சொக்கா நீ எங்கிருக்கே..?!

0
கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 14, 2024
பார்வையிட்டோர்: 2,948 
 
 

‘சொக்கா நீ எங்கிருக்கே…? அவனில்லை..! அவனை நம்பாதேன்னு’ தருமி பொருமினா மாதிரி புருஷோத்தமன் பொருமிக் கொண்டு படுத்திருந்தான் படுக்கையில் உயிர் பிரிய மறுத்து ஊசலாடிக்கொண்டிருந்தது!.

ஒருவாரம் பத்து நாளாய் படுத்த படுக்கையாய் இருக்கிறான். சோறு தண்ணி இறங்க மாட்டேங்குது…! எப்பக் கேட்டாலும் ‘சொக்கா நீ எங்கேருக்கே?’ன்னு புலம்பல் வேறு ! என்ன செய்வதென்று யாருக்கும் புரியவில்லை!

சிலர் ‘உள்ளுக்குள் தேடு!’ என்றார்கள். அவனுக்குப் புரியவில்லை! கடவுளை உள்ளுக்குள் எப்படித் தேடுவது?! அவன் அம்மாதான் சொல்ளியிருக்கிறாள் ‘சோத்துக்குள்ள இருக்கான் சொக்க நாதன்னு!’ ஒருவேளை சோத்துக்குள்ள இருப்பானோ?!

வடிச்சு வச்ச சோற்றுப்பானைக்குள் கைவிட்டுத் தேடலாம் என்றால் ,கட்டிலைவிட்டுக் கீழே இறங்க முடியாதபடி கால்கள் வலி பின்னுகின்றன!’ என்ன செய்வது? சாவதற்குள் ஒருமுறையாவது சாமியைப் பார்த்துவிட்டால் போதும்! ஆனால்., சோறு தின்னக் கூட முடியாமல் கிடக்கிறானே?! சோற்றுக்குள் எங்கே தேடுவது?!

விழிகளில் கண்ணீர் வழிந்தது. கடைசிக் காலம் என்பதால், கண்முன் வாழ்ந்த வாழ்க்கை காட்சியாய் ஓடியது. கடவுளை மனசுக்குள் உருகி வேண்டினான்.

‘யாருக்கு நான் தீங்கு செய்தேன் இறைவா?

என்னை உனக்குக்கூட பிடிக்கலையா இறைவா?

எந்த பதிலும் இறைவனிடமிருந்து இல்லை.. ! கடவுள் மனுஷ ரூபத்தில்தானே காட்சி தருவார்?! செய்தவற்றிக்காக வருந்தி அழ

கடவுள் வந்து நிற்பானாமே?! இவன் உருக உருக கடவுள் அவன் பேத்தி வடிவில் காட்சி தந்தார்.

சாப்பிட முடியாமல் கிடக்கையில் சாப்பிட வைக்க எல்லாரும் என்னென்னவோ முயன்று தோற்றார்கள்.

பேத்தி, ஒரு கிண்ணத்தில் தயிர் சாதத்தை பிசைந்து வைத்துக் கொண்டு அவன் பார்க்குமிடத்தில் இருந்து கொண்டு மாம்பழத்தைத் தொட்டுக் கொண்டு சாப்பிட, சோற்றுக்குள்ளே இருக்கான் சொக்க நாதன் என்று அம்மா சொன்னதும்., மாதா ஊட்டாத சோறை மாங்காய் ஊட்டும் என்று அம்மா அன்று சொன்னதும் நிழலாடியது. அவன் கண்களில் சொட்டும் நீரைப் பார்த்த சொந்தங்களில் ஒருத்தன் சுதாரித்துக் கொண்டு சொன்னான்.! …..

‘பேத்தியின் சோற்றுக் கிண்ணத்திலிருந்து ஒருவாய் சோறும் ஒரு துண்டு மாம்பழமும் சேர்த்து ஏடுத்து ஊட்டுங்கள்…!’ என்று.

ஒருவாரமாய் ஊசலாடிக் கொண்டு போக மறுத்து சொக்கனைத் தேடிகொண்டிருந்த உயிர், மாங்காய் ஊட்டிய சோறு மாதா ஊட்டிய சோறாய் மனநிறைவுதர, சொக்கனைத் தேடி.. சுகமாய்ப் பிரிந்து கொண்டிருந்தது.

என்ன மாயம் எப்படி ஜீவன் போனது?! யாருக்கும் பிடிபடாத ரகசியத்தை அறிய எல்லாரும் தவிக்கையில் பேத்தி மட்டும் நெய் பந்தம் பிடிக்க தயாரானாள்.

கடவுள் மனுஷ ரூபானாம்!

இயற்பெயர்: வே.ராதாகிருஷ்ணன் புனைபெயர்: வளர்கவி கோவை பிறந்த ஊர்: ஸ்ரீவில்லிபுத்தூர். வாழ்விடம்: கோவை. கல்வித்தகுதி: எம்.ஏ (வரலாறு)எம்ஏ (தமிழ்) எம்ஃபில் தமிழ்(ஈரோடு தமிழன்பன் கவிதைகளில்). குருநாதர்: தடாகம் இளமுருகு தமிழாசிரியர். பணி: பட்டதாரி ஆசிரியர் மணி மே.நி.ப கோவை - 23 ஆண்டுகள். பகுதிநேர அறிவிப்பாளர்: ஆல் இண்டியா ரேடியோ கோவை - 18 ஆண்டுகள் ஞானவாணி கோவை - 4 ஆண்டுகள். வெளியிட்ட நால்கள் - 3 1.…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *