கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 4, 2024
பார்வையிட்டோர்: 581 
 

(1975ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

‘ஜீவன் பரத்தை அடைவதற்கு ஞானமும் பக்தியும் இரு சிறகுகளாகப் பயன்படுகின்றன. கர்மயோகத்தை சமத்துவப்படுத்துவதும் வால்எனக் கூறலாம்’. 

அடர்ந்த மரத்தின் கீழ், பாய் விரித்திருந்த நீழலில் அமர்ந்து கீதையின் பேருண்மைகளை விளக்கிக் கொண்டிருந்தார் மகான். 

அப்பொழுது, அம்மரத்தின் கிளையிலே தங்கியிருந்த பறவை ஒன்று வானவெளியிலே பறக்கத் துவங்கிற்று. சீடர்களுடைய கவனம் சுதந்திரமாகச் சிறகடிக்கும் அந்தப் பறவையிலே நிலைத்தது. 

‘கீதா படனத்தை மறந்து விடுவோம். ஆகாயத்தில் வட்டமிடும் அந்தப் பறவை நம் சிந்தையை நிரப்புவதால், அதனைப்பற்றிச் சற்றே விரிவாக அறிதல் பயன் சுரக்கலாம்’ என்றார் மகான் அமைதியாக. 

புலனைப் புறவிடயங்களிலே நாம் அலையவிட்டதை மகான் அவதானித்து விட்டாரே’ என உன்னிச் சீடர்கள் வெட்கப்பட்டார்கள். 

‘உங்கள் செயலில் நாணுந் தகைமை எதுவும் இல்லை. விழி ஆண்டவன் படைப்பு. விழியினாற் காட்சி சித்திக்கின்றது. விழிக்காக இறையைக் குறை சொல்வதா? அந்தப் பறவையைப் பாருங்கள். ஆனந்தமாக ஆகாயத்திலே பறக்கும் ஆற்றல் அதற்கு இயல்பாகப் பொருந்தி இருக்கின்றது…. நம்மால் அவ்வாறு பறக்க இயலவில்லை….’ என ஆனந்தர் பரவசத்துடன் மகான் கூறினார். அவர் வித்திய பாச வார்த்தைகளினாற் பிணிக்கப்பட்ட சீடர்கள் மீண்டும் அப் பறவையை நன்றாக அவதானித்தார்கள். 

‘புள் பறப்பது எதனால்?’-சுய விசாரணை செய்யும் பாவனையில் மகான் கேட்டார். 

‘இரு இறகுகளும், ஒரு வாலுந் துணை செய்கின்றன’ என்று சீடன் ஒருவன் தாற்பரியம் விண்டான். 

‘புகன்றது சரி. இரு சிறகுகள்; ஒரு வால்!….நமது வாழ்க்கையின் குறி முக்தி. அதற்கு உற்ற நெறி யோகம். கீதையிலே கர்மம், ஞானம், பக்தி ஆகிய மூன்று யோகங் அடை களும் கூறப்பட்டிருக்கின்றன. ஜீவன் பரத்தை வதற்கு ஞானமும் பக்தியும் இரு சிறகுகளாகப் பயன்படுகின்றன. கர்மயோகத்தைச் சமத்துவப்படுத்தும் எனக் கூறலாம். எல்லாச் சாதனங்களும் இம்மூன்றினுள் அடங்கும்….’ 

வால் சீடர்கள் அக்கணமே ஆகாயத்தில் வட்டமிட்ட பறவைவை மறந்து போனார்கள். கீதைப் போதனைகள் அவர்களுடைய நெஞ்சமெல்லாம் சிறகடிக்கத் துவங்கின.

– கீதை நிழலில், முதற் பதிப்பு: அக்டோபர் 1975, கலைஞன் பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *