(1975ல் வெளியான குறுங்கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
“மதில் கரையோட நிக்கிற பப்பாசி மரத்தில, ஒரு பழமும் மிஞ்சுதில்லை..”
“ஏன்?”
“றோட்டுக்கு அந்தப் பக்கமிருக்கிற பட்டினிப் பட்டாளங்களெல்லாம், ஆக்களில்லாத நேரம் பார்த்து மதிலிலை ஏறி, எல்லாத்தையும் பிடுங்கிக் கொண்டு போடுதுகள்.”
“அந்த மரத்தை வெட்டி விடுங்கோ, தொல்லை இல்லை!”
– ‘கடுகு’ குறுங்கதைத் தொகுதி, முதற் பதிப்பு: ஆடி 1975, ஐ.சாந்தன் வெளியீடு, மானிப்பாய்.
– கதை கதையாம்… – தேர்ந்த தமிழ்க் குறுங்கதைகள் – தொகுப்பு: சு.குணேஸ்வரன், முதற்பதிப்பு: 24.01.2012, இளையகுட்டி அருமைக்கிளி நினைவு வெளியீடு, தொண்டைமானாறு.