கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: June 24, 2024
பார்வையிட்டோர்: 7,431 
 
 

பரமனுக்கு இந்த KYC மேல் பயங்கர எரிச்சல், வெறுப்பு. எந்த நிறுவனத்தின் வாசலை மிதித்தாலும் KYC என்கிற பூதம் பற்றிக் கேட்டு விடுகிறார்கள். மயானத்தில் தான் KYC கேட்பதில்லை போலும். போதாக்குறைக்கு யாராரோ போலி SMS அனுப்பி உங்க KYC புதுப்பிக்கணும் என்று மிரட்டல் பணம் பறிப்பு வேற. எது பொய், எது உண்மையான SMS என்று திண்டாட வேண்டியிருக்கிறது. போன வாரம் நிஜமாக KYC கேட்டு வந்த வங்கி SMS யைப் போலியாக இருக்குமோ என்ற அனுமானத்தில் பரமன் சீரியஸா எடுத்துக் கொள்ளவில்லை. அன்று காலை வங்கி கணக்கு முடக்கப்பட்டப் பிறகு தான் புத்தி வந்தது. நாளை முதல் காரியம் வங்கிற்குப் போக வேண்டும் என்று இருந்தார்.

அன்று இரவு தன் டூ-வீலரில் வீட்டை நோக்கி போகும் போது நடுவில் இரண்டு பேர் ‘ஹலோ , ஹலோ என்று பலமாக கூப்பிட்டார்கள். வண்டியை பிரேக் போட்டு நிறுத்தி ‘என்னப்பா’ என்றார் பரமன். அதற்குள் பக்கத்தில் வந்த ஒருவன் கத்தியைக் காட்டி மிரட்டினான். ‘கூட வா, பக்கத்தில் ATM-ல் 20000 பணம் எடுத்துக் கொடு. இல்ல, கொஞ்சம் இரத்தம் கொடுக்க வேண்டி வரும்’.

‘ஹலோ, என் அக்கௌன்ட் KYC புதுப்பிக்கல. அதனால என் அக்கௌன்ட் ஆப்பரேட் பண்ணமுடியாது. UPI மூலமும் ஒன்னும் பண்ண முடியாது’என்றேன். வங்கி கணக்கு ப்ளாக் செய்யப்பட்டதாக வந்த ஒரிஜினல் SMS கூட காண்பித்தேன். அவர்களுக்கு இந்த KYC எல்லாம் தெரியுமா என்று புரியவில்லை. அதற்குள் யாரோ ஒரு சிலர் அருகில் வருவதாக தென்படவே பரமன் பாக்கெட்டில் பெட்ரோலுக்கு இருந்த 200 ரூபாயைப் பறித்துக்கொண்டுப் பறந்து விட்டார்கள். தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போயிற்று என்று நிம்மதி பெருமூச்சு விட்டார். ஒரு சிறு இரத்த சேதாரம் இல்லை.

‘KYC ! நீ எங்கிருந்தாலும் வாழ்க’ என்று முதல் முறையாக அதை வாழ்த்தினார் .

கதை சம்பந்தமாக தகவல் :

Know Your Customer (KYC) 1970ல் அமெரிக்காவில் உயிர் பெற்றது. இது சந்தேகத்திற்குரிய நிதி செயல்பாடுகளை கண்டறிய ஆரம்பிக்கப் பட்டது. இந்தியாவில் KYCயை RBI 2004ல் அறிமுகப்படுத்தியது. அது இப்போது நம்மில் இணைபிரியாத ஒரு உறுப்பாக மாறி விட்டது. KYC என்பது இரண்டு பகுதி கொண்டது. ஒன்று உங்கள் அடையாள சான்று (PROOF OF IDENTITY -POI). இன்னொன்று உங்கள் விலாசச்சான்று (PROOF ADDRESS – POA).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *