திரும்பத் திரும்பச் சொல்றே… நீ!

0
கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: September 20, 2024
பார்வையிட்டோர்: 3,180 
 
 

செல்போன் நீண்ட நேரமாக அலறியது. ’மாமாவோவ் ஏனுங்க.. செல்போன் அடிச்சுட்டே இருக்குதே! கேக்கலீங்களா!?’ கேட்டாள் கொங்கு தமிழில் ஜெயலெட்சுமி.

அவள் கட்டிய கணவனை அவள் பக்க வழக்கப்படி ‘மாமோவ்’னுதான் செல்லமாக அழைப்பாள்.

‘அட அது அடிச்சாறது! உடு! நீ பாட்டுக்கு உன்ற வேலையைப் பாரு என்றான் வேலப்பன்.

மனசு கேட்காமல் அவளே எடுத்து ‘ஹாலோ’ என்றாள். மறுமுனையில் எதோ இங்க்லீசில் பேச, ‘அடக் கெறகம் புடுச்சவ…! எவளோ இங்க்கீலீசுல பேசறா மாமோவ்! நீங்களே பேசுங்க சிக்தே!’ என்று அவனிடம் கொடுக்க அவன் சொன்னான்.

‘ஹலோ… திரும்பத் திரும்பச் சொல்ற..! நீ திருமபத் திரும்பச் சொல்றே நீ..! நான்தான், அதெல்லாம் ஒண்ணும் வேண்டாங்கறனல்லோ…? திரும்பத் திரும்ப அதையே சொன்னா..ஏப்படி?! எனக்கு இஷ்டமில்லே!.. என்னைய விடு! வெய் போனை! என்று விரக்தியில் கத்தினான்.

‘யாருமாமா அது? எண்ற சக்களத்தியா?! நீங்க இஷ்டமில்லைனதுக்கு அப்புறமும் திரும்பத் திரும்பச் சொல்றவ…எவ??!’ விடுங்க, நான் ரெண்டு உட்டன்னா, அவ அடங்க்கிப் போயிடுவா…! கொண்டாங்க! இவ கிட்டேல்லாம் மருவாதியா பேசக்கூடாது!’ கொடுங்க! அந்தக் கெரகத்தைப் போனை வெடுக்குனு பிடிங்கினாள்.

‘இதபாரு! ஜெயம்ம்…! நீ வேற, குடியக் கெடுத்துடாதே! எதையும் பேசாதே! வச்சுடு போனை!’ பதறினான் வேலப்பன்.

‘ஓ அந்த அளவுக்கு ஆயிடுச்சா?! நான் குடியைக் கெடுக்கறேனா? நல்லா இருக்குதே கதை?! எவளோ ஒருத்தி திரும்பத் திரும்ப உங்களைப் போனில் கூப்புட்டே இருக்கா., என் முன்னாடி எடுக்காம, நான் இல்லாத போது, தனியா கொலாவுவீங்களோ?! என்ன கர்மமடா சாமி.. கடவுளே!’ என்றாள் பதற்றமாக.

‘அட..க் கருமாந்தரமே..! ஒண்ணு புரியாம எதையாவது ஓளறாதே! அந்தப் பொம்பளை ‘லோன்’ வேணுமா வேணுமான்னு தொடர்ந்து திரும்பத் திரும்பக் கூப்பிட்டு நச்சரிக்குது. நானும் எனக்கு இஷ்டமில்லே வேண்டாம்னு சொல்லியும் கேக்க மாட்டேங்குது!’ என்றான்வேலப்பன்.

‘அடக்கடவுளே! அவ்வளவுதானா கதை?! நான் என்னமோன்னு நெனைச்சேன்.’ என்றாள் ஜெயம்.

‘நல்லா நெனைச்சே! போ! படிக்காத கருமாந்தரமே! திட்டினான் நாக்கில் சனி அவனுக்கு. வார்த்தை வந்து விழுந்தது!

‘ஆமாப்பா…! நான் படிக்காதவதான்.. இருக்கட்டும்! ஏன் மாமா உலகத்துல லட்சம்பேர் இருக்க, ஒங்க நம்பர் மட்டும் அவளுக்கு அதான் எண்ற சக்காளத்திக்கு எப்படிக் கிடைச்சது?! என்று அவள் கேட்க…

அதிர்ச்சியி;ல் மூர்ச்சித்து விழுந்தான் வேலப்பன்.

இயற்பெயர்: வே.ராதாகிருஷ்ணன் புனைபெயர்: வளர்கவி கோவை பிறந்த ஊர்: ஸ்ரீவில்லிபுத்தூர். வாழ்விடம்: கோவை. கல்வித்தகுதி: எம்.ஏ (வரலாறு)எம்ஏ (தமிழ்) எம்ஃபில் தமிழ்(ஈரோடு தமிழன்பன் கவிதைகளில்). குருநாதர்: தடாகம் இளமுருகு தமிழாசிரியர். பணி: பட்டதாரி ஆசிரியர் மணி மே.நி.ப கோவை - 23 ஆண்டுகள். பகுதிநேர அறிவிப்பாளர்: ஆல் இண்டியா ரேடியோ கோவை - 18 ஆண்டுகள் ஞானவாணி கோவை - 4 ஆண்டுகள். வெளியிட்ட நால்கள் - 3 1.…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *