தர்மம் தலை காக்கும்…!

1
கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 17, 2024
பார்வையிட்டோர்: 3,931 
 
 

பவானிக்குப் ஃபோன் செய்தான் பரணிதரன். ‘ஹலோ, பவானி, சித்த முன்னாடி ஃபோன் பண்ணினயே என்ன விஷயம்? நான் வண்டி ஓட்டீட்டிருந்தேன்., அதன் எடுக்கலை!!’ என்றான்.

‘ஒண்னுமில்லே மாமா, அந்த மாப்பிள்ளை விவரம் சொன்னீங்களே? ஜாதகம் வாங்கி அனுப்ப முடியுமா?’ ஆர்வமாகக் கேட்டாள்.

‘நான் நேத்தைக்கு பையனோட அப்பாட்ட பேசினேன்!?… சொல்லத் தயங்கினேன்.

‘என்ன மாமா, பொண்னைப் பிடிக்லையா?! போட்டோவை வச்சு முடிவு பண்ண வேண்டாம்னு சொல்லுங்க மாமா.. அவ சின்னப் பொண்ணு., போட்டோவுக்கு போஸ் கொடுக்கத் தெரியாததால அதூம் நாங்க இருக்கிறது கிராமம். நல்லா போட்டோ புடிக்கறவங்க வேற இங்க இல்ல..! நேர்ல பார்த்துட்டு, பேசி முடிவுக்கு வரலாமே…??!!’ அதான் என்றாள். அவள் ஆர்வம் பரணிக்குப் புரிந்தது. பெண்ணைப் பெற்றவள் இல்லையா?! அதான் காலா காலத்துல முடிச்சிடணும்னு அவசரப் படறா!!

‘சொல்லுங்க மாமா அவங்க என்ன சொன்னாங்க?’ கேட்டாள். தன்னால் சொல்லாமல் இருக்க முடியலை…

‘அது வேற ஒண்ணுமில்லேம்மா..! பொண்ணுக்கு இருபது வயசுதான் ஆகுது. பையனுக்கு இருபத்தாறு ஆறு வருஷம் வித்யாசமிருக்கே?!’

‘அதைப் பற்றி நானோ,, எங்க வீட்டிலயோ, இல்லே என் மகளோ கவலைப் படலையே மாமா..?! எனக்கும் அவருக்குமே பத்துவருஷம் வித்யாசம் என்ன கொறஞ்சு போயிட்டோம்?!’ நல்லாத்தானே இருக்கோம்!’ என்றாள். பிடிவிடாமல்.

‘அதெல்லாம் இல்லேம்மா.. பையன் மூல நட்சத்திரம்.’

‘அதனால என்ன மாமா.. ஆண்மூலம் அரசாளும் தானே?!’

‘இல்லம்மா…! பொண்ணைப் பெத்த அப்பாவோ அம்மாவோ இருக்கக்கூடாதாமே? அதான் யோசிக்கிறாங்க!’

’மாமா, பொறந்த மனுஷங்க யார் எத்தனை நாளைக்கு இருக்கப் போறோம்?!. கல்யாணாம் பண்ணிக்குடுத்து பிறகு போனா புண்ணியம்தானே?! ஒன்று பட்டால்தானே இன்னொன்று வாழும்?! தாய் நண்டும், வாழையும் ஈன்றதும் இறந்துவிடுவதில்லயா ?!’

‘என்னடா வம்பாப்போச்சு!?’ இவ, எப்படியும் இவ விட மாட்டா போலிருக்கேன்னு அவங்க சொன்னதை அப்படியே சொன்னான் பரணி.

‘எப்படியோ மூல நட்சத்திரமான பையனுக்குக் கல்யாணமாகட்டும் நெனைக்கிற ஆளில்லை சார் நான்!. அவங்க குடும்பமும் வாழணும். எங்க குடும்பமும் நல்லா இருக்கணும்!. கல்யாணம்கறது ஆயிரம் காலத்துப் பயிரில்லையா? மூல நட்சத்திரமும் ஆறு வயசு வித்யாசமுமான என் பையன் வேண்டாம். அவங்களுக்கு நல்ல பையனை நானே பார்த்துச் சொல்றேன்னு சொல்லீட்டாங்கம்மான்னு சொல்லி, ‘நீ நெனைக்கிற மாதிரி ஒன்று பட்டால்தான் ஒன்றுக்கு வாழ்வுங்கறது வாழைக்குச் சரி., வாழ்க்கைக்கு வேண்டாம்மா… அவங்க சொல்றா மாதிரி இரு குடும்பமும் வாழ நெனைக்கிற அந்த தர்ம சிந்தனைதான் வேண்டும்னான், பரணி’.

மறுபக்கம் நீண்ட பெருமூச்சு..!!! அது உஷ்ணப்பெருமூச்சா ஒப்புக்கொண்ட பெருமூச்சா தெரியவில்லை!

Print Friendly, PDF & Email

1 thought on “தர்மம் தலை காக்கும்…!

  1. தங்கள் கதைகள் மிகவும் அருமை தோழியே வாழ்த்துக்கள் மென்மேலும் உங்கள் பணி தொடர்க…..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *