டும் டும் டும் – ஒரு பக்கக் கதை

0
கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: September 10, 2023
பார்வையிட்டோர்: 7,238 
 
 

Excuse me ஒரு டிக்கட் extra இருக்கு வாங்கிக்கிரீங்களா.. என்றாள் பாமா..

டீ..வாடி இங்க.. யாரோ எவனோ அவன்கிட்ட போய்.. பக்கத்துல உட்கார்ந்துட்டு சீண்டுவான்.. தேவையா? ஒரு சீட்டு காலியா இருந்தா என்னவாம். சீறினாள் ருக்மணி..

தியேட்டரில் கூட்டம் அலைமோதியது. House full board எல்லா கவுன்டரிலும். மூன்று பேர் கை நீட்டினர் பாமாவிடம் டிக்கட்டுக்காக.

பாமா..please வேண்டான்டி. வா போலாம்.. 

நீ சும்மா இருடி..காசு என்ன மரத்துல காய்க்குதா என்றவள் அந்த மூன்று பேரில் அவளுக்கு பிடித்த நபருக்கு டிக்கட்டை தந்தாள்.. நல்ல நிறம். அரவிந்சுவாமி போன்ற அழகு..

பாமா இருக்கையில் நெளிந்தாள்.. ருக்மணி கிசு கிசுத்தாள்..நான் அப்பவே சொல்லல. சும்மா இருக்க மாட்டானுங்க..

ச்சீ..சும்மா இரு..சீட்டுல மூட்டப்பூச்சின்னு நெனைக்கிறேன்.. 

இடைவேளை..

சேன்ஞ் இல்லம்மா. கொஞ்சம் லேட் ஆகும். தியேட்டர் கேன்டீன்ல சொல்ல.. Excuse me..நான் தரேன் சேன்ஞ் என்றான் அவன்.. பாமா thanks என்று வாங்கிக் கொண்டாள்..

உங்கள எங்கேயோ பார்த்தா மாதிரி இருக்கு.. (இப்படித்தானே ஆரம்பிப்பார்கள்? )

பரஸ்பரம் அறிமுகம் ஆனார்கள்.. ருக்மணியையும் அறிமுகப் படுத்தினாள். பாமாவுக்கு  shaken தந்தவன் ருக்மணியிடம்  கை கூப்பினான்.  அவள் முகம் மாறியது. 

படம் ஆரம்பித்தது. இப்போது உண்மையிலேயே நெளிந்தாள். படம் முடிந்தது. 

பைக் எடுக்கும் போது..இந்தாங்க என்று visiting card தந்து bye..see you என்று ஸ்டைலாக பைக்கை உதைத்து சீறினான் பைக்கில்.. சில நாட்கள் கழித்து அதே பைக்கில் அவனுடன் பயணித்தாள்.. டும் டும் டும் ஆனபிறகு மனைவியாக.. 

காலம் உருண்டோடியது.. நல்ல வாழ்க்கை பாமாவுக்கு. இத்தம்பதிகளுக்கு இரண்டு அழகான மகள்கள் இப்போது. பெரிய மகள் ப்ரீத்திக்கு வரன் தேடிக் கொண்டிருந்தனர்..

ஒரு நாள் தியேட்டர் வாசலில்..

டிக்கட் இல்ல சார்..போங்க.  ஒரு வாரத்துக்கு online லேயே புக் ஆயிடிச்சி.. 

Excuse me..ஒரு டிக்கட் இருக்கு வரீங்களா? திகைக்காதீர்கள்.. இப்போது  இதை கேட்டவள் ப்ரீத்தி.. அப்பறம் என்ன டும் டும் டும் தான்.. 

ஹலோ மொபைல்ல பாட்டு ஆஃப் பண்ணுப்பா.. FM இல் கடவுள் அமைத்து வைத்த மேடை..இணைக்கும் கல்யாண மாலை என்ற பாடல் கேட்டது…

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *