பழக்கடைனா ஈ மொய்க்கணும்!. அதிலும் பலாப்பழக் கடைனா கேட்கவே வேண்டாம்!. ஆனால் கூட்டம் இருந்தா வாங்கறது கஷ்டம்னு கூட்டமே இல்லாத ஒரு கடையைத் தேடி வண்டியை நிறுத்தினான் வசந்த்.
‘பலாப்பழம் இருக்கா?’
‘இருக்கு…! ஆனா, அறுக்கணும்!’ என்றாள் கடைக்காரன் மனைவி
சுளையா இருக்கா?
உங்களுக்கு எவ்வளவுக்கு வேணும்?
ஒரு ஐம்பது ரூபாய்க்கு!
அறுத்துத்தரேன். என்று சொல்ல, இங்கதான் கூட்டமே இல்லையே? இங்க போய் வாங்கறமே நல்லா இருக்குமோ மனசுக்குள் ஒரு ஞானம்! அதை உதாசீனம் பண்னியது உள்மனம்! புதுசா அறுக்கறா. புதுசு; புதுசுதான் வாங்குவோம்.! தலை எடுத்தது அஞ்ஞானம்.
பக்கத்தில் ஒருத்தர் வந்து நின்னு.. ‘நேத்தைக்கு வாங்க்கீட்டுப் போன ஆப்பிள் அத்தனையும் அழுகல் …! கொழந்தைக்குன்னு வாங்கினேன்…இப்படி கொடுத்துட்டீங்களே?!’ முறையிட்டார். இரண்டாவது ஞானம். அதையும் அலட்சியம் பண்ணி,
அறுத்த பலாப்பழத்தைப் பார்க்க, வெளியே மஜ்சள் அறுத்ததும் உள்ளே வெளளை வெளேர்னு…
இனிப்பே இருக்காது போலிருக்கே?! வெள்ளையா பிஞ்சா இருக்கே?! பிஞ்சு போலிருக்கே?! சுளைத் துணுக்கை வாங்கி சுவைக்க இனிப்பே இல்லை!
இனிப்பே இல்லையே…??? முறையிட,
கடைக்காரன் இடையே நுழைந்து ‘இனிப்பில்லையாமா? பக்கத்து ஸ்வீட் ஸ்டால்ல அரைக்கிலோ இனிப்பு ஆர்டர் பண்ணட்டுமா?’ விகடம் பேச, ஞானம் மூணு தலைகாட்டியது.
என்ன திமிர்? பலாச் சுளையில் இனிப்பில்லைனா ஸ்வீட் தரேங்கறான். வியாபாரிக்கு எதுக்கு விகடம்?
பழம் வேண்டாம்! என்றான் ஞானச் செறுக்கில்.
அறுத்ததை என்ன பண்றதாம்? வியாபாரி .
விகடமா பேசினீல்ல.?. வித்துக்கோ!
வாங்காமல் வண்டி எடுத்துக் கிளம்பினான். வசந்த்!