நினைத்தாலே இனிக்கும்…!

0
கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 19, 2024
பார்வையிட்டோர்: 3,687 
 
 

திரு.வளர்கவி அவர்கள் சிறுகதைகள் தளத்திற்கு எழுதிய 100வது சிறுகதை. குறுகிய காலத்தில் இவ்வளவு கதைகளை வெளியிட்ட முதல் கதாசிரியர் இவர் தான். ஜனவரி முதல் ஆகஸ்ட் 2024 வரை, 95 கதைகள் வெளியாயின. இது ஒரு பெரிய சாதனை.வாழ்த்துக்கள் ஐயா.


ஏன் அப்படிச் சொன்னார்கள்? இந்தக் கேள்வியைப் பொதுக் கேள்வியாய்க் கொடுத்து பதிலை நிரப்புங்கள் என்று ஆயிரம் பேரிடம் கேட்டால்,  ஆயிரமாயிரம் பதில் கிடைக்கும். ஆனால், ஸ்ரீதரனுக்குக் கிடைத்த பதிலோடு அதில் ஒன்றுகூட ஒத்துப் போகாது!. 

ஸ்ரீதரனைப் போல வாழ்க்கையை அணுஅணுவாய் அனுபவித்திருக்க ஒருவராலும் முடியாது என்றே நினைக்கிறேன்.  ஸ்ரீதரன் ஏழ்மைச் சூழலில் பிறந்தவன். அன்றைய காலகட்டத்தில் ‘கல்சிலேட்’ என்ற கெட்டி சிலேட்டைச் சுமந்து கொண்டுதான் ஆரம்பக்கல்விக்கு பள்ளிக்குப் போனான். ஒருமுறை வெள்ளிக்கிழமை ‘பிளாக் போர்டுக்கு’ கரி பூசச் சொல்லி வகுப்பு மாணவர்களிடம் சொன்னார் தலைமையாசிரியர் சுந்தரம். 

அடுப்புக் கரி, ஊமத்தை இலை, பசப்புவர பசலைக்கீரை இவற்றைக் கலந்து சவுக்கக் கல்லில் வைத்து கொட்டி அரைத்து பேஸ்ட் பதத்தில் உயரமான மாணவர்கள் அன்று வகுப்புக் கரும்பலகைக்கு கரி  பூசினார்கள். வகுப்பில் எவனோ ஒருத்தவன் பூபதின்னு நினைவு, ‘டேய்! ஸ்ரீதரா கீழே சிந்தற கரியை எடுத்து உன் சிலேட்டுக்கும் பூசு!.. திங்கள் கிழமை ‘ஹோம் ஓர்க்’ அ க ங ச எழுதீட்டு வரேல அட்டகாசமா இருக்கும்! ‘என்று உசுப்பேத்த சிந்தின கரிப்பேஸ்டை சண்டைபோட்டு எடுத்து பூச, சனியன் பிடிச்ச மழை ‘சட சடன்னு’ அப்போது  தூத்தல் போட ஆரம்பித்தது! ஓடு ஒழுக உக்கார்ர்ந்திருந்த எல்லாரையும் வரிசையா நின்னு பள்ளி முடியும் முன்னே வீட்டுக்குப் போகலாம்னார் சுந்தரம் வாத்தியார்.! லீவு விட்ட ஜாலிலையும், கரிபூசின சிலேட்டின் கம்பீரத்தைக் காட்டவும் ஓட ஆரம்பித்தான் ஸ்ரீதர். .’டமால்’னு சத்தத்தோடு ஒரு இடி எங்கே விழுந்ததோ தெரியவில்லை இடிக்குப் பயந்து ஓடின ஸ்ரீதர் கீழே விழ, ‘கல் சிலேட்டின்’ கபாலம் பிளந்தது. மரச் சட்டத்துக்குள் சிறைப் பட்டிருந்த சிலேட் முக்கால் வாசி உடைய வார் வைத்த டிராயராய் வாயைப் பிளந்தது. அப்போதும் பூபதி சொன்னான்.’டேய்! முக்கால் வாசிதான் உடைஞ்ச்சிருக்கு! உள்ளே கைகைவிட்டுத் தோள்ல சிலேட்டைப் பை மாதிரி  போட்டுட்டு ஓடு! அடுத்த இடிக்குள் வீட்டுக்குள் போயிடலாம். வானிலை அறிக்கை சொன்னான். 

தகர சிலேட்டோ  அட்டை சிலேட்டோ பிளாஸ்டிக் சிலேட்டோ அப்போ அவன் காலத்தில் கிடையாது! ஆனாலும் அவனும் பட்டதாரியாகி பவுசோடு வாழ்ந்துவிட்டான். இப்போது நினைத்தாலும் வறுமை தந்த வாழ்க்கை…,  செழிப்பு தந்த சிலாகிதத்தைவிட,  சில்லுனு நெஞ்சில் பசுமை படர வைக்கிறது. 

லட்சக் கணக்கில் பீஸ் கட்டிப் படிக்கிற படிப்பைவிட  ஒருஅணா செலவில்லாம  படிச்ச படிப்பு என்று நினைத்தாலும் இனிக்கும்.  ஏன் அப்படிச் சொன்னார்கள்? அவரவர் வாழ்க்கை இளமைச் சுகானுபவத்தாய் நிரப்பிப்பாருங்கள் வேறுவேறாய் சுகத்தின் வேராய் நினைத்தாலே இனிக்கும்! 

Print Friendly, PDF & Email
இயற்பெயர்: வே.ராதாகிருஷ்ணன் புனைபெயர்: வளர்கவி கோவை பிறந்த ஊர்: ஸ்ரீவில்லிபுத்தூர். வாழ்விடம்: கோவை. கல்வித்தகுதி: எம்.ஏ (வரலாறு)எம்ஏ (தமிழ்) எம்ஃபில் தமிழ்(ஈரோடு தமிழன்பன் கவிதைகளில்). குருநாதர்: தடாகம் இளமுருகு தமிழாசிரியர். பணி: பட்டதாரி ஆசிரியர் மணி மே.நி.ப கோவை - 23 ஆண்டுகள். பகுதிநேர அறிவிப்பாளர்: ஆல் இண்டியா ரேடியோ கோவை - 18 ஆண்டுகள் ஞானவாணி கோவை - 4 ஆண்டுகள். வெளியிட்ட நால்கள் - 3 1.…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *