மனுஷன் மனசிருக்கே அதை மாதிரி அல்பம் உலகத்துல வேறெதுவுமே இல்லை. ஒரு நீதியை எடுத்துச் சொன்னா அதை அப்படியே கப்புனு எல்லாத்துக்கும் புடிச்சிட்டா பரவாயில்லை. நாம சொல்லாத வகையில வழில அதை அப்ளை பண்ணி நம்மை அசிங்கப்பட, அல்லல்பட வைத்துவிடுகிறபோதுதான். மனுஷனுக்கு மனசே இல்லாம இருந்திருக்கலாமோனு தோணும்!… ஆனால், மனஷனா இருக்க மனசாட்சி வேணுமாமே!. அதுக்கு மனசு வேணும்.
ஒவ்வொரு நாளும் அதிகாலைலயே எழுந்துவிடுவது அவன் வழக்கம். எழுந்ததும் லிஸ்ட் போட்டா மாதிரி வாக்கிங்க் போறது…! வந்ததும் வெயிட் பார்க்கிறது வழக்கம். வெயிட்டும், பிரஷரும் தினமும் குறையக் குறைய குதூகலம்தான்.
கிரிக்கெட் மாட்ச்சை டிவி பார்க்கும் போதும் எதிராளி ஸ்கோரை நாம ரன் எடுத்துக் கொறைச்சுட்டே வரும் போது என்ன ஒரு மகிழ்ச்சி?!. பிக்ஸ் பண்ணின டார்கெட் கொறைஞ்சா எத்தனை மகிழ்ச்சி?!.
இந்த மாசம் இத்தனை வெயிட்., இத்தனை சுகர்., இத்தனை பிரஷரைக் கொறைக்கணும்னு முடிவு பண்ணி, அதுக்காக உழைக்கையில் அது குறைகையில் குதூகலம் கூடுகிறது.
அவன் இதை மட்டும் செக் செய்து குறைகையில் அடைகிற குதூகலம் ஒவ்வொரு நாளும் பாங்க் பாலன்ஸ் செக் பண்ணுகையில் அடைவதில்லை. அதில் வைப்பு நிதி குறையும் போதோ, ஆர்.டி குறையும் போதோ சேமிப்பு போதோ மனம் ஏன் குதூகலம் அடைவதில்லை?!
நடந்து நடந்து கொறைச்ச வெயிட்டும், சுகரும், பிரஷரும் வைப்புநிதி கொறைஞ்சதும் பழையபடி எங்கிருந்து கொறைஞ்சதோ அங்கேயே போய் நின்றுவிடுகிறதே?! ரீடர்ஸ் கூடும் போதும் சப்ஸ்கிரைபர்ஸ்
கூடும்போதும் மகிழ்ச்சிகூடுகிறது. அது கூடினால்கூட அடுத்து பிரஷர் கூடிவிடுகிறது !
மனசுக்கு ஒரு மந்திரச் சொல்… ‘நடந்து குறைப்பது வேணுமானால் நம்கையில் இருக்கலாம்!. நமக்கு நடப்பது எதுவும் நம் கையில் இல்லை! என்பது அல்ப மனசே நீ ஏன் அறிந்து கொள்வதே இல்லை?!
ஓண்ணு புரிஞ்ச்சுக்கோ மனசே…! ‘உன்னால் குறைக்க முடிகிற சுகரும் பிரஷரும் உனக்கு மகிழ்ச்சி தருவதுபோல, உன் சேமிப்பு குறைகிறபோது அதுகூட, வேறு யாருக்கோ மகிழ்ச்சி தருகிறது என்று எண்ணி பெருமைப்படு!. கிரிக்கெட் மாட்ச்சில் எதிராளி டார்கெட்டை நீ குறைச்சா உனக்கு குதுகலம் கிடைப்பதுபோல, உன் டார்கெட் அடுத்தவனால் குறைகிறபோது அவன் மகிழ்வானே! மகிழ்ச்சி ஒரு பக்க சார்பானதல்ல… அதைத்தான் நம் முன்னோர்கள்’ பங்கித் தின்றால் பசியாறும்!’ என்று சிம்பிளா சொன்னாங்க!!. ‘மகிழ்ச்சி பங்க்கித்தின்னும் பதார்த்தம் போல அது தனியுடைமை அல்ல!! குறையக் குறையக் குதூகலம்!’ அது எதுன்னு புரியுதா மனசே??!!