சாதகம் அது பாதகம்.. – ஒரு பக்கக் கதை

0
கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 24, 2023
பார்வையிட்டோர்: 2,895 
 

ராகுல்-ப்ரீத்தி தம்பதிகள் போலீஸ் ஸ்டேஷன் வாசலில் பீதி நிறைந்த முகத்துடன் காத்திருந்தனர்.. 

ஒரு ஜீப் வேகமாக வந்து நிற்க.. டிரைவர் இறங்கி கதவை திறக்க.. சப் இன்ஸ்பெக்டர் விஷ்ணு போலீஸ் சல்யூட் சகிதம் கம்பீரமாக உள்ளே செல்லும் முன்பே.. நீங்கதான் ராகுலா?? Come in என்று கூறி விட்டு உள்ளே சென்றார்…

சார்.. இந்தாங்க இத பாருங்க.. ரென்ட்டல் அக்ரிமென்ட்…

அதெல்லாம் இருக்கட்டும்.. ஆள் யாரு? என்ன? Back ground பார்காமல் வாடகைக்கு விட்ருவீங்களா?? எத்தனை அக்ரிமென்ட் வேண்டுமானாலும் போடுவானுங்க. இவன் என்ன தொழில் பண்ணான்னு தெரியுமா உங்க ப்ளாட்ல..

ம்ம்.. தெரியும்.டீவியில் பார்த்தேன்..நீங்களும் சொன்னீங்களே.  இப்படி பட்டவங்கன்னு தெரியாது சார்.. 

சுந்தரேசன் – காமாட்சி இருவரும்  அங்கு இருப்பதை பார்த்து ஓடிப்போய் என்ன சார்..மேடம்.. இப்படி பண்ணிட்டீங்களே.. உங்களோட daughters னு தானே அறிமுகப் படுத்தினீங்க அங்க இருக்கிற மூன்று பேரையும்.. பெரிய பொண்ணு MBBS பண்றா.. Second daughter. I.T. ல ஒர்க் பண்றா.. Third daughter பக்கத்து ஹாஸ்பிடல்ல dietician னு சொன்னதெல்லாமே பொய்யா??

ஹலோ ராகுல்.. என்ன இவ்வளோ வெள்ளந்தியா இருக்கீங்க.. இவங்க ரென்டு பேரும் கணவன்-மனைவி என்பதே பொய்.. அவங்க பெயரும் சுந்தரேசன்-காமாட்சி இல்ல.. வாடகை அட்வான்ஸ் எல்லாமே நீங்க கேட்டதை விட அதிகமா குடுத்திருப்பானே? Full furnish பண்ணி கொடுக்கணும்னு சொல்லி இருப்பானே??

ஆமாம் சார்.. House EMI ல 50% வாடகையிலேயே கிடைக்கும்..பறவால்ல full furnish பண்ணி கொடுத்திடலாம்னு wifeஉம் சொன்னதால OK ன்னு சொல்லி agreement போட்டுட்டோம்..  வாடகை சாதகமா இருக்கேன்னு யோசிச்சோமே தவிர இவ்வளவு பாதகமா ஆயிடும்னு அன்னிக்கி தெரியல.. Extremely sorry sir. 

இப்ப வருந்தி என்ன பயன்.. வீடு சீல் வெச்சிருக்கோம். கேஸ் முடியும் வரை சாவி கிடைக்காது.. இந்த ரிஜிஸ்டர்ல கையெழுத்து போட்டுட்டு போங்க. நாங்க தகவல் சொல்லும்போது வந்து கோர்ட்ல ஆஜர் ஆகி arguement முடிஞ்ச பிறகு சாவி வாங்கிக்கலாம்..

ஆறு இலக்கத்தில் சம்பளம்..கார், வீடு என்ற சொகுசு வாழ்க்கை வாழ்வதில் தவறில்லை.. பொதுவாக ஊர், உலக யதார்த்தம் போன்ற விஷயங்களில் இவர்களின் அனுபவ அறிவு ஒரு கேள்விக்குறி என்றே சொல்லத் தோன்றுகிறது..

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *