ஒரு முத்தம் வேணும்

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: March 20, 2018
பார்வையிட்டோர்: 21,465 
 
 

கல்யாண அவசரத்தில் அந்த மண்டபம் உழன்றுக்கொண்டிருக்க மாப்பிள்ளை உதய் மட்டும் வடக்கு கிழக்காக நடந்து புழம்பிக்கொண்டிருந்தான்;. “எல்லோரும் கல்யாணம் பண்றதுக்கு முன்னாடி லவ் ங்கற பேருல என்னன்னமோ பண்றாங்க நம்ம சைட் மட்டும்தா அடிச்சுருக்கும் இவனுக வேற உசுப்பேத்திட்டு போறாங்க ஆ..அ……. எனக்கு ஒரு முத்தம் வேணும்”
உதய்க்கு வயது 28 அவனது நண்பர்களிலே அவனுக்குதான் கடைசி கல்யாணம் .நாளை திருமணம் அரேஞ்ச் மேரேஜ்தா பெண் பெயர் உமா.

நேற்று பேச்சுலர் பார்ட்டியில்: உதய் ப்ரெண்ட்ஸ் தங்களது பழைய நினைவுகள் பகிர்ந்து கொண்டிருந்தனர்;

நட்பு1: மச்சா நம்ம செட்டுலயே கடைசி கல்யாணம் மாப்பிள்ளைக்குதா சிறப்பா கொண்டாடுறோம்(குடிபோதையில்)

நட்பு2: உதய் நாளான்னைக்கு நைட்டுதா நீ ஆக்டீவ்வா இருக்கனும்.எதாவது டவுட்டு இருந்தா நம்ம மன்மதன் கிட்ட கேளு அனுபவசாலி…..(சிரிப்புடன்)

நட்பு3: மச்சா நீ எத்தன பேர லவ் பண்ணுவ.வானத்தில இருக்கற நட்சத்திரத்த கூட எண்ணிரலாம் ஆனா இவன் லவ் பண்ண பொண்ண மட்டும் எண்ண முடியாது.மச்சா நீ பர்ஸ்ட்டா யார லவ் பண்ண?

நட்பு4(அந்த மன்மதன்):10த் ல வானதி.அவளுக்குதா நா பர்ஸ்ட் கிஸ் பண்ண?

நட்பு1:எங்க? (வழிந்துக்கொண்டே)

நட்பு4:(அவனை தட்டிவிட்டு) கைல

நட்பு5:ஏ என் பர்ஸ்ட் கிஸ் கன்னத்துல

நட்பு1:வாய் இல்லாம எப்படி மாப்பி கொடுத்த

நட்பு6:என் பர்ஸ்ட் கிஸ்………

நட்பு7:என் பர்ஸ்ட் கிஸ்………

நட்பு8:என் பர்ஸ்ட் கிஸ்………

நட்பு9:என் பர்ஸ்ட் கிஸ்………

………………………………
……………………………….
…………………………………..

நட்பு21:என் பர்ஸ்ட் கிஸ்………

நட்பு22:பாவம் உதய்க்கு பர்ஸ்ட் கிஸ் கல்யாணத்துக்கு அப்புறம்தா

அப்போது இருந்து உதய் உழன்றுக் கொண்டிருந்தான்.உமாவிடம் அவன் பேசவே தயங்க எப்படி முத்தம்.சிறுபிள்ளை தனமாக கண்ணை சுருக்கி சிணுங்கிகொண்டிருந்தான் கண்ணீர் மட்டும்தான் வரவில்லை.எப்படியாவது கிஸ் ஒரே ஒரு முத்தம் வாங்கிவிடவேண்டும் என அனலிடப்பட்ட புழுவை போல் துடித்தான்.டே உதய் உயிர் போர விசயம் எப்படியாவது யோசி யோசி என மனதிற்குள் புலம்பிக்கொண்டிருந்தான்.அவன் புலம்பலே அவனை மணப்பெண் அறைக்கு கொண்டு சென்றது.

கதவை தட்டினான் ஒருத்தி திறந்தாள் “உமா….. உன்னபாக்க யாரோ வந்திருக்காங்க….”என்று உதய்; பார்த்து புன்முறுவல் பூத்தாள். “எவடி அவ இந்நேரத்துல” என்று கூறி வெளியே வந்தாள் உமா உதயை பார்த்து ஆச்சரியப்பட்டாள்.

“தனியா பேசனும்” என்றான் உதய்.

“ஏ………” என கதவருகே இருந்த அவள் தோழி சிலாகிக்க

“ச்சீ சும்மா இரு டி”என்று அதட்டினாள் உமா.

மாடத்தில்

உமா: “என்ன இந்த நேரத்தில”

உதய்:“அஅ……. அது…அது பார்ட்டில…ப்ரெண்ட்ஸ்சு உமா”

உமா: “ஏ பதறுற உதய் டீப் ப்ரீத்”

உதய் முச்சை இழுத்து வெளியே விட்டான்.

