உன் மழை

 

சிறு சிறு தூறலாய் முகத்தில் அறைந்தத் துளிகளை விலக்கி, இந்த சிறு மழைக்கு பயந்து தங்களை மறைக்கும் இடம் தேடி ஓடும் மக்களைப் பார்த்தப்படியே உன்னிடம் கேட்கிறேன்..

“எங்கு அழைத்து செல்கிறாய் இந்த மழையில்..?”

“எதோ மழையில் நனைவது பிடிக்காதவள் போலவே கேட்கிறாய்..?”

“மழையில் நனைவது பிடிக்கும்…தெறிக்கும் இந்த சாரலை ஏந்திக் கொண்டே உன்னுடன் பயணிப்பது அதை விடப் பிடிக்கும்”

“உன்னுடைய ரசனையும் எனக்குப் பிடிக்கும்”

“அது சரி..என் கேள்விக்கு பதில்..?”

“இன்னும் சிறிது நேரத்தில்”

தெரிந்துக் கொள்ளும் ஆர்வமற்று, மழையில் கரையத்துவங்கினேன்.

பெரு மழையை இழுத்து வந்த சிறு மழை, கூடவே இடியையும் மின்னலையும் துணைப் பெண்ணாய்க் கொண்டு வந்து விட்டுவிட்டு பெருமழைக்குள் தன்னை நுழைத்துக் கொண்டது.ஆள் அரவமற்றுக் கிடந்தது கடற்கரை.அந்தப் பெரு வெளியில் நீயும் நானும் மட்டுமாய்.மழை வந்த மகிழ்ச்சி அலைகள் முகத்தில்.கூடிக் கூடி கூத்தாடின.

“ஏன் கடற்கரைக்கு, அதுவும் இந்த மழையில்..?”

“நீதானே கேட்டாய்?”

“என்ன?”

“‘அள்ளி அணைக்கும் ஒரு மழை நாளில், ஆள் அரவமற்றப் பொழுதில்,முகம் ஏந்தி மழையை நான் வாங்கும் தருணம் என் அருகில் எனக்காக மட்டுமே நீ இருக்க வேண்டும்’ என நீதானே அன்று பிதற்றினாய்”

“ம்ம்..?”

“இல்லை இல்லை, காதல் மொழிந்தாய்”

“அதானே.நான் என்ன குழந்தையா? நான் என்ன கேட்டாலும் செய்வாயா?

“ம்ஹூம்.நீ என் குட்டி தேவதை.தேவதையின் விருப்பங்கள் நிறைவேற்றப்பட வேண்டும்”

“அது சரி, என்ன இது?என்னை நனையவிட்டு, மழை ஆடையில் உன்னை பொதித்து,மழைக்கு ஒளிந்துக் கொண்டிருக்கிறாயே.?

“எனக்குதான் மழைப் பிடிக்காதே..?”

“எனக்குப் பிடித்தால் உனக்குப் பிடிக்க வேண்டாமா..ஒத்த மனம் காதலுக்கு அவசியமில்லையா..?

“அவசியமில்லை கண்மணி.விருப்பங்கள் வேறு வேறாக இருக்கலாம்.அதை மதிக்கும் மனம் இருக்க வேண்டும் இருவருக்கும்.அதற்கு உண்மையான காதலும் நேசமும் அவசியம்.அது என்னிடம் தாராளமாய் இருக்கிறது.ஒத்த மனம் கொண்டவர்கள்தான் காதலிக்க வேண்டுமெனில், இந்த பூமியும் வானமும் இத்தனை யுகங்களாய்ப் பார்த்துக் கொண்டிருக்கும் காதல் என்பதே பொய்யாய்ப் போய் இருக்கும்.இந்த ஆகாயம் நிஜம்,இந்த பூமி நிஜம்.இந்த மழை நிஜம்.இந்தக் காதலும் நிஜம்.வேண்டுமளவு ரசித்து விட்டு வா உன் மழையை.அதுவரை நீ ரசிக்கும் அழகை ரசித்துக் கொண்டிருக்கிறேன் நான்..”

“உன்னுடைய இந்த எண்ணங்கள்தான் மழையைப் போல் என்னை நனைத்துக் கொண்டிருக்கின்றன.அணைத்துக் கொண்டிருக்கின்றன.காதலை சொல்லித் தந்த என் காதலா, உனக்கு என் வந்தனங்கள்.நேசித்தலின் சுகத்தைக் கற்றுத் தந்த உனக்கு என் ஆயிரம் முத்தங்கள், இந்த மழை மூலமாக..”

என் சார்பாய் மழைத் தன் சாரலை முத்தமாய்க் கொடுத்தது உன் முகத்தில்..

- பெப்ரவரி 2012, 

தொடர்புடைய சிறுகதைகள்
அறையை முழுவதுமாய் ஒரு நோட்டம் விட்டாள் விட்டாள் வேதா.இப்போதுதான் திருப்தியாய் இருந்தது.அப்பப்பா ஒரு வாரமாய் வேலை பெண்டை கழட்டிவிட்டது.'வீட்டில் இருக்கும் எதாவது ஒரு உருப்படியாவது,உருப்படியாய் உதவுகிறதா?எல்லாவேலையும் நானேதான் செய்ய வேண்டும்.எல்லாம் என் தலை எழுத்து' தனக்குத் தானே பேசிக் கொண்டவளாய் மிச்சமிருக்கும் ...
மேலும் கதையை படிக்க...
1800 களின் தொடக்கம், தோவாளை,கன்னியாகுமரி சலசலத்து ஓடும் பழையாறு அங்கிருந்த நிசப்தத்தை தன் ஆயிரம் கரங்களால் தன்னுள்ளே இழுத்துக் கொண்டு சென்றது.கண்ணுக்கெட்டிய தூரம் வரை அந்த ஆற்றின் கொடை, பச்சை ஆடை உடுத்திய நிலப் பெண்ணால் பறைசாற்றப்பட்டுக் கொண்டிருந்தது.அறுவடைக் காலமாதலால் ஆங்காங்கே வயல்களில் ...
மேலும் கதையை படிக்க...
என்னால் நம்பவே முடியவில்லை.எப்படி இது சாத்தியம்.நேற்று கூட மாமியார் வீட்டிற்கு சென்றபோது லட்சுமியம்மாவை பார்த்தேனே.நன்றாகதானே இருந்தார்.அதற்குள் என்னாகி இருக்கும்.நினைத்துப்பார்க்கயில் அதிர்ச்சியாக இருந்தது.என்ன ஒரு நிச்சயமற்ற வாழ்க்கை.அடுத்த நொடி நடக்க போகும் அதிசயங்கள் சொல்லி மாளாது.விணு அதற்குள் மறுபடி என்னை செல்லில் அழைத்தான். "யமுனா,கிளம்பிட்டியா,சீக்கிரம் ...
மேலும் கதையை படிக்க...
தெய்வத்தாய்
பரிணாமம்
மனிதம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)