‘பொழுது போக மாட்டேங்குது..! என்ன செய்யறதுன்னு தெரியலை!., மீன் தொட்டி, வாங்கி கலர்மீன்கள் வளர்க்கட்டுமாப்பா?!’ என்றாள் வசுமதி.
‘வேண்டாம்மா…. !’ ஒற்றை வார்த்தையில் மறுத்தான் மகுடபதி.
‘ஏன்?’ என்று விடாப்பிடியாக் கேட்டதற்கு, அவன் சொன்ன பதில் இதுதான்.
‘மீன்களை தொட்டில வளர்க்கறது லேசில்ல..! அது மட்டுமில்ல… அது கடவுளின் மச்ச அவதார வடிவம். பராமரிப்பு சரியில்லாம அவை இறந்துட்டா, மனசு கஷ்டப்படுமே?! அதான் வேண்டாங்கறேன்.’
‘உனக்குப் பொழுதுபோக, மீன் தான் வளர்க்கணும்னு இல்லே..! கலர் மீன் வாங்கி கண்ணாடித் தொட்டியில் விட்டு வளர்த்தா என்ன சுகம் கிடைக்குமோ அதே சுகம் ஐபிஎல் ஆட்டம் பார்த்தாலும் கிடைக்கும்.’
‘நீ என்ன சொல்றே? புரியலையே..?!’
‘வண்ண வண்ணக் கலர் மீன்கள் கண்ணாடித் தொட்டியில் எப்படி கண்ணைக் கவர்ந்து வலம் வந்து சுகம் தருதோ அதே மாதிரி , ஐபிஎல் கிரிக்கெட் ஆட்டக் காரர்களிடமும் சுகம் கிடைக்கும்!’
‘புரியலையே..?!’
‘இது, சும்மா ஒரு, ஒப்பீடுதான்.. கண்ணாடித் தொட்டி கலர்மீன்களும், ஐபிஎல் கிரிக்கெட் ஆட்டக்காரர்களையும் ஒப்பு நோக்கிப் பார்ப்போமா?
‘சரி, சொல்லேன்!’
‘கலர்மீன்கள் போலவே, ஐ பி எல் ஆட்டக்காரர்களும் அணிகளுக்குத் தக்கபடி வேறுவேறு கலர்களில் யூனிஃபார்ம் அணிந்து வலம் வராங்க.
மீன் வாயை வாயைத் திறந்து மூடுவது மாதிரி, ஆட்டக்காரங்களும் பப்பிள் கம்மை மென்னு வாயில் அதக்கி, மீன் மாதிரியே வலம் வராங்க!’.
‘ஹீ….ம்..! அட டே! ஆச்சர்யமா இருக்கே..?! அப்புறம்?!’
‘போடப்படும் உணவை மீன்கள் ஓடித் துரத்தராமாதிரி, ஆட்டக் காரர்களும் பந்தைத் துரத்தி ஒடறாங்க!
மீன்கள் காரணமே இல்லாம தண்ணி மேல் மட்டம் வந்து வானம் பார்க்கிறா மாதிரி ஆட்டக் காரங்களும் அவுட் ஆக்கினாலோ, ஃபோர் சிக்ஸர் அடிச்சாலோ வானம் பார்த்து வணக்கம் சொல்றாங்க.
மொத்தத்துல கலர்மீன்கள் வலம் வரும் கண்ணாடித் தொட்டியும், ஐ பி எல் ஆட்டம் காணும் கண்ணாடி டிவி பெட்டியும் இரண்டும் ஒண்ணுதான். ரெண்டும் பொழுது போக்கத்தான்.
பயன் கருதாது உழைக்கச் சொன்னான். பக்தி செய்து பிழைக்கச் சொன்னானே பாரதி… அது மாதிரி… கடமையைச் செய்! பலனை எதிர்பாராதேன்னு மீன்களும், ஆட்டக்காரர்களும் நமக்குன் கீதையைச் சொல்லித் தராமாதிரிதான் எனக்குத் தெரியுது.
மச்ச அவதாரத்தை மதிச்சு… சந்தோஷமா ‘மீனம்மா! மீனம்மா!’ன்னு பாடு! பொழுதும் போகும்., புக்தியும் வளரும்!’ என்றான்.