருவர் மாத்தி ஒருவர் குறை கூறினார்கள். குமார் ஷிவானியின் வேலை பறி போனது.

சிலநாட்கள்கழித்து …

“மச்சான் எங்க இருப்பான்னு தெரியல வேல போனதுல இருந்து அவன பாக்கவே முடியல சரி கால் பண்ணி பாப்போம்”.

“டே குமாரு எங்கடா இருக்க” .

“பார்ல டா”

“காலைலயேவா?”

“உனக்கு என்ன நீ தப்பிச்சிட்ட எனக்குத்தான் வேலபோச்சே”

“சரி எந்த பார்ல இருக்க”

“நம்ம பார்ல தான் டா”

“ஓகே இரு நா வரன்”“ஏன்டா இப்புடி குடிச்சு சாவற, அந்த வேல போனா என்ன வேற வேலைக்கு ட்ரை பண்ணி வேண்டியதுதான”

“வேலபோனதுக்காக குடிக்கலடா அவ போய்ட்டா டா”

“இது எப்படா நடந்துச்சு”

“வேல போன அன்னைக்கே என்னாலதான் அவ வேல போனதா குத்‌தி காட்டி என்னைய விட்டு போய்ட்டா டா”

“அதுக்கு குடிச்சா சரியா போய்டுமா ”

“நமக்கே தெரியாத நம்மபத்‌தி ரகசியத்த நமக்கு காட்றது தாண்டா சரக்கு, அதான் என்ன பத்தி தெரிஞ்சிக்க தான் குடிக்கறன்”

“வாழ்க்க ரூட்டு மாறும் போதே தெளிவா முடிவு எடுத்துடனும், அடுத்த சான்ஸ்லாம் கெடைக்காது மச்சி. சரி அவள்ட நா பேசறன் போதும் குடிச்சது போலாம் வா”

“எனக்கு இந்த போத போதும் மச்சி அவ போத வேணாம் போடா”

“அவளத்தவர வேற எந்த போதயும் உனக்கு இருக்கக்கூடாதுன்னு நெனைக்கறவடா அவ விட்றாதடா”

“மச்சி இங்க எல்லாம் காசு தான், காசு செலவுப் பண்ணி படிக்கறத விட படிச்ச படிப்பை காசாக்குறது தான் கஷ்ட்டம். அவளும் காசுதான் பெருசுன்னு நெனச்சுட்டு போய்ட்டா நீ எதுக்குடா அவள பெருசா பேசுற அவ அந்த அளவுக்கு வொர்த்தா என்ன”.

“ஒத்துக்கரன்டா அஞ்சு 100 ரூபா நோட்டு தராத தன்னம்பிக்கைய, ஒரேயொரு 500 ரூபா நோட்டு குடுத்துடும். ஆனா எல்லாரும் காசுக்கா அலையரவங்கன்னு நெனைக்காத”.

“அவ அந்த அளவுக்கு முக்கியமுன்னா நீ போடா அவ கிட்ட”.

“நீ தலகால் புரியாம இருக்க எதா இருந்தாலும் அப்பறம் பேசிக்கலாம் வா போலாம்.பேரர் பில் எவ்ளோ ஆச்சு?”.

“I have account machi don’t worry, we will go”.

“இதுக்கு ஒன்னும் கொறச்சல் இல்ல வந்து தொல”.

அடுத்தநாள்ராம்ஷிவானிகாஃபீசாஃப்பில் …

“ஷாலினி அவன் பண்ணது தப்பா கூட இருக்கலாம், அதுக்காக விட்டுட்டு போகணுமா”

“அத பத்தி பேசாத அவன் கூட இருக்கறதுக்கு நா தனியாவே இருந்துருவன்”

“தனிமை எல்லார் வாழ்க்கைலையும் உண்டு, அதுல இருந்து வெளியவர தான் பலர்க்கு தெரியல. நீ இப்புடியே இருந்தர போறியா உனக்குன்னு ஒரு துன தேவ இல்லயா”

“பொண்ணுங்க எதிர்பார்க்கறது அதிகம் தான் ஆனா கொஞ்சம் அன்பு கொடுத்தா அதையெல்லாம் கூட விட்டு குடுத்துருவாங்க. எனக்கு யார்ட்ட அன்பு கெடைக்குதோ அவங்கள்ட என்னய நா விட்டு குடுத்துருவன்”.

“உங்கள மாதிரி பொண்ணுகள்ட சிரிப்ப விட அவங்களோட திமிர்தான் அழகு, எனக்கும் உன்னோட இந்த திமிர் தான் ரொம்ப புடிச்சுருக்கு”

“நீ என்ன சொல்ல வர”

“தப்பா நெனசுக்காத எனக்கும் உன்ன புடிக்கும் ஆனா என்னோட ஃப்ரென்ட் உன்ன லவ் பன்றான்னு சொன்னதும் நா என்னோட காதல மறச்சுட்டன். இப்ப அவன பிரிஞ்சி நீ இருக்கும் போது என்னோட காதல சொல்றதுல தப்பு இல்லன்னு தோணுது I Love You ஷிவானி”

“யார் இல்லாம வாழமுடியாதுனு நினைக்கறமோ, அவங்களோட பிரிவு தான் வாழ்க்கைய புரியவைக்குது. எனக்கு கொஞ்சம் டைம் வேணும் நா நாளைக்கு கால் பண்றன் பாய்”.

“உன்னோட ஃபோன்காக காத்துருக்கன் பாய்”

அடுத்தநாள் …

“ஹலோ ராம்”

“சொல்லு ஷிவானி என்ன முடிவு பண்ணிருக்க”

“ராம் என்ன நீ கல்யாணம் பண்ணிக்கிறியா”

“உண்மையா தான் சொல்றியா?”

“ஆமா”

சிலநாட்கள்கழித்துகுமார்வீட்டில் …

“மச்சி என்னோட கல்யாணம் நீ மறக்காம வந்துடு”

“யாரு டா பொண்ணு?”

“நம்ம ரசனையோட ஒத்துப்போற துனை கெடச்சுட்டா, வாழ்க்க சொர்க்கம் டா. எனக்கும் அந்த மாதிரி ஒரு பொண்ணு கெடச்சுருச்சு. உனக்கு நல்லா தெரிஞ்சவங்கதான் ஷிவானி”

“All the best மச்சி”

“காதலிய அழ வைக்காதீங்கடா ஆறுதல் சொல்ல எங்கள மாதிரி ஆயிரம் பேர் இருக்காங்க” 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)