உமா: இப்ப சொல்லு

உதய்:ப்ளீஸ் நான் ஒன்னு கேட்பேன் நீங்க தரனும்

உமா:என்ன (என பார்த்து புன்னகைத்தாள்)

“இல்ல பார்ட்டில” என கூறி முழு கதையையும் சொல்லி தீர்த்தான்

உமா:சரி அதுக்கு

உதய்:அதுக்கா எனக்கு முத்…. முத்தம் வேணும்

உமா: ஏ என கூறி ஒருவாறு பார்த்தாள்.

உதய்: கல்யாணத்துக்கு முன்னாடி உலகத்துல எல்லாரும் கொடுத்துருக்காங்க என்ன தவிர

உமா: நா

உதய்:அதா சொல்ற நமக்கு இதுதான பர்ஸ்ட் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ்

உமா சிரித்துவிட்டு “சரி ஒகே ஆனா கைல மட்டும்தா”

“அது போதும்” என்றான் உமா கையை நீட்ட அவள் கையை ஒரு கரத்தால் பிடித்தான் தனது இதழை கரத்தருகே கொண்டு சென்றான் இதயம் பட் பட் என துடித்தது.முதல் முறையாக பெண்ணின் கையை தொட்டதால் உடல் சிலிர்த்தது அவன் உடல் குளிர்ச்சியானது.ஒருத்தி உமா அம்மா கூப்டறாங்க என ஒடி வர உமா கையை உதறி விட்டாள். தோல்வியில் முடிந்தது.

உதய் அழுதுபுலம்பிக்கொண்டிருந்தான் கிடைச்ச சான்ஸ மிஸ் பண்ணிட்டோமே என்று போச்சு போச்சு லைப்ப புல்பில் பண்ண தவறிட்டேயே உதய் என மனதில் புலம்பிக்கொண்டிருந்தான்.உனக்கெல்லா ஆத்மா சாந்தியே அடையாதுடா என கண்ணாடியை பார்த்து தன்னைதானே திட்டினான்.இன்னும் 2 மணி நேரத்தில் கல்யாணம் என்ன பண்ண என்று யோசித்தான். யோசனை தோன்றியது.

போனை எடுத்தான் உமாவிற்கு கால் செய்தான் “ப்ளீஸ் ப்ளீஸ் ஏ எதுக்குன்னு கேட்காதீங்க நா செத்ததுக்கு அப்பறோம் ஏன் ஆத்மா சாந்தி அடையனுன்னு நினைச்சா உடனே வாங்க ஸ்டோர் ரூம்க்கு” மேக்கப் போட்டு கொண்டிருந்த உமா புhதி மேக்கப் உடன் ப்ரெண்ட்ஸிடம் பொய் சொல்லி வந்தாள்.ஸ்டோர் ரூம் கதவை திறந்தவுடன் சடாரென உதய் உமா காலில் விழுந்து அழுதான் “எனக்கு ஒரு முத்தம் வேணும்” என்றான். “ஒகே உதய் நா கண்டிப்பா தரேன் முதல எழுந்திரு” என்றாள்.உதய் கன்னத்தில் உமா முத்தமிட நெருங்க சடாரென கதவு திறந்தது உமாவின் அப்பா அவரை பார்த்தவுடன் நா ரெடியாகுற என்று ஒடிவிட்டாள்.மறுபடியும் தோல்வி.

கல்யாண மேடையில் கண்கள் சிவந்தபடி அமர்ந்திருந்தான் உதய். பெண்ணை அழைத்து வர சொன்னார்கள்.

நாமலும் சின்ன வயசுலயே எல்லாத்த மாறி இருந்துருக்கலாம் முன்னாடியே கேர்ள்ஸ் கூட நல்லா பேசியிருந்தருக்கலாம்

பாடுபாவி பயலுக இவங்க பேச ஆரம்பிக்கலனா அமைதியா கல்யாணம் பண்ணிருக்கலாம்.உசுப்பேத்தி வேற உட்டுடானுகலே சாபம் விடுற அவனுங்க பொண்டாட்டி தின்னு தின்னு குண்டாயிருவாங்க.எதுவும் கிடைக்கல இதையும் அப்படியே நினைச்சுக்கலாம்.என்று உள்ளுக்குள் உதய் புலம்பிக்கொண்டிருந்தான் அப்போது ஒரு சிறுமி மணமேடையில் இருந்த
உதய்க்கு கன்னத்தில் முத்தம் தந்தாள் உமாவை காட்டி அந்த அக்கா கொடுக்க சொன்னாங்க என்றாள்.மணப்பெண் அலங்காரத்துடன் தேவதை போல் புன்னகையோடு அருகில் அமர்ந்தாள்.

மனதிருப்தியுடன் மண முடித்தான் மணமகட்கோலம் தரித்திருந்த உமா எனும் மங்கையை.

Print Friendly, PDF & Email

1 thought on “ஒரு முத்தம் வேணும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *