தனக்கு ரெண்டு கண்ணும் போனாலும் பரவாயில்லை அடுத்தவனுக்கு ஒரு கண் கண்டிப்பா போகணும்னு நெனைக்கறது ஜனங்களில் சிலரின் சிந்தனை. அவர்கள் அப்படி நினைக்க எது காரணம்? அது, அடிவயிற்று நெருப்புதான் வேறென்ன?
ஒருவனின் வளர்ச்சியைத் தாங்க முடியாதவர்கள்தான் வெறுப்பை வார்த்தைகளில் விதைப்பார்கள்.
அகிலேஷுக்கு அவனை ஏண்டா சந்திச்சோம்னு ஆயிடுச்சு! அந்த நல்ல நா:ள் அதிகாலை, அவன் நெருங்கி வந்து கேட்டான், ‘எப்படி இருக்கீங்க? ‘ஸ்ட்ரோக்’ வந்து ரொம்ப கஷ்டப்பட்டவனை நலம் விசாரிக்கிறானாம்.
‘இப்ப பரவாயில்லை!’ என்றான் ஒற்றை வார்த்தை பதிலில். ஒருசிலரின் ஒற்றை வார்த்தை பதிலிலிருந்தே அவர்களுக்குத் தொடர்ந்து பேச உடன்பாடில்லை என்பதை ஏனோ புரிந்து கொள்வதில்லை சிலர்.
‘அப்படி நெனைக்காதீங்க! யாருக்கு எப்போன்னு சொல்ல முடியாது !’என்றான் படக்கென்று!. இவனை யார் நலம் விசாரிக்கச் சொன்னார்கள்?!. நாக்குவரை கோபம் பொத்துக் கொண்டு வந்தாலும், அடக்கிக் கொண்டான் அகிலேஷ்.
நாமக்கல் கவிஞரின் கவிதையை நினைத்துக் கொண்டு. அவன் ‘கத்தி இன்றி ரத்தமின்றி’ யுத்தம் செய்கிறான். நாமென்ன கிருஷ்ண பரமாத்மாவா? இல்லை அவன் தான் என்ன சிசுபாலனா..?! நூறு வரை எண்ணித் தண்டிக்க! நமக்கேதாவது வந்தா பாதிப்பு அவன் உடன் பிறப்புக்குத்தான். அகிம்சை ஆயுதமற்ற போர் முறை மட்டுமல்ல…! அடிவயிற்று எரிச்சலை அறிவிக்கும் சாட்சியும்தான். ஒருத்தனை செயல்படவிடாமல் செய்ய மனதைத் தாக்குவது சிலரின் யுத்த மார்கங்களிலொன்று. அது மாதிரி நபர்களைச் சந்திக்கும் போது உணர்ச்சி வசப்படாமல், நம்மை இழக்காமல் இருப்பதே நாமக்கல் கவிஞருக்கும் அகிம்சைக்கும் நாம் தரும் மரியதை.
For கத்தியின்றி ரத்தமின்றி,
உங்களின் ஒரு பக்க கதை தினமும் வருவது மற்ற ஆசிரியர்களுக்கு,ஒரு ஊக்குவிப்பதாய் உள்ளது.
தினமும் தாங்கள் தொடர்ந்து எழுதி வருவது மிகவும் அழகாக உள்ளது.
மேலும் தொடர்ந்து எழுதவும்.நன்றி.
வித்யா விஜயகுமார்.