கருணை – ஒரு பக்கக் கதை

0
கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 2, 2023
பார்வையிட்டோர்: 2,790 
 
 

(2023ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

இளம்பெண் கண்ணம்மா அலுவலகத்தில் பணி முடிந்து களைப்புடன் வீட்டிற்குள் நுழைந்தாள். அவளுடைய அண்ணி தங்கம் எதிரே வந்தாள். 

‘ஏன் அண்ணி, முகம் வாட்டமா இருக்கு’ கேட்டாள் கண்ணம்மா. 

அண்ணி தயக்கத்துடன் பேசினாள் ‘ என் தம்பி பாபு விரும்பின பொண்ணு ரஞ்சனிய ஒங்க அண்ணனும் ஆட்களும் கடத்திட்டு வந்திருக்காங்க.’ 

‘என்ன அண்ணி சொல்றீங்க.. பாபு கையைப் பிடிச்சு இழுத்ததுல விழுந்து அடிபட்டு ரஞ்சனி ஆஸ்பத்திரியில் இருக்கா இன்னும் டிஸ்சார்ஜ் ஆகலையே யாரை தூக்கிட்டு வந்தாங்களோ’ என்று கூறியபடியே கண்ணம்மா, கைப்பையை மேசையில் வைத்துவிட்டு விடுவிடுவென மாடிப்படிகளில் ஏறினாள். 

அண்ணி அவளைப் பின்தொடர்ந்தாள். மாடியறைக்குச் சென்றாள். கைகள் கட்டப்பட்ட நிலையில் இருந்த இளம்பெண்ணின் கட்டுகளை அவிழ்த்தாள். அவளுடைய சேலையைத் திருத்தினாள். தண்ணீர் புட்டியை அவளிடம் கொடுத்தாள். அண்ணனையும், அவனது ஆட்களையும் முறைத்துப் பார்த்தாள்:’ 

இவங்க யாரு தெரியுமா போலீஸ் ஆபீசர் அஞ்சலி ஏசி மேடம். ரஞ்சனியோட ரெட்டைப் பிறவி சகோதரி….’ என்றாள் கண்ணம்மா. 

கண்ணம்மா இப்படி பேசியதும் அங்கிருந்த அனைவரும் திடுமென மறைந்து விட்டார்கள். அஞ்சலியின் முதுகை வருடி ஆசுவாசப்படுத்திய கண்ணம்மா, 

‘மேம் அவங்கள மன்னிச்சுடுங்க ‘ என்றாள். அஞ்சலி எழுந்து நின்றாள்: ‘உனக்காக இவங்கள மன்னிக்கறேன். உன் அண்ணன் மச்சானையும் மன்னிக்கறேன். உனக்காகத்தான்…. எனக்கு பசிக்குது சாப்பிட எதுவும் தர மாட்டியா…’ என்றாள். ‘இதோ கொண்டு வரேன் மேம்’ என்று படிகளை நோக்கி ஒடினாள் கண்ணம்மா.

– ட்வின்ஸ் கதைகள் 10, முதற் பதிப்பு: 2023, எஸ்.மதுரகவி, சென்னை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *