கண்ணெதிரே தோன்றினாள்

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: April 19, 2024
பார்வையிட்டோர்: 4,054 
 
 

(2013ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 7-9 | அத்தியாயம் 10-12

அத்தியாயம்-10

அன்றைக்கு. வழக்கத்தை விடவும் லலிதா. தாமதமாக வீட்டுக்குத் திரும்பி வந்தாள், 

சின்னப் பிள்ளைகள் இருக்கிறார்கள் என்பதற்காக. அவள் வேலை செய்தகடையில். அவளுக்காகச் சில சலுகைகள் கொடுத்திருந்தார்கள், கடை எட்டு மணி வரை திறந்திருக்கும் என்றாலும். அவள் ஏழு மணிக்கே. “காஷ் பாக்சை”ப் பூட்டிச் சாவியை எடுத்துக் கொண்டு போய்விடலாம், 

பில் போடாமல் எந்தப் பொருளையும் எடுத்துப் போக முடியாது என்பதால். மற்றவர்கள். பின்னர் விற்றதில் வந்த பணத்தையும். பில்களையும் தனியே வைத்திருப்பார்கள், லலிதா சற்று சீக்கிரமாக வந்து. அந்த விற்பனையைச் சரி பார்த்து. உரியவாறு எடுத்து வைப்பாள், 

இந்தச் சலுகை. சுதர்மனின் சிபாரிசில் வந்தது என்பது. அவளது கருத்து, முதலில். அந்த வேலைக்காக மட்டுமின்றி. இந்தச் சலுகைக்காகவும். அவள் மனதில். அவனிடம் மிகவும் நன்றி நிறைந்திருந்தது, 

தன் நன்றியை. சுதர்மனுக்குத் தெரிவிக்குமாறு. அவள் கைவல்யாவை வேண்டியிருந்தாள், 

கைவல்யாவும். லலிதாவுக்கு வேலையாயிற்று, பிறந்த வீட்டு உறவாயிற்று, இனித் தன்னைப் பார்த்துக் கொள்ளுவாள் என்று விலகிப் போய்விடவில்லை, 

என்னவோ. முற்பிறவித் தொந்தம் போல. இரு பெண்களுக்கும் இடையில். உடன் பிறந்த சகோதரிகள் போல. ஒரு பாசம் வளர்ந்திருந்தது! 

எப்படியும். லலிதாவின் வீட்டுக்குப் போய். அவளோடு உறவு கொண்டாட முடியாது, அதனால். அடிக்கடி. அவள் வேலை செய்யும் கடைக்குப் போய். அவளோடு பேசிக் கொண்டிருந்துவிட்டு. வீட்டுக்குச் செல்வது. கைவல்யாவின் வழக்கம் ஆயிற்று, 

விஷயம். அத்தோடும் நிற்கவில்லை, 

லலிதாவை அவ்வப்போது போய்ப் பார்த்துவிட்டு வருவது பற்றியும். அவள் தன்னம்பிக்கையோடு பணி புரிவதைப் பற்றியும். கைவல்யா பேச்சுவாக்கில் கூற. சுதர்மனும் அடிக்கடி. அந்தக் கடைக்கு வரலானான், 

அவன் சிபாரிசு செய்த பெண். எப்படி வேலை பார்க்கிறாள் என்று பார்க்க வருகிறானாம்! 

“ஒருவரை. வேலைக்கு சிபாரிசு செய்வது பெரிய காரியம் அல்ல, நம் சிபாரிசுக்குத் தக்கபடி வேலை நடக்கிறதா என்று பார்ப்பதும். நம் பொறுப்பு அல்லவா?” என்று. அவன் புருவங்களை உயர்த்திக்கொண்டு கேட்டபோது சிரிப்பு வந்தபோதும். கைவல்யா. அவனை மறுத்து எதுவும் பேசவில்லை! 

ஏனெனில். அவனை அடிக்கடி சந்திப்பது. அவளுக்கும் பிடித்தமாகத்தான் இருந்தது! இல்லை என்று வாதிட்டுத் தன்னையே ஏமாற்றிக்கொள்ள. அவள் முயலவில்லை! 

இந்த சந்தோஷத்துக்கு எதிர்காலம் உண்டோ. இல்லையோ. அவளுக்குத் தெரியாது, ஆனால். வரம்பு மீறாத சிறு கேலியும் சிரிப்புமாக. இந்த மகிழ்ச்சியை இழந்துவிட. கைவல்யா தயாரில்லை! 

அதற்காகப் பெற்றோரிடம். அடியோடு. அவள் எதையும் மறைக்கவுமில்லை, 

லலிதாவைப் பற்றிய அனைத்தையும் அவள் வீட்டில் சொல்லியிருந்ததால். பரிதாபத்துக்கு உரிய அந்தப் பெண்ணுக்கு. அவளால் ஆன உதவியைச் செய்யுமாறே. அவர்களும் கூறினார்கள், 

கூடவே.சுதர்மனின் மனிதாபிமானத்தையும் பாராட்டி. வாழ்த்தும் தெரிவித்தார்கள், 

லலிதாவின் வாழ்க்கையில். இருள் விலகுகிற நேரம் என்பது போல. அவளுடைய பெற்றோரும். பாப்பாவின் “கிரஷ்” இருக்கும் பகுதியில். அடுத்த தெருவிலேயே. வீடு பார்த்துக் குடித்தனம் வந்தார்கள்,பேரன். பேத்தி ஆசையில்தான்! 

அவர்களுக்கும் மகிழ்ச்சியாக. தனக்கும் வசதியாக. பள்ளியில் இருந்து மகனும். “கிரஷ்ஷி”லிருந்து மகளும் தாத்தா வீட்டுக்குப் போய்விட.லலிதா ஏற்பாடு செய்தாள், 

இந்த ஏற்பாட்டினால். லலிதாவும். மக்களைப் பற்றிய கவலையற்றுக் கூடுதலாக ஐந்து பத்து நிமிஷங்கள் கைவல்யா. சுதர்மனோடு உட்கார்ந்து பேசி விட்டு. வீட்டுக்குத் திரும்பிச் செல்லுவாள், 

வழியில். பெற்றோர் வீட்டுக்குச் சென்று. மக்களைக் கூட்டிக் கொள்வாள், 

அங்கே. பாசத்தோடு. அவளுக்குப் பிடித்தமான ஏதாவது உணவு வகையும் இருக்கும், 

நடுவில் அனுபவித்த மிகுந்த வேதனைக்குப் பிறகு. இது. கிட்டத்தட்ட சொர்க்கமாகவே. அவளுக்குத் தோன்றியது! 

இந்தச் சமயத்தில்தான். கைவல்யா தந்த தூக்க மாத்திரையைத் தானும் சேர்ந்து கரைத்துக் குடித்துவிட்டு. தனக்கு என்னவோ என்று விக்கிரமன் நடுங்கத் தொடங்கியது, 

பேச்சின் இடையில். கைவல்யா இதைத் தெரிவிக்க. விழுந்து விழுந்து சிரிக்கத் தொடங்கிய லலிதாவுக்கு. வெகுநேரம் சிரிப்பை நிறுத்தவே முடியாமல் போயிற்று, 

சிரித்து முடித்ததும். அதிகச் சிரிப்பினால் வழிந்த கண்ணீரைத் துடைத்துக்கொண்டு. “அப்பாடி. இப்படிச் சிரித்து எத்தனை காலம் ஆயிற்று!” என்றாள், 

தோழியின் கைகளைப் பற்றி. “நல்ல காரியம் செய்தாய். கைவல்யா, என்னவோ ஆட்கொல்லி நோய் வந்து. ஆறு மாதம் படுக்கையில் கிடந்து. உடம்பு சத்துக் கெட்டுப் போன மாதிரி. ஒரே அலட்டல்!சூப்புகளும் பழச் சாறுகளும். சிக்கன். முட்டை. மீன் என்று அவரது மெனு தெரியுமா. உனக்கு? முழு நேரச் சமையல்காரி வைத்தால் கூடச் செய்ய முடியாது, இந்த மனிதருக்காக. நான் அடுப்படியில் வெந்து. மாய வேண்டுமாம், சப்பாத்தியையும் சாசையும் வைத்துவிட்டு. நான் கிளம்பி வந்துவிட்டேன்,” என்றாள். வெறுப்பு கலந்த குரலில், 

கண்களில் யோசனையோடு. கைவல்யா அவளைப் பார்த்தாள், 

“என்ன கைவல்யா?”

“எதற்கும் எச்சரிக்கையோடு இருங்கள். அக்கா, கிட்டத்தட்ட ஒரு கொத்தடிமை போல. இருந்து காட்டிவிட்டீர்கள், உங்களுக்குத் தெரியாதது இல்லை, உங்கள் கணவருக்கு வக்கிர புத்தி! இதைச் சும்மா ஏற்க மாட்டார், மோசமாகப் பதிலடி கொடுக்கத் துடித்துக்கொண்டு இருப்பார், அதனால் நீங்களும் கவனத்தோடு இருங்கள், ” என்று எச்சரித்தாள் 

இருவருமாக. அது பற்றிப் பேசிக் கொண்டிருந்தபோது. சுதர்மனும் வந்து சேர்ந்தான், 

விஷயம் அறிந்ததும். அவனும். தன் போலீஸ் அதிகாரி சினேகிதர் மூலமாக. அந்தப் பகுதி பெண்கள் காவல் நிலைய அதிகாரியோடு லலிதாவுக்கு அறிமுகம் ஏற்படுத்தி வைத்தான், 

லலிதாவின் முகத்தில் மிரட்சி தெரியவும். “இது. வெறும் ஒரு முன்னெச்சரிக்கை ஏற்பாடுதான். சிஸ்டர், பல வக்கிர புத்திக்காரர்களைப் போல. விக்கிரமனும் உள்ளூரக் கோழைதான், இப்படி ஒரு தொடர்பு உங்களுக்கு இருப்பது தெரிந்தாலே அடங்கி விடுவார், அதற்காகத்தான், மற்றபடி. அந்தக் காவல் நிலையத்தின் பக்கம் கூட. நீங்கள் போகத் தேவையிராது,” என்றான் புன்னகையோடு, 

தொத்திப் பரவிய முறுவலோடு. “உங்கள் இருவருக்குமே. நான் ரொம்பவும் நன்றிக் கடன் பட்டிருக்கிறேன், நாளுக்கு நாள். அது ஏறிக்கொண்டே போகிறது!” என்றாள் லலிதா, 

“கிடையவே.கிடையாது. சிஸ்டர்! ” என்று தோளைக் குலுக்கினான். சுதர்மன், கைவல்யாவிடம் ஒரு பார்வையைச் செலுத்திவிட்டு. “உண்மையில். உங்களுக்கு. யார். யார் எவ்வளவு நன்றி செலுத்த வேண்டும் என்பது தெரிந்தால். நீங்கள் ரொம்பவும் பிரமித்துப் போவீர்களாக்கும்!” என்று பூடகமாகப் பேசினான். அவன், 

சற்று முகம் வெளுத்துப் பின் சிவக்க. உதடுகளை இறுக மூடிக்கொண்டாள் கைவல்யா, 

அவளென்ன. மனதிலிருப்பதை அப்படியே வெளியே காட்டிக்கொண்டா. இருக்கிறாள்? இப்போது. இவனுக்கு. அவளது ரகசியம். எந்த அளவுக்குத் தெரியும்? 

இணுக்குத் தெரிந்தாலும். அப்புறம். இவன் முகத்தை எப்படி நிமிர்ந்து பார்த்துப் பேச முடியும்? 

கல்லாய் இறுகி அவள் உட்கார்ந்திருக்கும்போது. லலிதா இந்தப் பேச்சை. மேலே துருவினாள், 

“எனக்குப் புரியவில்லையே. சார், இந்த விவகாரத்தில். முழுக்க முழுக்க எனக்குத்தானே. நன்மை கிடைத்திருக்கிறது? உங்களுக்கோ. கைவல்யாவுக்கோ. இதில் என்ன லாபம்?” என்று விவரம் கேட்டாள்,

ஐயோ. இந்த லலிதாக்கா வாயை மூடிக்கொண்டு. சும்மா இருக்கக் கூடாதா என்று உள்ளூரத் தவித்தபடி. எதுவும் முகத்தில் தெரிந்துவிடாமல் காத்தபடி. கைவல்யா அப்படியே அமர்ந்திருந்தாள், 

மறுபடியும் அவளை ஒரு தரம் பார்த்துவிட்டு. “உங்கள் தோழியின் மனம் பற்றி. நான் பேச முடியாது. சிஸ்டர்! அதை. அவளேதான் சொல்ல வேண்டும்,” என்று தொடங்கி. கைவல்யாவைக் கதி கலங்க வைத்தான். சுதர்மன், 

சரேல் என்று உயர்ந்த பார்வையை. உடனே தாழ்த்திக்கொண்டு. மறுபடியும் கைவல்யா அசைவற்றுப் போக. அவன் தொடர்ந்தான், “என்னைப் பொறுத்த வரையில். நான் வண்டி வண்டியாய் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன், சத்தியம்! இந்த உண்மை. உங்கள் தோழிக்கும் தெரியும்!” என்று இலகுவாகக் கூறி. அவளுக்கு மூச்சடைக்க வைத்தான், 

“அப்படியா? அது என்ன உணமை? என்னது. கைவல்யா? சொல்லேன், நமக்குள் என்ன ரகசியம்?” என்று லலிதா பரபரத்தாள், 

சும்மா இருந்து சமாளிக்க முடியாது என்றாகவே. “அதெல்லாம் சும்மா. லலிக்கா, எப்படியும். அடுத்தவர் மனதில் பகுந்து பார்க்க. எனக்குத் தெரியவே. தெரியாது, எனவே. இவ்வளவு சொன்னவரையே. அதையும் கேளுங்கள்,” என்று பொறுப்பை அவனிடமே தள்ளி விட்டாள். கைவல்யா, 

கூடவே. அவன் எக்குத் தப்பாக எதையும் சொல்லிவிடக் கூடாதே என்ற பயத்தில். “போலீஸ். அது இது என்றதும். நீங்கள் ஒரு மாதிரி ஆனீர்களா? அதை மாற்ற. சும்மா ஏதோ சொன்னாரோ. என்னவோ?” என்று. நிலைமையைச் சமாளிக்க. ஒரு குறிப்பும் கொடுத்தாள், 

ஆனால். அவன் அதை ஏற்றால்தானே? 

“ஆஹா. சத்தியம் என்ற பிறகு. சும்மா. ஏதோ சொல்வேனா? உண்மையாகவே. எனக்குப் பெரிய நன்மைதான் நடந்திருக்கிறது,” என்றுரைத்தான், 

ஆர்வமாக லலிதாவும். மூச்சைப் பிடித்துக்கொண்டு கைவல்யாவும் காத்திருக்க. அவன் “அன்றைக்குக் கார்ப் பார்க்கில். என் இடத்தில் விழுந்து கிடந்தீர்களே. அந்த நாள். எனக்கு ஒரு பொன்னாள். லலிதா, ” என்று நிதானமாகத் தொடங்கினான், 

“அதெப்படி? உங்களுக்குத் தொல்லையாக அல்லவா. அங்கே விழுந்து கிடந்தேன்?” என்று கேட்டாள் லலிதா, “திட்டக் கூடச் செய்தீர்களே!” 

“நிச்சயமாக! முதலில். விஷயம் புரியாமல் அன்று திட்டியதற்கு மன்னிப்புக் கேட்டு விடுகிறேன், ஆனால். அப்படி நீங்கள் இடம் பொருள் புரியாத கலக்கத்தில் விழுந்து கிடந்ததால்தான். நான் கைவல்யாவின் உதவியை நாட வேண்டியது ஆயிற்று!” என்று. அவளைப் பார்த்து முறுவலித்தான் சுதர்மன், 

அவளது இமை தட்டாத பார்வையில் என்ன கண்டானோ. ஒரு சின்னப் புன்னகையுடன். சுதர்மன் தொடர்ந்தான், “அதுவரை கைவல்யாவை.ஒரு நல்ல அலுவலராகத்தான். எனக்குத் தெரியும், ஆனால். ஓர் இக்கட்டில் கையைப் பிசைந்துகொண்டு நிற்காமல் கை கொடுப்பாள் என்று அப்போதுதான் தெரிந்துகொண்டேன், 

“அவள் மூலமாக உங்கள் பிரச்சினையை அறிந்தபோதுதான். எனக்கு நீங்கள் எவ்வளவு பெரிய உதவி செய்திருக்கிறீர்கள் என்று புரிந்தது, 

“என்ன உதவி? எனக்கு இன்னும் புரியவில்லையே. சார்?”

“சொல்கிறேன். சொல்கிறேன், அன்று வரையிலும். விக்கிரமனின் இன்னொரு முகம் எனக்குத் தெரியாது, கொஞ்சம் அல்டாப் பேர்வழி, ஒழுங்காக வேலை வாங்குவதில். நக்கலைப் பயன்படுத்துகிறவர் என்று மட்டும்தான் நினைத்திருந்தேன், ஆனால். மனிதர் ஒழுக்கம் கெட்டவர், கார்ப் பார்க் போன்ற பொது இடத்தில்கூடக் கேவலமாக நடக்கக் கூடியவர் என்று எனக்கு தெரிய வைத்தவர் நீங்கள்தான், 

“பெரும் அதிர்ச்சியே என்றாலும்.நல்ல வேளையாக. அவரது நடத்தையை நீங்கள் பார்த்தீர்கள்! உங்களுக்கு ஒரு மனவிடுதலை கிடைத்ததும். மற்றதும். வேறு விஷயம், ஆனால். இதையே. நம் நிறுவனத்தோடு தொடர்பு உள்ள வேறு யாரேனும் பார்த்திருந்தால்? நிறுவனத்துப் பெயர். நாறிப் போயிருக்குமே! 

“எனக்கு . நம் நிறுவனத்தின் கௌரவம் முக்கியம்! நிறுவனத்தின் ஒரு நிர்வாகியே தவறாக நடந்தால். வெளியே என்ன சொல்லுவார்கள்? எல்லோரும் மோசம் என்றுதானே? 

“அப்படி ஒரு பிழை நடப்பதை. எனக்கு காட்டிக் கொடுத்து. அவரை வெளியேற்றி என் நிறுவனத்தின் நல்ல பெயரைக் காப்பாற்ற வாய்ப்புக் கொடுத்திருக்கிறீர்கள், 

“சொல்லுங்கள். இதற்கு நான்தானே. உங்களுக்கு நன்றி தெரிவித்தாக வேண்டும்?” என்று. காரண காரியத்தோடு சுதர்மன் எடுத்துச் சொன்னபோது. கை தட்டத் தோன்றியது. கைவல்யாவுக்கு, 

லலிதாவும்.”பிரமாதம். சார்! ஊரெல்லாம் சுற்றி வந்தாலும். கடைசியாகப் பாயின்டை. நிலை நிறுத்தி விட்டீர்கள்! ” என்று பாராட்டினாள், கூடவே. “உங்கள் பள்ளி. கல்லூரிப் படிப்பின் போது. பேச்சுப் போட்டிகளில். முதல் பரிசை எப்போதும் நீங்கள்தான் வாங்கினீர்கள் என்று யாராவது சொன்னால். நான் நிச்சயமாக நம்புவேன்.சார்!” என்று அவள் முடிக்கையில். எல்லோருமே சிரிக்கலாயினர்! 

பெற்றோர் வீட்டிலும். அவளுக்குப் பிடித்தமான தோசை வடைகறியைச் செய்து வைத்துக்கொண்டு. தாயார் காத்திருந்தாள், 

சந்தோஷமாக. அங்கே ஒரு வெட்டு வெட்டிவிட்டு. எதற்கும் இருக்கட்டும் என்று ஒரு முழு ரொட்டியை வாங்கிக்கொண்டு. பிள்ளைகளோடு லலிதா வீடு வந்து சேர்ந்தபோது. மணி ஒன்பதைத் தாண்டியிருந்தது, 

உள்ளே விளக்கு எரியவுமே. கணவன் வீடு வந்துவிட்டான் என்று. லலிதா புரிந்து கொண்டாள், 

ஐயோ.விக்கி எப்போது வந்தாரோ. பசித்திருக்குமோ. களைப்பாக இருக்குமே என்றெல்லாம் உண்டாகும் பழைய பரபரப்பு. இப்போது சற்றும் தோன்றவே இல்லை, 

தன் சாவியைக் கொண்டு. கதவைத் திறந்துகொண்டு உள்ளே சென்று. மேஜை மேல் ரொட்டியை வைத்துவிட்டு. குழந்தைகளைக் குளியலறைக்குக் கூட்டிச் சென்றாள், 

அவன் ஒருவன் இருப்பதையே கண்டுகொள்ளாமல். பிள்ளைகளுக்கு உடம்பு கழுவி. துடைத்து. புது நைட்டி போட்டு. ஃப்ரிஜ்ஜீலிருந்து பாலை எடுத்துச்சூடு பண்ணிக் கொடுத்து அவர்களையே லலிதா கவனித்துக் கொண்டிருக்கவும். விக்கிரமனுக்கு ஆத்திரம் பொங்கியது! 

ஆனால். தன் கோபத்தை மனைவியிடம் எப்படிக் காட்டுவது என்று புரியாமல் குழம்பினான், 

லலிதாவை அடித்து. உதைத்து. அவனுக்குப் பழக்கமில்லை! அக்கம் பக்கத்தில். பெயர் கெட்டுவிடுமே! வெறும் வார்த்தைகளிலேயே.சுருண்டு போகிறவள். அவள், 

அந்த அளவு கூர்மை. அவனது சொற்களிலேயே இருக்கும், அவளும் பயமும் பாசமுமாக. அவனுக்கு வேண்டியதைப் பார்த்துப் பார்த்துச் செய்வாள், 

ஆனால். அவளது இன்றைய அலட்சியம். அவனைக் குழப்பியது,காலையிலும் இதேதான் செய்தாள், 

இப்போதும். வெறும் ரொட்டி பாக்கெட் வந்திருக்கிறது! அதற்கும் தொட்டுக்கொள்ள வியஞ்சனங்கள் ஒன்றும் இல்லை! கேட்டால். காலையில் போலவே. சாஸ். ஜாம் இருக்கிறதே எனக் கூடும்! இந்த மாதிரிச் சாப்பிட்டு. அவன் உடம்பை எப்படித் தேற்றுவது? உள்ளதுமல்லவா. கெட்டுப் போகும்? 

தப்புக்கு மேல் தப்பாக. எங்கோ சுற்றிவிட்டுத் தாமதமாக வேறு வந்திருக்கிறாள்! 

இதை வேறு மாதிரிதான் கையாள வேண்டும், 

போட்டு அடித்து நொறுக்கி விடலாம் என்றால். அதற்குத் தேவையான வலிமை உடம்பில் இருக்குமா என்று. அவனுக்குச் சந்தேகமாக இருந்தது, 

கையை முஷ்டியாக மடக்கிப் பார்த்தால். பலம் இருக்கும் போலத்தான் தோன்றியது, ஆனால். அன்று போலத் திடீரென்று மயக்கம் வந்துவிட்டால்? 

என்னதான் அது. தூக்கமே என்று மருத்துவர்கள் சொன்னாலும். அதை ஒத்துக்கொள்ள. விக்கிரமன் தயாராக இல்லை, அவர்களுக்குக் கண்டுபிடிக்கத் தெரியாத ஏதோ புது வியாதி, தெரியவில்லை என்று ஒத்துக்கொள்ள மனமின்றி. அவனுக்கு ஒன்றுமில்லை என்று சாதிக்கிறார்கள் என்றே நினைத்தான், 

அவனால் இயலாது என்று தெரிந்தால். அவள் இன்னமும் எகிறக் கூடும்! 

வீட்டுச் செலவுக்குப் பணம் கொடுப்பதை நிறுத்தி. அவளையும் சேர்த்துப் பட்டினி போடலாமா? பிள்ளைகளும் பட்டினி கிடக்கும் என்றால். லலிதா வழிக்கு வரக் கூடும்! 

இதுதான் வழி என்று முடிவு செய்து. அவளைக் கூப்பிட்டுச் சொல்ல நினைத்தால். அவளே. பிள்ளைகள் தூங்கிய அறைக் கதவைச் சாத்திக்கொண்டு வெளியே வந்தாள், 

பிள்ளைகளுக்காகச் சுட வைத்த பாலில் மீதி இருந்ததைத் தொட்டுப் பார்த்துவிட்டு. உறை ஊற்றுவதற்கு அவள் மோரை எடுக்கவும். அவனது பொறுமை மறைந்தது, 

“நான் இன்னும் பால் குடிக்கவில்லை,” என்றான் ஆத்திரத்தோடு, 

“ஓ! இவ்வளவு நேரம் குடிக்கவில்லை என்பதால். வேண்டாமோ என்று நினைத்தேன்,” என்றவள். ஒரு டம்ளரில் பாலை ஊற்றி வைத்துவிட்டு. மிச்சத்தில் உறை ஊற்றி. மூடி வைத்தாள், 

மீதி மோரை. ஃப்ரிஜ்ஜீல் வைத்துவிட்டுத் திரும்பியவள். பால் தம்ளரைப் பார்த்துவிட்டு. “இன்னும் குடிக்கவில்லையா? வேண்டாம் என்றால் அதையும்…” என்று கூறியவாறு. பால் தம்ளரை நோக்கிக் கையை நீட்டவும். அவசரமாக அதை எடுத்து. ஒரே மூச்சில் குடித்து முடித்துவிட்டுத் தம்ளரை நீட்டினால். அதை வாங்கி வைக்க அவளைக் காணோம், 

பாலுக்குப் போடும் பையை எடுத்துக்கொண்டு வாசலை நோக்கிப் போய்க் கொண்டிருந்தாள், 

பாலை …எந்தப் பானத்தை என்றாலுமே. ஊற்றிக் கையில் கொடுத்துவிட்டு. நக்கலோ. கிண்டலோ அவன் பேச்சைக் கேட்டபடி நின்று.காலி தம்ளரை வாங்கிக் கொண்டு போகிறவளுக்கு என்ன ஆயிற்று? 

ஊகூம், இவளைச் சும்மா விடக் கூடாது, 

பையை உரியபடி மாட்டி வைத்துவிட்டுத் திரும்பி வந்தவளை. “இந்தா. நில்லு,” என்று நிறுத்தினான் அவன், “உன்னிடம் ஒன்று கேட்க வேண்டும்,” என்றான் அதிகாரமாக, 

கால் மேல் கால் போட்டு அமர்ந்து. அவன் கேள்வி கேட்கத் தயாரானால். பணிவாக நின்று பதில் சொல்லாமல். அவளும் ஒரு சோஃபாவில் உட்கார்ந்து கொண்டிருந்தாள், 

என்ன திமிர்? எப்படி வந்தது என்று மீண்டும் மனம் குழம்பினாலும். அதை ஒதுக்கி. “நீ எத்தனை மணிக்கு வீடு திரும்பினாய். தெரியுமா? ” என்று அதட்டலாக வினவினான், 

ஒரு பத்திரிகையை எடுத்துப் புரட்டியவாறே. “ஒன்பது மணி,” என்றாள் அவள் சாதாரணமாக, 

“ஒன் …பது மணி! இப்படித்தான். ஒரு குடும்பத்துப் பெண். நடு ராத்திரியில். தனியாக ஊர் சுற்றுவதா?” என்று குரலை உயர்த்தினான் விக்கிரமன், 

பத்திரிகையை மூடியவாறு. “ஒன்பது மணி ஒன்றும் நள்ளிரவு இல்லை, நான் ஊர் சுற்றவும் இல்லை!” என்று எழுந்தாள் லலிதா, 

“ஏய். நில்லுடீ, ஊர் சுற்றாவிட்டால். இவ்வளவு நேரம். எவன் வீட்டிற்குப் போய்க் குலாவிவிட்டு….ஏஏ..என்னடி” என்றவன். அவள் பத்திரிகையைச் சுருட்டியபடி முன்னே வரவும். தன்னையறியாமல் பின்னடைந்தவாறு. வாய் குழறினான், 

இவர்கள் பொதுவாகக் கோழைகளாக இருப்பார்கள் என்று சுதர்மன் சொன்னது. லலிதாவுக்கு நினைவு வந்தது, இவனுக்குப் போய்ப் பயந்துகொண்டு இருந்தாளே! 

அருவருப்பாகப் பார்த்து. அலட்சியமாய் உதட்டைப் பிதுக்கினாள் அவள், 

பத்திரிகையை. டீபாய் மீது எறிந்துவிட்டு. “ஒரு பெண் ஒன்பது மணிக்குத் திரும்பி வந்தாலே தப்பானவள் என்று சொல்வதானால். இன்றைக்குப் பத்துக்கு ஆறு பெண்கள் அப்படிப் பட்டவர்கள்தான், ஆனால். அநியாயமாகப் பெண்களைப் பழி சொன்னால். நாக்கு அழுகிவிடும்!” என்றாள் அவள், 

தன்னை அடிப்பதற்காகப் பத்திரிகையைச் சுருட்டவில்லை என்று ஆகவும். அந்த அற்பனுக்கு. மறுபடியும் வீரம் வந்தது, 

நிமிஷ நேரத்துப் பயத்துக்குப் பழி வாங்குகிற வேகத்தில். “அவர்களெல்லாம். வேலைக்குப் போய், கணவனின் சுமையைப் பாதி தாங்குகிறவர்கள், பத்தினிக்கும் மேலே! உன்னைப் போல ஓசிச் சோற்றை வெட்டுகிற. உதவாக்கரை அல்ல!” என்று. அவளைக் குதற முயன்றான், 

உண்மையைத் தெரிவிக்கும் வேளை வந்துவிட்டது என்று கருதி. “அப்படியானால். நானும் பத்தினிக்கும் மேலேதான், நானும் வேலைக்குப் போய்விட்டுத்தான் வந்தேன்!” என்று போட்டு உடைத்தாள் லலிதா, 

தலை மேலே இடி விழுந்தது போல. “எஎ …என்னது?!” என்று பேந்த விழித்தான் கணவன், “யாயாரிடம் கேட்டு வேலைக்குப் போனாய்? திமிராடீ?” என்று கத்தினான், 

“ஷ்!” என்றாள் அவள், “உங்கள் அபிப்பிராயப்படி. நான் பத்தினியை விடவும் உயர்ந்தவள், அதனால். என்னிடம் இப்படிக் கத்தக் கூடாது, மரியாதையாகவே நடந்து கொள்ளுங்கள்,” என்று. புத்தி சொன்னாள் மனைவி, 

அதற்குள் சுதாரித்து. “போடீ. போடிப் போக்கற்றவளே! பொய் சொன்னாலும் பொருந்தச் சொல்ல வேண்டாம்? உன்னைப் போல அரைகுறைக்கு. எந்த முட்டாள் வேலை கொடுப்பான்? எங்கேயோ போய்ப் பத்துப் பாத்திரம் தேய்க்கிறதுக்கு. வீட்டிலேயே செய், வேலைக்காரிச் செலவு மிச்சம்,” என்று எள்ளி நகையாடத் தொடங்கினான் விக்கிரமன், 

வேலைக்காரி செலவா? 

பாப்பாவைக் கூட்டிப்போய் “க்ரஷ்”ஷில் விடுவதற்கு. பையனின் அரைநாள் பள்ளி முடிந்ததும். இருவரையும் ஆட்டோவில் கூட்டிப்போய் பெற்றோரிடம் விடுவதற்கு என்று அதிகப்படிச் சம்பளம் கொடுப்பதை அறிந்தால். இவன் என்ன சொல்லக் கூடும்? 

இவனோடு பேசுவதே வீண்! 

அவனை ஒரு தரம் வெறித்து நோக்கிவிட்டு. “எனக்குத் தூக்கம் வருகிறது, “என்று பிள்ளைகளை உறங்க வைத்த அறையை நோக்கி நடந்தாள். அவள், 

“ஏய். நில்லுடீ, எனக்குச் சாப்பாடு?’ 

நடந்தபடியே அவள் சொன்னாள்,”மேஜை மேல் ரொட்டி இருக்கிறது, ஜாம். சாஸ். எல்லாமே, உறை குத்தின பால் கூட. இன்னும் திரிந்திராது, அதை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம், ” என்றுவிட்டு. அறைக்குள் சென்று கதவைச் சாத்திக்கொண்டாள், 

மனைவியின் இந்தப் புது அவதாரம் திகைப்பளிக்க. மூடிய கதவை வெறித்தான் விக்கிரமன், 

இரவு நெடுநேரம் விக்கிரமன் தூங்கவில்லை, 

காலடியில் புழு மாதிரிக் கிடந்த இவளுக்கு எங்கிருந்து. இந்தத் தைரியம் வந்தது? இதன் பின்னே. என்னவோ மர்மம் இருக்கிறது, என்னவாக இருக்கும்? 

எல்லாம் காலையில். விசாரிக்கிற விதமாக விசாரிக்க வேண்டும், இப்போது. இதற்கு மேல் விழித்திருந்தால். அவனுக்கு உடம்புக்கு நல்லதில்லை! 

கண்களை இறுக மூடிக்கொண்டு படுக்கையில் விழுந்தான் அவன்! 

காலையிலும். லலிதா அவனைக் கண்டுகொள்வதாகவே இல்லை, 

தன்போக்கில் குளித்தாள், பிள்ளைகளைக் குளிப்பாட்டினாள், இடையில் அடுப்படியிலும் ஏதோ வேலை நடந்தது, செல்லோவில் ஏதோ சாப்பாட்டு மேஜைக்கு வந்தது, ஒரு டம்ளரில் காஃபியும், 

முன்பு போலக் கையில் கொடுத்திருந்தால் கொண்டு வந்து. அவன் முன்னே டீபாயில் வைத்திருந்தால் கூட. ஏதாவது குறை சொல்லி. அவள் மூஞ்சியிலேயே விசிறியடித்திருக்கலாம், 

ஆனால். மேஜை வரை சென்று எடுத்துக் குடிப்பதற்குத் தன்மானம் இடம் கொடுக்கவில்லை, 

என்ன என்ன. எதைச் சாக்கிட்டுத் தொடங்கலாம் என்று காத்திருந்தவனுக்கு. பிள்ளையே எடுத்துக் கொடுத்தான், 

பள்ளிக்குத் தயாராகி உட்கார்ந்திருந்தவன். அருகில் அமர்ந்திருந்த தங்கையிடம். “சொல்லு. தா த் தா. தாத்தா!” என்று கற்றுக் கொடுக்கவும். விக்கிரமன் திடுக்கிட்டான்! 

தாத்தாவா? எங்கிருந்து வந்தது. இந்த உறவு? 

மகனுக்கு மாட்டிவிட ஷூ. சாக்சுடன் வந்தவளைக் கேட்டான், “என்னடி. தாத்தா. கீத்தா என்று. இல்லாத உறவெல்லாம் சொல்கிறான்? ” என்று கோபக் குரலில் கேட்டான், 

மகனுக்கு சாக்சைப் போட்டுவிட்டபடியே. “உறவு இருப்பதால்தான் சொல்கிறான்,” என்றாள் அவள் சர்வ சாதாரணமாக, 

வாடீ. மாட்டினாயா என்று உள்ளூர எக்களித்தபடி. “மண்ணாங்கட்டி! என்னவோ. அவர்கள் தொடர்பையே அடியோடு விட்டுவிட்டேன், நீங்கள்தான் எல்லாம் என்று சொல்லித்தான். என்னை மணந்தாய்? இப்போதென்ன புது உறவு?” என்று. உறுத்து விழித்துச் சீறினான். கணவன், 

கண்களில் பொறி பறப்பதாக எண்ணம். அவனுக்கு, 

ஆனால். அவனைத் திரும்பியும் பாராமல். பிள்ளைக்கு அடுத்த கால் சாக்சையும் அணிவித்துக்கொண்டே. “நீங்கள் கூடத்தான் பொன் போலப் பாதுகாத்துப் பூப் போல அருமையாக நடத்துவதாக. எனக்கு வாக்குக் கொடுத்தீர்கள், நடப்பதைப் பார்த்தால். உங்களுக்கு. என்னை அடையாளமே மறந்து போகும்போல இருக்கிறதே! கிட்டத்தட்ட ஒரு மாதமாக வேலைக்குப் போகிறேன், உங்களுக்குத் தெரியவே இல்லையே!” என்றாள் அவள் எகத்தாளமாக. 

அந்தக் கேள்வியில். விக்கிரமனுக்கு வாயடைத்துப் போயிற்று, இவளுக்கு ஏதேனும் தெரியுமா? குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்க. திகைப்பில் சற்று வாயடைத்து நின்றவன். உடனே சமாளித்து. பேச்சின் போக்கை மாற்றினான். 

ஆத்திரத்தை விடுத்து. வருத்தத்தைக் காட்டினான். 

முகத்தைச் சோகமாக வைத்துக்கொண்டு. “என்னைப் பார்த்து. இப்படிப் பேசுகிறாயே. லல்லும்மா! ராப்பகலாக இந்தக் குடும்பத்துக்காகத்தானே. நான் உழைத்துக் கொட்டுகிறேன், அதை மறந்து. இந்த மாதிரிப் பேசுகிறாயே! ” என்று. தழதழத்த குரலில் வினவினான், 

ஆனால். லலிதாவிடம். இதற்குப் பதில் தயாராக இருந்தது, “அப்படி நீங்கள். ராப்பகலாக உழைக்க வேண்டாம். விக்கி, சாதாரணப் பகல் உழைப்பே போதும், அதற்குள் குடும்பம் நடத்த. நான் தயார்! இனிமேல். சீக்கிரமாக வீட்டுக்கு வந்து விடுகிறீர்களா? அப்பப்போ வந்து போகும் அங்கிள் யார் என்று கேட்காத அளவுக்குப் பிள்ளைகளுக்காவது. உங்கள் முகம் நினைவிருக்கும்! ” என்றாள் ஏளனமாய், 

ஏளனமா? ஆனாலும். இதுகளுக்கு “அப்பா” மறக்காமல் இருப்பதற்காகவா? 

இந்தக் குட்டிப் பிசாசுகளுக்கு அப்பனாக வாழ வேண்டும் என்று. அவன் என்றைக்குமே எண்ணியதில்லையே! பார்க்கப் போனால்.என்ன. என்ன என்று நண்பர்கள் கேட்கிறார்களே. தன்னை மட்டமாக எண்ணி விடுவார்களோ என்றுதான். அவன் பிள்ளை பெற்றுக்கொள்ள நினைத்ததே! பிறகு. பிள்ளைகள். பிள்ளைகள் என்று. அவர்களை அவள் அதிகம் கவனித்ததுதானே. அவள்மீது. அவனுக்கு வெறுப்பை உண்டாக்கியதே! 

புருஷன் என்றால். அவனுக்காகவே. மனைவி உயிர் வாழ வேண்டாமா? எந்த நேரமும். அவனுக்காகத் தன்னையும் பராமரித்து. அலங்கரித்துக் கொண்டு. அவன் “இம்” என்றால் ஓடிவரத் தயாராக இருந்துகொண்டு அதை விட்டு. இதற்குக் காய்ச்சல். அதற்குத் தடுப்பூசி ….சேச்சே! இந்தக் குட்டிச் சாத்தான்களுக்கு அவன் முகம் மறந்தாலோ. நினைவு இருந்தாலோ. அதனால். அவனுக்கு என்ன லாபம்? 

இதனால்தான். அவன் நீதாவிடம் முழுசாகசச் சாய்ந்ததும்! எங்கே என்றாலும். எந்த நேரம் என்றாலும். அவள் தயார்! முதலில். 

அவளை எங்காவது தள்ளிக்கொண்டு போய். இரண்டு நாட்கள் ஜாலியாக இருக்க வேண்டும் 

கற்பனையில் கண் சொக்கியவன். அசைவு உணர்ந்து விழித்துப் பார்த்தால். பிள்ளைகளோடு. லலிதா படியிறங்கிப் போய்க் கொண்டிருந்தாள், 

அவனது சாப்பாடு? 

உணவு மேஜையில் செல்லோவில் இட்டிலியும். கடலைச் சட்டினி ஃப்ரிஜ்ஜீல் இருப்பதாகக் கூறி. செல்லோவுக்கு அடியில் ஒரு காகிதமும் இருந்தன, 

ராட்சசி! ராட்சசி! உடம்பு சரியில்லாத புருஷன் என்கிற அக்கறையே இல்லையே! 

இவளுக்கு என்ன தண்டனை கொடுப்பது? எப்படிக் கொடுப்பது? 

யோசித்துப் பார்த்தும் அவனுக்கு ஒன்றும் தோன்றாமல் மூளை வேலை செய்ய மறுத்தது, இது பற்றி. அவனுக்கு உதவக் கூடிய ஒரே ஆள்.நீதா! 

அவளிடமே போய். விக்கிரமன் ஆலோசனை கேட்டான், பெரியஹோட்டல் ஒன்றின் காஃபி ஷாப்பில் அமர்ந்து. கேக்குகளை நொறுக்கியபடி. அவளும் சொன்னாள், பிரமாதமான ஆலோசனை! 

“நீங்கள் ஆண்பிள்ளை. டார்லிங்! அதிலும் வீரமான ஆண் என்று எனக்குத் தெரியும்! ஓங்கி நாலு சாத்து. அவளைச் சாத்தினால். தானாகக் காலடியில் கிடக்கப் போகிறாள்! அதற்குப் போய்க் கவலைப் படுவானேன்?” என்றாள் அவள். காஃபி ஷாப்பின் பில்லை. ஆயிரம் ரூபாய்க்கும் மேலாக அதிகரித்தபடி! 

அத்தியாயம்-11 

லலிதாவும் சும்மா இருக்கவில்லை! கைவல்யாவை வரவழைத்து. அவளோடு. இது பற்றிப் பேசினாள், கூட்டு ஆலோசனை! 

அவளது வீடு! அங்கே. என்னென்ன பிரச்சினைகளை. அவள் கணவன் ஏற்படுத்தும் பிரச்சினைகள் என்னென்னவாக இருக்கக் கூடும் என்று. யாராலும் நிச்சயமாகச் சொல்ல முடியாது, 

ஆனால். விக்கிரமனின் குணம் தெரிந்ததால். ஊகித்து. அவைகளுக்கு ஏற்ப சில பல பதிலடிகளை. இருவருமாகச் சேர்ந்து யோசித்து வைத்தார்கள்! 

ஆனால். விவேகானந்தர் சொல்வது போல. யாரிடம் எத்தனை யோசகைளைக் கேட்டாலும் இறுதி முடிவு அவள்தானே எடுத்தாக வேண்டும்! 

“தைரியத்தை மட்டும் ஒரு போதும் விட்டுவிடாதீர்கள். லலிதாக்கா, நீங்கள் பயப்படுவதாக. ஒரு வினாடி விக்கிரமன் சாரு க்குத் தெரிந்தால் போதும், அப்புறம். உங்களுக்கு மீட்சியே கிடையாது!” என்றாள் கைவல்யா, 

“முந்தியவன் கை மந்திர வாள்!” 

எளிய விதமாகத் தயாரிக்கும் எந்த உணவும். விக்கிரமனுக்குப் பிடிக்காது! அதிலும். ரசத்தின் மீது. துவேஷமே உண்டு, 

முதல் உறுத்தலாக. அன்றையச் சமையலுக்கு. லலிதா ரசம் வைத்தாள், 

ஆத்திரமாகக் கணவன் கேட்டபோது. “என்ன செய்வது? நீங்கள்தான் அனேகமாக வெளியிலேயே சாப்பிட்டு விடுகிறீர்களே, உங்களுக்குப் பிடிக்காதது என்று நானும் இவ்வளவு நாள் சாப்பிடாமல் விட்டிருந்தேன், இன்று. நான் மட்டுமாகச் சாப்பிட. இது செய்தேன், காரசாரமாக வேண்டும் என்றால். நீங்கள். ஊறுகாயைத் தொட்டுக்கொண்டு சாப்பிடுங்கள்!” என்றாள் மனைவி. சற்றும் அக்கறையற்று. 

வேண்டும் என்றே. பட்டர் சிக்கனை வாங்கி வந்து. எல்லார் முன்னிலையிலும் அமர்ந்து. தான் மட்டுமாகச் சாப்பிட்டான், 

தந்தையிடம் வந்து உரிமையோடு கேட்டுப் பழக்கம் இல்லாததால். பிள்ளை தாயிடம் கேட்டான், “அம்மா. எனக்கும் சிக்கன் … ” என்று. 

பெற்ற பிள்ளை கேட்கிறானே என்று இல்லாமல். “ஸ்ஸ்ஸ்” என்று ரசித்துத் தின்றான் தகப்பன். 

யாரோ போன்ற பாவனையுடன். “பாட்டியிடம் சொல்லி விடுகிறேன், நாளைக்கு உனக்காகச் செய்து வைப்பார்கள், பாட்டியுடையது.ஹோட்டல் சிக்கனை விட.சூப்பராக இருக்கும்,” என்றாள் லலிதா, 

“அம்மா. உனக்கு? சாயங்காலம் வந்து சாப்பிடு. ” என்றான் பிள்ளை, 

கணவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு. “கட்டாயம்டா, என்றாள் அவள் மகனிடம், “நாளைக்கு இரவு. நாம் எல்லோருமே. தாத்தா வீட்டில் சாப்பிட்டுவிட்டுத் திரும்பி வரலாம்,”என்று அவள் கூற.”ஹைய்யா! ஜாலி!” என்று குதித்தான் சிறுவன், 

தாத்தா வீட்டில். இரவு சாப்பாடா? கட்டின புருஷன்! நீங்களும் வாருங்கள் என்று ஓர் அழைப்பு இல்லை! உங்களுக்கு எடுத்து வருகிறேன் என்று ஒரு வார்த்தை இல்லை, தானும் பிள்ளையுமாகக் கொட்டிக்கொள்ளத் திட்டம் போட்டாகிறதா என்று. உள்ளூரக் கொதித்தான் விக்கிரமன், 

தானும் அதைத்தானே செய்கிறோம். அதிலும் பெற்ற பிள்ளைக்குக் கூடக் கொடுக்காமல். கண் முன்னே உட்கார்ந்து உண்பது. எவ்வளவு பெரிய தப்பு என்பது எதுவும். அந்த சுயநலப் பிண்டத்தின் மனதில் படவே இல்லை! 

மறு நாளைய. இவர்களது உணவு பற்றிய மகிழ்ச்சியைக் குலைத்தே தீர வேண்டும் என்ற வெறியில். “”நாளைக்கு என் சினேகிதர்கள் நாலு பேர்.இங்கே சாப்பிட வருவார்கள்,” என்று. உரக்க அறிவித்தான், 

“அப்படியா?” என்று கேட்டுக் கொண்டதற்கு மேல். லலிதா ஒரு வார்த்தையும் சொல்லவில்லை, 

எதற்கும் இருக்கட்டும் என்று. அன்று மாலையில் விக்கிரமன் வீட்டு எண்ணுக்கு ஃபோன் செய்து பார்த்தான், எடுப்பதற்கு ஆளில்லை என்றதுமே. அவனுக்கு விஷயம் புரிந்துவிட்டது. 

அவனுடைய நண்பர்களுக்காக விருந்து தயாரிக்கும் எண்ணம். லலிதாவுக்கு இல்லவே இல்லை! 

நாலு நண்பர்களோடு வீட்டுக்கு வந்து. அவன் மூக்கறுபட்டு நிற்பதைப் பற்றிய கவலையும் கிடையாது, 

அவளும் பிள்ளைகளும். அவளுடைய பெற்றோர் வீட்டுக்குப் போய். பட்டர் சிக்கனை மொக்குவது மட்டும்தான். அவளுக்கு முக்கியம்! 

இதே பட்டர் சிக்கனை. மனைவி மக்கள் முன்னிலையிலேயே தான் மட்டுமாகத் தின்றுவிட்டு. மறுநாள். அவளுடைய பெற்றோர் வீட்டில். அவளும் மகனும் எதையும் சந்தோஷமாகச் சாப்பிட்டு விடக் கூடாது என்பதற்காகவே. நண்பர்கள் வருவதாகச் சொன்னான் என்பது. அவனுக்குத் தவறாகவே தோன்றவில்லை! 

அவன் ஆண்பிள்ளை! லலிதாவுக்குக் கணவன், அவன் சொற்படி நடக்க வேண்டியது. அவளது கடமை, 

அதில். லலிதா இப்போது தவறிவிட்டாள், அதற்கு வெளிப்படையாகத் தண்டனை கொடுக்க. அவனுக்கு வாய்ப்புக் கிடைத்துவிட்டது! 

இதுவரை. லலிதா அவனுக்குப் பணிந்தே போனதினால். பிரச்சினை எழவில்லை, இப்போது புதிதாக எழுந்திருக்கும் எதிர்ப்பை. அவளது உடம்பைப் புண்ணாக்கியேனும் அடக்கியாக வேண்டும், மறுபடியும் தலை தூக்கும் தைரியமே வரக் கூடாது! 

மெனக்கெட்டு. வீடு வரை சென்று. அவன் வெளியூர் செல்ல நேர்ந்துவிட்டதாகவும். மனைவியின் செல் எடுக்காததால். அவள் வந்ததும் விவரம் சொல்லிவிடுமாறும். பக்கத்து வீட்டு அம்மாவிடம் சொல்லிவிட்டு. நண்பன் வீட்டுக்குப் போய்த் தங்கினான், 

எதற்கும் இருக்கட்டும் என்று. மேலும் இரண்டொரு மறை. வீட்டுக்கு ஃபோன் செய்தால். வெறுமனே. முழு நேர மணியும் அடித்து முடித்தது! 

அதாவது. அம்மையார். இரவு முழுதுமே. தாயார் வீட்டில் தங்கிவிட்டாள்! 

ஒரு குடும்பப் பெண். கணவனிடம் சொல்லாமல். வெளியே ராத் தங்கி இருக்கிறாள்! இதற்கு. அவளை என்ன செய்தாலும். அக்கம் பக்கம் யாரும் அவனைத் தப்புச் சொல்ல மாட்டார்கள்! விருப்பம் போல. அடித்து நொறுக்கலாம்! 

காலையில்.ஹோட்டலில் காஃபியைக் குடித்துவிட்டு வீடு வந்தால். லலிதா அப்போதுதான் பாலைக் காய்ச்சி. பிள்ளைகளுக்குக் கொடுத்துக் கொண்டிருந்தாள், 

வாயில் கதவை நன்கு திறந்து வைத்துக்கொண்டு. “அப்பாடி. நேற்றுப் போனவன் வேலை முடிந்து. இப்போதுதான் வருகிறேன், தெரு முனையில். எதிர் வீட்டுக்காரரைப் பார்த்தேன், இரவு முழுவதும். நம் வீடு பூட்டிக் கிடந்ததாமே!” எனறு வினவினான், 

மகள் வாயைத் துடைத்து விட்டபடி. “இருக்கும்,” என்றாள் லலிதா சாவதானமாக, “ஏன் அப்படி? ” என்று விசாரணை தொடர்ந்தது, 

“திறந்து போட்டுவிட்டு வெளியே போக முடியாதில்லையா?’ என்று. அவனது பாணியில். நக்கலாகப் பதிலுரைத்தபடி. காலித் தம்ளரோடு எழுந்தாள். அவள், 

“திமிராடீ? இரவு முழுதும் வெளியே தங்கிவிட்டுவந்திருக்கும் உன்னை…” என்று கையை ஓங்கிக்கொண்டு வந்தான் அவன், எச்சரிப்பது போலக் கையை உயர்த்தி. “அடிப்பீர்களா? அப்புறம் போலீசுக்குப் போய்விடுவேன். ஜாக்கிரதை!” என்றாள் மனைவி, 

போலீஸ்? இந்தக் கிணற்றுத் தவளை. அந்த அளவுக்குத் துணியுமா? 

சந்தேகமாகக் கணவன் பார்க்கும்போதே. லலிதா பேசினாள், “இந்தப் பக்கத்துப் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி, எனக்குத் தெரிந்தவள், ஏற்கனவே. உங்களைப் பற்றிச் சொல்லி வைத்திருக்கிறேன், ஒரு வார்த்தை சொன்னால், காவல் நிலையத்துக்குக் கூட்டிப் போய். முட்டிக்கு முட்டி தட்டி விடுவாள், செய்யட்டுமா?” 

அவன் விழிகளில் கொலைவெறி இருந்தபோதும். அசையப் பயந்து நின்றான், 

உள்ளூர கைவல்யாவுக்கும் சுதர்மனுக்கும் நன்றி தெரிவித்தபடி. “இன்னுமொன்று, ராத்திரி தூங்குகிறபோது. தலையணையை முகத்தில் வைத்து அழுத்திவிட்டால் முடிந்தது என்று, அசட்டுபிசட்டென்று இன்னும் ஏதாவது திட்டம் போடாதீர்கள், எனக்கு என்ன கெடுதல் நேர்ந்தாலும். அது உங்களால்தான் நேரும் என்றும். அவள் யோசனைப்படி எழுதியே கொடுத்திருக்கிறேன், கட்டம் போட்ட சட்டை வேண்டாம் என்றால். ஒழுங்காக நடந்து கொள்ளுங்கள்!” என்றாள் அவள் அதட்டலாக! 

அவளை அடித்துத் துன்புறுத்த நினைத்து. அவன் திட்டம் போட்டால். இப்போது அவள் அல்லவா மிரட்டுகிறாள்! 

இதை. இந்தத் திமிரை எப்படி அனுமதிப்பது? இவளை எப்படிப் பழைய மாதிரிப் பணிய வைப்பது? 

அடித்து நொறுக்கி. வலி வேதனையில் நடுங்க வைக்கலாம் என்று பார்த்தால். அது. அவனுக்கே தீம்பாக முடியும் போலத் தெரிகிறது! பின்னே? 

பகல் முழுதும் யோசித்தவனுக்குத் திடுமென ஓர் ஐடியா பிறந்தது! 

உடம்பில் அடிபட்டால்தானே. அவனுக்கு ஆபத்து? மனதைக் காயப்படுத்தினால்? 

சும்மாவே. லலிதாவுக்கு. ஏதோ சந்தேகம் இருக்கிறது, அதன் விளைவுதான். இந்தக் “கறுமுறு” எல்லாம்! மற்றபடி. சொல்பதை எல்லாம் கேட்டுக்கொண்டு. அவனது காலடியில் கிடந்தவளுக்கு. இப்படி எதிர்க்கும் தைரியம்வராது! வேறு பெண் தொடர்பு இருந்தாலும். இதிலேயே. புருஷன் அதை விட்டுவிட மாட்டானா என்கிற ஆசை! 

இதற்கு மேலும். அப்படியேதான் என்று உறுதியே செய்துவிட்டால். அந்த அடியில். அப்படியே சுருண்டுவிட மாட்டாளா? 

நிச்சயம்! நிச்சயம்! இந்த முசுட்டுத் தனத்தால் கணவனைக் கட்டுப்படுத்த முடியாது என்று காட்டிவிட்டால். அப்புறம். காலடியில் விழுந்துதானே. ஆக வேண்டும்? காலடியில் கிடந்து. கொஞ்சி. கெஞ்சி இரட்டை சுகம் அவனுக்கு! 

அன்றைக்கு இரவில். ஸ்டார்ஹோட்டலில் அறையெடுத்து. விக்கிரமன். நீதாவோடு தங்கினான் 

அவள்தான். எப்போது கூப்பிட்டாலும் வருவாளே! அவன், தன் உடல்நிலையை எண்ணி. ரொம்பவும் துள்ளாட்டம் போட. அவனுக்குத் தைரியம் இல்லாவிட்டாலும். லலிதாவைப் பழி வாங்கத்தானே. இந்த ஏற்பாடு? ஏதோ. சேர்ந்து தங்கினாலே. தங்கியதாகப் பேர் வந்தாலே போதுமானது! 

“சைடு எஃபெக்ட்” என்பார்களே. அது போல. இந்தப் பேர். நீதாவையும். அவனுடைய ஆளாக முத்திரை குத்திவிடும், அவளைப் பார்த்து ஜொள்ளு விடும். மற்ற சபலங்கள் தானாக விலகி ஓடும், 

இந்த. இன்னொரு லாபம் இருந்தாலும். முக்கியமாக நோக்கம். லலிதாவைப் பழி வாங்குவதுதான் என்பதை மறக்கக் கூடாது!, 

ஆனால். இதை மனைவிக்குத் தெரியப் படுத்தினால்தான். பழிவாங்குவது. முழுமையாகும், 

எனவே. இந்தஹோட்டல் இரட்டை அறையில். 

“ஃப்ரண்ட்”டுடன் இரவு தங்கப் போவதாக. மனைவியின் செல்லுக்குச் செய்தியும் அனுப்பி வைத்தான்! 

தனக்குரிய படுகுழியைத் தானே வெட்டிக் கொள்வதை அறியாமல்! 

செல் ஃபோனில் வந்த மெஸேஜ். லலிதாவைப் பாதிக்கவே இல்லை என்று சொல்ல முடியாது, பல முறை. அதை படித்துப் பார்த்துப் பார்த்து. மனம் நோகவும் செய்தாள், 

அப்படி நொந்தபோதுதான். அந்தச் செய்தியை விக்கிரமன் அவளுக்கு அனுப்பிய நோக்கம். லலிதாவுக்கு நன்றாகப் புரிந்தது, எவ்வளவு வக்கிரம். அவன் மனதில்! 

இதைப் படி[த்துப் படித்து மனதை வருத்திக் கொண்டு. தன் கொடிய கணவனுக்கு. இன்னமும் வெற்றியைத் தருகிறோமே என்று முதலில் வாடியவளுக்கு. அது அப்படியல்ல என்று. விரைவிலேயே புரிந்தது, 

முதல் தடவை படிக்கும்போது. கண்ணீரை அடக்குவதே கடினமாக இருந்த நிலை மாறி. அடுத்து. இதை எதற்காக அனுப்பினான் என்று யோசிக்கத் தோன்றியது, 

தப்பும் செய்துகொண்டு. அதை. அவளிடம் தம்பட்டமும் அடிப்பது. அவளை வருத்துவதற்றாக மட்டுமே! அப்படியானால். உள்ளூர அவன் எப்படிப்பட்ட அரக்கனாக இருக்க வேண்டும்? இந்த அரக்கனோடு. இத்தனை காலம் வாழ்ந்தோமே என்று வெறுப்பு வந்தது, 

வெறுப்பைத் தொடர்ந்து. இந்த அரக்கனைச் சும்மா விடுவதா என்று ஆத்திரம் பிறந்தது, 

வெறுமனே இவனைப் பிரிந்து போவது. பழி வாங்குவது ஆகாது, அந்த இன்னொருத்திக்குப் பட்டுப் பாய் விரித்து. வரவேற்புக் கொடுத்தது போல ஆகிவிடும், அது மட்டும். கூடவே கூடாது, 

அவளது உறவினரிடமிருந்து. அவளைப் பிரித்து. அவளது தன்னம்பிக்கையை அழித்து. ஒரு புழுவிலும் கேவலமாக வாழ வைத்தானே! 

கைவல்யா மட்டும் அவளுக்குத் தைரியமூட்டி. சுதர்மன் மூலம் இந்த வேலைக்கு ஏற்பாடு செய்ததோடு. பெற்றோரிடமும் சேர வைத்திராவிட்டால். அவளது நிலை என்ன? 

அந்த இன்னொருத்திக்கும் பொங்கிப் போட்டுக்கொண்டு. கண்ணீர் வடித்தபடி. அந்த அக்கிரம விக்கிரமனின் காலடியிலேயேதான். இன்னமும் கிடந்திருப்பாள்! 

இவை அனைத்துக்குமே பழி வாங்கியே தீர வேண்டும்! 

அடி மனதில் அதே சிந்தனையாக இருந்தவள். ஓய்வு நேரத்தில் கட்டாயமாகத் தன்னோடு தொடர்பு கொள்ளுமாறு. கைவல்யாவுக்குச் செய்தி அனுப்பினாள், 

ஓய்வு நேரத்தில் என்றால். பிறர் அறியாதிருக்க வேண்டும் என்று உணர்ந்து. தலைவலி என்று “சிக்” ரூமுக்குப் போவதாகப் போக்குக் காட்டி. கைவல்யா. லலிதாவிடம் பேசினாள், 

விஷயத்தைச் சொல்லிவிட்டு. “ஒழுக்க்கேடு நடந்தால், வேலை நீக்கம் என்று. சுதர்மன் சார் ஒரு தரம் சொன்னாரே, விக்கிரமனின் தப்பு நடவடிக்கைக்கு. இந்தச் செய்தி போதுமா. கைவல்யா?” என்று கேட்டு. கணவன் தனக்கு அனுப்பிய செய்தியை. மற்றவளின் செல்லுக்கு அனுப்பினாள், 

பிறகு. “இதிலும் குள்ளநரித்தனத்தைப் பார், “ஃப்ரண்ட்” என்று ஆங்கிலத்தில் இருக்கிறது, பெண்தான் என்று எப்படி நிரூபிப்பது?” என்று கவலையுடன் வினவினாள், 

“அது ….” என்று சற்று யோசித்துவிட்டு. “அக்கா நன்றாக யோசித்துச் சொல்லுங்கள். விக்கிரமன் சாருக்கு இதனால் வேலை போனால். அது பற்றி. உங்களுக்கு ஒன்றுமில்லையா? அவருக்கு. இது பெரிய இழப்பாகி விடக் கூடும், கஷ்டப்படுவார்…..” என்று இழுத்தாள் கைவல்யா, 

ஆனால். அவள் பேச்சை நிறுத்து முன்னரே. “படட்டும்!” என்றாள் லலிதா தெளிவாக, “நன்றாகப் படட்டும். கைவல்யா, பிச்சையெடுக்க நேர்ந்தாலும். அதுவும் கூட. அவருக்கு உரிய தண்டனையை விடக் குறைவானதுதான், எத்தனை பேரை நோகடித்திருக்கிறார்! அவரை நம்பி வந்த என்னை. என் மூலமாக என் பெற்றோரை. அவருக்கே பிறந்த பிள்ளைகளை! இன்னும். அலுவலகத்தில் கூட. எல்லோரையும். ஏதாவது வகையில் கஷ்டப்படுத்திக்கொண்டே இருப்பார் என்றாயே! அத்தனைக்கும் மனிதர் பட வேண்டாமா? சொல்லு!” என்று படபடத்தாள், 

“அதில்லை. லலிதாக்கா. என்று கைவல்யா தொடங்கவும். மறுபடியும் மற்றவள் இடைப் புகுந்தாள், 

“புரிகிறது, விக்கிக்காக வருந்துவேனோ என்று நினைக்கிறாயா? அவரிடம் வைத்த அன்பு. பாசம் எல்லாவற்றையும். அவரே முழுதாகத் துடைத்து எறிந்துவிட்டார். கைவல்யா, அவர் என்ன கஷ்டப் பட்டாலும். எனக்கு ஒன்றுமே தோன்றாது,” என்றாள் திடமாக! 

“சரிக்கா, இதற்கு மேல். சுதர்மன் சாரிடம் பொறுப்பை ஒப்படைத்து விடுவோம், விக்கிரமன் சார் செல்லக்கூடிய அந்தஹோட்டல் பற்றி. உங்களுக்கு ஏதாவது தெரியுமா?” என்று விசாரித்தாள் கைவல்யா, 

“உம், இவருடைய சினேகிதருக்குப் பங்கு இருக்கிறது என்று. அடிக்கடி அங்கேதான் போவார், கேள்வி கேட்க மாட்டார்கள் என்பார்!” என்று. அந்தஹோட்டல் பறாpத் தனக்குத் தெரிந்த விவரம் சொன்னாள் பெரியவள், 

“இது போதும்க்கா,” என்ற கைவல்யா. தன் சுமனைக் கூப்பிட்டு. இந்த விவரங்கள் அனைத்தையும் தெரிவித்தாள், 

அதற்கு மேல். சுதர்மன் வேகமாகச் செயல்பட்டான், “ஃப்ரண்ட்” என்றது போலவே.ஹோட்டலிலும். விக்கிரமன். தன் பெயரில் அறையைப் பதிவு பண்ணவில்லை, 

ஆனால்.ஓர் உயர் அதிகாரி மூலமாக.ஹோட்டலின் சிசி கேமிராப் பதிவை வாங்கிப் பார்த்தபோது. நிர்வாகி. அந்தப் பெண் நீதாவுடன் அறைக்குள் சென்று கதவைச் சாத்திக் கொள்வது. தெளிவாகப் பதிவாகியிருந்தது, 

அன்று விடிந்த நேரம். விக்கிரமனுக்கு நல்லதாக அமையவில்லை. 

வீட்டுக்கு வந்து. ஓரக் கண்ணால் மனைவியைப் பார்த்தால். அவள் சற்றும் சலனமில்லாத முகத்துடன் நடமாடிக் கொண்டிருந்தாள், 

தன் செய்தியை. மனைவி பார்க்கவில்லையோ என்று சந்தேகம் வந்தது, 

சே! சுத்த விரயம்! இவளை வாட்டவென்று. ஆயிரக் கணக்கில் செலவழித்து “ரூம்” போட்டு அவளோடும் முழுதாக அனுபவிக்க முடியாமல் சேசே! 

ஏதோ சந்தேகம் தோன்ற. லலிதா குளியலறையில் இருக்கும்போது. அவளது செல்லை எடுத்துப் பார்த்தான், 

முழுதாகப் பார்க்குமுன். அவனது மொபைலே ஒலியெழுப்பியது, மகன் வருவது போலத் தோன்றவும். லலிதாவினதைப் போட்டுவிட்டு. ஓடி வந்து சோஃபாவில் அமர்ந்து. தனதை எடுத்துப் பேசினான், 

நீதாதான், சந்தோஷமாகப் பேசத் தொடங்கினால். அவள் ‘குட்பை’ சொல்லக் கூப்பிட்டிருந்தாள்! 

ஐயோ. ஏன்? முந்திய நாள் வெறுக்கடித்துவிட்டதோ என்று கலங்கி. அவன் சமாதானம் சொல்லத் தொடங்கியபோது. “அப்படியல்ல,” என்றாள் அவள், 

முன்தினம் ஹோட்டலில். பழைய தொடர்பு ஒருவனைப் பார்த்தாளாம், அவன் இப்போது. சின்னத்திரைப்படம் எடுக்கிறானாம், அடுத்ததில். அவளைக் கதாநாயகி ஆக்குகிறானாம், பெரிய மெகா “சீரியலா”ம்! அதனால். அவனோடு போவதாக முடிவு செய்துவிட்டாளாம், இவனோடு எல்லாம் முடிந்ததாம்! 

ஐயோ. ஐயோ என்று மனம் அடித்துக்கொண்டபோதும், காட்டிக்கொள்ள முடியாத நிலை அவனுக்கு, 

ஒருவாறு சமாளித்து அலுவலகத்துக்குப் போனால். பாதி வேலையில். எம்டி கூப்பிட்டு அனுப்பினான், 

என்னவாக இருக்கும் என்று யோசித்தபடியே. கேபியை விட்டு வெளியே வந்தால். அவனைத் திரும்பிப்பார்த்த கைவல்யாவின் பார்வை. அவனை உறுத்தியது, 

சே! முட்டைக் கண்ணை வைத்துக்கொண்டு. முழித்து முழித்துப் பார்த்துக்கொண்டு! இதுகளுக்கெல்லாம் வேலை ஒரு கேடா? இதற்கு. கேடா?இதற்கு. இன்று ஏதாவது டார்ச்சர் கொடுக்க வேண்டும் என்று திட்டமிட்டபடியே போனால். அவனுக்கே வேலை இல்லை என்றான் எம்டி! 

ஹோட்டல் வீடியோவில் எடுத்ததைக் காட்டி. வேலை நீக்கம் என்று சொன்னபோது, விக்கிரமனால். பதிலே சொல்ல முடியவில்லை, 

“இரண்டு மாத நோட்டீஸ் அல்லது. அதற்குரிய சம்பளம் என்பது ஒப்பந்தம், நீங்கள் ஏதோ முன் பணம் வேறு வாங்கியிருக்கிறீர்கள், அது போகக் கணக்குத் தீர்த்து வாங்கிக்கொண்டு போங்கள், நீங்களாக ராஜீனாமா செய்கிறீர்களா? அல்லது வேலை நீக்க உத்திரவை அனுப்பட்டுமா?” என்று. இளக்கமற்ற குரலில் சுதர்மன் கேட்டபோது. குனிந்த தலையோடு. ராஜீனாமாக் கடிதத்தில் கையெழுத்தைப் போட்டுவிட்டு வெளியேறினான், 

கொழுத்த சம்பளத்தை நம்பி. நீதாவுக்காக. நிறையப் பணம் “அட்வான்ஸ்” வாங்கியிருந்தான், இப்போது. அதுவுமில்லை, இதுவுமில்லை. என்று ஆகிவிட்டது,! 

கடன் பிடித்தம் போக. சில ஆயிரங்கள் மட்டுமே. கைக்கு வரக் கூடும்! அதை வைத்து என்ன செய்வது? 

இந்த விவரம் வெளியே பரவும்போது. இது போல வேறு வேலை கிடைப்பதும் அரிது, இனி என்ன செய்யப் போகிறான்? 

அந்த நீதாவைச் சந்தித்த நாள்தான். அவனைப் பீடை பிடிக்கத் தொடங்கிய தினமோ? 

ஏதேதோ எண்ணி வருந்தியபடியே. அவனது வேலைப் பகுதிக்குள் வந்தால். யாரோ டக்கென்று தலையைத் திருப்பிக் கொள்வது. விக்கிரமனின் பார்வை வட்டத்தில் பட்டது, 

வேறு யாருமில்லை, அந்த முட்டைக் கண் கைவல்யாதான், கைவலி. கால்வலி. தலைவலி 

சட்டெனக் கால் தடுமாறியது. அவனுக்கு, ஏதோ. இதில் ஏ …தோ இருக்கிறது! 

அத்தியாயம்-12 

இந்த வேலை நீக்கம் பற்றிய விவரம். கைவல்யாவுக்கு. முன்பே தெரியுமோ என்று எழுந்த சந்தேகம். வினாடிக்கு வினாடி. விக்கிரமனுக்கு வலுத்துக்கொண்டே போனது, 

அவளுக்கு. அந்தப் பெண்ணுக்கு. ஏதோ தெரிந்திருக்கிறது! மற்றபடி. அழைப்பு வந்து அவன் செல்லும்போதும். தளர்ந்து வரும்போதும். அவள் ஏன். அப்படிப் பார்க்க வேண்டும்? 

மற்ற ஒரு சிலரும் பார்த்தார்கள்தான், ஆனால். அது. ஒருவன் போகிறான். வருகிறான் என்பது போல வெறும் பார்வை, இவளது. வேறுமாதிரி! 

என்ன அது? 

மனைவியின் செல்ஃபோனில் பார்த்த எண்கள் ஏதோ ஜாலம் காட்டின, 

கேபினுக்குள் சென்று. அலுவலக டயரியை எடுத்துப் பார்த்தான், இதே எண்கள்தான்! 

சட்டென. விஷயம் விளங்கிப் போயிற்று, 

மற்றபடி. அவன் நீதாவோடுஹோட்டலுக்குப் போன விஷயம். சுதர்மனுக்கு எப்படித் தெரியும்? 

லலிதா, இவளுக்குத் தெரிவிக்க, கைவல்யா. எம்டியிடம் வத்தி வைத்திருக்கிறாள்! 

இன்னும் யோசித்தால். முன்னே சுதர்மனிடம் வெளிப்படையாக வாங்கிக் கட்டிக்கொண்ட இரண்டு முறையுமே. தனக்கு குளூகோஸ் கலந்து தந்தது. அவள்தான் என்பதும். இவள் ராசியே சரியில்லை, அதனால் இனி இந்தக் கைவலியிடம் குளூகோஸ் கலக்கச் சொல்லக் கூடாது என்று நினைத்தது கூட, விக்கிரமனுக்கு அப்போது ஞாபகம் வந்தது, 

பிரச்சினையை உருவாக்கியவளே, இவள்தான் என்று இப்போதல்லவா. புரிகிறது! 

பாதகி! ஏன் இப்படிச் செய்தாள் என்று யோசிக்கும்போதே. அவனுக்கு. அதன் காரணமும் புரிந்துபோயிற்று, 

ஏற்கனவே. இந்தத் தலைவலி. லலிதாவுக்குத் தெரிந்தவளாக இருக்க வேண்டும், 

அவளை விக்கிரமன் நடத்தும் முறையினால். ஆத்திரமும் இருந்திருக்க வேண்டும், இப்போது. கைவலி. கால்வலி என்று விக்கிரமன் கிண்டல் செய்யவும். இவளுக்குப் பழிவெறி உண்டாகிவிட்டது! சமயம் பார்த்து. ஏதேதோ திரிசமன் செய்து பழி வாங்கிவிட்டாள்! 

பாவி! பாதகி! பேரை வைத்துக் கிண்டல் செய்ததற்காக. இப்படி ஒருவனின் எதிர்காலத்தையேவா அழிப்பாள்? இந்த மாதிரிக் கிண்டல் செய்யக் கூடியதான பெயரை வைத்தவர்களிடம் ஆத்திரத்தைக் காட்ட வேண்டும்! 

அதை விட்டு. கஷ்டப்பட்டு உழைத்து. ஒரு நிலைக்கு உயர்ந்ததை. அடியோடு நாசமாக்கிவிட்டாளே! இதற்குத் தண்டனை யார் கொடுப்பது என்று கொதித்தான் அவன்! 

கட்டாயமாய்க் கைவல்யாவுக்குத் தண்டனை கொடுத்தே ஆக வேண்டும் என்று வேலை போன வருத்தமும். அதன் காரணமாக இருந்ததால் அவளிடம் கோபமுமாக. விக்கரமன் எரிமலையாகக் குமுறிக்கொண்டு இருந்தபோது. கண்ணாடிக் கதவுக்கு வெளிப்புறம் அசைவு தெரிந்தது, 

என்ன வந்தது எல்லோருக்கும் என்று பார்த்தால். உணவு இடைவேளை நேரம்! 

தண்டனை! பழிவெறி கொண்ட மனது. அவசரமாகத் திட்டம் போட்டது, 

பெரும்பாலும். உணவு இடைவேளையின்போது. கைவல்யா தாமதமாகத்தான் கான்டீனுக்குப் போவாள், மற்றவர்கள் பீட்சா. பர்கர் என்று முழுங்கும்போது. இவள். தான் கொண்டுவந்ததை மட்டும் உண்டுவிட்டு வந்துவிடுவாள், முன்னராகப் போனால். பகிர்ந்து உண்ணும் பழக்கத்தில். இவள் தட்டிலும். எண்ணை கொழுப்பு என்று ஏதாவது விழுந்துவிடும், மறுக்க மாட்டாமல் உண்ண நேர்ந்துவிடும் என்பது காரணம் என்று மற்றவர்கள் அவளைக் கேலி செய்ததை. ஒரு தரம் ஒட்டுக் கேட்டிருந்தான், 

அத்தோடு. தோழியிடம் விவரம் சொல்லவும் துடிப்பாக இருக்குமே! மற்றவர்களுக்குத் தெரியாமல் பேசுவதற்கு. உகந்த சமயம்! 

இதுதான். அவளுக்குப் பாடம் கற்பிக்கச் சரியான நேரம்! 

ஒருவேளை. அவன் இருக்கும் இடத்தில் இருக்க. அவளது குற்றமுள்ள நெஞ்சு இடம் கொடாதோ என்று தோன்றவும். தானும் எழுந்து வெளியே செல்வது போலப் போக்குக் காட்டித் திரும்பி வந்தான், 

அவன் எதிர்பார்த்தது போலவே. கைவல்யாவும். செல்ஃபோனில்தான் இருந்தாள், 

எதிர்பாராத வண்ணம். நிர்வாகியின் கடும் குரல். “என்ன? தோழிக்கு விவரம் தெரிவித்தாகிறதோ?” என்று கேட்கவும். கைவல்யா திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தாள், 

விக்கிரமனின் சீறிச் சிவந்த முகம் அச்சமூட்டத் தானாகப் பின்னடைந்தாள் அவள், 

வேகமாக அவளை அணுகி. அவள் கையிலிருந்த சைல்லைப் பிடுங்கிப் பார்த்தவனின் முகம். ஆத்திரத்தில் இன்னமும் கோரமாயிற்று! 

பலம் கொண்ட மட்டும் அதைத் தரையில் வீசி அடித்தவன். கைவல்யாவிடம் சீறினான், “என்னடி. வெற்றி முழக்கம் செய்தாகிறதோ? பத்து ஆண்டுகளுக்கும் மேலாக ஒருவன் உழைத்து முன்னுக்கு வருவான், அவனைத் தலை குப்புறத் தள்ளிவிட்டு. அதைப் பற்றிக் கொக்கரிக்க வேறு செய்வாயா? உன்னைக் கொன்றாலும். என் ஆத்திரம் தீராதுடீ! … ஓ! ஆமாம், உனக்கு உரிய தண்டனை சாவுதான், உன்னைக் கொன்று என் பழியைத் தீர்த்துக்கொள்ளப் போகிறேன்!” என்று. கொலை வெறியுடன். அவளைப் பிடிக்க முயன்றான், 

தன்னை மறந்த கோபம்! சுற்றுப்புறம்.சூழல் எண்ணாத சீற்றம்! உணர்ச்சி வேகத்தில். அவளைக் கொன்றாலும். ஆச்சரியப் படுவதற்கில்லை. 

வெறி கொண்ட இந்த மனிதனிடம் இருந்து. அவள் தப்பியாக வேண்டுமே! 

ஆனால். நெருக்கமாகக் கிடந்த கம்ப்யூட்டர் மேஜைகளும். வசதியான பெரிய இருக்கைகளுமாக அடைத்துக் கிடந்த இடத்தில். எவ்வளவு ஓடிவிட முடியும்? 

ஓட முடியாமல் தடுத்து. கழுத்தைப் பற்ற முயன்ற விக்கிரமனின் கைகளைத் தடுக்க முயன்றபடி. “ததப்புச் செய்கிறீர்கள். சார், என்னைக் …கொன்றுவிட்டு. நீங்கள் மட்டும் இங்கிருந்து தப்ப முடியுமா? மாமாட்டிக் கொள்வீர்கள், வேண்டாம்,” என்று எச்சரித்துப் பார்த்தாள், 

ஆனால். எதையும் காது கொடுத்துக் கேட்கும் நிலையில். விக்கிரமன் இல்லை, 

அவளைக் கொல்வது ஒன்றே குறியாகக் கைவல்யாவின் கழுத்தைப் பற்றி. இறுக்கத் தொடங்கியவனின் கை. சட்டெனத் தளர்ந்தது, 

விக்கிரமனின் தலையில் ஓங்கி ஒரு தரம் குத்திவிட்டு. அவனது இரு கைகளையும் பற்றிப் பின்புறமாக இழுத்து. கைவல்யாவிடம் இருந்து விலக்கி நிறுத்தியவன். சுதர்மன்! 

இருமிச் செறுமி. தொண்டை அடைப்பைச் சரி செய்து கொண்டிருந்தவளிடம் ஒரு பார்வையைச் செலுத்திவிட்டு. “பின் விளைவைக் கூட யோசியாமல். இது என்ன பைத்தியக்காரத்தனம். விக்கிரமன்? இவ்வளவு சீக்கிரமாக. இந்த விஷயத்தில் கைவல்யாவின் தொடர்பைக் கண்டுவிட்ட நீங்கள் எவ்வளவு புத்தசாலியாக இருக்க வேண்டும்? ஆனால். அதை நல்லபடியாகச் செலவழிக்காமல். தப்புக்கு மேல் தப்பை அல்லவா. செய்கிறீர்கள்? 

“இந்த நிலைமை வருவதற்கான உங்கள் பிழைகளைப் பற்றி யோசிக்க வேண்டாமா? இன்னும் செய்த தப்புகள் குறித்து வருத்தமே இல்லையா? காட்டிக் கொடுத்ததாகக் கோபப்படுகிறீர்கள்? நீங்கள் தப்பு செய்யாவிட்டால். யாரால். என்னவென்று காட்டிக் கொடுக்க முடியும்?” என்று அழுத்தமான குரலில் சுதர்மன் கேட்க. பதில் சொல்ல முடியாமல் தலை குனிந்து நின்றான் மற்றவன், 

“போங்கள்,போங்கள் சார், செய்த தப்புகளை எண்ணிப் பாருங்கள், இன்னும் கீழே கீழே போகாமல். திருந்தி வாழ முயற்சி செய்யுங்கள், அடியில் இருந்து தொடங்க நேர்ந்தாலும். நீங்கள் வளரவே. அதுதான் நல்லது!” 

குனிந்த தலையுடன் விக்கிரமன் வெளியேற. சுதர்மன் கைவல்யாவிடம் திரும்பினான், 

“உனக்கு அறிவு வேண்டாம்? மடத்தனமாய் இப்படி மாட்டிக் கொண்டாயே! “பாதிப் பேச்சில். விக்கிரமன் குரல் கேட்டது, அதன் பிறகு தொடர்பில்லை” என்று லலிதா சிஸ்டர் என்னைக் கூப்பிட்டுச் சொல்லாதிருந்தால் உன் கதி என்ன? ” என்று சீறினான், 

தன்னிடம் அவனது சீற்றத்தை முதல் முறையாகக் கண்டவளுக்குப் பேச்சு சரியாக வர மறுத்தது, “வந்து எஎதிர்பார்க்கவில்வை!” என்றாள் தடுமாற்றமாக, 

“ஏன் எதிர்பார்க்கவில்லை? இவ்வளவு செய்யும்போது. அவர் அடிபட்ட பாம்பு, கண்டுகொண்டால். பழி வாங்கத் தோன்றும் என்று தெரியாதா?” என்று அவன் சிடுசிடுக்கும்போதே. உணவு முடிந்து. சளசளத்தபடி மற்றவர்கள் வரும் அரவம் கேட்டது, குரலைத் தணித்து. “மாலையில் வேலை முடிந்ததும் என்னை வந்து பார்! இருவருமாக ஓர் இடம் போக வேண்டும், தாமதம் ஆகும் என்று வீட்டில் சொல்லி விடு,” என்றவன் வேகமாக அங்கிருந்து சென்றுவிட்டான், 

“ஏய். எம்டி! எப்போது வந்தார்? என்ன பேசினார்?” என்று கேள்வி மழை பொழிய. “முக்கியமாக ஓர் அறிவிப்பாம், சொல்ல வந்தாராம், யாரும் இல்லை என்றதும். திரும்பிப் போகிறார்,” என்று சமாளித்தாள் கைவல்யா, 

ஆனால். உள்ளே மனசு வேறு கேள்வி கேட்டது, 

கோபப் பட்டானே! அந்தக் கோபம். அவளுக்காக மட்டுமா? அல்லது. யாரானாலும் இதே கோபம் வருமா? 

அப்புறம் … ஊகூம் யோசிக்கக் கூடாது, 

கண் மண் தெரியாத கோபத்தில் கைவல்யாவைக் கொலை செய்ய முயன்ற விக்கிரமனுக்குச் செய்ய இருந்த குற்றத்தை எண்ணி உடல் விதிர்விதிர்த்தது, 

கொலை! ஓர் உயிரை எடுப்பது, மாட்டிக்கொண்டால் … இந்த மாதிரி இடத்தில். மாட்டிக்கொள்ளாமல் தப்பவும் முடியாது எனும்போது. அவனது உயிரையும் எடுப்பது! 

நல்லவேளை! அவனைப் போலீசில் ஒப்படைக்காமல். குறைந்த பட்சமாய் செக்யூரிடி ஆட்களிடம் கூட ஒப்படைக்காமல். திருந்தி வாழச் சொல்லி அனுப்பி வைத்தாரே! பதவிக்கு ஏற்ற பெரும் குணம்! 

திருந்தி வாழ்வது! 

தப்புக்கு மேல் தப்பு! முதல் தப்பை எங்கே தொடங்கினான்? 

ஆனால். அவன் திருந்தி விட்டதை. லலிதா ஒத்துக் கொள்வதாக இல்லை, 

“சொல்லுங்கள், இதே தப்பை நான் செய்திருந்தால். உங்களால் மன்னிக்க முடியுமா? உறவு. நட்பு எல்லோரையும் விட்டு. நீங்களே கதி என்று வந்ததற்கு…இனி உங்களை எப்படி நம்புவேன்? யோசியுங்கள், உங்களுக்கு உரிய தண்டனை என்ன ? என்ன செய்யலாம்? உங்களுக்கு ஒரு பெண் போதவில்லை, இன்னொருத்தியிடம் போனீர்கள், ஒருவரும் இல்லாமல். தனியாகச் சிலகாலம் இருங்கள், அதைக் கொண்டு முடிவு செய்யலாம்,” என்றபோது. அவன். அதை. மனமாரவெ ஏற்றுக் கொண்டான், 

மாலை வரை. கைவல்யாவின் மனதைக் குடைந்த கேள்விகளுக்கு. விரைவிலேயே விடை கிடைத்தது, 

கார் கிளம்பினதுமே. சுதர்மனும் தொடங்கி விட்டான், “சொல்லு. உனக்கு ஏதேனும் ஆகியிருந்தால். அப்புறம் என் கதி என்ன? வாழ்க்கை முழுவதும் தனியாளாகத்தானே இருக்க நேர்ந்திருக்கும்? ” 

தாகத்தால் தவித்திருக்கும்போது, தேன் போன்ற தண்ணீரில் முக்குளிக்கும் உணர்வு அவளுக்கு, மிஞ்சிய மகிழ்ச்சியில் வார்த்தை வர மறுக்க. “இது … இது காதல் அறிவிப்பா. சார்?” என்று தடுமாற்றத்துடன் கேட்டாள் அவள், 

சுதர்மனுக்குச் சிரிப்பு வந்தது, 

காரை ஓரமாக நிறுத்திவிட்டு. “நீ ரொம்பப் புத்திசாலி என்று எண்ணினேனே! இன்னும் புரியவில்லை என்றால் … இது புரிகிறதா. பார்!” என்று அருகிழுத்து அணைத்து முத்தமிட்டான், 

பிறகு, அதிகாரமாகக் கேட்டான், “இப்போது சொல்லு, நான் யார்? சா …ரா? அல்லது…?”

மையலாக நோக்கி. “சுமன்,” என்று கிளியாய் மிழற்றினாள் கைவல்யா, 

உடனேயே மாறின அவனது பார்வையில் முகம் சிவந்து. “எ எங்கோ போக வேண்டும் என்றீர்களே, எங்கே செல்லப் போகிறோம்?” என்று கொஞ்சலாகக் கேட்டாள், “என் வீட்டுக்கு,” என்று அவன் கூறவும் மிரண்டு. “ஹா. என் உடை …என் முகம் …” என்று பரபரத்தாள் கைவல்யா, 

“எல்லாம் எப்போதும் போலப் பிரமாதமாகத்தான் இருக்கிறது, வீட்டுக்கு. என் மந்தாகினி அத்தை வந்திருக்கிறார்கள், சும்மாச் சும்மா நாலைந்து பெண்களின் படங்களை எடுத்து வந்து. கல்யாணம் பண்ணிக்கொள் என்று. என்னை வதைக்கிறவர்கள், ஆண்டுக் கணக்காக! போன தடவை. அலுத்துப் போய். எந்தச் சிறப்புமே இல்லாத ஒருத்தியிடம் தலை சுற்றி விழப் போவதாகஜோதிடம் சொல்லிப் போனார்கள், முதல் பார்வையிலேயே தலை சுற்றிப் போனது உண்மை என்றாலும். என் நாயகி எவ்வளவு சிறந்தவள் என்பதை. அவர்களுக்குக் காட்டவேண்டும் என்றுதான் அழைத்துப் போகிறேன்!” என்றவன். திடுமென அவளிடம் ஒரு சந்தேகம் கேட்டான், 

“உன் பெற்றோர். என்னை மருமகனாக ஏற்றுக் கொள்வார்கள்தானே. கைவல்யா?” 

அவனது குரலில். மெய்யாகவே கவலை தொனிக்கவும். கைவல்யாவுக்குச் சிரிப்பு வந்தது, இவனை. வேண்டாம் என்று யாரால் மறுக்க முடியும்? அப்படி மறுத்தால். அவள்தான் விட்டுவிடுவாளா? 

லேசாக எம்பி. “என் சுமன்!” என்று அவனது காதோரம் கிசுகிசுத்தாள் கைவல்யா!

(முற்றும்)

– கண்ணெதிரே தோன்றினாள் (நாவல்), முதற் பதிப்பு: 2013, அருணோதயம் பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *