(1992ல் வெளியான குறுங்கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
“வாழ்ந்தால் குயிலைப்போல வாழவேண்டும்” என்றது பட்டாம்பூச்சி.
இன்னொரு பட்டாம்பூச்சி கேட்டது:-
“ஏன்?”
“அதோ பார்…மாமரத்தில் பாடுகிறது குயில்.
மாமரத்துக்காகத்தான் அது பாடுகிறது. பின்பு
மாங்கனியைச் சாப்பிடுகிறது. பறக்கிறது.”
“புரியவில்லையே”
“யாருக்கும் கடமைப்படக்கூடாது. கொடுத்துப் பெறு. தங்கி வாழாதே”
“ஓ இப்போது புரிகிறது” என்றது இரண்டாவது பட்டாம்பூச்சி.
தனக்குள்ளே அது சொல்லிக் கொண்டது
“மரத்துக்கு ஒரு பாட்டு
குயிலுக்கு ஒரு பழம்”
– காசி ஆனந்தன் கதைகள், முதற் பதிப்பு: மார்கழி 1992, காந்தளகம், சென்னை.
– கதை கதையாம்… – தேர்ந்த தமிழ்க் குறுங்கதைகள் – தொகுப்பு: சு.குணேஸ்வரன், முதற்பதிப்பு: 24.01.2012, இளையகுட்டி அருமைக்கிளி நினைவு வெளியீடு, தொண்டைமானாறு.