எங்க வீட்லேயும் இதே கத தான் காமாட்சி. கல்யாணம் ஆறவரைக்கும் தான் பசங்க அம்மா அம்மான்னு சுத்தி வருவாங்க. அதுக்கப்பறம் எல்லாமே பொண்டாட்டி தான்.
என் பையனும் எங்க போயிருக்கான் எப்ப வருவான் எல்லாம் அவள கேட்டாதான் தெரியும். மாத்திர போட்டியா, சாப்டியா, எப்பிடி இருக்கேன்னு கேட்டு எவ்வளவோ நாளாச்சி தெரியுமா காமாட்சி.
ஆம்பள பசங்களே அப்படிதான் விடு. புலம்பி ஒரு பிரயோஜனமும் இல்ல.
அய்யோ சுசீலா..உங்கிட்ட நான் புலம்பவே இல்ல. ஒரு ஆதங்கம் அவ்வளோதான். சொல்லப்போனா எனக்கு சந்தோஷமா இருக்கு. என் ஞாபகம் கூட வராத அளவுக்கு அத்தனை பிரியமா அன்பா பாத்துக்கிறா என் பையன. என்கிட்ட சொல்லல. என்கிட்ட கேக்கலேங்கிறதால பாசம் கொறஞ்சிட்டதா அர்த்தம் ஆயிடாது சுசீ..
இரவு தூக்கத்தில் யாரோ காமாட்சியின் காலை பிடித்துவிடுவது போல தோன்றியது. கால்மாட்டில் சரவணன். டேய் என்னடா? தூங்கல..
அம்மா..சாரி மா.. இனிமேல் அப்பிடி இருக்க மாட்டேம்மா.. ஏன் அப்பிடி நடந்துக்கிட்டேன்னு தெரியல. ரியலி சாரிமா. என்ன மன்னிச்சிடுங்கமா..
என்ன நடந்தது?
என்னங்க.. பக்கத்து வீட்டு சுசீலா ஆன்ட்டி…….என்று நடந்ததை கூறி.. அப்பகூட அத்தை என்ன விட்டு குடுக்காம தான் பேசினாங்க. அத்தை ரொம்ப great. நீங்க ஏன் இப்படி மாரிட்டீங்க. தப்பு. ரொம்ப தப்பு. எனக்கு புத்தி எங்க போச்சி?
டேய் சரவணா.. பறவால்லடா.. என் பிள்ளய பத்தி எனக்கு நல்லா தெரியும். மீனாட்சி காத்துகிட்டிருப்பா. போ. போய் படு..
இதை கேட்டுக் கொண்டிருந்த மீனாட்சியும் ஓடிவந்து காமாட்சியின் காலை கட்டிக்கொண்டு அழுதாள். இருவரையும் அரவணைத்தாள் காமாட்சி…