‘ஏங்க உங்களுக்குக் கொஞ்சமாவது அறிவிருக்கா? வியாழக்கிழமை ஊர்ல இல்லைங்கறதை ஊரு உலகத்துக்கெல்லாம் சொல்லணுமா? அதூம் டாக்டர் என்ன உறவா? நட்பா? அவருக்கு எதுக்குங்க போன் பண்ணி, நான் வியாழக்கிழமை ஊர்ல இல்லைனு சொல்றீங்க?! நீங்க என்ன பெரிய அரசியல் வாதியா? எல்லாருக்கும் உங்க நாட்டு நடப்புத் தெரிய?!’ எரிந்து விழுந்தாள் மனவி.
அவள் சொல்வதும் நியாயம்தான். வெளியூருக்கு பத்து நாளைக்குப் போனா…, போலீஸ் ஸ்டேஷன்ல சொல்லீட்டுப் போகச் சொல்றாங்க…! அது சரி! ஆனா, டாக்டர்ட சொல்லணுமா?’ இதுதான் அவள் கேள்வி.
நான் சொன்னேன்.. ‘இத பாரு..! வியாழக்கிழமை டாக்டர்ட்ட அப்பாயின்மெண்ட் வாங்க்கினோம். நாம அன்னைக்கு வெளியூர் போறோம்!. டாக்டர்ட்ட அப்பாயின்மெண்ட் வாங்கிட்டு, அவரைப் பார்க்கப் போலைனா சொல்லணும்தானே? அதுதானே நியாயம்.?!’ என்றேன்.
‘என்ன நியாயம் ?”ஏன்றாள். கோபம் தீரவில்லை அவளுக்கு.
‘பூமியில் அதிக நாள் இருக்க ஆசைப்பட்டுத்தான் டாக்டர்ட்ட அப்பாயின்மெண்ட் வாங்கறோம். பூமியில் இருக்க அவர் உதவி தேவை. எனில், வானத்தில் பறக்க அவர் தயவு தேவையில்லையா, என்ன? பூமியில் இருப்பதும் வானத்தில் பறப்பதும் அவரவர் எண்ணங்களே! நெஞ்சில் துணிவிருந்தால் நிலவுக்கும் போய்வரலாம்.’ ஆனால், துணிவு மட்டும் பத்தாது, டாக்டர் தயவும் தேவை, நாளைக்கே ஏதாவது ஒண்ணுன்னா.. அவர் நம்மைக் குறை சொல்லக்கூடாதுபாரு!. டாக்டரைப் பார்க்க அவர்ட்ட அப்பாயின்மெண்ட் வாங்கினா, ‘வரலை வரமுடியலைனு’ சொன்னாத்தான் அந்த நேரத்தை அவர், வேற நோயாளி யாருக்காவது நம்மைவிட அவசரத்திலிருப்பவங்களுக்குக் கொடுக்க உதவியா இருக்கும். நாம ஊர்ல இல்லைனு சொல்லறது யாருக்காவது கூடுதலா கொஞ்ச நாள் உலகத்திலிருக்க உதவலாமில்லையா? அதான் சொன்னேன்,’ என்றேன்.
அவள் வாயடைத்து நின்றாள். என் அறிவுக்கா? அகந்தைக்கான்னு தெரியலை!