அன்று ‘ஆரோ வாட்டர் இன்ஸ்ட்டூமெண்ட் திடீரெ டிரபிள் செய்ய, மேலே போய் ‘ஓவர்ஹெட் வாட்டர் டாங்கைப்’ பார்க்கப் போனான் வைத்தி. மூடியைத் திறந்தால் உள்ளே ஒருபாடு உப்பும் அழுக்கும். கிளீன் பண்ணலாம்னு ஒரு ஆளைக் கூப்பிட்டு’எவ்வளவு வேணும்?’ என்றான்.
‘ஆயிரம் ரூபா கொடுங்க!’ என்றான் வந்தவன் அசராமல்!. இப்ப ஆயிரம் என்பது சர்வசாதாரணம். எதுக்கு?! நாமே கழுவிடலாம்னு நெனைச்சான் வைத்தி. ஓவர் ஹெட் டாங்க் வாஸ்துபடி வடமேற்கு மூலையிலிருந்தது. எட்டிப் பார்த்தான். இருக்குற பிரஷருக்கு தலை கிறுகிறுத்தது. ஆயிரம் ரூபாய் அதிகமாச்சேன்னு நினைச்சு தானே உள்ளே இறங்கிட்டான். அது ஒரு சிண்டெக்ஸ் டாங்க் அதுக்குள்ள இறங்கறது . ‘பிரைவேட் பாங்க்’ டெபாசிட் மாதிரி!
மேலே இருந்தபடி மிசர்ஸ் வைத்தி ‘நல்லா தேய்ச்சுக் கழுவுங்க…!’துணி, மாஃப்பு , சீவக்கட்டை எல்லாத்தையும் ஒரே மூச்சில் வீச்சில் உள்ளே போட்டாள். சிண்டெக்ஸ் அவனை விழுங்கிக் கொண்டது.
கழுவி முடிச்சு நிமிர்ந்தபோது கழுத்துவரை உடம்பு உள்ளே…! தலை மட்டும் கடவுள் புண்ணியத்துல வெளியே…! எத்தனை எம்பியும் மேலே வர முடியலை. முத்திரைத் தேங்காய் நெய்யாய் உள்ளே உறைந்து போய் ஒரு மணி நேரம் கிடந்தான். வாஸ்த்து மூலை உயரம் நேரமாக நேரமாக மயக்கம்தட்ட வைத்தது. உள்ளேயே விழுந்தான்.
ஆயிரம் ரூபாய் கொடுக்க யோசித்தவன் ஆம்புலன்ஸ்க்கு ஃபோன் பண்ற அவலம் உண்டாச்சு. ‘இதனை இதனால் இவன் முடிக்கும்’என்று வள்ளுவர் அசரீதியாய் அறிவுரை சொல்ல. ஆம்புலன்ஸிக்கும் மருத்துவமனைக்கும் சேர்த்து அழுது பிறகு சேப்டியானான்.