(2001ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
மீண்டும் ஊரடங்கு அறிவித்தல். இடம் பெயரச் சொல்லும் எச்சரிக்கைகளால். எந்த நேரமும் ஒரு ஊழி தொடங்கலாம்….. தெருவில் மூட்டை முடிசுக்களும் முகத்தில் கவலைகளுமாய்ச் சனங்கள்.
இடையில் ஒரு முச்சில்லு மிதிவண்டி பயணிகளிருக்கையில் இரண்டு பெண்கள். மருத்துவமனையால் வீடு திரும்புங்கோலத்தில் ஒரு இளம் பெண். அருகில் துணையாய் ஒரு மூதாட்டி. அவள் அணைப்பில் துணிச் சுருளிற் துயிலும் ஒரு புத்தம் புதுப் பூக்குஞ்சு.
– எழுதப்பட்ட அத்தியாயங்கள், முதற் பதிப்பு: மே 2001, மல்லிகை பந்தல் வெளியீடு, கொழும்பு.