முதல் பாகம்
நியூயார்க் நகரம் காலையில் முதல் சூரியனை பல நாட்களுக்கு பிறகு பார்க்கிறது. காதலனை கண்ட காதலி போல்.
சொந்த ஊர் செல்ல மனம் தயாராகி விட்டது. அனைவரையும் என் தங்கை கல்யாணத்திற்கு சென்ற போது பார்த்தது. அதன் பிறகு இப்போது தான் பார்க்க வேண்டிய வாய்ப்பு உள்ளது. இரண்டு வருடங்களாக செயற்கை நுண்ணறிவு படுத்திய பாடுகளும் அதை தொடர்ந்தது வந்த திட்டங்களும் ஒரு வழியாக சிறப்பாக முடிந்தது. எல்லொருக்கும் மகிழ்ச்சி.
அடுத்த திட்டங்கள் வந்து நம்மை அலுத்துவதற்குள் இங்கிருந்து கொஞ்சம் தூரமாக பறந்து விட வேண்டும். அப்படி எல்லாம் வாழ்க்கை விட்டு விடுமா என்ன என்ற எண்ண ஓட்டத்தில் இருக்கேன். புதிய பெறுப்புக்கள் பல உள்ளன பார்க்கலாம்.
ஊர் செல்வதற்கு எல்லா ஏற்பாடுகளும் முடிந்தது. அடுத்த வாரம் புறப்பட வேண்டும். எல்லோரிடமும் சொல்ல வேண்டும். இது ஒரு பாக்கம். நிறுவனத்தில் இந்தியாவில் ஒரு பிரிவு தொடங்க திட்டமிட்டு இருக்கிறார்கள். அந்த திட்டம் நம்மை அங்கேயே இருந்து விடலாம் என்றும் வேண்டாம் என்றும் தடுமாற்றம் கொள்ள செய்கிறது. எப்படி இருந்தாலும் சில சமயங்களில் இரயில் போல் ஓட ஆசை தான்.
இனி முழுநிலவை நெருங்களாம். இந்தியாவில் இறங்கி விட்டேன். முதலில் அம்மாவிடம் பேசு வேண்டும். சில வேலைகள் உள்ளது. இரண்டு நாள் கழித்து விட்டிற்கு வருவேன் என்று சொல்ல வேண்டும். இங்கேயே நிறுவனத்தின் விருந்தினர் மாளிகையில் தங்கிக்கொள்ளாம் .
ஊர் சுற்ற வேண்டும்.
எப்படி இருக்கிறது. ஒன்றும் பெரிதாக மாறவில்லை. வீட்டிற்கு சென்றால் அது திட்டத்திற்கு நம்மை இழுத்து செல்லும். சுந்திரம் அற்ற சூழல் உருவாகி விடும். அதனை சமன் செய்ய வேண்டும்.
மாலையில் நண்பன் வீட்டிற்கு சென்று கொண்டிருந்த போது மாமா கூப்பிட்டார். நாளை காலை ஏற்கனவே பேசி வைத்த பெண்ணை பார்க்க புறப்பட வேண்டும் என்றார். காலையிலேயே வேண்டும். நம்ம வண்டி வரும். ஊர் உனக்கு தெரிந்தது தான். நீ படித்த கல்லூரிக்கு அருகில் தான்.
மனம் சற்று மிதந்தது போல பாவனை காட்டியது. ஊருக்கே சென்று இருக்கலாம். இன்று தூக்கம் கெட்டது. நினைவுகளில் மூழ்க வேண்டும். காலை வண்டி அனுப்பினார்கள். மணி தான் வந்தான்.
என்ன மாப்புல எப்படி இருக்க.
நல்லா இருக்கேன்.
நீ எப்படி இருக்க
சூப்பரா இருக்கேன்
என்ன வேலை
கிடைக்கும் வேலையை . பார்த்து கொண்டு இருக்கேன். பெண் வீட்டிற்கு நேராக செல்ல வேண்டும். எல்லோரும் கிளம்பி வந்து கொண்டு இருக்கிறார்கள். நாம் இப்போது புறப்பட்டால் சரிய இருக்கும்.
வண்டி ஒடியது என் எண்ணங்களும் ஓடியது. என்ன பேச வேண்டும் என்று மனம் பல முறை முன்னும் பின்னும் ஓட்டி பார்த்துக்கொண்டே இருந்தது.
இருபுறமும் பனைகள் காவல் வீரர்கள் போல். காய்ந்து போன மனைகள் வீடுகளும் மரங்களும் இல்லாமல். நெல் வயல்கள் பச்சையை போர்த்திருந்தது.
மாப்புல என்னை ரோட்லேயே இறக்கி விடு. நான் கொஞ்சம் ஊரை பார்க்க வேண்டும். சரி என்று தலையாட்டினான்.
இதே சாலையில் இறங்கி கல்லூரிக்கு சென்றேன். அப்போது இரயில் பயனம் தான். அறை மணி நேர தூறம். ஒரு மணி நேரம் ஊர்ந்து செல்லும். எப்போதும் ஓட துவங்கம் இரயிலில், ஏர வேண்டும். சமயங்களில் விட்டு விட்டால் வேர வண்டி கிடையாது. கிடைக்கும் வண்டியில் பயணம்.
ஊரே விழா கோலத்தில் உள்ளது.
எங்கும் மா இலைகள் தோரணங்கள்.
இந்த ஊரில் தான் எங்கள் பெரியப்பா குடும்பம் இருந்தது. இரயில்வே வேலையில் இருந்தார். படிக்கும் போது அவ்வபோது தங்கி செல்வேன். சில சொந்தங்களும் உண்டு.
மணி அழைத்தான். அந்த தெரிவில் தான் இருக்கிறேன். உன்னை பார்த்து விட்டேன். நானே வருகிறேன். பெண் விட்டிற்கு வந்து விட்டேன். ஒரே கூட்டம், என்னை சிலருக்கு தெரிந்து இருக்கிறது. எனக்கும் நபர்களை தெரியும் ஆனால் பெயர்கள் தெரியாது. சிரித்து கொண்டு சமாளிப்பது வழக்கம். எல்லோரிடமும் பேசினோன். அது என் இயல்பு இல்லை. அம்மா அதட்டினாள். என்ன பழக்கம் வீட்டிற்கு வர வில்லை என்று கொட்டினார். ஏற்கனவே பேசி இருந்தேன். தங்கை காதில் ஏதோ கிசுகிசுத் தாள் .
யாருக்கும் தெரியாத ஒரு உண்மை இருந்து கொண்டே இருக்கிறது.
அவரவர்களுக்கு மட்டுமே தெரிந்த உண்மை. அப்படியான ஒரு உண்மை என்னிடமும் உள்ளது.
அனைவரும் அழைத்தார்கள் என்பதற்காக வந்தேன். உண்மை போல் எழுதினாலும் அது ஒரு பாவனை. கதை தன் விருப்பத்திற்கு சென்று விடும். நான் கதைகளை படிக்கும் போது இதை உணர்ந்து இருக்கிறேன்.
பெண்ணை பார்த்து கொள்ளுங்கள் என்று யாரோ கூறினார்கள். அந்த திசையை நோக்கி பார்த்தேன். கூட்டம் தான் தெரிந்தது. தங்கை என்னை மாட்டி விடுவது போல் எனக்கு உதவி செய்தாள்.
பெண்ணிடம் தனியாக பேச வேண்டுமாம்.
அது எல்லாம் வேண்டாம்.
பரவாயில்லை. உள்ளே சென்று பேசுங்கள்.
உடனே கூட்டம் கொஞ்சம் கலைந்தது கோயிலை நோக்கி.
நான் அவளை நோக்கி நகர்ந்தேன்.
இரண்டாம் பாகம்
வீடு பெரியது. வீட்டினுள் சுற்றி சுற்றி நடக்கலாம். மேலே மழையும் வெயிலும் முற்றத்தில் வந்து விட்டு போகும். சுற்றிலும் மர தூண்கள்.
அவள் துணைக்கு ஒரு மர தூணை பிடித்திருந்தாள். அவளுக்கு அருகில் ஒரு மர நாற்காலி கிடந்தது. அவளை பார்த்து கொண்டே மர நாற்காலியிடம் சென்றேன். நான் வருவதை பார்த்து நிமிர்ந்தாள் சிறு புன்னகையுடன்.
என்னுடன் ஒரு நீண்ட உறையாடலை தொடங்கினாள்.
நல்லா இருக்கிங்கலா
நல்லா இருக்கேன்
நீங்க உக்காரலாம்.
பரவாயில்லை இப்படியே இருக்கேன்.
உங்க மாமா வீடியோ கால் பேசும் போது பார்த்தேன்.
நானும் பார்த்தேன்.
என் நினைவுகளுக்குள் சென்று விட்டேன்.
அன்று அவள் காய்ந்த போன டிஸ்சபர் பூக்கள் நிறத்தில் இருந்தாள். ஒரு பக்கமாக நின்று கொண்டு இருந்தாள். பேச்சி கொண்டே அவளை பார்த்தேன். கண்களில் ஏதோ ஒன்றை வைத்து கொண்டு குழப்பத்தில் முழிப்பது போல் அழகாக இருந்தாள். சற்றென பார்த்தாள். அந்த நொடியில் பறப்பது போல் இருந்தது. மனம்
Do you believe in love at first sight?
yes
எப்படி என்று சொல்ல தெரியவில்லை. அது தான் உண்மை. இது எனக்கும் என்னுடைய நிழலுக்கும் தெரிந்த உண்மை. நினைவு வந்தவனாக அவளை பார்த்தேன்.இளஞ்சிவப்பாக இருந்தான். எள்ளு பூக்கள் பூத்த காட்டை பருத்தி காடாக மாற்றி அணிந்திருந்தாள்.
என்ன யோசனை என்றாள்.
ஒன்றும் இல்லை.
உடம்பு சரியில்லையா
அதெல்லாம் ஒன்றும் இல்லை.
நீங்க நின்னுடே இருக்கிங்க
நீங்க நில்லுங்க
எங்க வேலை.
பள்ளியில் ஆங்கில ஆசிரியையாக இருக்கிறேன்.
இன்னைக்கு தான் வந்தீங்களாக.
இல்லை ஒரு வாரம் விடுமுறை
உங்கள் கனவு
அப்படி எல்லாம் ஒன்றும் பெரிதாக இல்லை.
எங்க அப்பாவிடம் பள்ளிக்கூடம் கேட்டேன். நான் நடத்த வேண்டும்.
அப்பா நீ முதலில் ஒரு பள்ளியில் வேலை செய் பின்பு பார்க்கலாம் என்றார்.
நான் கட்டி தரவா.
அப்படி கட்ட ஆரம்பித்து விட்டார்.
மறந்து விட்டேன். உங்கள் பெயர்.
மறப்பது நல்லது
மறக்கல உங்க குரல்ல கேட்கலாம்.
கண்மணி. கேட்டுச்சா
அழகான ஓசை கொண்ட பெயர்.
அப்படியா
உங்க பெயரையும் சொல்லிடுங்க, என் பெயர நீங்க கேட்கல என்று அடுத்த கேள்வி வரும்.
நான் என் பெயரை கூறினேன்.
Superb
படிப்பு எல்லாம் எங்க
இந்த ஊரில் தான் படித்தேன்.
உங்களுக்கு என்ன புடிச்சு ருக்கா
புடிச்சிருக்கா
பாத்தோன புடிச்சிருச்சு
நீங்க கல்யணதிற்கு அப்பரம் இங்க வந்து விடுவீர்களா
இங்க இருக்கர மாதிரிதான் என்று நினைக்கிறேன்.
உங்களுக்கு என்ன பிரச்சனை.
எனக்கு ஒன்றும் பிரச்சனை இல்லை.
நான் வர இயலாது. என்னுடைய பள்ளி முக்கியம், நீங்க தான் சமாளிக்கனும்.
அந்த பிரச்சனை வராது. பார்த்துக்கொள்ளாம்.
நானும் இங்க தான் இருக்க போகிறேன்.
வெளிநாடு செல்ல பயமா.
நான் இரு முறை சென்று இருக்கிறேன். என்னுடைய மாமா அங்கு தான் இருக்கிறார். சுற்றுலா செல்வது சரி. மத்தபடி அங்கேயே விழுந்து கிடப்பதற்கு விருப்பம் இல்லை.
நீங்கள் புத்தகம் படிப்பீர்களா.
நான் காதல் கடிதம் எல்லாம் என் நண்பர்களுக்காக எழுதியிருக்கிறேன். ஆராய்ச்சி கட்டுரை எழுதி இருக்கிறேன்.
இல்ல, புத்தகம்.
ஸாரி படிப்பேன். அங்கு இலக்கிய கூட்டம் நடக்கும் அவ்வபோது செல்வேன். அவர்களின் வர்புருத்தலின் பேரில் மாதம் ஒரு புத்தகம் படிப்பேன்.
ஓ very good.
நீங்க.
அதான் என் முழு நேர வேலை மற்றும் விருப்பம் படித்து கொண்டு இருப்பது.
வேற வேல இல்ல.
நீங்க மேற்கொண்டு படிக்கனும் என்று விருப்பம் இருந்தால் படிக்கலாம்.
படித்து கொண்டு தான் இருக்கிறேன். முடித்து விடுவேன்.
பாட்டு கேபிங்களா
நிறைய முக்கியமா புது பாட்டு கேப்பேன் எல்லா மொழிகளிலும்.
வேற ஏதாவது
ஒன்னு கேட்கனும் Twin Flames மாதிரி. நா உங்களை பார்த்த அப்பறம் தான் முடிவு எடுப்பேன்.
என்னை கட்டாய படுத்த கூடாது என்றேன்.
நீங்களும் அதே பதிலை தான் என் மாமாவிடம் சொன்னீர்கள்.
இருவரும் பேசி கொண்டு எங்களை பைத்தியம் ஆக்குறீங்களா என்றார் என் மாமா.
சிரித்தேன். கொஞ்சம் வாய் விட்டு சத்தமாக.
எல்லோரும் எட்டி பார்த்தார்கள்.
என்னுடைய ரகசியம் தெரிந்த விட்டதோ. நல்லது தான்.
அவள் வாய் திறக்காமல் சந்தம் இல்லாமல் சிரித்தாள். அழகு.
நீங்க தப்பாக எடுத்துக்காதீங்க. நீங்க உள்ளே ஒன்னு இருக்கு வெளியே ஒன்னு சொல்றீங்க. ஏதோ ஒன்னு இருக்கு சொல்ல தெரியல.
நேரா கேக்கறேன்
Do you love me?
அப்படி இல்ல.
கல்யாணத்திற்கு பிறகு காதலிப்பேன்.
அழகா இருக்கிங்க
நல்லா பேசுரிங்க
புத்தகம் கூட படிக்கிறிங்க. தெளிவா இருக்கிங்க. கல்யாணம் தான் நீங்க சம்மதிச்சா.
ஆஹா, நான் சம்மதிக்கலனா?
என் கண்களை பார்த்தாள்.
No problem
really
Yes, No problem
நான் எல்லாத்தையும் பார்த்துட்டேன்.
So, No problem
அவள் மர நாற்காலியில் உட்கார்ந்தாள்
I love you Aryan…