எது காதல்?

 

ஏய்…. வாடி வாடி க்யூட் பொண்டாட்டி
நான் தாங்க மாட்டேன் தூங்க மாட்டேன் நீ இல்லாட்டி
அடி….வாடி வாடி வாடி வாடி ஹாட் பொண்டாட்டி எனும் சினிமா பாடல் ஒடிக் கொண்டிருந்தது அந்த பாடலை வாயசைத்தபடியே கார்ரை ஒட்டி வந்தான் மகேஷ்

கொஞ்சம் இந்த பாட்டோட வாலியூமா கம்மி பண்ணு இல்ல ஆஃப் பண்ணு என்ன ரொம்ப எரிச்சலாக்கற மகேஷ்

உஷ்ப்பா….!! இந்த பாட்டு என்ன எவ்வளவு சூப்பரா பொண்டாட்டிய பத்தி பாடியிருக்கான் அதை போய் நிறுத்த சொல்ற முடியட்டும் ஆஃப் பண்றேன். உன்னால கேட்க முடியலனா காத பொத்திக்க டி

ஒ அப்படியா டம் டம்மாளுன்னு ஒரு சத்தம்

ஏய் ரம்யா இப்போ எதுக்கு கார் கதவ இப்படி தட்டினே வர

ம்ம்ம்!! அது என்னோட இஷ்டம் என் கை நான் அப்படி தான் தட்டினு வருவேன் உனக்கு கேட்க விருப்பமில்லைனா காத நல்லா முடிக்க

ஒ மேடம் ஏட்டிக்கு போட்டியா வருரீங்களா சரி

ஆமா இவரு ஆஸ்கர் விளையாட்டுக்கு போறாரு நானும் இவருக்கு போட்டிய வரேன் வாய மூடிட்டு கார்ர ஒட்டுய்யா

ரம்யா தேவையில்லாம பேசுற! இதோட பேசாத அவ்வளவுதான் சொல்லிட்டேன்

நான் என்னடா தேவையில்லாம பேசுறேன் ? நீ முதல்ல கார்ர நிறுத்து

ஏன் கார்ர நிறுத்த சொல்ற? என்னால நிறுத்த முடியாது டி இது என்னோட கார் ஒ.கே உன்னோட இஷ்டத்துக்கு நிறுத்த முடியாது!

அய்யோ என்னமோ நீயே சொந்தமா வாங்கினா மாதிரி பேசாத இந்த கார் வாங்க நானும் ரெண்டு லஞ்சம் கொடுத்திருக்கேன் சோ எனக்கும் இந்த கார்ல ஈக்கவல் ஷேர் இருக்கு தம்பி!

என்ன நீ ரொம்ப கடுப்பேத்துற டி! ரெண்டு லட்சம் கொடுத்துட்டா நீ சொல்ற இடத்துளலாம் நிறுத்த நான் ஒன்னும் உன் ட்ரைவர் இல்லை அதை தெரிஞ்சிக்கோ!

ஒ அப்படியா நீ என்னோட காச திருப்பித் தர வரைக்கும் எனக்கான கார் ட்ரைவர் தான் நீ

ஏய் என்னடி விட்டா ரொம்ப பேசிட்டே போற!! என்ன செஞ்சத சொல்லிக் காட்றீயா?

அப்போ ஏன் கார்ர நிறுத்துனு நான் சொன்னாலும் நிறுத்த மாட்ற ?

ஆமா நான் வண்டிய நிறுத்த மாட்டேன் தான். என்ன பிரச்சனை உனக்கு? இந்த பாட்டு தானே நிறுத்தனும் இதோ ஆஃப் பண்ணிட்டேன் நாளைக்கு முதல் வேளையா இந்த கார்ல இருந்து டேக்க எடுத்துறேன் டி..!
கார்ல பாட்டும் வேணாம் ஒன்னும் வேணாம் எதுக்கெடுத்தாலும் சண்டைக்கு வரதே வேலையா வச்சிட்டியிருக்க டி.

இல்ல நான்தெரியாம தான் கேட்கிறேன் உனக்கு அப்படி என்னதான் பிரச்சனை சொல்லு?

ஏன் எனக்கு என்ன பிரச்சைனு உனக்கு தெரியாத என்ன?

சும்மா கத்தாதடி கார்ர நிறுத்துறேன் வா

சாலையோறம் இருந்த ஒரு ஹோட்டலில் காரை நிறுத்திவிட்டு இறங்கினார்கள்

அந்த ஹோட்டலில் ஒரு பழைய பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது

“ஆண்டவன் படைச்சான் என்னிடம் கொடுத்தான் அனுபவி ராஜா னு அனுப்பிச்சான்,” என்று பாடிக் கொண்டிருந்தது அதை கேட்டதும் மகேஷ் என்னத்த அனுபவிக்கிறது இவக்கூட சேர்ந்து வேறும் சண்டை போட்டே மன கஷ்டத்தை தான் அனுபவிக்கிறேன்

ஆமா இல்லைனா மட்டும் இவரு புடிங்கிடுவாரு!! என்ன ஒருத்தியவே சமாளிக்க முடியல ஆதுல ப்ளே பாய்யாகுனும்ன்ற நெனப்ப பாரு ச்சீ

அதிகமா பேசாத டி போ போய் ஆகுற வேலைய பாரு

சரி நான் ரெஸ்ட் ரூம் போயிட்டு வரேன் அதுக்குள்ள சாப்பிட எதாவது ஆடர் பண்ணு டா

பண்றேன் முதல்ல போயிட்டுவா

என்ன தான் கோவத்துல இருந்தாலும் சாப்பாட்ட மட்டும் விடமாட்றாளே

மகேஷ் சாப்பிட என்ன ஆடர் பண்ணிருக்க டா?

ஹஹ மட்டன் ப்ரைடு ரைஸ்

ஒ சூப்பர் டா கொஞ்சம் பைஸியா சொன்னியா

ஏய் அது எனக்கு டி…!! உனக்கு
கோபி மஞ்சூரியன் சொல்லிருக்கேன் வரும் சாப்பிடு

ஏய் என்னடா நீ மட்டும் உனக்கு பிடிச்சத சப்பிடலாம் ஆனா நான் நீ ஆடர் பண்ணத சப்பிடனுமா என்ன?

போடா நீ யும் உன் ஆடரும்! எனக்கு
நானே ஆடர் பண்றேன் பாரு

வாவு மட்டன் சுக்கா மட்டன் கைமா தந்தூரிலாம் இருக்கா அப்போ ஒ.கே ஆடர் பண்ணிட வேண்டியது தான் வெயிட்டர்

ஆப் ப்ளேட் தந்தூரி ஒரு மட்டன் கைமா பட்டர் நாண் ரெண்டு ஒ.கே

மேடம் சார் ஆல் ரெடி ஆடர் கொடுத்துட்டாரே!! இதையும் மறுபடியும் ஏக்ஸ்ட்டா ஆடர்ங்களா?

அப்படி என்ன ஆடர் கொடுதாரு?
இப்போ நீங்க சொன்ன அதே ஆடர் தான் மேடம்

ஒ அப்படியா எனக்கு இவரு சொல்லவே இல்ல அதான் மறுபடியும் ஆடர் கொடுத்தேன் ட்ஸ் ஒ.கே ஸாரி

வெல்கம் மேடம்

டேய் பக்கி எதுக்குட என்கிட்ட கோபி மஞ்சூரியன் ஆடர் பண்ணேனு பொய் சொன்ன

நல்லா அசிங்க பட்டியா டி

உன்ன அப்றம் பார்த்துகிறேன் டா. சாப்ட்டு கார்ல தானே வரனும் மகனே செத்த வா

அடிப் போடி ஆண்டவனே நம்ம பக்கம் இருக்கான் என்று சினிமா டைலாக்கை சொன்னான் மகேஷ்

இரண்டு பேரும் ஒரு வழியாக சாப்ட்டு கேளம்பினார்கள்

எதுக்கு டி இப்போ சிடு சிடுனு முகத்த காட்ற ? பார்க்கவே ரொம்ப கேவலமா யிருக்கு

ஆமாம் இவரு அப்படியே ரவிந்துசாமி பாரு. அண்ட காக்காக்கு அண்ணன் மாதிரியும் நெருப்போல தீஞ்ச டபரா செட்டு கறுப்புல இருந்துட்டு இவரு என் முஞ்சிய சொல்ல வந்துட்டாரு போடாங்க

நீ மட்டும் என்னடி அப்படியே ஹன்கா கலர் பியூட்டி பாரு லாரி டயருக்கடியில மாட்டின நாய் முஞ்ச வச்சிட்டு என்ன குறை சொல்ல வந்துட்ட போடி

டேய் நான் டயருக்கு அடியில நசுக்கி போன முஞ்சா? அப்றம் எதுக்கு டா என்ன லவ் பண்ணி கல்யாணம் பண்ண?

எல்லாம் என் தலை விதி டி! நான் லவ் சொல்லும் போது தெரியலையா நான் அண்ட காக்காவோட அண்ணனு?! இப்போ வந்து சொல்ற

ம்ம்…!! அப்போ சொல்ல மறந்துட்டேன் அதான் இப்போ சொல்றேன் இந்த அண்ட காக்காவ
போய் லவ் பண்ணி கல்யாணம் பண்ணேன் பாரு என்ன சொல்லனும்

ஏய் இங்க பாரு டி ஏதோ நானாவது உன்ன லவ் பண்ணி கல்யாணம் பண்ணனேனு சந்தோஷப்படு இல்லைனா இன்னும் முரட்டு சிங்கில்ஸாவே தான் சுத்திட்டு இருந்திருப்படி

போடா கறுவாயா நீ தான் டா சிங்கில்ஸா சுத்திருப்ப நானில்ல!
எங்கம்மா எனக்கு அழக
இன்ஜினியர் மாப்பிள்ளையா பார்த்து கட்டிவச்சிருப்பாங்க! நானும் நல்லா சொகுசா கால் மேல கால் போட்டுனு பிஎம் டபுல்யூ கார்ல நல்ல ராணி மாதிரி போய்யிருப்பேன் நல்ல பங்காளிககையில வாழ்ந்திருப்பேன் ஆனா என் கிரகம் உன்ன லவ் பண்ணி
கட்டிட்டு ரொம்ப அவசத்தப் படுறேன் பூனைய மடியில கட்டினு இருக்கிறாமாதிரி. நான் உன்ன கட்டிட்டு அலையறேன்

நான் மட்டும் என்னவா சும்மா வேலில கிடந்த ஒணானப் புடிச்சி என் வேட்டிகுள்ள விட்ட கதையால என் வாழ்க்கைய சூனியமாக்கிட்டேன்

ஏய் ரொம்ப ஒவரா பேசாதடா! என்ன விட்டா உனக்கு வேற எந்த பொண்ணும் கேடச்சியிருக்க மாட்டா! ஏதோ உன் கலர்க்கு நானாவது கேடசேனு சந்தோஷப்படு

ஆமா மேடம்க்கு ஆசைய பாரு! எனக்கு பொண்ணு பார்த்துட்டாங்கனு சொன்னது தான் அடுத்த நிமிசமே பேக்க தூக்கிட்டு நான் வீட்ட விட்டு வந்துட்டேன் டா நீ வானு சொல்லிட்டு இப்போ மாத்தி பேசுறையாடி

ஆமா டா ஆமாம்…!! நான் ஆசைப்பட்டவன வேற யாருக்கும் விட்டுத்தர மனசில்ல அதான் உன்ன தேடி ஒடி வந்தேன். அப்பவே வேணானு சொல்ல வேண்டியது தானே

அப்படி வேணானு சொல்லிருந்தா சும்மாவ விட்டிருப்ப?

ஹஹ என்ன வேணானு சொல்லிருந்த அங்கையே உன்ன கொலை பண்ணிருப்பேன் டா

அதான் இப்போ சேத்து வச்சி நல்லா செஞ்சிவிடுறியே டி

போடாங்க டா ..!! முன்னாடி ஒழுங்கா பார்த்து கார்ர ஒட்டு டா

நான் ஒழுங்கா தான் கார்ர ஒட்ரேன்! உனக்கு என்னாச்சி டி எங்க வெளிய போனாலும் ரொம்ப ஜாலியா பேசுவ எல்லோர் கிட்டிம் இசியா மீக்களாகிடுவ இன்னைக்கு அப்படியே நேர் ஆப்போஸிட்டா வர?

உன் தம்பி கல்யாணத்த பார்த்ததும் கேளம்பலாம்னு என்ன இழுத்துனு வர. கொஞ்ச நேரம் இருந்து சாப்ட்டு வந்திருக்கலாம்ல?

நீ எதுக்கு அப்படி கோவப் படுற?

மகேஷ் அதை பத்தி பேசாத டா! நான் கொலை வெறியில இருக்கேன்

ஏன் என்னாச்சி உனக்கு? யாராச்சும் எதாவது சொன்னாங்களா என்ன?

அமைதியாவா டா என்று அழ ஆரம்பித்தால் ரம்யா

ஏய் ரம்யா டார்லிங் ஏன் அழுற டி செல்லம் மாமாவுக்கு கஷ்டமா இருக்குல

உன்னால எப்படி டா இவ்வளவு கூலா வர முடியுது. எங்க வீட்ல உன்ன அவ்வளவு அவமானப் படுத்தியும்! நீ அமைதியா சிரிச்சிட்டே எதுவுமே தெரியாத மாதிரி என்டியே என்னாச்சினு கேட்கிற

ஒ அதுவா டி செல்லம்! அத நான் அப்பவே மறந்துட்டேன்.அதுவுமில்லாம என் அம்மா அப்பா திட்டினதா தான் நெனைச்சிக்கிட்டேன். எனக்கு உன் சந்தோஷம் தான் முக்கியம் டி! அந்த வீட்ல உனக்கு அப்றம் தான் மத்தவங்க ஆனா நீ எனக்கு எப்படியோ அதே மாதிரிதான் அவங்களையும் நான் பார்க்கிற டி நான் உன்மேல வச்சிருக்க அதே பாசத்தை தான் அவங்க மேளையும் இருக்கு என்ன அது உனக்கு தெரியம் அவங்களு தெரியல அதான் வித்தியாசம்.

அவங்க சம்மதம் இல்லாம எல்லா சொந்த பந்தங்கள மீறி நாம கல்யாணம் பண்ணிக்கிட்டோம் அந்த கோவம் இன்னும் போகல அதுவுமில்லாம இப்போ ரீசெண்ட்டா நடந்த சண்டை வேற அதனால தான் இவ்வளவு பிரச்சனைக்கும் காரணம் டி. இதுக்கா நீ முகத்த அப்படி வச்சிட்டு என் கூட சண்டை போடுற

ஏய் என்னாதான் இருந்தாலும் நீ அந்த வீட்டு மருமகன் டா ஆனாலும் உனக்கு தர வேண்டிய மரியாதையே தரல டா! அதான் எனக்கு கோவமே. நான் அவங்க பொண்ணு ன்ற முறையில பார்க்கிறாங்களே தவிர உன் பொண்டாட்டியா இல்ல அதான் சண்டை போட்டேன்.

நீ கொஞ்சம் அவசரப்பட்டுட்ட டி ரம்யா

நான் என்ன டா அவசரப்பட்டேன் அத்தன பேர் மத்தியில நீ ஆம்பளையானு கேட்கிறாங்க!! என்ன பார்த்துனு சும்மா இருக்க சொல்றீயா டா?

அவங்க கேட்டதுல என்ன தப்பிருக்கு? நமக்கு கல்யாணமாகி ஆறு வருஷமாச்சி இன்னும் குழந்தையில்லை அதை வச்சி கேட்கிறீங்க அவ்வளவுதான் இது என்ன புதுசா டி செல்லம் கேட்க

நாமளும் டாக்டர் செக்கப் போனோம் அதுல எனக்கு பிரச்சனை இருக்குனு டாக்டர் சொல்லாட்டாரு! என்ன அவரு எழுதிக் கொடுத்த மெடிசன டாக்டர் நான் எடுத்துக்கல வேணாணு சொல்லிட்டேன் அதுக்கு தான் என் மேல இருக்கிற கோவத்துல ஒரு ஆதங்கத்துல பேசிட்டாங்க டி ரம்யா.

இந்த விஷயத்த பெருசாக்காம இதோட விடு சரியா!! இதான் நம்ம ரெண்டு குடும்பத்துக்கும் நல்லது ஒ.கே வா

என்னால விட முடியாது டா மகேஷ்..! அவங்களுக்கு என்ன உண்மை தெரியும்னு இப்படி வாய்க்கு வந்தபடி பேசிட்டாங்க! அதுக்கு தான் உண்மையை சொல்லிடுறேனு சொல்றேன் ஆனா நீ வேணாணு பழிய தூக்கி உன் தலைமேல போட்டுக்கிட்ட ஆனா இப்போ கேட்ட பேருஉனக்கு தான் டா

என்னால தான் குழந்தையை பெத்துக் கொடுக்க முடியாத பாவியா யிருக்கேன்! எங்க எல்லோரும் என்ன குழந்தை பெத்துக்க முடியாத மலடினு சொல்லிடுவாங்களோனு. டாக்டர் கொடுத்த ரீசல்ட்டுல உன் பேர மாத்தினது அவங்களுக்கு எங்க தெரியப் போகுது டா

எனக்கே ஒரு வருஷத்துக்கு முன்னாடி தானே இந்த உண்மை தெரியும் அதுவும் உனக்கு தெரியாம நானே செக்கப் பண்ணதால தெரிஞ்சிக் கிட்டேன்.

இந்த உண்மை தெரிஞ்சி நான் உன்ன கேட்கும் போது இல்லவே இல்லனு என் மேலேயே சத்தியம் வேற வச்சவன் தானே நீ!!

அப்றம் நான் என்னோட ரீசல்ட் காண்பிச்ச பிறகு தான் நீயே உண்மைய ஒத்துக்கிடு என்ன சொன்ன
எங்க வீட்ல கஷ்டப்படுவாங்கனும் உங்க வீட்ல இவள டிவோஸ் பண்ணிடுனு கட்டாயப்படுத்து வாங்கனு மொத்த பழியும் உன் மேல போட்னு எல்லாத்தையும் தாங்கி என்கூடவே இருக்கியே அதுவும் என்னோட வார்த்தைக்கு மறு வார்த்தை பேசாம வரீயே மகேஷ் ஏதுக்குடா என் மேல இவ்வளவு பாசத்த வச்ச.

நான் உனக்கான சரியான ஜோடியே இல்லடா. எப்படியாவது நீ என்னைய வெறுத்து ஏய் வெளிய போடி இனி உன் கூட வாழ மாட்டேனு அடிச்சி துரத்துவனு பார்த்தா இன்னும் என் மேலே அன்ப கொட்ற வீட்ல எந்த வேலையுமே செய்ய விட மாற்ற அப்படியிருந்தும் நான் சும்மா இல்லாம தினமும் உன்கிட்ட சண்டை போடுவேன்

சந்தேகப்படுறா மாதிரியும் வேற பொண்ணுக்கூட தொடர்பு இருக்கு இனி இவன் கூட வாழ மாட்டேன் உங்க பையன் ஆம்பளையே இல்லைனு மாமியார் முன்னாடி பேசியும் பார்த்துட்டேன் ஆனாலும் நீ என் மேல வச்சிருக்கிற பாசம் மட்டும் மாறவேயில்ல என்னவிட்டும் பிரிஞ்சி போகாம நீ தான் வேணும்னு ஒரே பிடியா இருக்கியே டா மகேஷ்

நான் எவ்வளவோ டார்ச்சர் பண்ணியும் என்ன விட்டு பிரிஞ்சி ஒரே ஒரு நாளும் நீ இருந்ததில்லயே! அப்படி நான் என்ன சந்தோஷத்தை தான் டா உனக்கு கொடுத்திருகேன்? ஏன் இந்த மலடிய விட்டு போகம இருக்க?

இந்தா தண்ணியக் குடி…!! எப்படி மூச்சு வாங்குது பாரு செல்லம்

ஏய் என்ன கொஞ்சாத டா.!! நான் உன்ன காரித்துப்பிக்கிட்டு இருக்கேன் நீ என்னடானா எனக்கு ஆறுதல் சொல்ற

இப்போ எதுக்கு டி பைத்தியம் மாதிரி பேசிட்டு வர! நான் எத்தனையோ முறை சொல்லிட்டேன் நீ இதையே உன் மனசுல போட்டு குழப்பிட்டே இருக்க.

நீ என்னோட உயிர் டி ரம்யா. ஆம்பளைனா என்ன கல்யாணம் பண்ணதும் குழந்தை பெத்தும் அவன் ஆம்பளையாகிடுவானா என்ன?

ஒரு ஆம்பளைக்கு அழகே அவன் பொண்டாட்டியே எப்படி அன்பா வாழ் நாள் கடைசி வரைக்கும் பாதுகாப்பா வச்சிருக்கானோ அவன் தான் ஆம்பளையே! அதுகப்பறம் தான் இந்த குழந்தை விஷயயே

இப்போ குழந்தை இல்லைனா என்ன? நமக்கு அடுத்த தலைமுறை இல்ல அவ்வளவுதானே!!? ஆனா என் அண்ணன் பசங்க இருக்கு அவ்வளவு ஏன் உன்னோட தம்பிக்கு குழந்தை பிறந்த வாங்க இருக்காங்க நம்ம பேர சொல்ல அதுவே போதும் டி ரம்யா.

எனக்கு யார் எது சொன்னாலும் கவலை இல்லை டி! என்னைய விட்டு நீ போகனும்னு மட்டும் கனவுல கூட நினைச்சிடாத டி

ஆமா நமக்கு டாக்டர் என்ன சொன்னாரு ஞாபகம் இருக்கா உனக்கு

ம்ம்ம்!!! இருக்கு

கன்சீவ் ஆக சென்ஸ் இருக்குனும் சொல்ல முடியாது அப்படி ஒருவேளை கன்சீவ் ஆனாலும் அது நிலையா இருக்குமா இருக்காதானும் சொல்ல முடியாது. உங்க கர்ப பை ரொம்ப வீக்கா யிருக்கு அதான் பிரச்சனையே நல்லா ஹல்தியான உணவா சாப்பிடுங்க நல்லா தூங்கி எழுங்க மனச லேசா வச்சிக்குங்க போதும்.

அப்பறம் எல்லாதுக்கும் மேல கடவுள் ஒருத்தன் இருக்கான் முழு மனசோட நம்பிக்கையா இருக்க நிச்சயமா உங்களுக்கு குழந்தை பாங்கியம் கிடைக்கும் அதோ மாதிரி நான் தர மெடிசன்ஸையும் சாப்பிடுங்க.

ஒரு வருஷம் கழிச்சி பிரியாட்ஸ் முடிஞ்சி நாலாவது நாள்ல இருந்து ஒன் வீக் ட்ரை பண்ணுங்க நல்ல ரீசல்ட்டு கிடைக்கும்னு சொன்னாரு.

ஆனா இந்த மேடம் ஒரு வருஷம் மெடிசன் எடுத்தாங்க அதுவும் கொஞ்சம் கூட நம்பிக்கையே இல்லாம! அப்றம் எப்படி வழி கிடைக்கும்.

எண்ணம் போல் வாழ்க்கைனு யாரும் சும்மா சொல்லல டி அவங்க அனுபவச்சத சொல்லிருக்காங்க

நீயாவே ஒரு முடிவெடுத்த நமக்கு இனி குழந்தை பெத்துக்குற தகுதியில்லனு அப்றம் எப்படி நடக்கும் உனக்கு தான் நம்பிக்கையே இல்லையே டி

இப்போ நான் என்ன பண்ணணும் ?

நான் சொல்றத கேட்டு நடந்துக்கோ உன்னால இல்லை நம்மளால முடியும்னு நம்பிக்கை வைச்சிக்கு ஒரு ஆறு மாசம் ட்ரை பண்ணி பார்க்கலாம் அப்றம் வேணா ஒரு குழந்தைய தத்தெடுத்துக்கலாம் ஒ.கே

ஒ.கே ட்ரை பண்றேன் டா மகேஷ்

அப்பறம் நமக்கு ஒரு குழந்தை பிறந்தாக் கூட இன்னோரு குழந்தைய தத்தெடுத்துக்கலாம் டா ப்ளீஸ்

சரி டி செல்லம் உன் விருப்பம் எதுவோ அதுவே என் விருப்பம் ஒ.கே

ம்ம்ம் ஐ லவ் யூ டா

ல்வுயூ டு டி செல்லம்

மனைவியை எந்த சூழ்நிலையிலும் கணவன் கைவிடக்கூடாது அதை போல் தான் மனைவியும் 

தொடர்புடைய சிறுகதைகள்
குடிசை வீட்டு பெண் ஆனாலும் ராணியாக தன்னை பாவித்துக் கொண்டாள், வினோதினி... அப்பா ரத்தினம் குப்பை அள்ளும் தொழிலாளி அம்மா மெஸ்திரி வேலைக்கு செல்வாள்... செய்யும் தொழிலே தெய்வம் என்பதை உண்மையாகவே இருவர்கள் தங்களது வேலையில் நேர்மையாக இருந்தார்கள். இவர்களுக்கு வினோதினி என்ற மகள் ...
மேலும் கதையை படிக்க...
"நாம்" பிறந்தவுடன் அழுதல் வேண்டும் அதாவது ஒரு குழந்தை தன் தாய்யின் கருவரையை விட்டு வெளியேறும் போது அக்குழுந்தையின் முதல் வேலையே அழுதாகவேண்டும். அப்பொழுதுதான் நல்ல ஆரோக்கியமான குழுந்தையாக கருதப்படுகிறது. இதுவே காலத்தில் கட்டாயமும்கூட. அந்த குழுந்தையின் பணிகளை ஓவ்வொரு நாளும் ...
மேலும் கதையை படிக்க...
ஏழ பசுமையான கிராமங்கனை கொண்டு ஒர் அரசன் அவர்களை ஓர் அடிமைகளைப் போல் பாவித்து ஆட்சி நடத்தி வந்தான் அதில் பிச்சாண்டி எனும் விவசாயி இருந்தான். இந்த விவசாயி எப்பேர்ப்பட்ட தரிசாகக் கிடைக்கும் நிலங்களையெல்லாம் அழகிய பசுமையான வயல்வெளியாக மாற்றிடும் வல்லமைக் ...
மேலும் கதையை படிக்க...
டேய் அங்க மேளம் இல்லாம சும்மாவே சாமி ஊர்வலம் போய்ட்டிருக்கு இன்னும் வரமா என்னடா பண்ணிட்டிருங்கீங்க? ஐயா இதோ வந்துட்டோம்! உங்க மச்சான் தான் எங்கள சாப்பிட போக சொன்னாருங்க அதான் வந்தோம்ங்க ஒரு ஐஞ்சி நிமிஷத்துல வந்தறோம் சாமி ஒ அப்படியா நான் ...
மேலும் கதையை படிக்க...
அதிகாலையில் ஒருவித படப்படப்புடனே எழுந்து குளித்துவிட்டு வேலையைத் தேட தயராவாள் மது தங்ககுவதற்கென்று சொந்தமாக வீடு இல்லாதவர்கள். சாலையோர கடைகளுக்கு பக்கதில் தான் இவர்களது வீடு. தனக்கு தனியார் நிறுவனத்தில் வேலை கிடைத்ததும் முதலில் பெற்றோர்களை வாடகை வீட்டில் குடியெற்றிட வேண்டும் அம்மா ...
மேலும் கதையை படிக்க...
சிறுதும் சுருக்காத விழிகள் ஏக்கம் நிறைந்த மனசுடன் பேருந்தின் ஜன்னல் இருக்கையில் தனது 20வருட வெளிநாட்டு வாழ்க்கையை முடிந்துக் கொண்டு சொந்த கிராமத்தை பார்க்கும் மகிழ்ச்சியில் நவீன் வருகிறான். இதுவரையிலும் செல்போன் விடியோ காலில் மட்டுமே பார்த்த அம்மா அப்பா தம்பி பெரியப்பா ...
மேலும் கதையை படிக்க...
ஐயா என் குழந்தையை எப்படியாவது காப்பாற்றுங்க குழந்தை பேச்சி மூச்சில்லாமல் அமைதியாயிட்டான் கொஞ்சம் என்னாச்சுனு பாருங்க ஐயா மருத்தவரும் குழந்தைக்கு என்னாச்சிமா ? இரவு முழுவதும் அழுத்துக் கொண்டே இருந்தான் நானும் அவனுக்கு பால்லுட்டி அமைதியாக்கினேன் கொஞ்ச நேரத்திலேயே குடித்த பாலை வாந்தியெடுத்து விட்டான் ...
மேலும் கதையை படிக்க...
இரவு மணி பதினொன்று. சாலையின் ஓரத்தில் ஒரு பெண் தனியாக நிற்கிறாள். அவ்வழியாக பைக்கில் வந்த நபர், இந்த பெண்ணை பார்த்ததும் தனது பைக்கை நிறுத்திவிட்டு அருகில் வந்தார். இந்த நேரத்தில் இங்கே ஏன் தனியாக நிற்கிறாய் என்றான். அப்பெண் அதற்கு எந்த ...
மேலும் கதையை படிக்க...
ஒருவர் மலைகளை பார்வையிட சுற்றுல்லா வந்தார். அவர் மலைகள் மீது வெண்புகை மேகங்கள் மலையை முட்டி மோதுகின்ற அழகான காட்சிகளை பார்த்துக் கொண்டே சென்றார் அப்பொழது எதிர்ப் பாராதவிதமாக அவர் கால்கள் நழுவின மலை மேலிருந்து தவறி கீழே விழத் தொடங்கினான். இதை ...
மேலும் கதையை படிக்க...
1960ஆம் ஆண்டு செவ்வழகியாள் மறக்கமுடியாத வருடம். செழுமையான பசுமை வளம் கொண்ட நிலத்தில் நெல் மணி அரும்பை போன்று செவ்வழகி எட்டு மாத கருவை சுமக்கிறாள்.. அவளது வயிற்றில் குழந்தையின் ஒவ்வொரு அசைவுகளையும் உணர்ந்து தானும் சிறுவயதில் என் அன்னையின் வயிற்றில் இப்படி ...
மேலும் கதையை படிக்க...
உயிரெழுத்து
ஆங்கிலம் தெரிந்தால் மட்டும் வேலை
விவசாயி நினைத்தால் அரசனும் அடிமையாகுவான்
சமூகத்தின் தாகம்
சட்டத்தின் வரையரை
எது வளர்ச்சி?
ஆன்மீகமும் மருத்துவமும்
சுஜீத்தா
உணர்வே கடவுள்
மனைவி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)