‘நல்லா கவனீங்க! பாங்க் பத்து மணிக்குத் திறந்ததும், கூட்டம் சேரதுக்கு முன்னாடியே நுழைஞ்சு, நான் கொடுக்கிற இன்ஸ்ட்ரக்ஸன் படி எல்லாரும் நடந்துக்கணும்!. ‘சேஃப்ல’ இருந்து கேஷ் கவுண்டருக்குப் ப்ணம் வந்ததும் நான் இன்ஸ்ட்ரக்ஸன்ஸ் கொடுப்பேன்… அது படி துளி மிஸ்ஸாகாம நடந்தா நாளைக்கே நாம் லட்சாதிபதிகதான்… ‘ரோலிங்க்னு’…. ‘ஆக்ஷன்னு’ சொன்னதும், உசிலை நீ உருண்டுக்கிட்டே போய் கேஷியர் கழுத்தில் துப்பாக்கியை வச்சு அழுத்து, போட்டுத் தள்ளீடாதே!… அவன் மிரண்டு சுதாரிக்கும் முன் பையில் பணக்கட்டுகளைப் போடச் செல்லு!.. போட்டதும், நான் பேக்கப் என்பேன்!. இதெல்லாம் நான் மேனேஜர் ரூமிலிருந்தே இன்ஸ்ட்ரக்ஸன்ஸ் தருவேன்…பேக்கப்புக்குப் பிறகு ஒரு நிமிஷம் தாமதிக்கக் கூடாது! வெளிய ஓடி, நம்ம வேன்ல தப்பிச்சுடணும்!’ என்று கொள்ளையடிக்க சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தான் தன்னை பயாஸ்கோப் டைரக்டராக பாவித்துக் கொண்ட குணசேகர்.
எல்லாரும் ‘ஓகே!’ என்றார்கள் ஒருசேர!. அவர்வர்கள்நிற்கச் சொன்ன இடத்தில் நின்று கொண்டார்கள் ‘ஆக்ஷன்’ங்கற வாத்தைக்குக் காத்துக் கொண்டிருந்தார்கள். அன்றைக்கு ‘சேலரி டே’.. கேஷ் கொஞ்ச்சம் அதிகம் கேஷ் கவுண்டருக்குப்போனது.
பரபரப்போடு பாங்க் இயங்கத் தயாரானது.
‘ரோலிங்க்’ என்றான் குணசீலன்..
‘ரோலிங்க்’ என்றபடியே உருண்டான்.
‘ஆக்ஷன்!’ என்றதும், உசிலை உருண்டு கேஷியரை நெருங்கி துப்பாக்கியைக் கேஷியர் கழுத்தில் வைத்து அழுத்தி, பையைத் திறந்து காட்டி ‘போடு!’ என்று சொல்ல, மானேஜரை கழுத்தில் கத்தியை அழுத்தி வைதிருந்த குணசீலன் ‘பேக்கப்!’ என்றான் பதற்றத்தோடு.
உசிலை மூட்டை கட்ட முனைய… ‘கட்…கட் கட்!’ என்று ஒரு புதுக் குரல் திகைத்து நிமிர்ந்தான் உசிலை உள்ளூர் போலீஸ் கொள்ளையடிக்க வந்தவர்களை கூண்டோடு கட்ட தாம்புக் கயிறோடு பாய்ந்தது.
நடப்பது எல்லாவற்றையும் சிசிடிவி பதிவுகளில் ஸ்டெஷனிலிருந்து பார்த்த இன்ஸ்பெக்டர் இன்பசாகரன் சரியான நேரத்தில் எடுத்த நடவடிக்கையில் பயாஸ்கோப் இங்லீஷ் பாஷையில் இல்லாத தமிழ் பாஷையில், ‘கட்டு! கட்டு!’ என்று போலீஸ்காரர்களுக்கு அவர்களைப் பிடித்துக் கட்ட கட்டளையிட்டபடி நுழைந்தார்.
ஸ்தம்பித்து நின்றார்கள் உசிலை உள்ளிட்ட கொள்ளையர்கள்!