10,000 ஏலியன் வீரர்களுடன் ஒரு ராட்சத விண்கலம் பூமியின் வளிமண்டலத்தில் நுழைந்தது. விண்கலத்தின் கேப்டன் பூமியின் பல்வேறு இடங்களில் வீரர்களை இறக்கிவிட்டு, ஒரு தாக்குதலைத் தொடங்கி, கிரகத்தை கைப்பற்ற திட்டமிட்டிருந்தார்.
ஆனால் அந்த விண்கலம் பூமியிலிருந்து 2000 மைல் தொலைவில் திடீரென நின்று விட்டது. கேப்டன் விமானிக்கு ரேடியோவில், “ஏய், என்ன நடந்தது? ஏன் நிறுத்தி விட்டாய்?” என்று கேட்டார்.

அதற்கு விமானி, “எனக்கு உறுதியாக தெரியவில்லை சார். என்னால் விண்கலத்தை முன்னோக்கி நகர்த்த முடியவில்லை.” என்றார். பத்து வினாடிகள் கழித்து திடீரென்று விமானி, “சார், சார், எனக்கு முன்னே இருக்கும் ஜன்னலில் ஒரு கேள்வியைப் பார்க்கிறேன். அதற்குச் சரியாகப் பதிலளித்தால் தான் நாம் முன்னோக்கிச் செல்ல முடியும்.” என்றார்.
“என்ன கேள்வி?”
“நான் சில பூமி மனிதர்களின் படங்களைப் பார்க்கிறேன். அவர்களுக்கு மேலே இப்படி ஒரு கேள்வி: கமலஹாசன் தோன்றும் அனைத்து படங்களையும் குறிக்கவும்.”
“அட சே! இது ஒரு CAPTCHA கேள்வி. பூமியிலுள்ளவர்கள் மட்டுமே பதிலளிக்க முடியும்! விண்கலத்தை திருப்பி செவ்வாய் கிரகம் போவோம். அங்கேயாவது நமக்கு அதிர்ஷ்டம் இருக்கிறதா என்று பார்ப்போம்.”